இரண்டாவது: சொல்லதிகாரம்
1. பெயரியல்
173. சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறார்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம். தேர்வு வினா 173. சொல்லாவது யாது? — திணை 174. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, அஃறிணை என, இரு வகைப்படும். திணை- சாதி, உயர்தணை – உயர்வாகிய சாதி, அஃறிணை – உயர்வல்லாத சாதி. அல்திணை என்றது அஃறிணை எனப் புணர்ந்தது. இங்கே திணை என்னும் பண்புப் பெயர், ஆகு பெயராய்ப் பண்பியை உணர்த்தி நின்றது. சாதி பண்பு, சாதியையுடைய பொருள் பண்பி. —
175. உயர்தணையாவன, மனிதரும், தேவரும், நரகரும் ஆகிய மூவகைச் சாதிப் பொருள்களாம். —
176. அஃறிணையாவன, மிருகம், பறவை முதலிய உயிருள்ள சாதிப் பொருள்களும், நிலம், நீர், முதலிய உயிரல்லாத சாதிப் பொருள்களுமாம். தேர்வு வினாக்கள் 174. அக்கருத்தின் நிகழ் பொருள் எத்தனை வகைப்படும்? திணையென்பதற்கு பொருள் என்ன? உயர்திணையென்பதற்கு பொருள் என்ன? அஃறிணையென்பதற்கு பொருள் என்ன? இங்கே திணையென்னும் பண்புப் பெயர் எதனை உணர்த்தி நின்றது. 175. உயரிதிணையாவன யாவை? 176. அஃறிணையாவன எவை?
பால் 177. உயர்திணை, ஆண்பால், பெண்பால், பலர்பால், என மூன்று பிரிவுடையது. உதாரணம். அவன், வந்தான் – உயர்திணையாண்பால் அவள், வந்தாள் – உயர்திணைப் பெண்பால் அவர், வந்தார் – உயர்திணைப் பலர்பால் பலர்பால் என்றது, ஆடவர், காளையர் என்பன முதலிய ஆண் பன்மையும், பெண்டீர், மங்கையர் முதலிய பெண்பன்மையும், மக்கள், அவர் என்பன முதலிய அவ்விருவர் பன்மையும், அடக்கி நின்றது. —
178. அஃறிணை, ஒன்றன்பால், பலவின்பால் என, இரண்டு பிரிவையுடையது. உதாரணம். அது, வந்தது – அஃறிணையொன்றன்பால் அவை, வந்தன – அஃறிணைப் பலர்பால் தேர்வு வினாக்கள் 177. உயர்திணை எத்துணைப் பிரிவையுடையது? பலர்பால் என்றது எவைகளை அடக்கி நின்றது? 178. அஃறிணை எத்துணைப் பிரிவையுடையது? — இடம் 179. இவ்விரு திணையாகிய ஐம்பாற்பொருளை உணர்த்துஞ் சொற்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும் மூவிடத்தையும் பற்றி வரும். —
180. பேசும் பொருள் தன்மையிடம்: பேசும் பொருளினால் எதிர்முகமாக்கப்பட்டுக் கேட்கும் பொருள் முன்னிலையிடம்: பேசப்படும் பொருள் படர்க்கையிடம். தேர்வு வினாக்கள் 179. இவ்விரு திணையாகிய ஐம்பாற் பொருளை உணர்த்துஞ் சொற்கள் எவ்விடத்தைப் பற்றி வரும்? 180. தன்மையிடம் எது? முன்னிலையிடம் எது? தன்மையிடம் எது? படர்க்கையிடம் எது?
சொற்களின் வகை 181. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும். தேர்வு வினா 181. சொற்கள் எத்தனை வகைப்படும்? —
பெயர்ச் சொற்களின் வகை 182. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும். பொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பண்புத் தொழிலும் பொருளெனவும் படுமாதலின், அவைகளை உயர்த்துஞ் சொல்லும் பெயர்ச் சொல்லெனப்படும். பொருளினது புடைப் பெயர்ச்சி யெனப்படும் வினை நிகழ்ச்சியை உணர்த்துஞ் சொல்லாகிய வினைச் சொல்லும், பெயர்த்தன்மைப்பட்டு, அப்பொருளை உணர்த்தும். இங்ஙனமாகவே, பெயர்களனைத்தும், பொரட்பெயர், வினையாலணையும் பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் நால்வகையுள் அடங்கும்.
183. பெயர்ச் சொற்கள், இடுகுறிப் பெயர், காரணப்பெயர், காரணவிடுகுறிப் பெயர் என, மூவகைப்படும்.
184. இடுகுறிப் பெயராவது, ஒரு காரணமும் பற்றாது பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம். உதாரணம். மரம், மலை, கடல், சோறு இவை ஒரு காரணமும் பற்றாது வந்தமையால், இடு கறிப் பெயராயின.
185. காரணப்பெயராவது, யாதேனும் ஒரு காரணம் பற்றிப் பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம். உதாரணம். பறவை, அணி, பொன்னன், கணக்கன் பறப்பதாதலிற் பறவை எனவும், அணியப்படுவதாதலின் அணி எனவும், பொன்னையுடையனாதலிற் பொன்னன் எனவும், கணக்கெழுதுவோனாதலிற் கணக்கன் எனவும் காரணம் பற்றி வந்தமையால், இவை காரணப் பெயராயின.
186. காரணவிடுகுறிப் பெயராவது, காரணங் கருதிய பொழுது அக்காரணத்தையுடைய பல பொருள்களுக்குஞ் செல்வதாயும், காரணங் கருதாத பொழுது இடுகுறிகளவாய் நின்று ஒவ்வொரு பொருட்கே செல்வதாயும், உள்ள பெயராம். உதாரணம். முக்கணன், அந்தனன், முள்ளி, கறங்கு முக்கணன் என்பது, காரணங் கருதிய பொழுது விநாயகக் கடவுள் முதலிய பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத பொழுது இடுகுறியாளவாய்ச் சிவபெருமானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று. அந்தணன் என்பது, காரணங்கருதிய பொழுது அழகிய தண்ணளியையுடையயோர் பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்ப் பார்ப்பானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று. முள்ளி என்பது, காரணங்கருதிய பொழுது முள்ளையுடைய செடிகள் பலவற்றிற்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய் முள்ளி என்னும் ஒரு செடிக்கு செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று. கறங்கு என்பது, காரணங்கருதிய பொழுது சுழலையுடை பல பொருள்கட்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்க் காற்றாடி என்னும் ஒரு பொருட்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
187. இப்பெயர்கள், பொதுப்பெயர், சிறப்புப்nபெயர் என இரு வகைப்படும்.
188. பொதுப்பெயராவது, பல பொருள்களுக்குப் பொதுவாகி வரும் பெயராம் உதாரணம். மரம், விலங்கு, பறவை இவற்றுள், மரம் இடுகுறிப் பொதுப்பெயர்: விலங்கு பறவை என்பன காரணப்பொதுப் பெயர்.
189. சிறப்புப் பெயராவது, ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாகி வரும் பெயராம். உதாரணம். ஆல், கரி, காரி இவற்றுல் ஆல் இடு குறிப் பெயர்: கரி, காரி என்பன காரணச் சிறப்புப் பெயர். கரி- யானை, காரி – கரிக்குருவி.
190. பெயர்கள், இடவேற்றுமையினாலே, தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், என மூவகைப்படும். தேர்வு வினாக்கள் 182. பெயர்ச் சொல்லாவது யாது? பெயர்கள் அனைத்தும் எத்தனை வகைப்படும்? 184. இடு குறிப்பெயராவது யாது? 185. காரணப்பெயராவது யாது? 186. காரணவிடுகுறிப் பெயராவது யாது? 187. இப்பெயர்கள் மீட்டு எத்தனை வகைப்படும்? 188. பொதுப்பெயராவது யாது? 189. சிறப்புப் பெயராவது யாது? 190. பெயர்கள் இட வேற்றுமையினால் எத்தனை வகைப்படும்? — தன்மைப்பெயர்கள் 191. தன்மைப்பெயர்கள், நான், யான், நாம், யாம், என நான்காம். இவைகளுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப்பெயர்கள்: நாம், யாம் இவ்விரண்டும் பன்மைப் பெயர்கள். இத்தன்மைப் பெயர்கள் உயர்திணையாண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாகும். உதாரணம். யானம்பி, யானங்கை – தன்மையொருமை யாமைந்தர், யாமகளிர் – தன்மைப் பன்மை உலக வழக்குச் செய்யுள் வழக்கிரண்டினும், நாம், யாம், இரண்டும். நாங்கள், யாங்கள் எனவும் வரும். தேர்வு வினாக்கள் 191. தன்மைப் பெயர்கள் எவை? இவைகளுள் எவை ஒருமைப் பெயர்கள்? எவை பன்மைப் பெயர்கள்? இத்தன்மைப் பெயர்கள் திணைபால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன?
முன்னிலைப் பெயர்கள் 192. முன்னிலைப் பெயர்கள், நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர் என ஐந்தாம். இவைகளுள், நீ என்பது ஒருமைப் பெயர்: மற்றவை பன்மைப் பெயர்கள். உதாரணம். நீ நம்பி, நீ நங்கை, நீ பூதம் – முன்னிலையொருமை நீர் மைந்தர், நீர் மகளிர், நீர் ப10தங்கள் – முன்னிலைப்பன்மை w தன்மைப் பெயர்களை உயர்திணைப் பெயர்கள் என்பர் தொல்காப்பியர்; இரு தியைப் பொதுப் பெயர்கள் என்பர் நன்னூலார். இரு வழக்கினும் நீங்கள் என்பதும் முன்னிலைப் பன்மையில் வரும்.
