இலக்கணம் கட்டுரை

இலக்கணச்சுருக்கம் – எழுத்ததிகாரம்

முதலாவது: எழுத்ததிகாரம்

1.எழுத்தியல்

1. இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.


2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர் 3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்


4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.


5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.


6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.


7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.


8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்


9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.


10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.


11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம். இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.


12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம். இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.


13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.


14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம். அவன், இவன், உவன், அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.


15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம். எவன், எக்கொற்றன் கொற்றான, கொற்றனோ ஏவன், கொற்றனே யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்


16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.


17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. பன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம். அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம். உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணுhறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு. ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.


18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும். உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி


19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.


தேர்வு வினாக்கள் 1. இலக்கண நூலாவதியாது? 2. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்? 3. எழுத்தாவது யாது? 4. அவ்வெழுத்து எத்தனை வகைப்படும்? 5.உயிரெழுத்துக்கள் எவை? 6. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 7.குற்றெழுத்துக்கள் எவை? 8. நெட்டெழுத்துக்கள் எவை? 9. மெய்யெழுத்துக்கள் எவை? 10. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 11. வல்லெழுத்துக்கள் எவை? 12.மெல்லெழுத்துக்கள் எவை? 13. இடையெழுத்துக்கள் எவை? 14. சுட்டெழுத்துக்கள் எவை? 15. வினாவெழுத்துக்கள் எவை? 16. எந்தெந்த வெழுத்துக்கு எந்தெந்தவெழுத்து இனவெழுத்தாகும். 17. உயிர்மெய்யெழுத்துக்கள் எவை? 18. உயிர்மெய் குற்றெழுத்து எத்தனை? உயிர்மெய்க் குற்றெழுத்து எப்படி தொண்ணுறாகும்? உயிர்மெய் நெட்டெழுத்து எத்தனை? உயிர்மெய் நெட்டெழுத்து எப்படி நூற்றிருபத்தாறாகும்? உயிர்மெய் வல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் வல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? உயிர்மெய் மெல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் மெல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? உயிர்மெய் யிடையெழுத்து எத்தனை? உயிர்மெய் யிடையெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? 18. ஆய்தவெழுத்தாவது எது? 19. ஆகத் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கும் எழுத்துக்கள் எத்தனை?


எழுத்துக்களின் மாத்திரை 20. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு. மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை. ஊயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின ளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை இரண்டு. மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.


21. உயிரெழுத்துக்குள்ளே, உகரமும் இகரமும், சிலவிடங்களிலே தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும். ஆவ்வுகரத்திற்கு குற்றியலுகரமென்றும் பெயராம்.


22. குற்றியலுகரமாவது, தனிக் குற்றெழுத்தல்லாத மற்றையெழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளிளிறுதியில் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமாகும். ஆக்குற்றியலுகரம், ஈற்றெழுத்தாகிய தன்னைத்தொடர்கின்ற அயலெழுத்தின் வகையiனாலே, நெடிற் றொடர்க்குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம், உயிர்த்தொடர்க்குற்றியலுகரம், வன்றொடர்க்குற்றியலுகரம், மென்றொடர்க்குற்றியலுகரம், இடைத்தொடர்க்குற்றியலுகரம், என ஆறுவகைப்படும். அவைகளுள், நெடிற்றொடர் மாத்திரம் இரண்டெழுத்து மொழியாகியும், மற்றையைந்து தொடரும் மூன்றெழுத்து முதலிய பல வெழுத்து மொழியாகியும் வரும். உதாரணம். நாகு, ஆடு நெடிற்றொடர்க்குற்றியலுகரம் எஃகு, கஃசு ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் வரகு, பலாசு உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் கொக்கு, கச்சு வன்றொடர்க் குற்றியலுகரம் சங்கு, வண்டு மென்றொடர்க் குற்றியலுகரம் அல்கு, எய்து இடைத்தொடர்க்குற்றியலுகரம்


23. தனிக்குற்றறெழுத்துக்குப்பின் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும், மெல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும் முற்றியலுகரமாம். உதாரணம். நகு, கொசு, கடு, அது, கணு, திரு, வழு: பூணு, வாரு, உருமு, கதவு, நெல்லு, கொள்ளு.


24. குற்றியலிகரமாவது, யகரம் வந்து புணருமிடத்துக் குற்றியலுகரந் திரிந்த இகரமாம். உதாரணம்.

நாகு + யாது = நாகியது எஃகு + யாது = எ.கியாது வரகு + யாது = வரகியாது கொக்கு + யாது = கொக்கியாது சங்கு + யாது = சங்கியாது அல்கு + யாது = அல்கியாது அன்றியும், மியாவென்னும் அசைச்சொல்லிலே மகரத்தின் மேல் ஏறி நிற்கும் இகரமுங் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.


25. பாட்டில் ஓசை குறைந்தவிடத்து, உயிரெழுத்துக்களுள்ளும், ஒற்றையெழுத்துக்குள்ளும், சிலசில, தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும், அவிவுயிரெழுத்துக்கு உயிரளபெடை என்றும் பெயராம்.


26. உயிரளபெடையாவன, மொழிக்கு முதலிலாயினும் இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற நெட்டெழுத்துக்களேழுமாம். ஆளபெடுகின்ற நெட்டெழுத்துக்குப் பின் அதற்கினமாகிய குற்றெழுத்து அறிகுறியாக எழுதப்படும். உதாரணம். ஆஅடை, ஈஇடு, ஊஉமை, ஏஎடு, ஐஇயம், ஓஒடு, ஒளஉவை, பலாஅ. சில விடயங்களிலே குற்றெழுத்து நெட்டெழுத்தாகிப் பின்னளபெடுக்கும்.உதாரணம். எழுதல் – எழூஉதல், வரும் – வரூஉம், குரி – குரிஉஇ


27. ஒற்றளபெடையாவன, மொழிக்கு இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்து மெய்களும் ஆய்தமுமாம். ஆளபெடுகின்ற ஒற்றெழுத்துக்குப் பின் அவ் வொற்றொழுத்தே அறிகுறியாக எழுதப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழுங் குறலிணைக்கீழும் வரும். உதாரணம். சங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பந்ந்து, அம்ம்பு, அன்ன்பு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு, அரங்ங்கு, அங்ங்கனிந்த, மடங்கலந்த.


28. குற்றியலுகரத்துக்குங், குற்றியலிகரத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை, உயிரௌபெடைக்கு மாத்திரை மூன்று, ஒற்றளபெடைக்கு மாத்திரை ஒன்று.


29. பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், இராகத்திலும், உயிரெழுத்தும், மெய்யெழுத்தும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும்.


தேர்வு வினாக்கள் 20. குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை? நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை? மெய்யெழுத்துக்கு மாத்திரை எத்தனை? ஆய்தவெழுத்துக்கு மாத்திரை எத்தனை? உயிர்மெய்குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை? உயிர்மெய்நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை? மாத்திரையாவது எது? 21. தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் எழுத்துக்கள் உளவோ? தன் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் உகரத்திற்கு பெயர் யாது? ன் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் இகரத்திற்கு பெயர் யாது? 22. குற்றியலுகரமாவது யாது? அக் குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? நெடிற்றொடர் எத்தனையெழுத்து மொழியாகிவரும்? 23. முற்றியலுகரமாவன எவை? 24. குற்றியலிகரமாவது யாது? 25. தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும் எழுத்துக்கள் உளவோ? அதிகமாக ஒலிக்கும் உயிரெழுத்துக்குப் பெயர் யாது? அதிகமாக ஒலிக்கும் ஒற்றெழுத்துக்குப் பெயர் யாது? 26. உயிரௌபெடை யாவன யாவை? 27. ஒற்றளபெடையாவன யாவை? 28. குற்றியலிகரத்துக்கு மாத்திரை எத்தனை? உயிரள பெடைக்கு மாத்திரை எத்தனை? ஒற்றளபெடைக்கு மாத்திரை எத்தனை? 29. எவ.வௌ;விடங்களில் எழுத்துக்கள் தமக்குச் சொல்லிய அளவைக்கடந்து நீணடடொலிக்கும்?


முதனிலை 30. பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம். உதாரணம். அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை. கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி.


31. இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும். உதாரணம். 1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல், கைதை, கோண்டை, கோடை, கௌவை. 2. சட்டி, சாநந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல், சையம், சொன்றி, சோறு, சௌரியம். 3. தகை, தார், திதலை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேழ், தையல், தொண்டு, தோடு, தௌவை. 4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌளி. 5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம். 6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி, மையல், மொட்டு, மோகம், மௌவல்.


32. வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும். உதாரணம். வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.


33. யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள னெ;னும் ஆறயிரோடு, மொழிக்கு முதலாகிவரும். உதாரணம். யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.


34. ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும். உதாரணம். ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல். தேர்வு வினாக்கள் 30. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை? 31. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகிவரும்? 32. வகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்? 33. யகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்? 34. ஞகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?


இறுதி நிலை 35. எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம். உதாரணம். விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள, உரிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள்.

தேர்வு வினா 31. மொழிக்கு இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் எவை?


எழுத்துக்களின் சாரியை 36. உயிர்நெட்டெழுத்துக்கள் காராச்சாரியை பெற்றும், அவைகளுள், ஐ ஒள, இரண்டுங் காராச்சாரியை யேயன்றிக் கான்சாரியையும் பெறும். உதாரணம். ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஒகாரம், ஒளகாரம், ஐகான், ஒளகான். ஊயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும், கரம், காரம், கான், என்னும் மூன்று சாரியை பெறும். உதாரணம். அகரம், அகாரம், அஃகான், ககரம், ககாரம், கஃகான். மேய்யெழுத்துக்கள், அ என்னுஞ் சாரியை அதனோடு கரம், காரம், கான் என்னும் சாரியை பெறும். உதாரணம். க, ங, ககரம், ககாரம், கஃகான், ஙகரம், ஙகாரம். ஙஃகான். உயிர்மெய் நெட்டெழுத்துக்கள், சாரியை பெறும் மெய்கள் சாரியை பெறாதும் இயங்காவாம். தேர்வு வினாக்கள் 32. உயிர்நெட்டெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? ஐ, ஒள, இரண்டும் காரச்சாரியை யன்றி வேறு சாரியை பெறுமா? உயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக்களும் எச்சாரியை பெறும்? மெய்யெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? எவ்வெழுத்துக்கள் சாரியை பெற்று வருவதில்லை? — போலியெழுத்துக்கள் 37. அகரத்தோடு யகரமெய் சேர்ந்து ஐகாரம் போன்றும். அகரத்தோடு வகரமெய் சேர்ந்து ஒளகாரம், போன்றும் ஒலிக்கும். உதாரணம். ஐயன் – அய்யன்; ஒளவை – அவ்வை.

தேர்வு வினாக்கள் 33. இரண்டெழுத்துக்கள், சேர்ந்து ஒரெழுத்தைப்போல் ஒலிப்பதுண்டோ.

ஏழுத்தியல் முற்றிற்று. 2. பதவியல்

38. பதமாவது, த ஒரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பலவெழுத்துக்களாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிப்பதாம். ஆது, பகாப்பதமும், பகுபதமும் என இருவகைப்படும். — 39. பகாப்பதமாவது, பகுக்கபடாத இயல்புடைய பதமாம். ஆது, பெயர்ப்பகாப்பதம், வினைப்பகாப்பதம், இடைப் பகாப்பதம், உரிப் பகாப்பதம், என நான்கு வகைப்படும். உதாரணம். நிலம், நீர், மரம் பெயர்ப் பகாப்பதம் நட, வா, உண் வினைப் பகாப்பதம் மற்று, ஏ, ஓ இடைப் பகாப்பதம் உறு, தவ, நனி உரிப் பகாப்பதம்


40. பனுபதமாவது, பகுக்கப்படும் இயல்பையுடைய பதமாம். அது, பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம், என இருவகைப்படும். அவற்றுல், வினைப் பகுபதம், தெரிநிலை வiனைப் பகுபதம், குறிப்பு வினைப் பகுபதமும் என இருவகைப்படும். உதாரணம். பொன்னன் .. பெயர்ப் பகுபதம் நடந்தான் .. தெரிநிலை வினைப் பகுபதம் பெரியன் .. உரிப்பகாப்பதம்

தேர்வுவினாக்கள் 38. பதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்? 39. பகாப்பதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்? 40. பகுபதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்? வினைப் பகுபதம் எத்தனை வகைப்படும்?


தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் பகுபதமாகும் எனவே, அவ்விருவகை வினையாலணையும் பெயர்களும் பகுபதமாகும் என்பது பெறப்படும். பகுதவுறுப்பு 41. பகுபதத்துக்கு உறுப்புக்கள், பகுதி, விகுதி, இடைநிலை சாரியை, சந்தி, விகாரம், என ஆறாம். புகுபதம், இ;வ்வாறுறுப்புக்களுள்ளும் பகுதி விகுதி என்னும் இரண்டு முதலியவவைகளினால் முடிவு பெறும். உதாரணம். (1) கூனி என்பது, கூன், இ எனப் பகுதி, விகுதி என்னும் இரண்டுறுப்பால் முடிந்தது. (2) ஊண்டான் என்பது, உண், ட், ஆன் எனப் பகுதி, விகுதி, இடைநிலை என்னும் மூன்றுறுப்பால் முடிந்தது. (3) உண்டனன் என்தது, உண், ட், அன், அன், அன், எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை என்னும் நான்குறுப்பால் முடிந்தது. (4) பிடித்தனன் என்பது, பிடி, த், த், அன், அன், எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்னும் ஐந்துறுப்பால் முடிந்தது. (5) நடந்தனன் என்பது, நட, த், த், அன், அன் எனப் பகுதி, முதலிய ஐந்தும் பெற்று, சந்தியால் வந்த தகர வல்லொற்று நகரமெல்லொற்றாதலாகிய விகாரமும் பெற்று, ஆறுறுப்பால் முடிந்தது. தேர்வு வினாக்கள் 41. பகுபதத்துக்கு உறுப்புக்கள் எவை? புகுபதம் இவ்வாறுறுப்புக்களும் பெற்றே முடிவு பெறுமோ?