தேர்வு வினாக்கள் 192. முன்னிலைப் பெயர்கள் எவை? இவைகளுள், எது ஒருமைப்பெயர்? எவை பன்மைப் பெயர்? இம் முன்னிலைப் பெயர்கள் திணை பால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன? — படர்க்கைப் பெயர்கள் 193. படர்க்கைப் பெயர்கள், மேற்சொல்லப்பட்ட தன்மை முன்னிலைப் பெயர்களல்லாத மற்றைய எல்லாப் பெயர்களுமாம். உதாரணம். அவன், அவள், அவர், பொன், மணி, நிலம் —
194. அன். ஆள், இ, ள் என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம். உதாரணம். பொன்னன், பொருளான், வடமன், கோமன், பிறன்
195. அள், ஆள், கள், மார், ர், என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம். உதாரணம். குழையள், குழையாள், பொன்னி, பிறள்
196. அர், ஆர், கள், மார், ர், என்னுதம் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்களாம். உதாரணம். குழையர், குழையார், கோக்கள், தேவிமார், பிறர் தச்சர்கள், தட்டார்கள், எனக் கள் விபுதி, விகுதிமேல் விகுதியாயும் வரும்.
197. துவ் விகுதியை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணையொன்றன் பாற் படர்க்கைப் பெயர்களாம். உதாரணம். குழையது —
198. வை, அ, கள், வ், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்களாம். உதாரணம். குழையவை, குழையன, மரங்கள், அவ். —
199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களுஞ் சில உண்டு. அவை வருமாறு:- நம்பி, விடலை, கோ, வேள், ஆடூஉ, முதலியன உயர்திணையாண்பாற் பெயர்கள். மாது, தையல், மகடூஉ, நங்கை முதலியன உயர்திணைப் பெண்பாற் பெயர்கள். கடுவன், ஒருத்தல், போத்து, கலை, சேவல், ஏறு முதலியன அஃறிணையாண்பாற் பெயர்கள் பிடி, பிண, பெட்டை, மந்தி, பிணா முதலியன பெண்பாற் பெயர்கள்.
தேர்வு வினாக்கள் 193. படர்க்கைப் பெயர்கள் எவை? 194. உயர்திணையாண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை? 195. உயர்திணைப் பெண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை? 196. உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை? 197. அஃறிணையொன்றன்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை? 198. அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை? 199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களும் உண்டோ?
இருதிணைப் பொதுப் பெயர் 200. தந்தை, தாய்; சாத்தான். சாத்தி; கொற்றன், கொற்றி; ஆண், பெண்; செவியிலி, செவியிலிகள்; தான், தாம் என வரும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்களாம். பொதுப் பெயரெனினும், பொருந்தும்.
உதாரணம். தந்தையிவன் தந்தையிவ்வெருது தந்தையென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று. தாயிவள் தாயிப்பசு தாயென்பது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று. சாத்தனிவன் சாத்தனிவ்வெருது சாத்தானென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று. சாத்தியிவள் சாத்தியிப்பசு சாத்தியென்பது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று. கொற்றனிவன் கொற்றனிவ்வெருது கொற்றனென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று. கொற்றியிவள் கொற்றியிப்பசு கொற்றியென்கது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று. ஆண் வந்தான் ஆண்வந்தது ஆணென்பது இருதிணை யாண்பாற்கும் பொதுவாயிற்று. பெண் வந்தாள் பெண்வந்தது பெண்னென்பது இருதிணை பெண்பாற்கும் பொதுவாயிற்று. செவியிலியவன் செவியிலியிவள் செவியிலியிவ்வெருது செவியிலியிப்பசு செவியிலி என்பது இருதிணை யெருமைக்கு பொதுவாயிற்று. செவியிலிகளிவர் செவியிலிகளிவை செவியிலிகளென்பது இருதிணைப் பன்மைக்கு பொதுவாயிற்று. அவன்றான் அவடான் அதுதான் தானென்பது இருதிணை யொருமைக்கும் பொதுவாயிற்று. அவர்தம் அவைதம் தாமென்பது இருதிணைப் பன்மைக்கு பொதுவாயிற்று.
தாம் என்பது தாங்கள் எனவும் வரும்.
தேர்வு வினா 200. உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்கள் எவை?
இரு திணை மூவிடப் பொதுப்பெயர் 201. எல்லாம் என்னும் பன்மைப் பெயர் இரு திணை மூவிடங்கட்கும் பொதுப்பெயரம். உதாரணம். நாமெல்லாம், நீரெல்லாம், அவரெல்லாம், அவையெல்லாம்.
தேர்வு வினா 201. எல்லாம் என்னும் பன்மைப் பெயர் எவைகளுக்குப் பொதுப்பெயர்? — உயர்திணையிற் பாற் பொதுப்பெயர் 202. ஒருவர் பேதை, ஊமை, என வரும் பெயர்கள் உயர்திணையான் பெண்ணென்னும் இரு பாற்கும் பொதுப் பெயர்களாம். உதாரணம். ஆடவளொருவர் பெண்டிளொருவர் பேதையவன் பேதையவள் ஊமையிவன் ஊமையிவள் ஒருவர் என்னும் பாற்பொதுப்பெயர், பொருட்கேற்ப ஒரமைச் சொல்லைக் கொள்ளாது, ஒலுவர் வந்தார் எனச் சொற்கேற்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும். இன்னுஞ் சாத்தனார், தேவனார் என்பனவும், பொருட்கேற்ப ஒருமைச் சொல்லைக் கொள்ளாது, சொற்கேப்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும்.
தேர்வு வினா 202. உயர்திணை ஆண் பெண் என்னும் இரு பாற்கும் பொதுப் பெயர்கள் எவை?
அஃறிணையிற் பாற் பொதுப் பெயர் 203. து என்னும் ஒருமைவிகுதியையாயினும், வை, அ, கள் என்னும் பன்மை விகுதிகளையாயினும் பெறாது வரும். அஃறிணைப் பெயர்களெல்லாம், அத்திணை ஒன்று பல என்னும் இருபாற்கும் பொதுப்பெயர்களாம். இவை பால்பகாஃறிணைப் பெயர் எனவும், அஃறிணையியற் பெயர் எனவுங் கூறப்படும். உதாரணம். யானை வந்தது யானை வந்தன மரம் வளர்ந்தது மரம் வளர்ந்தன கண் சிவந்தது கண் சிவந்தன
தேர்வு வினாக்கள் 203. அஃறிணை ஒன்றன் பால் பலவின் பால் என்னும் இரண்டற்கும் பொதுப்பெயர்கள் எவை? இவை எப்படிப் பெயர் பெறும்ஃ — ஆகுபெயர் 204. ஒரு பெருளின் இயற் பெயர், அப்பொருளோடு சம்பந்தமுடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்று தொட்டு வழங்கி வரின், அது ஆகு பெயரெனப்படும்.
205. அவ்வாகு பெயர், பதினா வகைப்படும். அவையாவன:- பொருளாகு பெயர், இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர், குணவாகு பெயர், தொழிலாகு பெயர், எண்ணலளவையாகு பெயர், எடுத்தளவையாகு பெயர், முகத்தளவையாகு பெயர், நீட்டலளவையாகு பெயர், சொல்லாகு பெயர், தனியாகு பெயர், கருவியாகு பெயர், காரியவாகு பெயர், கருத்தாவாகு பெயர், உவமையாகு பெயர் என்பனவாம். உதாரணம். (1). தாமரை போலுமுகம்: இங்கே தாமரையென்னு முதற்பொருளின் பெயர் அதன் சினையாகிய மலருக்காதலாற் பொருளாகு பெயர். (2). ஊரடங்கிற்று: இங்கே ஊரென்னுபமிடப்பெயர் அங்கிருக்கிற மனிதருக்காதலால் இடவாகு பெயர். (3). காரறுத்தது: இங்கே காரென்னும் மழைக்காலப் பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்காதலாற் காலவாகு பெயர் (4). வெற்றிலை நட்டான்: இங்கே வெற்றிலை யென்னும்ஞ் சினைப்பெயர் அதன் மதலாகிய கொடிக்கதலாற் சினையாகு பெயர். (5). நீலஞ் சூடினான்: இங்கே நீலமென்னும் நிறக்குணப் பெயர் அதனையுடைய குவளை மலருக்காதலாற் குணவாகு பெயர். (6). வற்றலோடுண்டான்: இங்கே வற்றலென்னுந் தொழிற்பெயர் அதனைப் பொருந்திய உணவிற்காதலாற் றொழிலாகு பெயர். (7). காலாலே நடந்தான்: இங்கே காலென்னும் எண்ணளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட உறுப்பிற்காதலால் எண்ணலவையாகுபெயர். (8). இரண்டுவீசை தந்தான்: இங்கே வீசை யென்னும் எடுத்த லளவைப்பெயர் அவ்வளவைக் கொண்ட உறிப்பிற்காதலால் எண்ணலவையாகு பெயர். (9). நாழியுடைந்தது: இங்கே நாழியென்னும் முகத்தளவைப் பெயர் அவ்வளவைக் பருவிக்காதலால் முகத்தளவையாகு பெயர். (10). கீழைத்தடி விளைந்தது: இங்கே தடி யென்னும், நீட்டளவைப்பெயர் அதனால் அளக்கப்பட்ட விளைநிலத்திற் காதலால் நீட்டலளவையாகு பெயர். (11). இற்நூற்குரை செய்தான்: இங்கே உரையென்னுஞ் சொல்லின் பெயர் அதன் பொருளுக்காதலாற் சொலாகு பெயர். (12). விளக்கு முறிந்தது: இங்கே விளக்கென்னுந் தானியின் பெயர் அதற்கு தானமாகிய தண்டிற்காதலாற் நானியாகு பெயர். (13). திருவாசகமோதினான்: இங்கே வாசகமென்னுங் கருவிப் பெயர் அதன் காரியமாகிய ஒரு நூலிற்காதலாற் கருவியாகு பெயர். (14). அலங்காரங்கற்றான்: இங்கே அலங்காரமென்னுங் காரியத்தின் பெயர் அதனையுணர்த்துதற்குக் கருவியாகிய நூலிற்காதலாற் காரியவாகு பெயர். (15). திருவள்ளுவர் படித்தான்: இங்கே திருவள்ளுவர் என்னுங் கருத்தாவின் பெயர் அவராற் செய்யப்பட்ட நூலிற்காதலாற் கருத்தாவாகு பெயர். (16). பாவை வந்தாள்: இங்கே பாவை என்னும் உவமையின் பெயர் அதனை யுவமையாகக் கொண்ட பெண்ணுக்காதலால் உவமையாகு பெயர்.
கார் என்னும் கரு நிறத்தின் பெயர், அதனுடைய மேகத்தை யுணர்த்தும் போது ஆகு பெயர்: அம் மேகம் பெய்யும் பருவத்தை உணர்த்தும் போது இரு மடியாகு பெயர்: அப்பருவத்தில் விளையும் நெற்பயிரை உணர்த்தும் போது மும்மடியாகு பெயர். வெற்றிலை நட்டான், திருவாசகமோதினான், என்பவற்றுள், இலையென்பது வெறுமையென்னும் அடையினையும், வாசகமென்பது திருவென்னும் அடையினையும் அடுத்து, ஆகு பெயராய் வருவதால் அடையடுத்தவாகு பெயர்
தேர்வு வினாக்கள் 204. ஆகு பெயரென்பது யாது? 205. அவ்வாகு பெயர் எத்தனை வகைப்படும்? அவை எவை?
வேற்றுமை 206. பெயர்களனைத்தும், முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை, என எட்டு வேற்றுமைகளை யேற்கும். இவற்றுள் முதல் வேற்றுமை எழுவாய் எனவும், பெயர்வேற்றுமை விளியெனவும் பெயர் பெறும்.
207. முதல் வேற்றுமையினது உருபாவது திரிபில்லாத பெயரேயாம். இது வினையையும், பெயரையும், வினாவையுங் கொள்ளும். உதாரணம். சாத்தான் வந்தான், சாத்தனிவன், சாத்தன் யார் வேற்றுமையுருபினாலே கொள்ளப்படுஞ் சொல், முடிக்குஞ் சொல் எனவும், பயனிலை எனவும், பெயர் பெறும். இத்திரிபில்லாத பெயர், தானே தன் பொருளை வினைமுதற் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட வினைமுதற் பொருளே இதன் பொருளாம். வினைமுதல், கருத்தா, செய்பவன் என்பன ஒரு பொருட் சொற்கள். இவ் வெழுவாய்க்கு வேறுருபு இல்லையாயினும், ஆனவன், ஆகின்றவன், ஆவான், என்பவன், முதலிய ஐம்பாற் சொற்களுஞ் சிறுபான்மை சொல்லுருபாக வரும். உதாரணம். சாத்தனானவன் வந்தான் சாத்தியானவன் வந்தான் சாத்தரானவர் வந்தார் மரமானது வளர்ந்தது மற்றவைகளும் இப்படியே.
208. இரண்டாம் வேற்றுமையினது உருபு ஐயொன்றேயாம். இது வினையையும், வினைக்குறிப்பையுங் கொள்ளும். இவ்வையுருபு தன்னையேற்ற பெயர்ப்பொருளைச் செயற்படு பொருளாக வேறுபடுத்தும், அப்படி வேறுபட்ட செயற்பட பொருளே இவ்வுருபின் பொருளாம். செயப்படுபொருள், கருமம், காரியம், என்பன ஒரு பொருட் சொற்கள். அச்செயற்படு பொருளானது, ஆக்கப்படுபொருள், அழிக்கப்படு பொருள், அடையப்பட பொருள், ஒக்கப்படபொருள், உடமைப்பொருள், முதலியனவாகப் பல திறக்கப்படும். (உதாரணம்) குடத்தை வனைந்தான் – ஆக்கப்படு பொருள் கோட்டையைப் பிடித்தான் – அழிக்கப்படு பொருள் ஊரையடைந்தான் – அடையப்படுபொருள் மனைவியைத் துறந்தான் – துறக்கப்படு பொருள் புலியையொத்தான் – ஒக்கப்படுபொருள் பொன்னையுடையான் – உடைமைப் பொருள்
209. மூன்றாம் வேற்றுமையினுடை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு என்பனவைகளாம். இவை வினையைக் கொள்ளும். இவ்வுருபுகளுள், ஆன், ஆன் என்னும் இரண்டுருபுகளும, தம்மையேற்ற பெயர்ப் பொருளைக், கருவிய பொருளாகவும், கருதாப்பொருளாகவும், வேறுபடுத்தும் அப்படி வேறு பட்ட கருவிப் பொருளுங் கருதாப்பொருளும் இவ்வுருபுகளின் பொருளாம். கருவி, காரணம் என்பன ஒரு பொரட் சொற்கள். கருவி, முதற்கருவி, துணைக்கருவி, என இருவகைப்படும். கருத்தாவும், இயற்றுதற்கரத்தா, ஏவுதற் கருத்தா என இரு வகைப்படும். ஒடு, ஓடு என்னும் இரண்டுருபுகளும், தம்மையேற்ற பெயர்ப்பொருளை உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட உடனிகழ்ச்சிப் பொருளே இவ்வுருபு களின் பெர்ருளாம். (உதாரணம்) மண்ணாலாகிய குடம் மண்ணனாகிய குடம் முதற்கருவி திரிகையாலாகிய குடம் திரிகையானாகிய குடம் துணைக்கருவி தச்சனாலாகிய கோயில் தச்சனானாகிய கோயில் இயற்றுதற்கருத்தா அரசனாலாகிய கோயில் அரசனானாகிய கோயில் ஏவுதற்கருத்தா மகனோடு தந்தை வந்தான் மகனொடு தந்தை வந்தான் உடனிகழ்ச்சிப் பொருள் இவ்வுருபுகளுள், ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரிய விடத்துக் கொண்டென்பதும், ஓடு, ஒடு உருபுகள் நிற்றற்குரிய விடத்து உடனென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும். உதாரணம். வாள் கொணடு வெட்டினான் தந்தையுடன் மைந்தன் வந்தான்
210. நான்காம் வெற்றுமையினது உருபு குவ்வொன்றேயாம். இது வினையையும் வினையோடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும். இக்குவ்வுருபு, தன்னையேற்ற பெயர்ப் பொருளைக் கோடற்பொருளாகவும், பகைதொடர் பொருளாகவும், நட்புத் தொடர் பொருளாகவும், தகுதியுடை பொருளாகவும், முதற்காரண காரியப்பொருளாகவும், நிமித்த காரண காரியப்பொருளாகவும், முறைக்கியை பொருளாகவும். வேறுபடுத்தும். அப்படி வேறு பட்ட கொடற் பொருண் முதலியன இவ்வுருபின் பொருள்களாம். (உதாரணம்) இரப்பவர்க்குப் பொன்னைக் கொடுத்தாள் – கோடற்பொருள் பாம்புக்குப் பகை கருடன் – பகைத்தொடர்ப் பொருள் சாத்தனுக்குத் தோழன் கொற்றன் – நட்புத் தொடர் பொருள் அரர்க்குரித் தருங்கலம் – தகுதியுடைபொருள் குண்டலத்திற்கு வைத்த பொன் – தகுதியுடைப் பொருள் கூலிக்கு வேலை செய்தான் – நிமித்தகாரணகாரியப் பொருள் சாத்தனுக்கு மகனிவன் – முறைக்கியை பொருள் குவ்வுருபு நிற்றற் குரிய சில விடயங்களிலே, பொருட்டு நிமித்தம் என்பனவும், குவ்வுருபின்மேல் ஆகவென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும். உதாரணம். கூழின் பொருட்டு வேலை செய்தான் கூலியினிமித்தம் வேலை செய்தான் கூலிக்காக வேலை செய்தான்
211. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் இன், இல் என்பனவாகும். இவை வினையையும், வினையோடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும். இவ்வுருபுகள், தம்மையேற்ப பெயர்ப்பொருளை நீக்கப் பொருளாகவும், ஒப்புப்பொருளாகவும், எல்லைப் பொருளாகவும், ஏதுப்பொருளாகவும், வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட நீக்கப் பொருள் முதலியன இவ்வுருபுகளின் பொருள்கலாம். உதாரணம். மலையின் வீழருவி மலையில் வீழருவி நீக்கப் பொருள் பாலின் வெளிது கொக்கு பாலில் வெளிது கொக்கு ஒப்புப் பொருள் சீர்காழியின் வடக்குச் சிதம்பரம் சீர்காழியில் வடக்குச் சிதம்பரம் எல்லைப் பொருள் கல்வியினுயர்ந்தவன் கம்பன் கல்வியிலுயர்ந்தவன் கம்பன் ஏதுப் பொருள்