பகுதி 42. பகுதிகளாவன, பகுபதங்களின் முதலிலே நிற்கும் பகாப்பதங்களாம். —

43. பெயர்ப்பகுபதங்களுக்குப் பெரும்பாலும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், என்னும் ஆறுவகைப் பெயர்ச்சொற்களும், சிறுபான்மை சுட்டிடைச் சொற்கள், வினாவிடைச் சொற்கள், பிற மற்று என்னும் இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும். உதாரணம். (1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன். (2) அவன், இவன், உவன், எவன், ஏவன், யாவன், பிறன், மற்றையன். —

44. வினைக்குறிப்பு பகுபதங்களுக்கு, மேற்சொல்லப்பட்டனவாகிய அறுவகைப் பெயர்ச்சொற்களும், இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும். உதாரணம். (1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன். (2) ஆற்று, இற்று, எற்று —

45. மை விகுதி புணர்ந்து நின்ற செம்மை கருமை முதலிய பண்புப் பெயர்கள், விகுதி புணரும்பொழுது, பெரும்பாலும் விகாரப்பட்டு வரும். இவை விகாரப்படுதல் பதப்புணர்ச்சிக்குங் கொள்க. உதாரணம். அணியன்: இங்கே அணிமையின் மை விகுதி கெட்டது. கரியன்: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, நடு உகரம் இகரமாய்த் திரிந்தது. பாசி: இங்மே பசுமையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டது. பேரறிவு: இங்மே பெருமையின் மைவிகுதியோடு நடு நின்ற உகரவுயிர் கெட்டு முதல் நீண்டது. குருங்குதிரை: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, வரும் வல்லெழுத்திற்கு இனமெல்லெழுத்து மிகுந்தது. பைந்தர்: இங்கே பகமையின் மை விகுதியோடு நடு நின்ற ககரவுயிர் மெய் கெட்டு, முதலகரம் ஐகாரமாய் திரிந்து, வரும் வல்லெழுத்துக்கு இன மெல்லெழுத்து மிகுந்நது. வெற்றிலை: இங்கே வெறுமையின் மைவிகுதி கெட்டு, நடு நின்ற மெய் இரட்டித்தது. சேதாம்பல்: இங்கே செம்மையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டு, நடு நின்ற, மகரமெய் தகரமெய்யாய்த் திரிந்தது. —

46. தெரிநிலைவினைப் பகுபதங்களுக்குப் பெரும்பாலும் நட வா முதலிய வினைச்சொற்களும், சிறுபான்மை பெயர்ச்சொல் இடைச்சொல் உரிச்சொற்களும், பகுதிகளாய் வரும். உதாரணம். நட, நடந்தான் வினையடி வா, வந்தான் நில், நின்றான் காண், கண்டான் சித்திரம், சித்திரித்தான் பெயரடி கடைக்கண், கடைக்கணித்தான் போல், பொன்போன்றான் இடையடி நிகர், புலிநிகர்த்தான் சால், சான்றான் உரியடி மாண், மாண்டான் —

47. தெரிநிலைவினைப் பகுதிகள், விகுதி முதலியவற்றோடு புணரும்போது, இயல்பாகியும், விகாரமாகியும் வரும். உதாரணம். 1. தொழு: தொழுதான் இயலபாகி வந்தன உண், உண்டான் 2. சேறல்: இங்கே சொல்லென்பகுதி முதல் நீண்டது. தந்தான்: இங்கே தாவென்பகுதி முதல் குறகியது. தருகின்றான்: இங்கே தாவென்பகுதி முதல் குறுகி, ருகரவுயிர்மெய் விரியப்பெற்றது. செத்தான்: இங்கே சாவென்பகுதி முதலாகரம் எகராமாய்த் திரிந்தது. விராவினான்: இங்கே விராவென்பகுதி நடுக்குறில் நீண்டது. கொணார்ந்தான்: இங்கே கொணாவென் பகுதியீற்று நெடில் குறிகி, ரகரமெய் விரிந்தது. கற்றான்: இங்கே கல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்தாய்த் திரிந்தது. சென்றான்: இங்கே சொல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்துக்கு இனமாய்த் திரிந்தது.


48. தொரிநிலை வினைப்பகுதிகள், வி, பி, முதலிய விகுதி பெற்றேனும், விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதி பெற்றேனும், பிறவினைப் பகுதிகளாய் வரும். உதாரணம். 1. செய், செய்வி, செய்வித்தான் நட, நடப்பி, நடப்பித்தான் 2. திருந்து, திருத்து, திருத்தினான் ஆடு, ஆட்டு, ஆட்டினான் தேறு, தேற்று, தேற்றினான் உருகு, உருக்கு, உருக்கினான் 3. திருத்து, திருத்துவி, திருத்துவித்தான் ஆட்டு, ஆட்டுவி, ஆட்டுவித்தான் தேற்று, தேற்றுவி, தேற்றிவித்தான் உருக்கு, உருக்குவி, உருக்குவித்தான்


49. பொன்னன், கரியன், முதலானவை, எட்டு வேற்றுமைகளுள் ஒன்றை யேற்கும் போது பெயர்ப்பகுபதங்களாம்: முக்காலங்களுள் ஒன்றைக் குறிப்பாகக் காட்டும்போது வினைக்குறிப்பு முற்றுப்பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இம் மூன்றுக்கும் வேறுபாடம். —

50. நடந்தான், வந்தான், முதலானவை காலங்காட்டும் போது தெரிநிலை வினை முற்றப் பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும்போது தெரிநிலை வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இவ்விரண்டுக்கும் வேறுபாடாம்.2 தேர்வு வினாக்கள் 42. பகுதிகளாவன யாவை? 43. பெயர்ப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை? 44. வினைக்குறிப்புப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை? 45. விகுதி புணரும் பொழுது விகாரப்பட்டு வரும் பெயர்களும் உளவோ? 46. தெரிநிலை வினைப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை? 47. தெரிநிலை வினைப்பகுதிகள் விகுதி முதலியவற்றோடு புணரும் பொழுது எப்படி வரும்? 48. தெரிநிலை வினைப்பகுதிகள் பிறவினைப் பகுதிகளாமிடத்து எப்படி வரும்? 49. பெயர்ப்பகுபதம் குறிப்பு வினைமுற்;றுப் பகுபதம் குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதம் என்னும் மூன்றுக்கும் வேறுபாடு என்ன? 50. தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம் என்னும் இரண்டுக்கும் வேறுபாடு என்ன? — விகுதி 51. விகுதிகளாவன, பகுபதங்களின் இறுதியிலே இடைப்பதங்களாகும். —

52. பெயர் விகுதிகள், அன், ஆன், மன்,மான், ன், அள்,ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அ, வை, வ், தை, கை, பி, முன், அல், என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம். உதாரணம். குழையன், வாகத்தான், வடமன், கோமான், பிறன், குழையள், வானத்தாள், அரசி, பறள், குழையர், வானத்தார், தேவிமார், கோக்கள், பிறர், அது, குநற்தாளன, அவை, எந்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல்.


53. தொழிற்பெயர்விகுதிகள், தல், அல், அம், ஐ, கை,வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம். உதாரணம். நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து என வரும். மை விகுதி, செய்தமை, செய்கின்றமை, என இறந்த காலவிடை நிலை, நிகழ்காலவிடை நிலைகளோடு கூடியும் வரும். துவ்விகுதி, அவர் செய்தது, செய்கின்றது. செய்வது என முக்கால விடைநிலைகளோடு கூடியும் வரும்.


54. பண்புப் பெயர்விகுதிகள், மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர், என்னும் பத்தும் பிறவுமாம். உதாரணம். நன்மை, தொல்லை, மாட்சி, மான்பு, மழவு, நன்கு, நன்றி, நன்று, நலம், நன்னர் என வருமு;. —

55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டுமு;, தும், றும், ஐ, ஆய், இ, இர், ஈர், க, இய, இயர், ஆல், ஏல், மின், உம் என்னும் முப்பெத்தெட்டும் பிறவுமாம். உதாரணம். நடந்தனன், நடந்தான், நடந்தனள், நடந்தாள், நடந்தனர், நடந்தார், நடப்ப, நடமார், நடந்தன, நடவா, உண்கு, உண்டு, நடந்தது, கூயிற்று, நடந்தெனன், நடந்தேன், நடப்பல், நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம், நடப்போம், உண்கும், உண்டும், வருதும், சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடந்தனிர், நடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மாறல், அழேல், நடமின், உண்ணும். —

56. குறிப்பு வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ, டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஒம், ஐ, ஆய், இ, இர், ஈர், என்னும் இருபத்திரண்டும் பிறவுமாம். உதாரணம். கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குநற்தட்டு, கரிது, குழையிற்று, கரியென், கரியேன், கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியோம், கரியை, கரியாய், வில்லி, கரியிர், கரியீர். —

57. தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள், அ, உம், என்னும் இரண்டுமாம். உதாரணம். செய்த, செய்கின்ற் செய்யும். குறிப்பு வினைப்பெயரெச்சவிகுதி, அ ஒன்றேயாம். உம், விகுதி, இடைநிலையேலாது, தானே எதிர்காலங்காட்டலாற் குறிப்பு வiனைப் பெயரெச்சத்துக்கு வாராது. உதாரணம். கரிய —

58. தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள், உ, இ, ய், பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிறவுமாம். இவற்றுள், இறுதியிற்கூறிய மல், மை, மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும். உதாரணம். நடந்து, ஒடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணுh, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டகடகால், உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானெனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே. குறிப்பு வினை வினையெச்ச விகுதிகள், அ, றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து, என்னும் எட்டும் பிறவுமாம். உதாரணம். மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாக்கடை, அல்லாவழி, அல்லாவிடத்து.


59. பிறவினை விகுதிகள், வி, பி, கு, சு, டு. து, பு, று என்னம் எட்டுமாம். உதாரணம். செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு, துயிற்று. —

60. இ, ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும், வினைமுதற்பொருளையுஞ் செயற்படு பொருளையும் கருவிப்பொருளையும் உணர்த்தும். உதாரணம். 1. அலரி, பறவை, எச்சம், என்பன வினைமுதற்பொருளை உணர்த்தின. இவை முறையே, அலர்வது, பறப்பது, எஞ்சுவது, எனப் பொருள் படும். 2. ஊருணி, தொடை, தேட்டம், என்பன செயற்படு பொருளை உணர்த்தின. இவை முறையே, ஊராலுண்ணப் படுவது, தொடுக்கப்படுவது, தேடபபடுவது எஎனப்பொருள்படும். 3. மண்வெட்டி, பார்வை, நோக்கம், என்பன, கருவிப்பொருளை, உணர்த்தின. இவை முறையே, டண்வெட்டற்கருவி, பார்த்தற் கருவி, நோக்கற்கருவி எனப் பொருள்படும்.


61. இதுவரையுங் கூறிய விகுதிகளேயன்றிப் பிற விகுதிகளும் உண்டு. அவை வருமாறு:- விடு, ஒழி, விகுதிகள், துணிவுப்பொருளை உணர்த்தும். உதாரணம். வந்துவிட்டான், கெட்டொழிந்தான், என வரும். கொள்விகுதி, தற்பொருட்டுப் பொருள் உணர்த்தும். உதாரணம். அடித்துக்கொண்டான். படு, உண், விகுதிகள் செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும். உதாரணம். கட்டப்பட்டான், கட்டுண்டான். மை விகுதி தன்மைப்பொருள் உணர்த்தும். உதாரணம். பொன்மை, ஆண்மை இரு, இடு, என்பன, தமக்கென வேறுபொருள் இன்றிப் பகுதிப்பொருள் இன்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் வரும். உதாரணம். எழுசந்திருக்கின்றான், உரைத்திடுக்கின்றான். தேர்வு வினாக்கள் 51. விகுதிகளாவன யாவை? 52. பெயர் விகுதிகள் எவை? 53. தொழிற்பெயர் விகுதிகள் எவை? 54. பண்புப்பெயர் விகுதிகள் எவை? 55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள் எவை? 56. குறிப்பு வினைமுற்று விகுதிகள் எவை? 57. தெரிநிலை விiனாப் பெயரெச்ச விகுதிகள் எவை? 58. தெரிநிலை வினை வினையெச்ச விகுதிகள் எவை? குறிப்புவினை வினையெச்ச விகுதிகள் எவை? 59. பிறவினை விகுதிகள் எவை? 60. வினை முதற்பொருள் செயற்படு பொருள் கருவிப்பொருள்களை உணர்த்தும் விகுதிகள் எவை? 61. துணிவுப் பொருளுணர்த்தும் விகுதிகள் எவை? தற்பொருட்டுப் பொருளுணர்த்தும் விகுதி எது? செயற்பாட்டு வினைப்பொருளுணர்த்தும் விகுதிகள் எவை? தன்மைப்பொருளுணர்த்தும் விகுதி எது? பகுதிப்பொருள் விகுதிகள் எவை? — புணர்ந்து கெடும் விகுதி 62. முன்னிலையேவலொருமை ஆய் விகுதியும், பெயெரெச்ச விகுதியும், தொழிற்பெயர் விகுதியும், வினைமுதற் பொருளை உணர்த்தும் ஐ விகுதியும், பகுதியோடு புணர்ந்து நின்றாற் போலவே தம்பொருளை உணர்த்தும். உதாரணம். நீ, நட, நீ நடப்பி: இவைகளிலே ஆய் விகுதி புணர்ந்து கெட்டது. கொல்களிறு, ஒடாக்குதிரை: இவைகளிலே பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன. அடி, கேடு, இடையீடு : இவைகளிலே தல்லென்னுந் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது. காய், தளிர், பூ, கனி : இவைகளிலே வினைமுதற் பொருளை உணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டது. ஊண், தீன், எழுத்து : இவைகளிலே செயப்படு பொருளை உணர்த்தும் ஐ விகுதி புணர்ந்து கெட்டது.

தேர்வு வினா 62. பகுதியோடு புணர்ந்து பின்கெடும் விகுதிகள் எவை?

— இடைநிலை 63.இடைநிலைகளாவன, பகுபதங்களிலே பகுதிக்கும் விகுதிக்கும் நடுவிலே நிற்கும் இடைப்பகாப்பதங்களாம். அவை, காலங்காட்டாவிடைநிலையும், காலங்காட்டுமிடைநிலையும் என இரண்டு வகைப்படும். —

64. காலங்காட்டாவிடைநிலைகள் பெயர்ப்பகுபதங்களுக்கு வரும். உதாரணம். அறிஞன் .. ஜஞஇடைநிலைஸ ஒதுவான் .. ஜவ இடைநிலைஸ வலைச்சி .. ஜச இடைநிலைஸ வண்ணாத்தி .. ஜத இடைநிலைஸ —

65. காலங்காட்டுமிடைநிலைகள் தெரிநிலைவினைப் பகுபதங்களுக்கு வரும். அவை, இறந்தகாலவிடைநிலையும், நிகழ்காலவிடைநிலையும், எதிர்காலவிடைநிலையும் என, மூன்று வகைப்படும். —

66. இறந்தகாலவிடைநிலைகள், த், ட், ற், இன், என்னும் நான்குமாம். உதாரணம். செய்தான், உண்டான், தின்றான், ஓடினான். சிறுபான்மை இன்னிடைநிலை, போனான், என இகரங்குறைந்தும், எஞ்சியது என னகர மெய் குறைந்தும் வரும். பேயாது என யகரமெய் இறந்தகாலவிடைநிலையாயும் வரும். —

67. நிகழ்காலவிடைநிலைகள், ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றுமாம். உதாரணம். நடவாநின்றான், நடக்கின்றான், நடக்கிறான். —

68. எதிர்கால விடைநிலைகள், ப், வ், என்னும் இரண்டுமாம். உதாரணம். நடப்பான், செய்வான். தோர்வு வினாக்கள் 62. இடைநிலைகளாவன யாவை? 63. அவை எடதனை வகைப்படும்? 64. காலங்காட்ட விடைநிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும்? 65. காலங்காட்டுமிடைநிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும்? ஆவை எத்தனை வகைப்படும்? 66. இறந்தகால விடைநிலைகள் எவை? 67. நிகழ்கால விடைநிலைகள் எவை? 68. எதிர்கால விடைநிலைகள் எவை?