பாலின் வெளிது கொக்கு என்னுமிடத்து, உயர்வு கருதின் எல்லைப் பொருளாம். நீக்கப்பொருளினும். எல்லைப் பொருளினும், இன், இல், உருபுகளின் மேல், நின்று, இருந்து என்பவை, உம் பெற்றும், பெறாதுஞ் சொல்லுருபுகளாக வரும். உதாரணம். நீக்கப்பொருள் ஊரினின்றும் போயினான், ஊரினின்று போயினான் ஊரிலிருந்தும் போயினான், ஊரிலிருந்தும் போயினான் எல்லைப் பொருள் காட்டினின்றுமூர் காவதம், காட்டினின்றூர் காவதம் காட்டிலிருந்துமூர் காவதம், காட்டிலிருந்துமூர் காவதம் ஒரொவிடத்து எல்லைப் பொருளிலே, காட்டிலும் பார்க்கிலும் என்பவைகள், முன் ஐகாரம் பெற்றுச் சொல்லுருபுகளாக வரும். உதாரணம். அவனைக் காட்டிலும் பெரியவனிவன் இவனைக் காட்டிலும் சிறியனவன்
212. ஆறாம் வேற்றுமையினுடை உருபுகள் அது, ஆது, ஏ என்பனவாம். இவைகளுள், அது, ஆது உருபுகள் அஃறிணை யொருமைப் பெயரையும், அ உருபு அஃறிணைப் பன்மைப் பெயரையுங் கொள்ளும். உதாரணம். சாத்தனது கை, தனது கை, தன கைகள் இவ்வுலுபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை வருமொழிப் பெயராகி தற்கிழமைப் பொருளோடும் பிறிதின் கிழமைப் பொருளோடுஞ் சம்பந்த முடைய பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட சம்பந்தப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம். தற்கிழமைப் பொருளாவது, தன்னோடு ஒற்றுமையுடைய பொருள். அது, உறுப்பும், பண்பும், தொழிலும், ஒன்றன் கூட்டமும், பலவின் கூட்டமும், ஒன்று திரிந்தொன்றாயதும் என, ஆற் வகைப்படும். (உதாரணம்) சாத்தானது கை – உறுப்புத்தற்கிழமை சாத்தனது கருமை – பண்புதற்கிழமை சாத்தனது வரவு – தொழிற்றற்கிழமை நெல்லது குப்பை – ஒன்றன்கூட்டற்தற்கிழமை சேனையது தொகுதி – பலவின்கூட்டத்தற்கிழமை மஞ்சளது பொடி – ஒன்று திரிந்தொன்றாயதன் தற்கிழமை பிறிதின்கிழமைப் பொருளாவது, தன்னின் வேறாய் பொருள். அது, பொருள், இடம், காலம், என மூவகைப்படும். (உதாரணம்) முருகனது வேல் – பொருட்பிறிதின் கிழமை முருகனது மலை – இடப்பிறிதின்கிழமை மாரனது வேனில் – காலப்பிறிதின் கிழமை இவ்வுருபுகள் நிற்றற்குரிய இடங்களில், உடைய என்பது சொல்லுருபாக வந்து, இரு திணையொருமை பன்மைப் பெயரையுங் கொள்ளும். உதாரணம். சாத்தனுடைய புதல்வன், சாத்தனுடைய புதல்வர் சாத்தனுடைய வீடு, சாத்தனுடைய வீடுகள் சிறு பான்மை அதுவுருபு, அரனது தோழன், நினதடியாரொடல்லால் என உயர்திணையொருமை பன்மைப் பெயர்களையுங் கொள்ளுமென வறிக. இவ்வீடானது, அத்தோட்டமவனது என வவுருவன வற்றில், எனது, அவனது, என்பன துவ்விகுதியும் அகராச்சாரியையும் பெற்று நின்ற குறிப்பு வினை முற்று. எனது போயிற்று, அவனதை வாங்கினேன், என வருவனவற்றில், எனது, அவனது என்பன, மேற்கூறியபடி வந்த குறிப்பு விணையாலணையும் பெயர். இங்ஙணமன்றி, இவ்விடங்களில் வரும் அது என்பது ஆறாம் வேற்றுமையுருபன்று.
213. ஏழாம் வேற்றுமையினுடைய உருகள், கண், இல், உள், இடம் முதலியனவாம். இவை வினையையும், வினையோடு பொருந்நும் பெயரையுங் கொள்ளும். இவ்வுருபுகள், தம்மையேற்ற பொருள். இடம், காலம். சினை, குணம், தொழில் என்னும் ஆறு வகைப் பெயர்பொருளையும், வருமொழிப் பொருளாகிய தற்கிழமைப் பொருளுக்காயினும், பிறிதின்கிழமைப் பொருளுக்காயினும் இடப்பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுப்பட்ட இடப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம். (உதாரணம்) மணியின் கணிருகின்ற தொளி பனையின்கண் வாழ்கின்றதன்றில் தற் பிறி பொருளிடமாயிற்று ஊரின் கணிருக்குமில்லம் ஆகாயத்தின்கட் பறக்கின்றது பருந்து தற் பிறி இடமிடமாயிற்று நாளின் கணாழிகையுள்ளது வேனிற்கட்பாதிரி ப10க்கும் தற் பிறி காலமிடமாயிற்று கையின் கணுள்ளது விரல் கையின்கண் விளங்குகின்றது கடகம் தற் பிறி சினையிடமாயிற்று கறுப்பின்கண் மிக்குள்ளதழகு இளமையின்கண் வாய்த்தது செல்வம் தற் பிறி குணமிடமாயிற்று ஆடற்கணுள்ளது சதி ஆடற்கட்பாடப்பட்டது பாட்டு தற் பிறி தொழிவிடமாயிற்று மற்றவைகளும் இப்படியே
214. எட்டாம் வேற்றுமையினுடைய உருபுகள், படர்க்கைப் பெயாPற்றில் ஏ ஓ மிகுதலும், அவ்வீறு திரிதலும், கெடுதலும், இயல்பாதலும், ஈற்றயலெழுத்துத் திரிதலுமாம். இவை ஏவல் வினையைக் கொள்ளும். இவ்வுருபுகள், தம்மையேற்ற பெயர்ப் பொருளை முன்னிலையின் விளிக்கப்படுபொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட விளிக்கப்பட்ட பொருளே இவ்வுருபுகளின் பொருளாம். விளித்தல் – அழைத்தல். (உதாரணம்) சாத்தனே ஏ மிகுந்து அப்பனோ வுண்ணாய் ஓ மிகுந்து வேனிலாய் கூறாய் ஈறு திரிந்தது தோழ சொல்லாய் ஈறு கெட்டது பிதா வாராய் ஈறியல்பாயிற்று மக்கள் கூறிர் ஈற்றயலெழுத்துத் திரிந்தது.
215. நுமன், நுமள், நுமர் என்னுங் கிளைப் பெயாகளும். எவன் முதலிய வினைப் பெயர்களும், அவன் முதலிய சுட்டுப் பெயர்களும், தான், தாம், என்னும் பொதுப் பெயர்களும், மற்றையான், பிறன் முதலிய மற்றுப் பிற என்பன அடியாக வரும் பெயர்களும் விளி கொள்ளாப் பெயர்களாம்.
216. சிறுபான்மை ஒரு வேற்றுமையுருபு நிற்றற் குரிய விடத்தே, மற்றதொரு வேற்றுமையுருபு மயங்கி வரும்; வரின் அவ்வுருபைப் பொருக்கியைந்த உருபாகத் திரித்துக் கொள்ள வேண்டும். உதாரணம். ஆலத்தினாலமிர்தமாக்கிய கோன்; இங்கே ஐயுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆலுருபு மயங்கிற்று. காலத்தினாற் செய்த நன்றி; இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆனுருபு மயங்கிற்று. நாகுவேயொடு நக்கு வீங்கு தோள்; இங்கே ஐயுருபு நிற்றற் குரிய விடத்தில் ஓடுருபு மயங்கிற்று. ஈசற்கியான் வைத்தவன்பு; இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்தில் குவ்வுருபு மயங்கிற்று.
217. ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமை யுருபோடுந் தகுதியாக வருதலும் உண்டு. உதாரணம். சாத்தனோடு சேர்ந்தான்; இங்கே செயப்படு பொருள் மூன்றனுருபோடு வந்தது. மதுரையை நீங்கினான்; இங்கே நீங்கப் பொருள் இரண்டனுருபோடு வந்தது. சீர்காழிக்கு வடக்குச் சிதம்பரம்; இங்கே எல்லைப் பொருள் நான்கனுருபோடு வந்தது. வழியைசல் சென்றான்; இங்கே இடப் பொருள் இரண்டனுருபோடு வந்தது. இன்னும் இப்படி வருவனவற்றையெல்லாம் ஆராய்ந்தறிந்து கொள்க. தேர்வு வினாக்கள் 206. பெயர்களனைத்தும் எத்தனை வேற்றுமைகளை ஏயற்கும்? முதல் வேற்றுமை எப்படிப் பெயர் பெறும்? எட்டாம் வேற்றுமை எப்படிப் பெயர் பெறும்? 207. முதல் வேற்றுமையினது உருபு யாது? வேற்றமையுருபினாலே கொள்ளப்படுஞ் சொல் எப்படிப் பெயர் பெறும்? எழுவாய் வேற்றுமையுருபு செ; சொற்களை பயனிலையாகக் கொள்ளும்? எழுவாய்யுருபுக்குப் பொருள் என்ன? வினைமுதற்குப் பரியாய நாமங்கள் எவை? எழுவாய்க்கு எவை சொல்லுருபாக வரும்? 208. இரண்டாம் வேற்றுமையினது உருபு யாது? இவ்வையுருபு எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்? ஐயுருபுக்கு பொருள் என்ன? செயப்படுபொருட்குப் பரியாய நாமங்கள் எவை? செயப்படு பொருள் எத்தனை வகைப்படம்? 209. மூன்றாம் வேற்றுமையினுடைய உருபுகள் எவை? இம் மூன்றாம் வேற்றமையுருபுகள் எதனை பயனிலையாகக் கொள்ளும்? இவைகளுள் ஆல், ஆன் என்னும் இரண்டுருபுகளுக்கும் பொருள் என்ன? கருவியென்பதற்குப் பாரியாய நாம் என்ன? கருவி எத்தனை வகைப்படும்? கருத்தா எத்தனை வகைப்படும்? ஓடு, ஒடு என்னும் இரண்டுருபுகளுக்கும் பொருள் என்ன? ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரிய விடத்து எது சொல்லுருபாக வரும்? ஓடு, ஒடு உருபுகள் நிற்றற்குரிய விடத்து எது சொல்லுருபாக வரும்? 210. நான்காம் வேற்றுமையினது உருபு யாது? இக் குவ்வுருபு எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்? குவ்வுருபுக்கு பொருள் என்ன? குவ்வுருபு நிற்றற்குரிய விடத்தே எவை சொல்லுருபாக வரும்? 211. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? இவ்வைந்தாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்? ஐந்தாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன? நீக்கப் பொருளினும், எல்லைப் பொருளினதும் எவை சொல்லுருபுகளாக வரும்? எல்லைப் பொருளிலே வேறு சொல்லுருபுகள் வாராமோ? 212. ஆறாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? இவ்வாறாம் வேற்றுமைகளுள், எவ்வெவை எவ்வெச் சொல்லைப் பயனிலையாகக் கொள்ளம்? ஆறாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன? தற்கிழமைப் பொருளாவது யாது? அத் தற்கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்? பிறிதின்கிழமைப் பொருளாவது யாது? அப்பிறிதின்கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்? ஆறாம் வேற்றுமையுருபுகள் நிற்றற்குரிய இடங்களில் எது சொல்லுருபாக வரும்? அது வுருபு உயர்திணை யொருமை பன்மைப் பெயர்களைக் கொள்ளுதலில்லையோ? இவ் வீடெனது, அத்தோட்டமவனது, என வருவனவற்றில் அது என்பது ஆறாம் வேற்றுமை உருபு தானோ? 213. ஏழாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? ஏழாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப் பயனிலைகளாகக் கொள்ளும்? ஏழாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன? 214. எட்டாம் வேற்றுமையுருபுகள் யாவை? எட்டாம் வேற்றுமையுருபுகள் எதனைப் பயனிலையாகக் கொள்ளும்? எட்டாம் வேற்றுமையுருபுகளுக்குப் பொருள் என்ன? 215. இவ்விளியுருபுகளை ஏலாப் பொருள்களும் உளவோ? 216. ஒரு வேற்றுமையுருபு நிற்றற்குரிய விடத்தே மற்றொரு வேற்றுமையுருபு மயங்கி வருதல் உண்டோ? 217. ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமையுருபோடுந் தகுதியாகவருதலும் உண்டோ?
பெயர்கள் உருபேற்று முறை 218. ஐ முதலிய உருபேற்குமிடத்து, யான், கான் என்னுந் தன்மையொருமைப் பெயர்கள், என் எனவும், யாம், நாம், யாங்கள், நாங்கள் என்னுந் தன்மைப் பன்மை பெயர்கள், எம், நம், எங்கள், நங்கள் எனவும், விகாரப்பட்வரும். உதாரணம். என்னை, எம்மை, நம்மை, எங்களை, நங்களை, மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக. நீ என்னும் முன்னிலை யொருமைப் பெயா, நின் உன் எனவும், நீர் முதலிய முன்னிலைப் பண்மைப் பெயர்கள், நும், உம், எனவும், நீங்கள் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர், நுங்கள், உங்கள் எனவும், விகாரப்பட்டு வரும். உதாரணம். நின்iனை, உன்னை, நும்மை, நுங்களை, உங்களை மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக. தான், தாம், தாங்கள், என்னும் படர்க்கைப் பெயர்கள், தன், தம், தங்கள் என விகாரப்பட்டு வரும். உதாரணம். தன்மை, தம்மை, தங்களை மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக. இவைகளுள்ளே, தனிக்குற்றொற்றிறுதியாக நின்ற பெயர்களோடு குவ்வுருபு புணருமிடத்து, நடுவே அகாரச்சாரியை தொன்றும். இச்சாரியை அகரத்தின் முன்னும், தனிக்குற்றெற்று இரட்டாவாம். உதாரணம். தனக்கு, தனது, தனாது. தன
219. உயிரையும் மெய்யையும், குற்றியுலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச்சொற்கள், இன்னுருபொழிந்த உருபுகளை ஏற்குமிடத்துப் பெரும்பாலும் இன்சாரியை பெறும். உதாரணம். கிளியினை பொன்னினை நாகினை கிளியினால் பொன்னினால் நாகினால் கிளியிற்கு பொன்னிற்கு நாகிற்கு கிளியினது பொன்னினது நாகினது கிளியின்கண் பொன்னின்கண் நாகின்கண் இப்பெயர்கள், குவ்வுருபேற்குமிடத்துக் கிளியினுக்கு, நாகினுக்கு, என இன்சாரியையோடு உகாரச்சாரியையும், பெறுமெனவுங் கொள்க. மற்றைவைகளும் இப்படியே வரும்.
220. ஆ, மா, கோ என்னும் இம் மூன்று பெயர்களும், உருபேற்குமிடத்து, இன்சாரியையேயன்றி, னகரச்சாரியையும் பெறும். குவ்விருபிற்கு னகரச்சாரியையோடு உகரச்சாரியையும், னகரச்சாரியையின்றி உகரச் சாரியையும் வரும். உதாரணம். ஆவினை ஆனை ஆவினால் ஆனால் ஆவிற்கு ஆனுக்கு, ஆவுக்கு ஆவின் ஆனின் ஆவினது ஆனது ஆவின்கண் ஆன்கண் மா, கோ, என்பவற்றோடும் இப்படியே யொட்டுக. இங்கே மா – விலங்கு, கோ – அரசன்.
221. அது, இது, உது என்னுஞ் சுட்டுப் பெயர்களும், எது, ஏது, யாது என்னும் வினாப் பெயர்களும், உருபேற்கு மிடத்து, அன்சாரியையும், சிறுபான்மை இன்சாரியையும் பெறும். உதாரணம். அதனை, அதனால், அதினால் இதனை, இதனால், இதினால் எதனை, எதனால், எதினால் மற்றவைகளும் இப்படியே இவை சிறுபான்மை, அதை, இதை, எதை எனச் சாரியை பெறாதும் வரும்.
222. அவை, இவை, உவை, எவை, காரியவை, நெடியவை முதலிய ஐகார வீற்றிணைப் பன்மைப் பெயர்கள், உரு பேற்குமிடத்து, ஈற்றைகாரங் கெட்டு, அற்றுச்சாரியை பெறும். நான்குருபும் ஏழனுருபும் ஏற்குமிடத்து, அற்றுச்சாரியை மேல் இன்சாரியையும் பெறும். உதாரணம். அவற்றை எவற்றை கரியவற்றை அவற்றால் எவற்றால் கரியவற்றால் அவற்றிற்கு எவற்றிற்கு கரியவற்றிற்கு அவற்றின் எவற்றின் கரியவற்றின் அவற்றது எவற்றது கரியவற்றது அவற்றின்கண் எவற்றின்கண் கரியவற்றின்கண் மற்றவைகளும் இப்படியே
223. பல, சில, சிறிய, பெரிய, அரிய முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரும், உருபேற்று மிடத்து, அற்றுச்சாரியை பெறும். நான்கனுருபும், ஏழனுருபும், ஏற்குமிடத்து, அற்றுச் சாரியைமேல் இன் சாரியையும் பெறும். உதாரணம். பலவற்றை சிறியவற்றை யாவற்றை பலவற்றால் சிறியவற்றால் யாவற்றால் பலவற்றிற்கு சிறியவற்றிற்கு யாவற்றிற்கு பலவற்றின் சிறியவற்றின் யாவற்றின் பலவற்றது சிறியவற்றது யாவற்றது பலவற்றின்கண் சிறியவற்றின்கண் யாவற்றின்;கண் மற்றவைகளும் இப்படியே
224. மகரவீற்றுப் பெயர்ச்சொற்கள், உருபேற்குமிடத்து, அத்துச்சாரியை பெறும்; பெறுமிடத்து, ஈற்று மகரமுஞ் சாரியை முதல் அகரமுங் கெடும். சில விடத்து அவ்வத்துச் சாரியையின் மேல் இன் சாரியையும் பெறும். உதாரணம். மரத்தை மரத்தினை மரத்தால் மரத்தினால் மரத்துக்கு மரத்திற்கு மரத்தின் . . . . மரத்தது மரத்தினது மரத்துக்கண் மரத்தின்கண்
225. எல்லாமென்னும் பெயர், அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து, ஈற்று மகரங்கெட்டு, அற்றுச்சாரியையும், உருபின் மேல் முற்றும்மையும் பெறும்; உயர்திணைப் பொருளில் உருபேற்றுமிடத்து, நம்மூச்சாரியையும், உருபின்மேல் முற்றும்மையும் பெறும். உதாரணம். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் எல்லாநம்மையும் எல்லாநம்மாலும் எல்லாநம்மையும் என்பது உயர்திணைத் தன்மைப் பன்மை.
226. உருபேற்குமிடத்து, எல்லாரென்பது, தம்முச்சாரியையும், எல்லீரென்பது நும்முச்சாரியையும் பெற்று உருபின் மேல் முற்றும்மையும் பெறும். உதாரணம். எல்லார் தம்மையும் எல்லீர் நும்மையும் எல்லார் தம்மாலும் எல்லீர் நும்மாலும் எல்லாரையும், எல்லாராலும், எ-ம். எல்லீரையும், எல்லீராலும், எ-ம். சாரியை பெறாதும் வரும்.
227. இவ்வாறு உருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட்புணர்ச்சிக் கண்ணும், வரும். உதாரணம். என்கை, எங்கை, எங்கள் கை, நங்கை, நங்கள் கை, நின்கை, உன்கை, நுங்கை, நுங்கள் கை, உன்கை, உங்கை, உங்கள் கை, தன்கை, தங்கை, தங்கள் கை, எ-ம். கிளியின் கால், கொக்கின் கண், ஆவின் கொம்பு, பலவற்றுக்கோடு, மரத்துக்கிளை, எல்லாவற்றுக்கோடும். எ-ம். வரும்.
தேர்வு வினாக்கள் 218. ஐ முதலிய உருபேற்குமிடத்துத் தம்மைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்? முன்னிலைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்? தான், தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்? இவைகளுள்ளே, தனிக்குற்றொற்றிறுதியாக நின்ற பெயர்களோடு நான்கனுரும் ஆறனுருபுகளும் புணருமிடத்து எப்படியாம்? 219. உயிரையும், மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச் சொற்கள் உருபேற்குமிடத்து எப்படியாம்? 220. ஆ, மா, கோ என்னும் பெயர்கள், உருபேற்கு மிடத்து இன்சாhயையேயன்றி, வேறு சாரியையும் பெறுமோ? 221. அது, இது, உது, என்னுஞ் சுட்டுப்ப் பெயர்களும், எது, ஏது, யாது, என்னும் வினாப் பெயர்களும் உருபேற்குமிடத்து, எப்படியாம்? 222. அவை, இவை, உவை, எவை, கரியவை, நெடியவை, முதலிய ஐகாரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும் உருபேற்கு மிடத்து எப்படியாம்? 223. பல, சில, சிறிய, பெரிய, அரிய, முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா வென்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரும் உருபேற்கு மிடத்து எப்படியாம்? 224. மகரவீற்றுப் பெயர்கள் உரு பேற்குமிடத்து எப்படியாம்? 225. எல்லாமென்னும் பெயர் அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து எப்படியாம்? 226. உருபேற்குமிடத்து எல்லார் என்பது எப்படியாம்? எல்லீர் என்பது எப்படியாம்? 227. இவ்வாறு ஊருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட் புணர்ச்சிக் கண்ணும் வருமோ?
பெயரியல் முற்றிற்று.
இரண்டாவது: சொல்லதிகாரம்
2.2 வினையியல் 228. வினைச் சொல்லாவது, பொருளினது, புடைப் பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல்லாம். புடைப்பெயர்ச்சியெனினும், வினை நிகழ்ச்சியெனினும், பொருந்தும். வினை, தொழில் என்பவை ஒரு பொருட் சொற்கள்.
தேர்வு வினாக்கள் 228. வினைச் சொல்லாவது யாது? புடைப் பெயர்ச்சி என்பது என்ன? வினைக்கு பாரியாயநாமம் என்ன?
வினை நிகழ்ச்சிக்குக் காரணம் 229. வினையானது வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் இவ்வாறுங் காரணமாவேணும், இவற்றுட் பல காரணமாகவேனும், நிகழும். உதாரணம். வனைந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது. வினைமதல் குயவன்; முதற்கருவி மண்; துணைக்கருவி தண்டசக்கர முதலியன் இடம் வனைதற்கு ஆதாரமாகிய இடம்; செயல் வனைதற்கு மதற்காரணமாகிய செய்கை; காலம் இறந்தகாலம்; செயப்படு பொருள் குட முதலியன. இருந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது. உடையன்: இக்குறிப்பு வினை, கருவியுஞ் செயப்படு பொருளுமொழிந்த நான்குங் காரணமாக வந்தது.
230. வினை முதன் முதலிய ஆறனுள்ளே, தெரிநிலை வினைமுற்றின் கண், விணைமுதலுஞ் செயலுங் காலமுமாகிய மூன்றும் வெளிப்படையாகவும், மற்றை மூன்றுங் குறிப்பாகவுந் தோன்றும். தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின்கண் செயலுங் காலமுமாகிய இரண்டும் வெளிப்படையாகவும், மற்றை நான்கும் குறிப்பாகவுந் தோன்றும். வினைமுதல் பால் காட்டும் விகுதியினாலும், செயல் பகுதியினாலும், காலம் இடைநிலையும் விகுதியும் விகாரப்பட்ட பகுதியுமாகிய மூன்றனுள் ஒன்றினாலுந் தொன்றும். எச்ச வினைகட்குப் பால் காட்டும் விகுதி யின்மையால், அவற்றில் வினைமுதல் வெளிப்படத் தோன்றதாயிற்று. உதாரணம். உண்டான்: இத்தெரிநிலை வினைமுற்றிலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும், விகுதியால் வினைமுதலும் வெளிப்படையாகவும், மற்றவை உண்ட: இத் தெரிநிலைவினைப் பெயரெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின. உண்டு: இத்தெரிநிலை வினையெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின. —
231. வினைக்குறிப்பு முற்றிக்கண் வினை முதன் மாத்திரம் வெளிப்படையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும். வினைக்குறிப்பு வினையெச்சங்களின் கண், வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றும். உதாரணம். கரியன்: இக்குறிப்பு வினைமுற்றிலே, விகுதியால் வினைமுதல் வெளிப்டையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும்.
கரிய: இக்குறிப்புவினைப் பெயலெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.
இன்றி: இக்குறிப்புவினை வினையெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின. தேர்வு வினாக்கள் 229. வினையானது எவை காரணமாக நிகழும்? 230. தெரிநிலைவினைமுற்றிற்கண், வினைமுதன் முதலய ஆறும் எப்படித் தோன்றும்? தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்? வினைமுதல், செயல், காலம், என்னும் மூன்றும் எவ்வௌ; வுறுப்புக்களினாலே தோன்றும்? யாது காரணத்தால் எச்ச வினைகளில் வினை முதல் வெளிப்படத் தோன்றாதாயிற்று? 231. வினைக்குறிப்பு, முற்றிக் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படிப்த் தோன்றும்? வினைக்குறிப்புப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்?
காலம்
232. காலம், இறப்பு, நிகழ்வு, எதிர்வு, என மூவகைப்படும்.
இறப்பாவது தொழிலது கழிவு நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலமை. எதிர்வாவது தொழில் பிறவாமை.
தேர்வு வினாக்கள் 232. காலமாவது யாது? இறப்பாவது யாது? நிகழ்வாவது யாது? எதிர்வாவது யாது? — வினைச்சொற்களின் வகை
233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள், தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் என, இருவகைப்படும். —
234. தெரிநிலை வினையாவது, காலங்காட்டும் உருப்புண்மையினாலே, காலம் வெளிப்படத் தெரியும்படி நிற்கும் வினையாம்.
உதாரணம்.
நடந்தான்: இது, தகரவிடை நிலையினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.
உண்கும்: இது, கும் விகுதியினால் எதிர்காலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.
பெற்றான்: இது, பெறு, பெற்று என விகாரப்பட்டு நின்ற பகுதியினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.
தெரிநிலை வினைகள் தோன்றுதற்குரிய முதனியடிகள் இவையென்பது பதவியலில் நாற்பத்தாறம் வசனத்திற் கூறப்பட்டது. —
235. குறிப்பு வினையாவது, காலங்காட்டும் உறுப்பின்மையினாலே, காலம் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்லுவோனது குறிப்பினாலே தோன்றும்படி, நிற்கும் வினையாம்.
உதாரணம்.
பொன்னன்: இது, பொன்னையுடையனாயினான் என இறந்தகாலங் கருதியாயினும், பொன்னையுடையனாகின்றான் என நிகழ்காலங் கருதியாயினும், பொன்னையுடையனாவான் என எதிர்காலங் கருதியாயினுந் தன்னை ஒருவன் சொல்ல, அக்காலம் அவனது குறிப்பாட் கேட்போனுக்குத் தோன்றும் படி நிற்றலினாலே, குறிப்பு வினை.
பொன்னன் என்பது, பொன்னுடைமை காரணமாக ஒருவனுக்குப் பெயராய் நின்று எழுவாய் முதலிய வேற்றுமையுரு பேற்கும் போது பெயர்ச் சொல்; முக்காலம் பற்றிப் புடை பெயரும் ஒருவனது வினை நிகழ்ச்சியை உணர்த்திப் பெயருக்குப் பயனிலையாய் வரும் போது குறிப்பு வினைமுற்றுச் சொல்; அங்ஙனம் வினைமுற்றாய் நின்று பின் அவ்வினை நிகழ்ச்சி காரணமாக அவனுக்குப் பெயராகி எழுவாய் முதலிய வேற்றுமையுருபேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்.
குறிப்பு வினைகள் தோன்றுதற் குரிய முதனிலையடிகாள் இவையென்பது பதவியலில் நாற்பத்து நான்காம் வசனத்திற் கூறப்பட்டது. —
236. தெரிநிலைவினை குறிப்புவினை என்னும் இரண்டும், முற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும், வினையெச்சமும் என்பன மும்மூன்று வகைப்படும். எனவே, தெரிநிலைவினைமுற்றும், தெரிநிலைவினைப் பெயரெச்சமும், தெரிநிலை வினையெச்சமும், குறிப்பு வினைமுற்றும், குறிப்பு வினைப்பெயரெச்சமும், குறிப்பு வினை வினையெச்சமும் என, வினைச்சொற்கள் அறுவகையாயின. —
237.இவ்வறுவகை வினைச்சொற்களும், உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.
உடன்பாட்டு வினையாவது. தொழிலினது நிகழ்ச்சியை உணர்த்தும் வினையாம். உடன்பாட்டு வினையெனினும், பொருந்தும்.