எதிர்மறையிடைநிலை 69. இல், அல், ஆ, என்னும் மூன்றும் எதிர்மறை யிடைநிலைகளாம். இவற்றுள், ஆகாரவிடைநிலை, வருமெழுத்து மெய்யாயிற் கெடாதும், உயிறாய்க்கெட்டும் கெட்டும் வரும். உதாரணம். நடந்திலன், நடக்கின்றிலன், நடக்கலன், நடவாதான், நடவான், நடவேன். நடவாதான் என்பதிலே தகரமெய் எழுத்துப்பேறு. தேர்வு வினாக்கள் 69. எதிர்மறையிடைநிலைகள் எவை? ஏதிர்மறை ஆகாரவிடைநிலை எங்கே கெடதும், எங்கே கெட்டும் வரும்?


காலங்காட்டும் விகுதி 70. சில விகுதிகள், இடைநிலையேலாது, தாமே காலங்காட்டும், அவை வருமாறு:- து, தும், று, றும் என்னும் விகுதிகள் இறந்தகாலமும், எதிர்காலமுங்காட்டும். உதாரணம். வந்து, (-வந்தேன்), வந்தும், (-வந்தேம்) வருது, (-வருவேன்) வருதும், (-வருவேம்) எ-ம். சென்று, (-சென்றேன்) சென்றும், (-சென்றேம்) சேறு, (-செல்வேன்) சேறும், (-செல்வேம்) எ-ம். வரும். கு, கும் என்னும் விகுதிகள் எதிர்காலங் காட்டும். உதாரணம். உண்கு, (-உண்பேன்) உண்கும், (-உண்பேம்) என வரும் டு, டும் என்னும் விகுதிகள் இறந்தகாலங் காட்டும். உதாரணம். உண்டு, (-உண்டேன்) உண்டும், (-உண்டேம்) என வரும். இ என்னும் முன்னிலை வினைமுற்று விகுதி யொன்றும், ப, மர், என்னும் படர்க்கை வினைமுற்று விகுதியிரண்டும், க, இய, இயர், அல், என்னும் வியங்கோண் முற்று விகுதுp நான்கும், ஆய், இ, ஆல், ஏல், காண், மின், உம், ஈர், என்னும் முன்னிலையேவன்முற்று விகுதியேழும், ஆகிய பதிநான்கு விகுதிகளும் எதிர்காலங்காட்டும். உதாரணம். (1). சேறி, (-செல்வாய்) (2) நடப்ப, (-நடப்பார்) நடமார், (-நடப்பார்) (3) வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல் (4) நடவாய், உண்ணுதி, மாறல், அழேல், சொல்லிக்காண், நடமின், உண்ணும், உண்ணீர். உம் என்னஞ் செய்யுமன் முற்று விகுதி நிகழ்காhலமும் எதிர்காலமுங் காட்டும். உதாரணம். உண்ணும் எச்சவிகுதிகள் காலங்காட்டல் வினையியலிற் கண்டு கொள்க. தேர்வுவினாக்கள 70. இடைநிலையேலாது தாமே காலங்காட்டும் விகுதிகள் உளவோ? து, தும், று, றும், விகுதிகள் எக்காலங் காட்டும்?, கு, கும், விகுதிகள் எக்காலங் காட்டும்? டு, டும் விகுதிகள் எக்காலங் காட்டும்? ஏதிர்காலங்காட்டும்? வேறு விகுதிகள் உளவோ? உம் என்னுஞ் செய்யுமென் முற்று விகுதி எக்காhலங் காட்டும்?


காலங்காட்டும் பகுதி 71. கு, டு, று, என்னும் மூன்னுயிர்மெய்களை இறுதியாக உடைய சில குறிலிணைப் பகுதிகள் விகாரப்பட்டு இறந்த காலங்காட்டும். உதாரணம். புக்கான், விட்டான், பெற்றான். தேர்வு வினா 71. காலங்காட்டும் பகுதிகள் உளவோ?


சாரியை 72. சாரியைகள், அன், ஆன், அம், ஆம், அல், அத்து, அற்று, இன், இற்று, தன், தான், தம், தாம், நம்,நும், அ, ஆ, உ, ஏ, ஐ, கு, து, ன் என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம். உதாரணம். நடந்தனன், ஒருபற்கு, புளியங்காய், புற்றாஞ்சோறு, தொடையல், அகத்தன், பலவற்றை, வய்டின் கால், பதிற்றுப் பத்து, அவன்றன்னை, அவன்றான், அவர்தம்மை, அவர்தாம், எல்லாநம்மையும், எல்லீர் நும்மையும், நடந்தது, இல்லாப்பொருள், உண்ணுவான், செய்து கொண்டான், ஆன். தேர்வு வினா 72. சாரியைகளென்பன எவை?


சந்தி 73. சந்திகளாவன, புணரியலிற் சொல்லப்டுவன வாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம். தேர்வு வினா 73. சந்திகளாவன எவை?


விகாரம் 74. விகாரங்களாவன, மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்களும், நெட்டெழுத்தை கற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தை தொகுத்தலும் ஆம். தோர்வு வினா 74. வகாரங்களாவன எவை? பதவியல் முற்றிற்று 3. புணரியல்

75. புணர்ச்சியாவது, நிலைமெழியும் வருமொழியும் ஒன்டுபடப்புணர்வதாம். — 76. அப்புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சியும், அல் வழிப்புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும். —

77. வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொகள் புணர்வதாம். உதாரணம். வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி மரம்வெட்டினான் .. ஜஐஸ மரத்தை வெட்டினான் கல்லெறிந்தான் .. ஜஆல்ஸ கல்லாலெறிந்தான் கொற்றன்மகன் .. ஜகுஸ கொற்றனுக்கு மகன் மலைவீழருவி .. ஜஇன்ஸ மலையின் வீழருவி சாத்தான்கை .. ஜஅதுஸ சாத்தனதுகை மலைநெல் .. ஜகண்ஸ மலையின்கணெல் —

78. அலவழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். ஆது, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப், பதினான்கு வகைப்படும்.

தொகைநிலைத் தொடர்களுக்கு உதாரணம் (1) கொல்யானை .. வினைத்தொகை (2) கருங்குதிரை .. பண்புத்தொகை சாரைப்பாம்பு .. இருபெயரொட்டுப் பண்புத் தொகை (3) மதிமுகம் .. உவமைத் தொகை (4) இராப்பகல் .. உம்மைத் தொகை (5) பொற்றொடி .. அன்மொழித் தொகை

தொகாநிலைத் தொடர்களுக்கு உதாரணம் (1) சாத்தன் வந்தான் .. எழுவாய்த் தொடர் (2) சாத்தவா .. விளித் தொடர் (3) வந்தான் சாத்தன் .. தொரிநிலை வினைமுற்றுத் தொடர் (4) பொன்னனிவன் .. குறிப்பு வினைமுற்றுத்தொடர் (5) வந்த சாத்தன் .. பெயரெச்சத் தொடர் (6) வந்து போனான் .. வினையெச்சத் தொடர் (7) மற்றொன்று .. இடைச்சொற்றொடர் (8) நனிபேதை ..உரிச்சொற்றொடர் (9) பாம்பு பாம்பு .. அடுக்குத் தொடர் —

79. இப்படி மொழிகள், வேற்றுமை வழியாலும், அல்வழியாலும், புணருமிடத்து, இயல்பாகவாயினும், விகாரமாகவாயினும் புணரும். —

80. இயலபு புணர்ச்சியாவது, நிலைமொழியும், வருமொழியும், விகாரமின்றிப் புணர்வதாம். உதாரணம். பொன்மணி சாத்தன்கை —

81. விகாரப்புணர்ச்சியாவது, நிலைமொழியேனும், வருமொழியேனும், இவ்விரு மொழிமேனும், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்களுள் ஒன்றையாயினும் பெற்றுப் புணர்வதாம். உதாரணம். வாழை + பழம் – வாழைப்பழம் தோன்றல் மண் + குடம் – மட்குடம் திரிதல் மரம் + வேர் – மரவேர் கெடுதல் நிலம் + பனை – நிலப்பனை கெடுதல், தோன்றல் பனை + காய் – பனங்காய் கெடுதல், தோன்றல், திரிதல் —

82. தோன்றல், திரிதல், கெடுதல், என்னும் இவ் விகாரமூன்றும், மயக்க விதி இன்மை பற்றியும், அல்வழி வேற்றுமைப் பொருணோக்கம் பற்றியும் வரும். தேர்வு வினாக்கள் 75. புணர்ச்சியாவது யாது? 76. அப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 77. வேற்றுமைப்புணர்ச்சி யாவது யாது? 78 ஆல்வழிப் புணர்ச்சியாவது யாது? அது எத்தனை வகைப்படும்? 79. மொழிகள், வேற்றுமை வழியாலும் அல்வழியாலும் புணருமிடத்து, எப்படி புணரும்? 80. இயல்பு புணர்ச்சியாவது யாது? 81. விகாரப் புணர்ச்சியாவது யாது? 82. தோன்றல் முதலிய விகாரங்கள் எவை பற்றி வரும்? — மயங்கா எழுத்துக்கள் 83. உயிரோடு உயிர்க்கு மயக்கவிதி இன்மையால், உயிhPற்றின்முன், உயிர் வரின், இடையே உடம்படு மெய்யென ஒன்று தோன்றும். உடம்படு மெய்யாவது, வந்த உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய், நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய்யெனினும் பொருந்தும். உடம்படுத்தலெனினும், உடன் படுத்தலெனினும் ஒக்கும். —

84. மெய்யீற்றின்முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின், நிலைமொழியீற்றேனும், வருமொழி முதலேனும், இவ்விரண்டுமேனும் விகாரப்படும். —

85.மொழிக்கு ஈராகுமெனப்பட்ட பதிகொருமெய்களின் முன்னும், மொழிக்கு முதலாகுமெனப்பட்ட ஒன்பது மெய்களும் புணரும்போது, மயங்குதற்கு உரியனவல்லாத மெய்களைச் சொல்வாம் :- லகர ளகரங்களின் முன்னே த ஞ ந ம என்னும் நான்கும் மயங்கா. ணுகர னகரங்களழன் முன்னே த ந என்னும் இரண்டும் மயங்கா. முகர மெய்யின் முன்னே க ச த ஞ ந என்னும் இரண்டும் மயங்கா ஞகரத்தின் முன்னே சகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. நுகரத்தின் முன்னே தகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. வுகரத்தின் முன்னே யகரமல்லாத எட்டும் மயங்கா. தேர்வு வினாக்கள் 83. உயீறிற்றின் முன் உயிர் வரின் எப்படி யாகும்? உடம்படுமெய்யாவது யாது? உடம்படுமெய்யென்பதற்கு வேறு பொருளும் உண்டோ? 84. மெய்யீற்றின் முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின் எப்படியாகும்? 85. லகர ளகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? ணகர னகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? மகரமெய்யின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? ஞகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? நகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? வகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? — மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல் 86. தனிக்குற்றெழுத்தைச் சாரத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், வந்தவுயிர் அந்த மெய்யீற்றின் மேல் ஏறும். உதாரணம். ஆண் + அழகு – ஆணழகு மரம் + உண்டு – மரமுண்டு —

87. தனிக்குற்றெழுத்தை ச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், அந்த மெய் இரட்டிக்கும்: இரட்டித்த மெய்யீற்றின் மேல் வந்தவுயிர் ஏறும். உதாரணம். கல் + எறிந்தான் – கல்லெறிந்தான் பொன்; + அழகியது – பொன்னழகியது தேர்வு வினாக்கள் 86. தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்? 87. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?


உயீரிற்றின் முன் உயிர் புணர்தல் 88. இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும். உதாரணம். கிளி; + அழகு – கிளியழகு தீ + எரிந்தது – தீயெரிந்தது பனை + ஓலை – பனையோலை —

89. அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும். உதாரணம். பல + அணி – பலவணி பலா + இலை – பலாவிலை திரு + அடி – திருவடி பூ + அரும்பு – பூவரும்பு நொ + அழகா – நொவ்வழகா கோ + அழகு – கோவழகு கௌ + அழகு – கௌவழகு

கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும். உதாரணம். கோ + இல் – கோயில் ஓரோவிடத்துக் கோவில் எனவும் வரும். —

90. ஏகாரவுயிhPற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும். உதாரணம். அவனே + அழகன் – அவனேயழகன் சே + உழுதது – சேவுழுதது தேர்வு வினாக்கள் 88. இ, ஈ, ஐ எ;ஏம் மூன்றுயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்? 89. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்? கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால் இப்படியே முடியுமோ? 90. ஏகாரவுயிhPற்றின் முன் உயிர் முதன்மொழி வந்தால் எப்படி புணரும்?


குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல் 91. குற்றியலுகரம், உயிர் வந்தால் தான் ஏறி நின்ற மெய்யைவிட்டுக் கெடும்: யகரம் வந்தால், இகரமாகத் திரியும். உதாரணம். ஆடு + அரிது – ஆடரிது நாகு + யாது – நாகியாது குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் இல்லாமையால், சம்பு, இந்து முதலிய வட மொழிகளின் ஈற்றுகரம் உயிர்வரிற் கெடாது நிற்க, உடம்படு மெய் தோன்றும். உதாரணம். சம்பு + அருளினான் – சம்புவருளினான் இந்து + உதித்தது – இந்துவுதித்தது தேர்வு வினாக்கள் 91. குற்றியலுகரத்தின் முன் உயிர் வந்தால் எப்படியாம்? குற்றியலுகரத்தின் முன் யகரம் வந்தால் எப்படியாம்? குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் உண்டா இல்லையா? வுட மொழிகளின் ஈற்றுகரத்தின் முன் உயிர் வரின் எப்படியாம்?


சில முற்றியலுகரவீற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல் 92. சில முற்றியலுகரமும், உயிர் வரின் மெய்யை விட்டுக்கெடுதலும், யகரம் வரின் இகரமாகத் திரிதலுமாகிய இவ்விரு விதியையும் பெறும். உதாரணம். கதவு + அழகு – கதவழகு கதவு + யாது – கதவியாது தேர்வு வினா 92.முற்றியலுகரங் குற்றியலுகரவீற்று விதி பெறாதா? — எல்லாவீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல் 93. உயிரும் மெய்யுமாகிய எல்லாவீற்றின் முன்னும் வரும் ஞ ந ம ய வ க்கள், இருவழியினும், இயல்பாம்: ஆயினும் இவற்றுள் ண ள ன ல என்னும் நான்கின் முன்னும் வருநகரந் திரியும். இத்திரிபு மேற் கூறப்படும்; வின, பலா, புளி, தீ, கடு, பூ, சே, பனை, கோ, கௌ, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள், என்னும் நிலைமொழிகளோடு, அல்வழிப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, என்னும் வருமொழிகளையும், வேற்றுமைப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞாற்சி நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை, என்னும் வருமொழிகளையும் கூட்டிக்கண்டு கொள்க. உதாரணம். விள + ஞான்றது – விளஞான்றது உரிஞ் + ஞான்றது – உரிஞ10ஞான்றது விள + ஞாற்சி – விளஞாற்சி உரிஞ் + ஞாற்சி – உரிஞ10ஞாற்சி நிலைமொழியீற்றுட் சில விகாரப்படுதல், பின்பு அல்வவ்வீற்றிற் கூறும் விதியாற் பெறப்படும். —

94. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்ஃ உதாரணம். மெய் + ஞானம் – மெய்ஞ்ஞானம் செய் + நன்றி – செய்ந்நன்றி கை + மாறு – கைம்மாறு —

95. நொ, து என்னும் இவ்விரண்டும் முன் வரும் ந ம ய வக்கள் மிகும். உதாரணம். நொ + ஞௌ;ளா – நொஞ்ஞௌ;ளா யவனா – நொய்யவனா து + ஞௌ;ளா – துஞ்ஞௌ;ளா யுவனா – துய்யவனா நோ – துன்பப்படு, து- உண் தேர்வு வினாக்கள் 93. எல்லாவீற்றின் முன்னும் ஞ ந ம ய வக்கள் வந்தால் எப்படிப் புணரும்? 94. ஞ ந ம ய வக்கள் எந்த மொழி முன்னும் மிகவோ? 95. நொ, து என்னும் இவ்விரண்டின் முன்னும் ஞ ந ம ய வக்கள் இயல.பேயாமோ? — மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல் 96. யகரமல்லாத மெய்கள், தம் முன் யகரம் வந்தாள் இகரச்சாரியை பெறுதலுமுண்டு. உதாரணம். வேள் + யாவன் – வேளியாவன் மண் + யானை – மண்ணியானை வேள்யாவன் என இகராச்சாரியை பெறாது வருதலே பெரும்பான்மையாம். —

97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் வருமொழி யகரம் வந்தாற் கெடும். உதாரணம். வேய் + யாது – வேயாது தேர்வு வினாக்கள் 96. யகரமல்லாத மெய்களின் முன் யகரம் வந்தால் எப்படி புணரும்? 97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் முன் யகரம் வந்தால் எப்படிப் புணரும்? — மூன்று சுட்டின் முன்னும் எகரவினாமுன்னும் நாற்கணமும் புணர்தல் 98. அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டின் முன்னும், யகரமொழித்த மெய்கள் வந்தால், வந்தவெழுத்து மிகும்: யகரமும் உயிரும் வந்தால், இடையில் வகரந் தோன்றும்.

உதாரணம். அக்குதிரை இக்குதிரை உக்குதிரை எக்குதிரை அம்மலை அம்மலை உம்மலை எம்மலை அவ்வழி இவ்வழி உவ்வழி எவ்வழி அவ்யபனை இவ்யானை உவ்யானை எவ்யானை அவ்வுயிர் இவ்வுயிர் உவ்வுயிர் எவ்வுயிர் —

99. அந்த, இந்த, உந்த எந்த என மரூஉமொழிகளாய் வருஞ்சுட்டு வினாக்களின் முன் வரும். வல்லினம் மிகும். உதாரணம். அந்தக்கல், இந்தக்கல், உந்தக்கல், எந்தக்கல் தேர்வு வினாக்கள் 98. அ, இ, உ என்னும் மூன்று கட்டின் முன்னும், எகரவினா முன்னும் யகரமொழிந்த மெய்கள் வந்தால், எப்படி புணரும்? இந்நான்கன் முன்னும் யகரமும் உயிரும் வந்தால் எப்படிப் புணரும்? 99. அந்த, இந்த, உந்த, எந்த என்னும் மரூஉமொழிகளின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? — உயர்தினைப் பொதுப் பெயர்களின் முன் வல்லினம் புணர்தல் 100. உயர்தினைப் பெயாப் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகரமெய்களின் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகாதியல்பாம். உதாரணம். அல்வழி வேற்றுமை நம்பிக்குறியன் விடலைசிறியன் செய்பெரியன் அவர் தீயர் நம்பிக்கை விடலை செவி சேய்படை அவர்தலை உயர்தினைப் பெயர் சாத்திகுறியள் சாத்திகுறிது சாத்திகால் போதுப்பெயர் தந்தைசிறியன் தந்தைசிறிது தந்நைசெவி தாய்பொடியாள் தாய்கொடிது தாய்கை ரகரமெய் பொதுப்பெயர்க்கு ஈறாகாது

நும்பிக்கொற்றான், சாத்திப் பெண், சேய்க்கடவுள், தாய்ப்பசு என இருபெயரொட்டுப் கண்புத்தொகையினும், தாய்க்கொலை, ஒன்னலர்ச் செகுத்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், செட்டித்தெரு என ஒரோவிடத்து ஆறாம் வேற்றுமைத் தொகையினும் வல்லின மிகுமெனக்கௌ;க. முகப்பிறந்தது, மகப்பெற்றாள், எ-ம். பிதாக்கொடியன்.பிதாக்கை, எ-ம். ஆடுச்சிறியன், ஆடுச்செவி, எ-ம். கோத்தீயன், கோத்தலை, எ-ம். அகர, ஆகார ஊகார ஓகாரங்களின் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகுமெனக் கொள்க. —

101. உயர்திணைப் பெயர் பொதுப்பெயர்களின் ஈற்று லகர ளகர ணகர னகர மெய்கள், வல்லினம் வந்தால் இருவழியினுந் திரியாதியல்பாம்.

உதாரணம். அல்வழி வேற்றுமை தேன்றல்குறியன் அவள்சிறியள் அவன்பெரியான் தோன்றல்கை அவள்செவி அவன்பொருள் உயர்திணைப் பெயர் ணகரமெய் உயர்திணைப்பெயர்க்கு ஈறாகாது. தூங்கல் குறியன் தூங்கல் குறிது தூங்கல் கை பொதுப் பெயர் மகக்கள் சிறியர் மக்கள் சிறிய மக்கள் செவி ஆண் பெரியன் ஆண் பெரிது ஆண்புறம் சாத்தன் சிறியன் சாத்தன் சிறிது சாத்தன் செவி உயர்திணைப் பெயாPற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க. லகர ளகரங்களின் முன்னும், ணகர னகரங்களின் முன்னும், தகரம் மயங்குதற்கு விதியில்லாமையால், வரும் விகாரம் மேற்கூறப்படும். தேர்வு வினாக்கள் 100. உயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகர மெய்களின் முன்னும், வல்லினம் வரின் எப்படிப் புணரும்? இவைகளின் முன் வரும் வல்லினம் எந்தவிடத்தும் மிகவோ? 101. உணர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்று லபர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படிப் புணரும்? இவைகள் வல்லினம், வந்தால் எவ்விமத்துந் திரியாவோ? — சில வுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணர்தல் 102. னகலர லகரவீற்றுச் சிலவுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணருமிடத்து, உம்மைத் தொகையினும், இருபெயரொட்டுப் பண்புத் தொகையினும் ஆறாம் வேற்றமைத் தொகையினும், நிலைமொழியேனும், இவ்விரு nhழியுமெனும், விகாரப்படும். உதாரணம். உம்மைத் தொகை கபிலன் + பரணன் – கபிலபரணர் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை சிவன் + பெருமான் – சிவபெருமான் முருகன் + கடவுள் – முருகக்கடவுள் சதாசிவன் + நாவலன் – சதாசிவ நாவலன் கந்தன் + வேள் – கந்தவேள் வேலாயுதன் + உபாத்தியாயன் – வேலாயுதவுபாத்தியாயன் தியாகராசர் + செட்டியர் – தியாகராசச் செட்டியர் விநாயகர் + முதலியார் – விநாயகமுதலியார்

வேற்றுமைத் தொகை குமரன் + கோட்டம் – குமரகோட்டம் குமரக்கோட்டம் வாணியர் + தெரு – வாணியத்தெரு வேளாளர் + வீதி – வேளாளவீதி தேர்வு வினாக்கள் 101. எல்லாவுயர்தியைப் பெயரும், நாற்கணங்களோடு புணருமிடத்து, இயல்பாகவே புணருமொ? — விளிப்பெயர் முன் வல்லினம் புணர்தல் 103. விளிப்பெயாPற்று உயிர் முன்னும் ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆப் பெயாPற்று லகர ளகர ணகர னகரங்கள் வல்லினம் வந்தால் திரியாதியல்பாம். உதாரணம். புலவபாடு சாத்தா கேள் நம்பிசெல் தம்பீ தா வேந்து கூறு மகனே படி விடலை போ நங்காய் பார் நாய்கீர் சென்மின் நாய்காய் பார் தோன்றல் உறாய் மக்கள் சொல்லீர் ஆண் கேளாய் கோன் பேசாய் விளக்கொடியை, பிதாகடகூறாய், ஆடூச் சொல்லாய், சேச்சொல்லாய், கோப்பேசாய், என அகர ஆகார ஊகார ஏகார ஓகாரங்களை இயல்பீறாகவுடைய விளிப்பெயர் முன் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க. தேர்வு வினாக்கள் 103. விளிப் பெயாPற்று உயிர் முன்னும், யரழ மெய் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்? வுpளிப்பெயாPற்று லகர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? விளிப்பெயர் முன் வரும் வல்லினம் எவ்விடத்தும் மிகவோ? — ஈற்று வினா முன்னும் யாவினா முன்னும் வல்லினம் புணர்தல் 104. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் யபவினா முன்னும் வரும் வல்லினம் மிகவாம். உதாரணம். அவனா கொண்டான் அவனே சென்றான் அவனோ தந்தான் யா பெரிய தேர்வு வினாக்கள் 104. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்? — வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல் 105. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தாள் திரியாதியல்பாம். உதாரணம். தெரிநிலை வினைமுற்று உண்டன குதிரைகள் உண்ணா குதிரைகள் வருதி சாத்தா வந்தனை சாத்தா வந்தது புலி வந்தாய் பூதா உண்டீர் தேவரே உண்டாhட தேவர் உண்பல் சிறியேன் உண்டாள் சாத்தி வந்தேக் சிறியேன் வந்தான் சாத்தன் குறிப்பு வினைமுற்று கரியன குதிரைகள் வில்லி சாத்தா கரியது தகர் கரியை தேவா கரியாய் சாத்தா கரியீர் சாத்தரே கூயிற்றுக் குயில், குநற்தாட்டுக் களிறு என வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுத் தெரிநிலை வனை முற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னு மாத்திரம் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க. ஏவலொருமை வினைமுற்று நட கொற்றா வா சாத்தா எறி தேவா கொடு பூதா ஓடு கொற்றா வெஃகு சாத்தா பரசு தேவா நடத்து பு_தா அஞ்சு கொற்றா எய்து சாத்தா வனை தேவா செய்கொற்றா சேர் சாத்தா வாழ் பூதா நில் கொற்றா கேள் சாத்தா உண் கொற்றா தின் சாத்தா

நொ, து என்னும் ஏவலொருமை வினைமுற்றிரண்டின் முன்னும் வரும் வல்லினம் மிகும். உதாரணம். நொக்கொற்றா துச்சாத்தா வினைத்தொகை விரிகதிர் ஈபொருள் அடுகளிறு வனைகலம் ஆடு பாம்பு அஃகுபிணி பெருகுபுனல் ஈட்டுதனம் விஞ்சுபுகழ் மல்கு சுடர் உண்கலம் தின்பண்டம் கொல்களிறு கொள்கலம் செய்கடன் தேர்ப்பொருள் வீழ்புனல் ஏவலொருமை வினைமுற்றும் வினைத் தொகையும் வன்றொடர்க் குற்றியலுகரவீற்றனவாயினும், அவற்றின் முன் வரும் வல்லினம் மிபாமை காண்க. ணகர ழகரவீறுகள், வினைத் தொகைக்கும் ஏவன் முற்றுக்குமன்றி, மற்றை வினை முற்றுக்களுக்கு இல்லை. லகர வீறு குறிப்பு வினை முற்றுக்கு இல்லை. தேர்வு வினாக்கள் 105. வினைமுற்று வினைத் தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ மெய் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்? ஆச் சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகலங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்? வுல்லினம், எந்த வினை முற்றின் முன்னும் மிகவோ? வுன்றொடர்க் குற்றியலுகரவீற்று ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகுமோ? ஏந்த ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகவோ? — பெயரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல் 106. அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா. ஈற்றுயிர் மெய் கெட்டு ஈகாரவிறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும். உதாரணம். உண்ட கொற்றன் கரிய டிகாற்றன் உண்ணாத குதிரை இல்லாத குதிரை உண்ணாக் குதிரை இல்லாக் குதிரை தேர்வு வினாக்கள்- 106. அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? ஈற்றுயிர்மெய் கெட்டு ஆகார விறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? வினைடியச்சத்தின் முன்வல்லினம் புணர்தல் —

107. இ, ய், ஆ, ஊ, என, அ என்னும் விகுதிகளையுடைய தெரிநிலை வினை வினையெச்சங்களின் முன்னும் அ, றி என்னம் விகுதிகளையுடை இவ்விரு வகை வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும். உதாரணம். தேடிக்கொண்டான் போய்க்கொண்டான் உண்ணாச்சென்றான் உண்ணுhச் சென்றான் உண்டெனப்பசஜ தீர்ந்தது உண்ணப் போனான் மெல்லப் பேசினான் நாளின்றிப் போனான் உண்டவழித் தருவான் உண்டக் கடைத்தருவான் அவனில்லாவழிச் செய்வான் அவனில்லாக் கடைச்செண்வான் —

108. இய, இயர், Nமு, டை என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா. உதாரணம். உண்ணிய சென்றான் உண்ணியா சென்றான் உண்ணாமே போனான் உண்ணாமை போனான் —