உதாரணம். நடந்தான் நடந்த நடந்து பெரியன் பெரிய மெல்ல
எதிhமறை வினையாவது, தொழில் நிகழாமையை உணர்த்தும் வினையாம். எதிர்மறைவினையெனினும், மறைவினையெனினும், பொருந்தும்.
உதாரணம். நடவான் நடவாத நடவாது இலன் இல்லாத இன்றி —
238. வினைச்சொற்கள், இருதிணையைம்பான் மூவிடங்களுள் ஒன்றற்கு உரிமையாகியும், பலவற்றிற்குப் பொதுவாகியும், வழங்கும்.
தேர்வு வினாக்கள் 233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள் எத்தனை வகைப்படும்? 234. தெரிநிலை வினை யாவது யாது? 235. குறிப்பு வினையாவது யாது? பொன்னன் என்பது எத்தனை வகைச் சொல்லாகும்? அது எப்பொழுது பெயர்ச் சொல்? எப்பொழுது குறிப்பு வினைமுற்றுச் சொல்? எப்பொழுது குறிப்பு வினையாலணையும் பெயர்? 236. தெரிநிலை வினை குறிப்பு வினை என்னும் இரண்டும் தனித்தனி எத்தனை வகைப்படும்? 237. இவ்வறுவகை வினைச்சொற்களும் எவ்வெப் பொருளில் வரும்? உடன்பாட்டு வினையாவது யாது? எதிர்மறை வினயாவது யாது? 238. வினைச்சொற்கள் இருதிணையைம்பான் மூவிடங்களைப் பற்றி எப்படி வழங்கும்? — முற்று வினை
239. முற்று வினையாவது, பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.
இம்முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன் பொவுட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயருமாம்.
உதாரணம். செய்தான் சாத்தன் நல்லன் சாத்தன் குளிர்ந்தது நிலம் நல்லது நிலம் வந்தது கார் நல்லது கார் குவிந்தது கை நல்லதுகை பரந்தது பசப்பு நல்லது பசப்பு ஒழிந்தது பிறப்பு நல்லது பிறப்பு
தேர்வு வினாக்கள் 239. முற்று வினையாவது யாது? முற்று வினை கொள்ளும் பெயர்களாவன் எவை? — படர்க்கை வினைமுற்று
240. படர்க்கை வினைமுற்று, உயர்திணையாபாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணையொன்றன் பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றும் என ஐந்து வகைப்படும். —
241. அன், ஆன், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவன் நடந்தனன் நடந்தான் நடக்கின்றனன் நடக்கின்றான் நடப்பன் நடப்பான் குழையன் குழையான் —
242. து, று, என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவள் நடந்தனள் நடந்தாள் நடக்கின்றனள் நடக்கின்றாள் நடப்பள் நடப்பாள் குழையள் குழையாள்
243. அர், ஆர் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணைப் பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவர் நடந்தனர் நடந்தார் நடக்கின்றனர் நடக்கின்றார் நடப்பர் நடப்பார் குழையர் குழையார்
செய்யுளிலே பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ்விகுதிகளின்றி, ப, மார் என்னம் விகுதிகளும் வரும். அவை இடைநிலையின்றித் தாமே எதிர் காலங் காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
உதாரணம். நடப்ப நடமார் – அவர் இவ்விரண்டற்கும் நடப்பார் என்பது பொருள். —
244. து, று என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் அஃறிணையொன்றன் பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். இவற்றுள், றுவ்விகுதி, இறந்தகால விடைநிலையோடன்றி, நிகழ்கால வெதிர்காலவிடைநிலைகளோடு கூடி வராது.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அது நடந்தது கூயிற்று நடக்கின்றது
நடப்பது
— குழையது அற்று
றுவ்விகுதி, வந்தன்று, உண்டன்று, சென்றன்று எனத்தடற வொற்றிடைநிலைகளின் முன்னும், புக்கன்று விட்டன்று, பெற்றன்று, என விகாரப்படடிறந்நகாலங் காட்டுங் கு, டு, று வீற்றுப் பகுதிகளின் முன்னும், அன்சாரியை பெற்று வரும். இவை, முறையே, வந்தது, உண்டது, சென்றது, புக்கது, விட்டது, பெற்றது எனப் பொருள்படும். றுவ் விகுதி, கூஙிற்று, ஓடிற்று என இன்னிடை நிலையின் முன் மாத்திரம், சாரியை பெறாது வரும்.
அற்று, இற்று, எற்று என்பவை, சுட்டினும் வினாவினும் வந்த வினைக்குறிப்பு முற்றுக்கள். இவை,
தந்தின்று என, றுவ்விகுதி தகரவிடைநிலையின் முன் இன்சாரியை பெற்றதன்றோ எனின்; அன்று. அது, தந்தன்று, என்னும் உடன்பாட்டு வினையை மறுத்தற்குத் தகரவிடைநிலைக்கும் றுவ் விகுதிக்கும் இடையே இல்லென்னும் எதிர்மறையிடை நிலையேற்று வந்த மறைவினையென்றறிக. தந்தின்று தந்ததில்லையென பொருள்படும்.
முறையே, அத்தன்மைத்து, இத்தன்மைத்து, எத்தன்மையித்து எனப் பொருள் படும்.
டுவ் விகுதியை இறுதியில் உடைய வினைச் சொல் அஃறிணையொன்றன்பாற் படர்க்கை குறிப்பு வினைமுற்றாம், இவ் விகுதி தெரிநிலைவினைமுற்றிற்கு இல்லை.
உதாரணம். பொருட்டு (ஸ்ரீ பொருளையுடையது) ஆதிரைநாட்டு (ஸ்ரீ ஆதிரை நாளினிடத்தது) குண்டுகட்டு (ஸ்ரீ ஆழமாகிய கண்ணையுடையது) அது —
245. அ என்னம் விகுதியை இறுதியில் உடைய வினைச்சொல், அஃறிணைப் பலவின்பால் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமா.
இவ்விகுதி, அன்சாரியை பெற்றும், பெறாதும், வரும்
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. அவை நடந்தன நடந்த நடக்கின்றன நடக்கின்ற நடப்பன நடப்ப கரியன கரிய
ஆ என்னும் விகுதியை இறுதியில் உடைய வினைச் சொல், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை, யெதிர்மறைத் தெரிநிலைவிணை முற்றாம். இவ்விகுதி குறிப்பு வினை முற்றிற்கு இல்லை.
உதாரணம்.
நடவா — அவை
• நடப்ப என்னும் உயர்திணைப் பலர்பாற்படர்க்கைத் தெரிநிலை வினை முற்று, வேறு, நடப்ப என்னும் அஃறிணை பலவின்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும், வேறு, முன்னையது, நட என்னும் பகுதியும், பா என்னும், எதிர்கால பரர்பற்படர்க்கை விகுதியுமாகப், பகுக்கப்பட்டு வரும். பின்னையது, நட என்னும் பகுதியும், இப்பென்னும் எதிர்காலவிடைநிலையும், ஆ என்னும் பலவின்பாற் படர்க்கை விகுதியுமாக, பகுக்கப்பட்டு வரும்.
தேர்வு வினாக்கள் 240. படர்கை வினைமுற்று எத்தனை வகைப்படும்? 241. உயர்திணை யாண்பாலொருமை படர்க்கை விணைமுற்றுக்கள் எவை? 242. பெண்பாலொருமை படர்க்கை விணைமுற்றுக்கள் எவை? 243. உயர்திணை பலர்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? பலர்பாற் படர்க்கை தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகளின்றி வேறு விகுதிகளும் வருமோ? 244. அஃறிணையொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? து, று, என்னும் இரு விகுதிகளும் முக்கால விடைநிலைகலோடும் வருமோ? றுவ்விகுதி எவ்விடங்களின் எச்சாரியை பெற்று வரும்? எவ்விடத்துச் சாரியை பெறாது வரும்? அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கு, து று என்னும் இரு விகுதிகளுமன்றி வேறு விகுதி இல்லையோ? 245. அஃறிணைப் பலவின் பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? அஃறிணை பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுக்கு வேறு விகுதி இல்லையோ? — தன்மை வினைமுற்று
246. தன்மை வினைமுற்று, தம்மையொருமை, வினைமுற்றும் தன்மைப் பன்மை வினைமுற்றும் என, இரு வகைப்படும். —
247. என், ஏன், அன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. யான் உண்டனென் உண்டேன் உண்டனன் உண்கிறனென் உண்கிறேன் உண்கிறனன் எ. தெரி. குறி உண்குவென் உண்பேன் உண்பன் குழையினென் குழையினேன் குழையினன்
செய்யுளுளிலே தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகள்களன்றி, ஆல் கு, டு து று என்னும் விகுதிகளும் வழங்கும்.
இவைகளுள், ஆல் விகுதி எதிர்காலவிடைநிலைகளோடு மாத்திரம் வரும். மற்றைநான்கு விகுதிகளும் இடைநிலையின்றி தாமே காலங்காட்டுதல் பதவியளிற் பெறப்பட்டது.
(உதாரணம்)
விகு. இ.தெ. எ.தெ. யான் அல் கு டு து று – – உண்டு வந்து சென்று உண்பல் உண்கு – வருது சேறு —
248. அம், ஆம், எம், ஏம், ஓம் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. யாம் உண்டனம் உண்டாம் உண்டெனம் உண்டேம் உண்டோம் உண்கின்றனம் உண்கின்றாம் உண்கின்றனெம் உண்கின்றேம் உண்கின்றோம் எ. தெரி. குறி. உண்பம் உண்பாம் உண்பெம் உண்பேம் உண்போம் குழையினம் குழையினாம் குழையினெம் குழையினேம் குழையினோம்
செய்யுளிலே, தன்மைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ் விகுதிகளின்றி, கும், டும், தும், றும் என்னும் விகுதிகளும் வழங்கும் இடைநிலையின்றித் தாமே காலங்காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
விகு. இ. தெரி. எ. தெரி. யாம் கும் டும் தும் றும் – உண்டும் வந்தும் சென்றும் உண்கும் – வருதும் சேறும்
தேர்வு வினாக்கள் 246. தன்மை வினைமுற்று எத்தனை வகைப்படும்? 247. தம்மையொருமை வினைமுற்றுக்கள் எவை? தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்வுகுதிகளின்றி வேறு விகுதிகளும் வழங்குமோ? ஆல் விகுதி எக்கால விடைநிலைகளொடு வரும்? 248. தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் எவை? தன்மைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகளின்றி வேறு விகுதிகள் வழங்குமோ?