109. வன்றொடர்க்குற்றியலுகரவீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்: மற்றைக் குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா. உதாரணம். அடித்துக் கொன்றான் உண்பாக்குச் சென்றான் பொருது சென்றான் நடந்து போனான் எய்து கொன்றான் அவனல்லது பேசுவார் யார் துவ்விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினமிகும். உ-ம் உண்ணாப் போனான் —

110. வினையெச்சத்தீற்று னகர லகரங்கள், வல்லினம் வந்தால், றகரமாகத் திரியும்: வான் பான் இரண்டுந் திரியா. உதாரணம். வரிற்கொள்ளும் உண்டாற்கொடுப்பேன் அறிவான்சென்றான் உண்பான் போனான் தேர்வு வினாக்கள் 107. எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகும்? 108. எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா? 109. வன்றொடர்க் குனுற்றியலுகரவீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? வன்றொடரழிந்த குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? துவ் விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? 110. வினையெச்சத் தீற்று னகர லகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்? எல்லா வினையெச்சத் தீற்று னகரமும் வல்லினம் வந்தாற்றிரியுமொ? — இ உ ஐ யொழிந்த உயிரீற்றஃறிணைப் பெணர் முன் வல்லினம் புணர்தல் 111. அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, என்னும் ஆறயிரீற்றஃறிணைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும். உதாரணம். அல்வழி வேற்றுமை விளக்குறிது விளக்கோடு தாராச்சிறிது தாராச்சிறை தீச்சுடும் தீச்சுவாலை கொண்மூக்கரிது கொண்மூக்கருமை சேப்பெரிது சேப்பெருமை கோச்சிறிது கோச்செவி —

112. அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும்: வகரவைகாரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகா. உதாரணம். அல்வழி வேற்றுமை பல போயின பல படைத்தான் சில சென்றன சில சொற்றான் உள்ளன குறைந்தன உள்ளன கொடுத்தான் உள்ளவை தகர்ந்தன உள்ளவை தந்தான் பல சில என்னும் இரு பெயருந் தம் முன்னே தாம் வரின், வருமொழி முதலெழுத்து இயல்பாகியும், மிக்கும், நிலைமொழியீற்றின் அகரங்கெட லகரம் றகரமாகத் திரிந்துந் தியாதும், வரும். உதாரணம். பலபல பலப்பல பற்பல பல்பல சிலசில சிலசில சிற்சில சில்சில பல, சல என்னும் இரு பெயர் முன்னும் பண்புத் தொகையிற் பிற பெயர் வரின், நிலை மொழியீற்றின் அகரங்கெடாதுங் கெட்டும் வரும். உதாரணம். பல்கலை பல்கலை சிலகலை சில்கலை பலமலை பனடமலை சிலமலை சின்மலை பலயானை பல்யானை சிலயானை வில்யானை பலவணி பல்லணி சிலவணி சில்லணி —

113. ஆ, மா, ஆமா, பீ, நீ என்னும் பெயர்களின் முன்வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம். உதாரணம். ஆ தீண்டிற்று மா சிறிது ஆமா பெரிது பீ கிடந்தது நீ பெரியை மா – இங்கே வலங்கு. ஆமா – காட்டுப்பசு 114. பூ என்னும் பெயர் முன் வரும் வல்லெழுத்து மிகுதலேயன்றி இனமெல்லெழுத்தும் மிகும். உதாரணம். பூங்கொடி பூங்கரும்பு பூ என்பது மலருக்கும் பொலிவுக்கும் பெயர். முலர்ப்பொருளில் வேற்றுமை: பொலிவுப் பொருளில் அல்வழி. தேர்வு வினாக்கள் 111. அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஒ என்னும் ஆறயிரீற்று அஃறிணைப் பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்? 112. அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர், வகரவைகாரவீற்றஃறிணைப் பன்மைப்பெயர் என்மும் இவைகளின் முன் வரும் வல்லினமும் மிகுமோ? புல, சில என்னும் இரு பெயருந் தம்முன்னே தாம் வரின் எப்படி புணரும்? இவ்விரண்டின் முன்னும் பண்புத்தொகையிற் பிறபெயர் வரின் எப்படி புணரும்? 113. ஆ, மா, ஆமா, பீ, நீ என்னும் பெயர்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? 114. பூ என்னும் பெயர் முன் வல்லினம் மிகுதலேயன்றி வேறு விதுயும் பெறுமோ? — முற்றியலுகர வீற்றுப் பெயர் முன் வல்லினம் புணர்தல் 115. முற்றியலுகரவீற்றுப் பெயர் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும். உதாரணம். அல்வழி வேற்றுமை பசுக்குறிது பசுக்கோடு —

116. முற்றியலுகர வீற்று அது, இது, உது, என்னுஞ் சுட்டுப்பெயர் முன்னும், எது என்னும் வினாப் பெயர் முன்னும், ஒரு, இரு, அறு, எழு என்னும் விகாரவெண்ணுப் பெயர் முன்னும் வரும் வல்லினம் மிகவாம். உதாரணம். அல்வழி வேற்றுமை அது குறிது அது கண்டான் இது சிறிது இது சொற்றான் உது தீது உது தந்தான் எது பெரிது எது பெற்றான் அல்வழி ஒருகை, இருசெவி, அறுகுணம், எழுகடல் தேர்வு வினாக்கள் 115. முற்றியலுகரவீற்றுப் பெயர் முன் வல்லினம் வரின் எப்படி புணரும்? 116. முற்றியலுகரவீற்றுச் சுட்டுப்பெயர் முன்னும், வினாப்பெயர் முன்னும், விகார வெண்ணுப்பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படி புணரும்? — இ ஐ ர ழ வீற்றஃறிணைப் பெயர்முன் வல்லினம் புணர்தல் 117. இகர ஐகாரவுயிர்களையும் ய ர ழ வொற்றுக்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத்தொகையினும், மிகும் எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும் மிகவாம். உதாரணம். கரிக்கோடு நாய்க்கால் யானைச்செவி தேர்த்தலை பூழ்ச்செவி வேற்றுமை மாசித்திங்கள் மெய்க்கீர்த்தி சாரைப்பாம்பு கார்ப்பருவம் பூழ்ப்பறவை பண்புத்தொகை காவிக்கண் வேய்த்தோள் குவளைக்கண் கார்க்குழ் காழ்ப்படிவம் உவமைத்தொகை பருத்திகுறிது நாய்தீது யானைகரிது வேர்சிறிது யாழ்பெரிது எழுவாய் பரணி- கார்த்திகை பேய்பூதம் யானைகுதிரை நீர்கனல் இகழ்புகழ் உம்மைத்தொகை இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, வல்லினம் மிகா. உதாரணம். இரண்டாம் வேற்றுமை ஏழாம்வேற்றுமை புளி தின்றான் அடவிபுக்கான் குவளை கொய்தான் வரைபாய்ந்தான் வேய் பிளந்தான் வாய்புகுந்தது தேர் செய்தான் ஊர் சென்றான் தமிழ் கற்றான் அகழ் குதித்தான் காவித்தடம், மனைத்தூண் என உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், வல்லினம் மிகுமெனக் கொள்க. புளி தின்றான், அடவி, புக்கம் என்பன, குளியைத் தின்றான், அடவியின் கட்புக்கான் என விரிதலின், உருபு மாத்திரந்தொக்க தொகை. காவித்தடம், மனைத்தூண் என்பன, காவியையுடைய தடம், மனையின் கண்ணதாகிய தூண் என விரிதலின் உருபும் பயனும் உடன்றொக்க தொகை. ஏரிகடை, குழவிகை, மலைகிழவோன். எனச் சிறுபான்மை அஃறிணைப் பெயரிடத்து வேற்றுமையில் வல்லினம் மிகாமை காண்க. ஒரோவிடத்து, வேய்ங்குழல், ஆர்ங்கோடு என வேற்றுமையில் யகர ரகரங்களின் முன்னும், பாழ்ங்கிணறு எனப் பண்புத் தொகையில் ழகரத்தின் முன்னும், இனமெல்லெழுத்து மிகுமெனக் கொள்க. பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான். எ-ம். சூர்கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான். எ-ம். ஒரோ வழிச் செயப்பாட்டுவினை முடிக்குஞ்சொல்லாக வருமிடத்து, யகர ரகரங்களின் முன் வரும் வல்லினம், ஒரு கால் இயல்பாயும், ஒரு காற்றிரிந்தும் வரும். தேர்வு வினாக்கள் 117. இகர ஐகாரவுயிர்களையும் ய ர ழ மெய்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம் எந்தெந்த விடங்களின் மிகும்: எந்தெந்தவிடங்களின் மிகா? இரண்டாம் வேற்றுமைத் தொகையும், ஏழாம்வேற்றுமைத் தொகையும், உருபு மாத்திரந் தொக்க தொகையாயின், அவற்றின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், அவற்றின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? இகர ஐகாரவீற்றஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், ஆறாம் வேற்றுமைத் தொகையில், மிகுதலன்றி வேறு விதி பெறாதோ? ய ர ழ வீற்றின் முன் வரும் வல்லினம், வேற்றுமைத் தொகையிலும், பண்புத் தொகையிலும், ஒரோவிடத்து வேறு விதி பெறவோ? மூன்றாம் வேற்றுமைத் தொகையிலே முடிக்குஞ் சொற் செயற்பாட்டு வினையாகுமிடத்து, ய ர க்களின் முன் வரும் வல்லினம் எப்படிப் புணரும்? — சில மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல் 118. உயிhPற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், இன மெல்லெழுத்து மிகும். உதாரணம். மா + காய் – மாங்காய் விள + காய் – விளாங்காய் —

119. இகர, உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், அம்முச்சாரியை தோன்றும். உதாரணம். புளி + காய் – புளியங்காய் புன்கு + காய் – புன்கங்காய் ஆல் + காய் – ஆலங்காய் —

120. ஐ காரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், நிலைமொழியீற்றை காரங் கெட்டு அம்முச்சாரியை தோன்றும். உதாரணம். எலுமிச்சை + காய் – எலுமிச்சங்காய் மாதுளை + காய் – மாதுளங்காய் தேர்வு வினாக்கள் 118. உயிரீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்? 119. இகர உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்? 120. ஐகாரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்? — சில வேற்றுமையுருபின் முன் வல்லினம் புணர்தல் 121. ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு களின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகா. உதாரணம். மகனொடு போனான் மகனோடு போனான் தனது கை தனாது கை தன கைகள் தேர்வு வினா 121. ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்? — குற்றியலுகரவீறு 122. வன்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும். உதாரணம். அல்வழி வேற்றுமை கொக்குக்கடிது கொக்குச்சிறை சுக்குத்திப்பிலி சுக்குக்கொடு —

123. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்: வேற்றுமையிலே மிகும். உதாரணம். அல்வழி வேற்றுமை குரங்கு கடிது குரங்குக்கால் அம்பு தீது அம்புத்தலை குரங்கு பிடித்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும், அரங்கு புக்கான் என ஏழாம் வேற்றுமைத் தொகையிலும், வருமொழி வினையாயவிடத்து, வல்லினம் மிகாவெனக் கொள்க. —

124. ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அன்று, இன்று, என்று, பண்டு, முந்து, என்னும் இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகா. உதாரணம். அன்று கண்டான் பண்டு பெற்றான் இங்குச்சென்றான் ஈங்குச்சென்றான் உங்குத்தந்தான் ஊங்குத்தந்தான் எங்குப்பெற்றான் யாங்குப்பெற்றான் யாண்டுப் பெற்றான் —

125. நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர் என்னும் இந்நான்கு தொடர்க் குற்றியலுகர வீற்றுமொழிகளின் முன் வரும் வல்லினம், இரு வழியினும் இயல்பாம். உதாரணம். அல்வழி வேற்றுமை நாகு கடிது நாகு கால் எஃகு கொடிது எஃகு கூர்மை வரகு சிறிது வரகு சோறு தௌ;கு பெரிது தௌ;கு பெருமை —

126. டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் நாற்கணமும் வரின், உகரமேறிய டகர றகர மெய்கள் வேற்றுமையிற் பெரும்பாலும் இரட்டும். ஆட்டுக்கால் ஆட்டுமயிர் ஆட்டுவால் ஆட்டதர் ஆற்றுக்கால் ஆற்றுமணல் ஆற்றுவழி ஆற்றூறல் நெடிற்றொடர் பகட்டுக்கால் பகட்டுமார்பு பகட்டு வால் பகட்டடி வயிற்றுக்கொடல் வயிற்றுமயிர் வயிற்றுவலி வயிற்றணி உயிர்த்தொடர் காட்டரண், ஏற்றுப்பன்றி, வரட்டாடு, வெளிற்றுப்பனை எனச் சிறுபான்மை அல்வழியிலே பண்புத்தொகையில் இரட்டுதலும், வெருக்குக்கண், எருத்துமாடு எனச் சிறுபான்மை இரு வழியிலும் பிறவொற்றிரட்டுதலும் உளவெனக் கொள்க. ஆடு கொண்டான், ஆறு கண்டான், பகடு தந்தான், பயறு தின்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், காடு போந்தன், ஆறு பாய்ந்தான், அகடு புக்கது, வயிறு புக்கது என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, இரட்டா வெனக் கொள்க. 127. மென்றொடர்க் குற்றியலுகர வீற்று மொழிகளுள்ளே சில, நற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பணபுத்தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு. உதாரணம். மருந்து + பை – மருந்துப்பை கரும்பு + நாண் – கருப்புநாண் கரும்பு + வில் – கருப்புவில் வேற்றுமை கன்று + ஆ – கற்றா அன்பு + தளை – அற்புத்தளை பண்புத் என்பு + உடம்பு – எறபுடம்பு தொகை குரங்கு + மனம் – குரக்குமனம் உவமைத் இரும்பு + நெஞ்சம் – இருப்புநெஞ்சம் தொகை —

128. சில மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகள் இறுதியில் ஐகாரச்சாரியை பெற்று வரும். உதாரணம். பண்டு + காலம் – பண்டைக்காலம் இன்று + நாள் – இற்றைநாள் அல்வழி அன்று + கூலி – அன்றைக்கூலி வேற்றுமை இன்று + நலம் – இற்றை நலம் சில மென்றொடர் மொழிகள், வருமொழி நோக்காது, ஒற்றை, இரட்டை எனத் தனிமொழியாக நின்றும், ஈராட்டை, மூவாட்டை எனத்தொடர் மொழியாக நின்றும், ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு. நேற்று + பொழுது – நேற்றைப்பொழுது. எ-ம். நேற்று + கூலி – நேற்றைக்கூலி. எ-ம். வன்றொடர் ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு. தேர்வு வினாக்கள் 122. வன்றொடர்க்குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்? 123. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம்வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து வல்லினம் எப்படியாம்? 124. ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அன்று முதலிய இடைச்சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அங்கு முதலிய இடைச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? 125. நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர், என்னும் இந்நான்கு தொடர்க்குற்றியலுகர வீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்? 126. டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் நாற்கணமும் வரின் எப்படியாம்? அல்வழியில் எங்கும் இப்படி இரட்டுதலில்லையோ? 127. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளுட் சில, இருவழியினும் நாற்கணமும் வரின், வன்றொடராகத் திரிதலும் உண்டோ? 128. மென்றொடர்க் குற்றியலுகரம் .ன்னும் எவ்வாறாகும்? வன்றொடர்க் குற்றியலுகரம் ஐகாரச்சாரியை பெறுதலில்லையோ? — குற்றியலுகரவீற்றுத் திசைப்பெயர்களோடு திசைப்பெயர்களும் பிற பெயர்களும் பிற பெயர்களும் புணர்தல் 129. வடக்க், குணக்கு, குடக்கு, என்னுஞ் செற்களின் ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றுங் கெடும். உதாரணம். வடக்கு + கிழக்கு – வடகிழக்கு மேற்கு – வடமேற்கு திசை – வடதிசை மலை – வடமலை வேங்கடம் – வடவேங்கடம் குணக்கு + திசை – குணதிசை கடல் – குணகடல் குடக்கு + திசை – கடதிசை நாடு – குடநாடு கிழக்கு என்பது, ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றும் ழகரமெய்யின் மேனின்ற அகரவுயிருங்கெட்டு, முதனீண்டு வரும்: அங்கணம் வருமிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும் ஓரோவிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும், ஓரோவிடத்து மிகுந்தும் புணரும். உ-ம் கிழக்கு + பால் – கீழ்பால் திசை – கீழ்த்திசை கீழைச்சேரி, கீழைவீதி, என ஐகாரம் பெறுதலுமுண்டு. தெற்கு என்பது, ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் னகரமாகத்திரிந்து வரும்.

உதாரணம். தெற்கு + கிழக்கு – தென்கிழக்கு மேற்கு – தென்மேற்கு மலை – தென்மலை மேற்கு என்பது ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் லகரமாகத் திரிந்து வரும். தகரம் வரிற் றிரியாது. உதாரணம். மேற்கு + கடல் – மேல்கடல் வீதி – மேல்வீதி திசை – மேற்றிசை மேலைச்சேரி, மேலைவீதி என ஐகாரம் பெறுதலுமுண்டு. இத்திசைப் பெயர்கள், வடக்கூர், தெற்கூர், கிழக்கூர், மேற்கூர், வடக்குவாயில், தெற்கு மலை, கிழக்குத் திசை, மேற்கு மலை, என இங்ஙனங் காட்டிய விகாரமின்றியும் வரும். வடகிழக்கு என்பது, வடக்குங் கிழக்குமாயதொரு கோணம் என, உம்மைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. வடதிசை என்பது, வடக்காகிய திசை எனப் பண்புத்தொகை, வடமலை என்பது வடக்கின் கண் மலை என ஏழாம் வேற்றுமைத்தொகை. தேர்வு வினாக்கள் 129. திசைப்பெயர் முதலிய பெயர்கள் வந்து புணரின், வடக்கு, குணக்கு, குடக்கு என்னுஞ் சொற்கள் எப்படியாம்? கிழக்கு என்பது எப்படியாம்? தெற்கு என்பது எப்படியாம்? மேற்கு என்பது எப்படியாம்? இத்திசைப் பெயர்கள் இவ்விகாரமின்றியும் வருமோ? வடகிழக்கென்பது என்ன தொகை? வடதிசை என்பது என்ன தொகை? வட மலை என்பது என்ன தொகை? — உகரவீற்றெண்ணுப் பெயர்ப் புணர்ச்சி 130. ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும். உதாரணம். ஒன்று + கோடி – ஒருகோடி கழஞ்சு – ஒருகழஞ்சு நாழி – ஒருநாழி வாழை – ஒருவாழை ஆயிரம் – ஓராயிரம் இரண்டென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய்யும், ணகரவொற்றும், ரகரத்தின் மேனின்ற அகரவுயிருங் கெடும். வந்தது மெய்யாயின், ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும். உதாரணம். இரண்டு + கோடி – இருகோடி கழஞ்சு – இருகழஞ்சு யானை – இருயானை வாழை – இருவாழை ஆயிரம் – ஈராயிரம் மூன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரமெய் வந்தது உயிராயிற்றானும் உடன் கெடும். மெய்யாயின் முதல் குறுகி, னகரமெய் வருமெய்யாகத் திரியும். உதாரணம். மூன்று + ஆயிரம் – மூவாயிரம் கழஞ்சு – முக்கழஞ்சு நாழி – முந்நாழி நான்கென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரம், வந்தவை. உயிரும் இடையெழுத்துமாயின், லகரமாகத்திரியும்: வல்லெழுத்தாயின், றகரமாகத் திரியும்: மெல்லெழுத்தாயின் இயல்பாம். உதாரணம். நான்கு + ஆயிரம் – நாலாயிரம் யானை – நால்யானை கழஞ்சு – நாற்கழஞ்சு மணி – நான்மணி ஐந்தென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெகுடும். நின்ற நகர மெய் வந்தவை உயிராயிற் றானும் உடன் கெடும். வல்லெழுத்தாயின், இனமெல்லெழுத்தாகத் திரியும். மெல்லெழுத்தும் இடையெழுத்துமாயின் அவ் வந்த வெழத்தாகத் திரியும். உதாரணம். ஐந்து + ஆயிரம் – ஐயாயிரம் கழஞ்சு – ஐங்கழஞ்சு மூன்று – ஐம்மூன்று வட்டி – ஐவ்வட்டி நகரமுந் தகரமும் வரின், ஐந்நூறு, ஐந்தூணி, என ஈற்றுயிர் மெய் மாத்திரங் கெடும். ஆறென்னும் எண் உயிர் வரிற் பொதுவிதியான் முடியும்: மெய்வரின் முதல் குறுகும். உதாரணம். ஆறு + ஆயிரம் – ஆறாயிரம் கழஞ்சு – அறுகழஞ்சு மணி – அறுமணி வழி – அறுவழி ஏழு என்னும் எண்ணின் முன் உயிர் வரின், ஈற்றுகரங் கெடும்: மெய்வரின் முதல் குறுகும். உதாரணம். ஏழு + ஆயிரம் – ஏழாயிரம் கழஞ்சு – எழுகழஞ்சு மணி – எழுமணி வகை – எழுவகை ஏழ்கடல், ஏழ்பரி என வருதலுமுண்டு. எடடென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும்: நின்ற டகரமெய் நாற்கணத்தின் முன்னும் ணகரமெய்யாகத்திரியும். உதாரணம். எடடு + ஆயிரம் – எண்ணாயிரம் கழஞ்சு – எண்கழஞ்சு மணி – எண்மணி வளை – எண்வளை இவ் விகாரங்களின்றிப் பொது விதி பற்றி, இரண்டு கழஞ்சு, மூன்று படி, நான்கு பொருள், ஐந்து முகம், ஆறு குணம், ஏழு கடல், எட்டுத் திக்கு எனவும் வருமெனக் கொள்க. —

131. ஒன்பதென்னும் எண்முன் பத்தென்னும் எண்வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய் சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும். வருமொழியாகிய நூறு ஆயிரமாவுந் திரியும். உதாரணம். ஒனபது + பத்து – தொண்ணுhறு ஒன்பது என்னும் எண்முன் நூறு என்னும் எண் வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய்சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும், வருமொழியாகிய நூறு ஆயிரமாகவுந் திரியும். உதாரணம். என்பது + நூறு – தொள்ளாயிரம் இது இக்காலத்துத் தொளாயிரம் என வழங்கும். —

132. ஒன்று முதல் எடடீறாக நின்ற எண்ணுப் பெயர் கண்முன் பத்தென்னும் எண்ணுப் பெயர் வரின், அப்பத்தின் நடு நின்ற தகரமெய், கெட்டாயினும், ஈய்தமாகத் திரிந்தாயினும் புணரும். உதாரணம். ஒன்று 10 பத்து – ஒருபது, இருபஃது இரண்டு இருபது, இருபஃது மூன்று முப்பது, முப்பஃது நான்கு நாற்பது, நாற்பஃது ஐந்து ஐம்பது, ஐம்பஃது ஆறு அறுபது, அறுபஃது ஏழு எழுபது, எழுபஃது எட்டு எண்பது, எண்பஃது —

133. ஒருபது முதல் எண்பது ஈறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின், நிலைமொழியீற்றுக்கு அயலிலே தகரவொற்றுத் தோன்றும். உதாரணம். ஒருபது 10 ஒன்று – ஒருபத்தொன்று இருபது 10 இரண்டு – இருபத்திரண்டு முப்பது 10 மூன்று கழஞ்சு – முப்பத்துமூன்று கழஞ்சு மற்றவைகளு மிப்படியே


134. பத்தின் முன் இரண்டு வரின், உம்மைத் தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு நின்ற தகரமெய் னகரமாகத்திரியும். உதாரணம். பத்து 10 இரண்டு – பன்னிரண்டு பத்தின் முன் இரண்டொழிந்த ஒனிறு முதல் எட்டீறாகிய எண்கள் வரின், உம்மைத்தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு, இன் சாரியை தோன்றும். உதாரணம். பத்து 10 ஒன்று – பதினொன்று மூன்று – பதின்மூன்று நான்கு – பதினான்கு ஐந்து – பதினைந்து ஆறு – பதினாறு ஏழு – பதினேழு எட்டு – பதினெட்டு —

135. பத்தின் முன்னும், ஒன்று முதலிய எண்ணுப் பெயரும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிறபெயரும், வரின் பண்புத்தொகையில் இற்றுச்சாரியை தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர் மெய் கெடும்.. உதாரணம். பத்து 10 ஒன்று – பதிற்றொன்று இரண்டு – பதிற்றிரண்டு மூன்று – பதிற்றுமூன்று பத்து – பதிற்றுப்பத்து நூறு – பதிற்றுநூறு ஆயிரம் – பதிற்றாயிரம் கோடி – பதிற்றுக்கோடி கழஞ்சு – பதிற்றுக்கழஞ்சு கலம் – பதிற்றுக்கலம் மடங்கு – பதிற்றுமடங்கு

ஒன்பது 10 ஒன்று – ஒன்பதிற்றொன்று இரண்டு – ஒன்பதிற்றிரண்டு மூன்று – ஒன்பதிற்றுமூன்று பத்து – ஒன்பதிற்றுப்பத்து நூறு – ஒன்பதிற்றுநூறு ஆயிரம் – ஒன்பதிற்றாயிரம் கோடி – ஒன்பதிற்றுக்கோடி கழஞ்சு – ஒன்பதிற்றுக்கழஞ்சு கலம் – ஒன்பதிற்றுக்கலம் மடங்கு – ஒன்பதிற்றுமடங்கு பத்தின் முன்னும், ஒன்பதின் முன்னும், ஆயிரமும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிற பெயரும் வரின், பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி இன் சாரியையும் தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர்மெய் கெடும். உதாரணம். பத்து 10 ஆயிரம் – பதினாயிரம் கழஞ்சு – பதின்கழஞ்சு கலம் – பதின்கலம் மடங்கு – பதின்மடங்கு ஒன்பது 10 ஆயிரம் – ஒன்பதினாயிரம் கழஞ்சு – ஒன்பதின்கழஞ்சு கலம் – ஒன்பதின்கலம் மடங்கு – ஒன்பதின்மடங்கு


136. ஒன்பதொழிந்த ஒன்று முதற் பத்தீறாகிய ஒன்பதென்களையும் இரட்டித்து சொல்லுமிடத்து, நிலைமொழியின் முதலெழுத்து மாத்திரம் நிற்க, அல.லென் வெல்லாங் கெட்டு, முதனெடில் குறுகவும், வந்தவை உயிராயின் வகரவொற்றும், மெய்யாயின் வந்த எழுத்தும் மிகவும் பெறும். உதாரணம். ஒன்று 10 ஒன்று – ஒவ்வொன்று இரண்டு 10 இரண்டு – இவ்விரண்டு மூன்று 10 மூன்று – மும்மூன்று நான்கு 10 நான்கு – நந்நான்கு ஐந்து 10 ஐந்து – ஐவைந்து ஆறு 10 ஆறு – அவ்வாறு ஏழு 10 ஏழு – எவ்வேழு எட்டு 10 எட்டு – எவ்வெட்டு பத்து 10 பத்து – பப்பத்து சிறு பான்மை ஒரோவொன்று, ஒன்றொன்று என வருதலு முண்டு. தேர்வு வினாக்கள் 130. ஒன்று என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? இரண்டு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? மூன்று என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? நான்கு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? ஐந்து என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? ஆறு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? ஏழு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? எட்டு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? இவ் வெண்ணுப் பெயர்கள் இவ்விகாரமின்றியும் வருமோ? 131. ஒன்பது என்பதன் முன் பத்து வரின் எப்படி புணரும்? 132. ஒன்று முதல் எட்டீறாக நின்ற எண்ணுப் பெயர்கண் முன் பத்து வரின் எப்படி புணரும்? 133. ஒருபது முதல் எண்பதீறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின் எப்படி புணரும்? 134. பத்தின் முன் இரண்டு வரின் உம்மைத்தொகையில் எப்படிப் புணரும்? பத்தின் முன் இரண்டொழிந்த ஒன்று முதல் எட்டீறாகிய எண்கள் வரின் உம்மைத்தொகையில் எப்படி புணரும்? 135. பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஒன்று முதலிய எண்ணுப் பெயரும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிறபெயரும் வரின், பண்புத்தொகையில் எப்படி புணரும்? பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஆயிரமும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிறபெயரும் வரின் பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி வேறு சாரியையுந் தோன்றுமோ? 136. ஒனபதொழிந்த ஒன்று முதற் பத்தீறாகிய ஒன்பதென்களையும் இரட்டித்து சொல்லுமிடத்து, எப்படி புணரும்?


மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயர் முன்னும் ஏவல் வினை முன்னும் மெய் புணர்தல் 137. ஞ், ண், ந், ம், ல், வ், ள், ன் என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயரும், ஏவல் வினை முற்றும், தம்முன் யகரமல்லாத மெய்கள் வரின், உகரச் சாரியை பெறும். தொழிற்பெயரின் சாரியைக்கு முன் வரும் வல்லினம் மிகும். உதாரணம். அல்வழி வேற்றுமை உரிஞ10க்கடிது உரிஞ10க்கடுமை உண்ணுஞான்றது உண்ணுஞாற்சி பொருநுவலிது பொருநுவன்மை உரிஞகொற்றா உண்ணுநாகா பொருநுவளவா திரும், செல், வவ், துள், தின் முதலியனவற்றோடும் இவ்வாறே யொட்டிக்கொள்க. முதனிலைத் தொழிற்பெயராவது தொழிற்பெயர் விகுதி குறைந்தது. முதனிலை மாந்திர நின்று தொழிப்பெயர்ப் பொருளைத் தருவதாம். இவ்வொட்டீற்று ஏவல் வினைகளுள்ளே, உண்கொற்றா, தின் சாத்தா, வெல்பூதா, தூள் வளவா என, ண, ன, ல, ள, என்னும் இந்நான்கீறும், உகரச்சாரியை பெறாதும் நிற்கும். பொருநூதல் – மற்றொருவர்போல வேடங்கொள்ளுதல் பொருந் என்பது தொழிற்பெயராவதன்றிஅ த்தொழிலினரை உணர்த்துஞ் சாதிப்பெயருமாம். பொருநூக்கடிது என நகரவீற்றுச் சாதிப்பெயரும் வெரிநுக்கடிது என நகரவீற்றுச் சினைப்பெயரும், உகரச்சாரியை பெறுமெனவுங்கொள்க. வெரிந் – முதுகு. தேர்வு வினாக்கள் 137. ஞ, ண, ந, ம, ல, வ, ள, ன என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற் பெயரும், ஏவல் வினை முற்றும், தம் முன் யகர மல்லாத மெய்கள் வரின், எப்படிப் புணரும்? முதனிலைத் தொழிற் பெயராவது யாது? இவ் வொட்டீற்றேவல் வினைகளுள்ளே, உகரச் சாரியை பெறாதும் நிற்பன உளவோ? பொருநுதல் என்பதற்குப் பொருள் என்ன? பொருந் என்பது தொழிற்பெயராவதன்றி, வேறு பெயரும் ஆமோ? நகரவீற்றுப் பெயர் பொருந் அன்றி வேறும் உண்டோ? வெரிந் என்பதற்குப் பொருள் என்னை? பொருந் என்னுஞ் சாதிப் பெயரும், வெரிந் என்னுஞ் சினைப் பெயரும், உகரச்சாரியை பெறவோ?


ண கர னகர வீற்றுப் புணர்ச்சி 138. ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், அல் வழியில் அவ்விரு மெய்களும் இயலபாம். வேற்றுமையில் ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவுந் திரியும். அவ்விரு வழியிலும், வருந்தகரம் ணகரத்தின் முன் டகரமாகவும், னகரத்தின் முன் றகரமாகவும் திரியும். உதாரணம். அல்வழி வேற்றுமை மண்சிறிது மட்சாடி மண்டீது மட்டூண் பொன் குறிது பொற்கலம் பொன்றீது பொற்றூண் கட்பொறி, பொற்கோடு எனப் பண்புத் தொகையினும் பட்சொல், பொற்சுணங்கு என உவமைத் தொகையினுந் திரிதலும் உண்டு. மண் சுமந்தான், பொன் கொடுத்தான், என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், விண் பறந்தது, கான் புகுந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்துத் திரியாதியல்பாம். மண்கூடை, புண்கை, என ஒரோவிடத்து இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையினுந் திரியாமை கொள்க.


139. ணகர, னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இறுதி ண னக்கள் இரு வழியினும் இயல்பாம். அவ்விரு வழியிலும், ணகரத்தின் முன் வரு நகரம் ணகரமாகவும்: னகரத்தின் முன் வரு நகரம் னகரமாகவுந் திரியும். உதாரணம்.

அல்வழி வேற்றுமை மண்ஞான்றது மண்ஞாற்சி மண்ணீன்டது மண்ணீட்சி மண்வலிது மண்வன்மை பொன்ஞான்றது பொன்ஞாற்சி பொன்னீண்டது பொன்னீட்சி பொன்வலிது பொன்வன்மை


140. தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்கள், வரு நகரந் திரிந்த விடத்து, இரு வழியினுங் கெடும். உதாரணம். அல்வழி வேற்றுமை தூணன்று தூணன்மை அரணன்று அரணன்மை வானன்று வானன்மை செம்பொனன்று செம்பொனன்மை


141. பாண், உமண், அமண், பரண், கவண், என்னும் பெயர்களின் இறுதி ணகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம். உதாரணம். பாண்குடி உமண்சேரி அமண்பாடி பரண்கால் கவண்கால் பாண் – பாடுதற்றொழிலுடையதொரு சாதி. உமண் – உப்பமைதற்றொழிலுடையதொரு சாதி. அமண் – அருகனை வழிபடுவதொரு கூட்டம்.


142. தன், என், என்னும் விகார மொழிகளின் இறுதி னகரம், வல்லினம் வரின், ஒருகாற் றிரிந்தும், ஒருகாற் றிரியாதும், நிற்கும். நின் என்னும் விகாரமொழியின் இறுதி னகரந் திரியாதியல்பாகும். உதாரணம். தன்பகை தற்பகை என்பகை எற்பகை நின்பகை தற்கொண்டான், எற்சேர்ந்தான், நிற்புறங்காப்ப என இரண்டாம் வேற்றுமைத் தொகையிற் றிரிந்தே நிற்கும். —

143. குயின், ஊன், எயின், எகின், தேன், மீன், மான், மின் என்னுஞ் சொற்களின் இறுதி னகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம். உதாரணம். குயின்கடுமை – தேன்பெருமை ஊன்சிறுமை – மீன்கண் எயின்குடி – மான்செவி எகின்சிறுமை – மின்கடுமை குயின் – மேகம், எயின் – வேட்டுவச்சாதி, எகின் – அன்னப்புள் தேன் என்பது, தேக்குடம், தேங்குடம் என, இறுதி னகரங்கெட, ஒருகால் வரும் வல்லெழுத்தும் ஒருகால் அதற்கின மெல்லெழுத்து வருமிடத்து ஈறு கெடுதலுமுண்டு. தேர்வு வினாக்கள் 138. ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், இரு வழியும் எப்படிப் புணரும்? அல்வழியில் எவ்விடத்துந் திரியாவோ? வேற்றுமையில் எவ்விடத்தும் இயல்பாகவோ? ண ன வீறு இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையில் எவ்விடத்துந் திரிந்தே வருமோ? 139. ணகர னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இரு வழியிலும் எப்படி புணரும்? 140. தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்களின் முன் நகரம் வந்தால், ணகர னகரம் இயல்பாகவே நிற்குமோ? 141. எந்த மொழியினும் ணகரம் வேற்றுமையிற்றிரிந்தே வருமோ? பாண் என்பதற்கு பொருள் என்னை? உமண் என்பதற்கு பொருள் என்னை? அமண் என்பதற்கு பொருள் என்னை? 142. தன், என் என்பவற்றின் னகரம், வல்லினம் வரின் எப்படியாம்? நின் என்பது இப்படி வராதோ? இம் மூன்றிடத்து னகரமும், இரண்டாம் வேற்றுமைத் தொகையில் இவ்விதியே பெறுமோ? 143. எந்த மொழியினும் னகரம், வவேற்றுமையிற்றிரிந்தே வருமொ? தேன் என்பதன் னகரம்,இயல்பாதலன்றி, வேறு விதி பெறாதோஃ மெல்லெழுத்து வரின், விகாரமடைதல் இல்லையோ?


மகரவீற்றுப் புணர்ச்சி 144. மகரத்தின் முன் வல்லினம் வரின், வேற்றுமையினும். அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், இறுதி மகரங் கெட்டு, வரும் வல்லினமிகும். எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும், இறுதி மகரம் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும். உதாரணம். மரக்கோடு நிலப்பரப்பு வேற்றுமை வட்டக்கடல் சதுரப்பலகை பண்புத்தொகை கமலக்கண் உவமைத்தொகை முரங்குறிது யபங்கொடியேம் எழுவாய் நிலந்தீ பயங்காக உம்மைத்தொகை செய்யுங்காரியம் பெயரெச்சம் உண்ணுஞ்சோறு தின்றனங்குறியேம் வினைமுற்று சாத்தானுங்கொற்றனும் பூதனுந் தேவனும் உம்மையிடைச் சொல் மரம் பெரிது எனப் பகரம் வருமிடத்து இறுதி மகரம் இயல்பாம். தவஞ்செய்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், நிலங்கிடந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, இறுதி மகரங்கெடாது. வரும் வல்லெழுத்திற்கு இனமாகத்திரியும்.


145. தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம், இரு வழியினும், வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.

உதாரணம். அல்வழி வேற்றுமை கங்குறிது கங்குறுமை அஞ்சிறிது அச்சிறுமை செங்கோழி நங்கை தஞ்செவி எந்தலை —

146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும். உதாரணம். அல்வழி வேற்றுமை மரஞான்றது மரஞாற்சி மரநீண்டது மரமாட்சி —

147. தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின், அவ்வெழுத்தாகத் திரியும். உதாரணம். அஞ்ஞானம் நுஞ்ஞானம் எந்நூல் தந்நூல் நந்நூல் —

148. மகரத்தின் முன் உயிரும் இடையினமும் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும் இறுதி மகரங்கெடாது நிற்கும். உதாரணம். மரவடி மரவேர் வேற்றுமை வட்டவாழி வட்டவடிவம் பண்புத்தொகை பவளவிதழ் பவளவாய் உவமைத்தொகை மரமரிது மரம்வலிது எழுவாய் வலமிடம் நிலம்வானம் உம்மைத்தொகை உண்ணுமுணவு ஆளும்வளவன் பெயரெச்சம் உண்டனமடியேம் உண்டனம்யாம் வினைமுற்று அரசனுமமைச்சனும் புலியும் யானையும் உம்மையிடைச்சொல்

செயமடைந்தான், மரம் வெட்டினான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மாயூரமேகினான். சிதம்பரம் வாழ்ந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழிவினையாய விடத்து, இறுதிமகரங்கெடாது நிற்கும். வினையாலணையும் பெயரின் ஈற்று மகரம், வேற்றுமையினும், உயிரும் இடையினமும் வரின் சிறியேமன்பு, சிறியேம் வாழ்வு எனக் கெடாது நிற்கும் வல்லினம் வரின், சிறியேங்கை என இனமெல்லெழுத்தாகத் திரியும். தேர்வு வினாக்கள் 144. மகரத்தின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படி புணரும்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றுமைத் தொகையினும் வருமொழி வினையாயவிடத்து எப்படிப் புணரும்? 145. தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம் இரு வழியினும் வல்லெழுத்து வரின் எப்படியாம்? 146. மகரத்தின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின் எப்படிப் புணரும்? 147. தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின் எப்படியாம்? 148. மகரத்தின் முன் இரு வழியினும் உயிரும்; இடையினமும் வரின் எப்படிப் புணரும்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும் எழாம் வேற்றுமை தொகையினும், வருமொழி வினையாயவிடத்து எப்படியாம்? வினையாலனையும் பெயரின் ஈற்று மகரம் வேற்றுமையில் உருபும் இடையினமும் வாரிக்கொட்டே புணருமோ? வல்லினம் வரின் எப்படியாம்?


லகர ளகர வீற்றுப் புணர்ச்சி 149. லகர ளகரங்களில் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், இறுதி லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவுந் திரியும். எழுவாய்த் தொடரினுலும் உம்மைத் தொகையிலுந் திரியாதியல்பாம். உதாரணம். பாற்குடம் அருட்பெருமை – வேற்றுமை வேற்படை அருட்செல்வம் – பண்புத்தொகை வேற்கண் வாட்கண் – உவமைத் தொகை குயில்கரிது பொருள் பெரிது – எழுவாய் கால்கை பொருள்புகழ் – உம்மைத்தொகை பால் குடித்தான், அருள்பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், கால்குதித்தோடினான், வால்போழ்ந்திட்டான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து திரியாவெனக்கொள்க.


150. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிலும், உம்மைதொகையிலும், ஒரு கால் இயல்பாகவும், ஒரு காற்திரியவும் பெறும். உதாரணம். கல் குறிது முள் சிறிது கற்குறிது முட்சிறிது எழுவாய் அல் பகல் உள் புறம் அட்பகல் உட்புறம் உண்மைத்தொகை நொல், செல், கொள், சொல் இந்நான்கீற்றின் லகரவொற்று, நெற்கடிது, செற்கடிது, கெற்சிறிது, சொற்பெரிது என எழுவாய்த்தெர்டரிலும் உறழாது திரிதே வரும். செல் – மேகம், கொல் – கொல்லன் உறழ்ச்சியாவது ஒரு கால் இயல்பாகியும், ஒரு கால் விகாரப்பட்டும் வருதல். உறாழ்ச்சி எனினும், விகற்ப்ப வினுமெனினும் ஓங்கும். கற்கரித்தான், கட்குடித்தான் எனத்தனிக் கூற்றெழுத்தை சார்ந்h ல ள க்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்தும், இயல்பாகாது. திரிந்தே நிற்கும்.


151 அல்வழி வேற்றுமை இரண்டினும் லகரத்தின் முன் வருந் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வருந் தகரம் டகரமாகவுந் திரியும். உதாரணம். அலவழி வேற்றுமை கற்றீது கற்றீமை முட்டீது முட்டீமை —

152. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், அல் வழியில், வருந் தகரந் திரிந்த விடத்து, றகர டகரங்களாகந் திரிதல்லன்றி, ஆய்தமாகவுந் திரியும். உதாரணம். கற்றீது கஃறீது முட்டீது முஃடீது —

153. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து அல்வழியில், எழுவாய்த் தொடரிலும், விழித்தொடரிலும், உண்மைத் தொகையிலும், வினைமுற்றுத் தொடரிலும், வினைத்தொகையிலுந் கெடும். உதாரணம். வேறீது வாடீது தோன்றறீயன் வேடீயன் எழுவாய்த் தொடர் தோன்றாறொடராய் வேடீயை – விளித்தொடர் காறலை தாடலை – உம்மைத்தொகை உண்பறமியேன் வந்தாடேவி – வினைமுற்றுத் தொடர் பயிறோகை அருடேவன் – வினைத்தொகை குயிற்றிரள், அருட்டிறம் என வேற்றுமையிலும், காற்றுணை, தாட்டுணை எனப் பண்புத்தொகையிலும் பிறங்கற்றோள், வாட்டாரை என உவமைத் தொகையிலும், கெடாது திரிந்து நின்றமை காண்க. பிறங்கள் – மலை, தாரை – கண் வேறொட்டான், தாடொழுதான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடுமெனக் கொள்க. நிலைமொழி உயர்திணைப் பெயராயின், தோன்றறாள், வேடோள் என வேற்றுமையினுங் கெடும் எனவும், குரிசிற்றடிந்தான், அவட்டொடர்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாய விடத்துக் கெடாது திரியும் எனவுங் கொள்க. —

154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும். உதாரணம். அல்வழி வேற்றுமை கல் – கன்ஞெரிந்தது கன்ஞெரி வில் – வின்னீண்டது வின்னீட்சி புல் – புன்டாண்டது புன்மாட்சி முள் – முன்ஞெரிந்நது முண்ஞெரி புள் – புண்ணீண்டது புண்ணீட்சி கள் – கண்மாண்டது கண்மாட்சி


155. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும். உதாரணம். அல்வழி வேற்றுமை வேனன்று வேனன்மை பொருணன்று பொருணன்மை


156. லகர ளகரங்களின் முன் இடையினம் வரின், இரு வழியினும், இறுதி ல ளக்கள் இயல்பாம் உதாரணம். அல்வழி வேற்றுமை கல்யாது கலயாப்பு விரல்வலிது விரல்வன்மை முள்யாது முள்யாப்பு வாள்வலிது வாள்வன்மை


தேர்வு வினாக்கள் 149. லகர ளகரங்களின் முன் இரு வழியினும் வல்லினம் வரின், எப்படிப் புணரும்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, எப்படியாம்? 150. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வல்லினம் வரின், எவ்விடங்களில் ஒரு கால் இயல்பாகவும், ஒருகாற்றிரியவும் பெறும்? எச் சொற்களின் ஈற்று லகரவொற்று, வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிற்றிரிந்தே வரும்? உறழ்ச்சியாவது யாது? தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்து இயல்பேயாமோ? 151. இரு வழியினும் லகரத்தின் முன் வருந் தகரம் எப்படியாம்? 152. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்துக் றடக்களாதலன்றி வேறு திரிபு பெறுமோ? 153. தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, கெடுதல் எங்கும் இல்லையோ? தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, எங்கே கெடாது திரிந்து நிற்கும்? லளக்கள் வேற்றுமையிற் கெடுதல் எங்கும் இல்லையோ? உயர்திணைப்பெயாPற்று லளக்கள் வேற்றுமையில் வருந் தகரந் திரிந்த விடத்து எப்படியாம்? 154. லளக்களின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின் எப்படியாம்? 155. தனிக்குற்றெழுத்தைச் சாராத லளக்கள் இரு வழியினும் வரும் நகரந் திரிந்த விடத்து, எப்படியாம்? 156. லளக்களின் முன் இரு வழியினும் இடையினம் வரின் எப்படியாம்?


வகரவீற்றுப் புணர்ச்சி 157. அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின் பாலை உணர்த்தி வரும் சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம், அல்வழியில், வல்லினம் வரின் ஆயுதமாகத் திரியும்: மெல்லினம் வரின் வந்த எழுத்தாகத் திரியும்: இடையினம் வரின் இயல்பாகும். உதாரணம். அஃகடியன இஃசிறியன உஃபெரியன அஞ்ஞான்றன இந்நீண்டன உம்மாண்டன அவ்யாத்தன இவ்வளைந்தன உவ்வாழ்ந்தன 156. தெவ் என்னும் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், உகரச்சாரியை பெறும்: மகரம் வருமிடத்து, ஒரோவழி மகரமாகத் திரியவும் பெறும்.

உதாரணம். அல்வழி வேற்றுமை தெவ்வுக் கடிது தெவ்வுக்கடுமை தெவ்வுமாண்டது தெவ்வுமாட்சி தெவ்வுவந்தது தெவ்வுவன்மை தெவ்வுமன்னர் தெவ்வுமுனை தெம்மன்னர் தெம்முனை


தேர்வு வினாக்கள் 157. சுட்டுப்பெயர்களின் ஈற்று வகரம் அல்வழியில் மூவின மெய்களும் வரின், டிப்படியாம்? 158. தெவ்வென்னுஞ் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், எப்படியாம்? மகரம் வரின் வேறு விதியும் பெறுமோ? —

எண்ணுப்பெயர் நிறைப்பெயர் அளவுப் பெயர்கள் சாரியை பெறுதல் 159. உயிரையும் மெய்யையும் ஈறாகவுடைய எண்ணும் பெயர் நிறைப்பெயர் அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப்பெயர்கள் வரின், பெரும்பாலும் ஏ என்னுஞ் சாரியை இடையில் வரும். உதாரணம். ஒன்றேகால் காலேகாணி தொடியேகஃக கழஞ்சேகுன்றி கலனேபதக்கு உழக்கேயாழாக்கு ஒன்றரை, கழஞ்சரை, குறுணிநானாழி எனச் சிறுபான்மை ஏகாரச் சாரியை வராதொழியுமெனக் கொள்க. தேர்வு வினாக்கள்

159. எண்ணுப் பெயர் நிறைப்பெயர், அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப் பெயர்கள் வரின் எப்படியாம்?


இடைச் சொற்களின் முன் வல்லினம் புணர்தல் 160. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் இயல்பாயும் மிக்கும் முடியும். உதாரணம். அம்ம – அம்மகொற்றா அம்மா – அம்மாசாத்தா மியா – கேண்மியாபூதா மதி – னெ;மதிபெரும என – பொள்ளெனப்புறம்வேரார் இனி – இனிச்செய்வேன் ஏ – அவனே கண்டான் ஒ – அவனோ போனான்


161. வினையை அடுத்த படி என்னும் இடைச் சொல்லின் முன் வரும் வல்லினம் மிகா. சுட்டையும் வினாவையும் அடுத்த படி என்னும் இடைச் nசொல்லின் முன் வரும் வல்லினம் ஒரு கால் மிக்கும், ஒரு கால் மிகாதும், வரும். உதாரணம். வரும்படி சொன்னான் அப்படிசெய்தான் அப்படிச்செய்தான் எப்படிபேசினான் எப்படிப்பேசினான்


162. வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியை இடைச்சொல்லின் இறுதி னகரந் திரியாதியல்பாம். உதாரணம். ஆன்கூற்று வண்டின்கால் தேர்வு வினாக்கள்

160. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரம் வல்லினம் எப்படியாம்? 161. படி என்னம் இடைச் சொல்லின் மன் வரம் வல்லினம் எப்படியாம்? 162.வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியையிடைச் சொல்லின் இறுதி னகரம் டிப்படியாம்?


உரிச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல் 163. உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின், மிக்கும், இயல்பாகியும், இனமெல்லெழுத்து மிக்கும் புணரும். உதாரணம். தவ – தவப்பெரியான் குழ – குழக்கன்று கடி – கடிக்கமலம் கடி – கடிகா தட – தடக்கை கம – கமஞ்சூல் நனி – நனிபேதை கழி – கழிகண்ணோட்டம் தேர்வு வினா- 136. உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? உருபு புணர்ச்சி


164. வேற்றுமையுருபுகள், நிலைமொழியோடும் வருமொழியோடும் புணருமிடத்து, அவ்வுருபின் பொருட்புணர்ச்சிக்கு முற் கூறிய விதிகளைப் பெரும்பான்மை பெறும்: சிறுபான்மை வேறுபட்டும் வரும். உதாரணம். நம்பிக்கண் வாழ்வு: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினமிகா, என்றும், ணகரம் இடையினம் வரின் இறுவழியினும் இயல்பாம், என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் இயல்பாயின. உறிக்கட்டயிர்: இங்கே இகரவீற்றஃறிணைப் பெயர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினம் மிகும் என்றும், ணகரம் வேற்றுமைப் பொருளில் வல்லினம் வரின், டகரமாகத் திரியும் என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் விகாரமாயின. நம்பிக்குப் பிள்ளை: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர் முன் வேற்றுமை பொருளில் வரும் வல்லினம் இயல்பாம் என்று விதித்தபடி இயல்பாகாது குவ்வுருபு மிகுந்தது. இங்ஙனம் உருபு புணர்ச்சியானது பொருட்புணர்ச்சியை ஒத்து வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், சான்றோராட்சியால் அறிந்து கொள்க. உறித்தயிர் என்பது, கண்ணென்னும் ஏழாம் வேற்றுமையுருபின்றி அவ்வுருபினது இடப்பொருள் படப்பெயரும் நிலைமொழி வருமொழிகளாய் நின்று புணர்ந்த புணர்ச்சி யாதலின், பொருட்புணர்ச்சியெனப்பட்டது. உறிக்கட்டயிர் என்பது, அவ்வேழனுருபு வெளிப்படட்டு நின்று நிலைமொழி வருமொழிகளோடு புணர்ந்த புணர்ச்சியாதலின், உருபு புணர்ச்சியெனப்பட்டது. தேர்வு வினாக்கள் 164. வேற்றுவமயுருபுகள், நிலைமொழியோடும், வருமொழியோடும், எடிப்படிப் புணரும்? வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாவது யாது? உருபு புணர்ச்சியாவது யாது? — விதியில்லா விகாரங்கள்


165. விதியின்றி விகாரப்பட்டு வருவனவுஞ் சிலவுள. அவை மருவி வழங்குதல், ஒத்து நடத்தல், தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலை மாறுதல் என எழுவகைப் படும். அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொடர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனிமொழியிலும் வரும். —

166. மருவி வழங்குதலாவது, விதியின்றிப்பலவாறு விகாரப்பட்டு மருவி வருதல். உதாரணம். அருமந்தன்னபிள்ளை – அருமருந்தபிள்ளை பாண்டியனாடு – பாண்டி நாடு சோழநாடு – சோணாடு மலையமானாடு – மலாடு தொண்டைமானாடு – தொண்டைநாடு தஞ்சாவூர் – தஞ்சை சென்னபுரி – சென்னை குணக்குள்ளது – குணாது தெற்குள்ளது – தெனாது வடக்குள்ளது – வடாது என்றந்தை – எந்தை நுன்றந்தை – நுந்தை —

167. ஒத்து நடத்தலாவது, ஒரேழுத்து நின்றவிடத்து அற்றோரெழுத்து வந்து பொருள் வேறுபடா வண்ணம் நடத்தலாம். அவை வறுமாறு :- அஃறிணையியற்பெயருள்ளே, குறிலிணையின் கீழ் மகரநின்ற விடத்து னகரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும். உ-ம்- அகம் – அகன் முகம் – முகன் நிலம் – நிலன் நலம் – நலன் மொழி முதலிடைகளிலே சகர ஞகர யகரங்களின் முன் அகர நின்ற விடத்து ஐகாரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உதாரணம். பசல் மஞ்சு மயல் பைசல் மைஞ்சு மையல் மொழி முதலில் ஒத்து நடந்தது அமச்சு இலஞ்சி அரயர் அமைச்சு இலைஞ்சி அரையர் மொழியிடையில் ஒத்து நடந்தது ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும், சில விடத்து ஐகாரத்தின் பின்னும், நகர நின்ற விடத்து ஞகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும். உதாரணம். நணடு நெண்டு நமன் ஞண்டு ஞெண்டு ஞமன் மொழி முதலில் ஒத்து நடந்தது ஐந்நூறு மைந்நின்ற கண் ஐஞ்ஞ10று மைஞ்ஞின்ற கண் ஐகாரத்தின் பின் ஒத்து நடந்தது சேய்நலூர் செய்நின்ற சேய்ஞலூர் செய்ஞ்ஞின்ற நீலம் யகரத்தின் பின் ஒத்து நடந்தது ஒரொவிடத்து அஃறிணைப் பெயாPற்றில் லகர நின்ற வடத்து ரகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும். உதாரணம். சாம்பல் – சாம்பர் பந்தல் – பந்தர் குடல் – குடர் அஃறிணைப் பெயர்களுள், ஒரோவிடத்து மென்றொடர்க் குற்றுகரமொழிகளினிறுதி உகர நின்ற விடத்து அர் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும். உதாரணம். அரும்பு – அரும்பர் கரும்பு – கரும்பர் கொம்பு – கொம்பர் வண்டு – வண்டர் ஒரோவழி லகர நின்ற விடத்து ளகரமும், ளகர நின்ற விடத்து லகரமும் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும். உதாரணம். அலமருகுயிலினம் – அளமருகுயிலினம் பொள்ளாமணி – பொல்லாமணி —

168. தோன்றலாவது, எழுத்துஞ் சாரியையும் விதியின்றித் தோன்றுதலாம்.

உதாரணம். யாது – யாவது குன்றி – குன்றம் செல் உழி – செல்வுழி விண் அத்து – விண்வத்து


169. திரிதலாவது, ஓரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதலாம். உதாரணம். மாகி – மாசி மழைபெயின் விளையும் – மழைபெயில் வியையும் கண்ணகல் பரப்பு – கண்ணகன் பரப்பு உயர்திணைமேலே – உயர்திணை மேன —

170. கெடதலாலது உயிர்மெய்யாயினும் மெய்யாயினும் விதியின்றிக் கெடுதலாம். உதாரணம். யாவர் – யார் யார் – ஆர் யானை – ஆனை யாடு – ஆடு யாறு – ஆறு எவன் என்னும் குறிப்பு வினை, என் என இடைநின்ற உயிர்மெய் கெட்டும், என்ன, என்னை, என உயிர் மெய் கெட்டு இறுதியில் உயிர் தோன்றியும் வழங்கும். —

171. நீளலாவது, விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளலாம். உதாரணம். பொழுது – போழ்து பெயர் – பேர் —

172. நிலை மாறுதலாவது, எழுத்துக்கள் ஒன்ற நின்ற விடத்து ஒன்று சென்று மாறி நிற்றலாம். உதாரணம். வைசாகி – வைகாசி நாளிகேரம் – நாரிகேளம் மிஞிறு – ஞிமிறு சிவிறி – விசிறி தசை – சதை இந்நிலை மாறுதல் எழுத்துக்கேயன்றிச் சொற்களுக்கும் உண்டு: அங்ஙனஞ் சொன்னிலை மாறி வழங்குவன இலக்கணப் போலி எனப் பெயர் பெறும். உதாரணம். கண்மீ – மீகண் நகர்ப்புறம் – புறநகர் புறவுலா – உலாப்புறம் இன்முன் – முன்றில் பொதுவில் – பொதியில் முன்றில் என்பதில் விதியின்றி றகரந் தோன்றிற்று. பொதியில் என்பதில் விதியின்றி இகரமும் யகர மெய்யுந் தோன்றின. தேர்வு வினாக்கள் 165.இப்படி விதியினால் விகாரப்பட்டு வருவனவன்றி, விதியின்றி விகாரப்படுவனவும் உளவோ? அவை எத்தனை வகைப்படும்? 166. மருவி வழங்குதலாவது யாது? 167. ஒத்து நடத்தலாவது யாது? 168. தோன்றலாவது யாது? 169. திரிதலாவது யாது? 170. கெடுதலாவது யாது? 171. நீளலாவது யாது? 172. நிலை மாறுதலாவது யாது? இந்நிலை மாறுதல் எழுத்துக்கே யன்றிச் சொற்களுக்கும் உண்டோ? சொன்னிலை மாறி வழங்குவன எப்படிப் பெயர் பெறும்? புணரியல் முற்றிற்று எழுத்ததிகாரம் முற்றுப் பெற்றது.