முன்னிலை வினைமுற்று
249. முன்னிலை வினைமுற்று முன்னிலையொருமை வினைமுற்றும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுமென இரு வகைப்படும். —
250. ஐ ஆய் இ என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலையொருமைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீ உண்டனை உண்டாய் உண்டி உண்கின்றனை உண்கின்றாய் உண்ணாநின்றி உண்பை உண்பாய் சேறி குழையினை குழையாய் வில்லி
இகரவிகுதி எதிர்காலத்தை இடைநிலையின்றி தானே காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
251. இர், ஈர், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய விசை; சொற்கள். முன்னிலைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீர் உண்டனிர் உண்டீர் உண்கின்றனீர் உண்கின்றீர் உண்பிர் உண்பீர் குழையினிர் குழையீர்
தேர்வு வினாக்கள் 249. முன்னிலை வினைமுற்று எத்தனை வகைப்படும்? 250. முன்னிலையொருமை வினைமுற்றக்கள் எவை? 251. முன்னிலை பனடமை வினைமுற்றுக்கள் எவை? — எதிர்மறை வினைமுற்று
252. எதிர்மறை குறிப்பு வினைமுற்றுக்கள், ஆல், இல் என்னும் எதிர்மறைப் பன்படியாக தோன்றிப் பால் காட்டும் விகுதிகளை பெற்று வருவனாவாம்.
உதாரணம்.
படர்க்கை – அல்லன், அல்லள், அல்லர் அன்று அல்ல ஜஅல்லனஸ இலன் இலள் இலர் இன்று இல ஜ இல்லனஸ
தன்மை – அல்லேன் அல்லேம் இலேன் இலேம்
முன்னிலை – அல்லாய் அல்லீர் இலாய் இலீர்
இன்மை என்பது ஒரு பொருளினது உண்மைக்கும் ஒரு பொருளை உடமைக்கு மறுதலை உண்மை உளதாதல்.
உதாரணம்.
உண்மை இன்மை இங்கே சாத்தனுளன் இவனிடத்தே அறமுண்டு இங்கே சாத்தானிலன் இவனிடத்தே அறமின்று
உடமை இன்மை இவன் பொருளுடையன் இது குணமுடையது இவன் பொருளிலன் இது குணமில்லது
அன்மையென்பது ஒரு பொருள் சுட்டியதொரு பொருளாதற்கு மருதலை, பிரிது பொருளாதலைக் காட்டும். என்றபடி
உதாரணம்.
இவன் சாத்தனல்லன்: ஜ கொற்றன் ஸ இஃதறனன்று: ஜ மறம் ஸ —
253. எதிர்மறத் தெரிநிலை முற்றுக்கள், இல் ஆல், ஆ, என்னும் எதிர்மறையிடைநிலைகளோடு பால் காட்டும் விகுதிகளைப் பெற்று வருவனவாம். இவற்றுள் இல் இடைநிலை இறந்தகால இடைநிலையோடும் விகாரப்டிறந்த காலங்காட்டும் பகுதியோடும். நிகழ்கால விடைநிலையோடும். கூடி வரும். இனி இடைநிலையோடு கூடாது, இல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் ஆல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் பெறாதும் ஆகாரவிடைசாரியை பெறாதும் எதிர்காலம் உணர்த்தி வரும்.
உதாரணம்.
நடந்திலன், பெற்றிலன், நடக்கின்றிலன், நடக்கிலன், எ-ம். நடக்கலன், உண்ணலன், எ-ம். நடவான், எ-ம். வரும். மற்ற விகுதிகளோடு இப்படியேயொட்டிக் கொள்க.
• இல், அல், ஆ, இவ் மூன்றையும் எதிர்மறை விகுதி என்பர் சிலர். எதிர்மறை இடைநிலையெனபதே சேனாவரையார். சிவஞான முனிவர். முதலியோர் துண்வு நடவா என்னும் அஃறிணைப்பலவின் பால் படர்க்கை வினைமுற்றில் ஆகாரம் வெரு விகுதி வேண்டாது தானே, எதிர்மறை பொருளோடு பலவின்பாற் படர்க்கைப் பொருளையுந் தந்து நிற்றலின், அங்கு மாத்திரம் விகுதியோ யென்றறிக.
அகரவிடைநிலை வருமெழுத்து உயிராயவழிக் கெடுதல் பதவியலிற் பெறப்பட்டது.
இங்ஙனமன்றி உடன்பாட்டு தெரிநிலை முற்றுக்களே ஆல் என்னும் பன்படியாக தோன்றிய எதிர்மறை சிறப்பு வினைக்குறிப்போடாயினும் இல்லை யென்னும் எதிர்மறைத்த தெரிநிலை வினைமுற்றுக்களாயும் வரும்.
உதாரணம். உண்டானல்லன், உண்டேனல்லன், உண்டாயல்லை, எ-ம். வந்தானில்லை, வந்தேனில்லை, வந்தாயில்லை, எ-ம். வரும்.
தேர்வு வினாக்கள் 252. எதிர்மறைத் குறிப்பு வினைமுற்றுக்கள் எவை? இன்மையென்பது என்னை? அன்மை யென்பது என்னை? 253. எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை? இவற்றுள் இல் இடைநிலை எப்படி வரும்? ஆல் இடைநிலை எப்படி வரும்? அகரவிடைநிலை எப்படி வரும்? எதிர்மறைத்தெரிநிலை வினைமுற்றுக்கள் இங்ஙனமன்றி, இன்னும் எங்ஙனம் வரும்? — முன்னிலையேவல் விiனுமுற்று
254. முன்னிலையேவல் வினைமுற்று, முன்னிலையேவலொருமை வினைமுற்று முன்னிலையேவற் பன்மை வினைமுற்றும் என இரு வகைப்படும். —
255. ஆய், இ, ஆல், ஏல், ஆல், என்னும் விகுதிகளை இருதியில் உடைய வினைச்சொற்களும் ஆய் விகுதி புணர்ந்து குன்றிப் பகுதி மாத்திரையாய் நிற்கும் விசை; சொற்களும் முன்னிலையேவாலொருமை தெரிநிலை வினைமுற்றுக்களாம். இவற்றுல் அல், ஏன், ஆல், என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையிடத்து வரும்.
உதாரணம்.
உதாரணம். உண்ணாய் உண்ணல் உண்ணுதி உண்ணேல் உண் மாறல் நீ
ஏவல் விகுதிகள் இடைநிலையின்றி தாமே எதிர்காலங்காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.
எதிர்மறையாலொருமை வினைமுற்றுக்கள், உண்ணாதே, உண்ணாதீ, என எதிர்மறை ஆகாரவிடை நிலையின் முன் தகரவெழுத்து பெற்றோடு எகர விகுதி இகரவிகுதிகளுள் ஒன்று பெற்றும் வரும். —
256. ஈர், உம், மின், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்களாம்.
உதாரணம். உண்ணீர், உண்ணும் உண்மின் – நீர்
எதிர்மநையேவற் பன்மைவினை முற்றுக்கள் உண்ணமின், நடவன்மின் என, பகுதிக்கும் வின் விகுதிக்கும் இடையே எதிர்மறை அல் இடைநிலை பெற்று வரும்.
(1) உண்ணாய், என்னும் முன்னிலையொருமை யெதிர்மறை தெரிநிலை வினைமுற்று வேறே: உண்ணாய் என்னும், முன்னிலையேவலொருமை தெரிநிலை வினைமுற்றும் வேறே: முன்னையது உண்ணென்னும் பகுதியும் பெற்று அகரவிடைநிலை கேட்டு முடிந்நது. பின்னையது உன் என்னும் பகுதியும் ஆய் விகுதியும் பெற்று முடிந்தது. (2) உண்ணீர் என்னும் முன்னிலைப் பன்மையெதிர்மறை தெரிநிலை வினைமுற்றும், வேறே: உண்ணீர் என்னும் முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலைவினைமுற்று வேறே: முன்னையது உண் என்னும் பகுதியும் ஆவன என்னும் எதிர்மறை இடைநிலையும் ஈர் விகுதியும் பெற்று இடைநிலை ஆகாரம் கேட்டு முடிந்தது. பின்னையது உண் என்னும் பகுதியும் ஈர் விகுதியும் பெற்றும் முடிந்தது.
தேர்வு வினாக்கள் – 254. முன்னிலையேவல் வினைமுற்று எத்தனை வகைப்படும்? 255. முன்னிலையேவலொருமை தெரிநிலை வினை முற்றுக்கள் எவை? இவற்றுள் எவை எதிர்மறையிடத்து வரும்? எதிர்மறையேவலொருமை வினைமுற்றுக்கள் என்னும் எப்படி வரும்? 256. முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை? எதிர்மறையேவற் பன்மைவினைமுற்றுக்கள் எவை?
வியங்கோல் வினைமுற்று
257. க, இய, இயர், அ, அல், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் வியங்கோள் வினைமுற்றுக்களாம்.
வியங்கோளாவது, இருதிணையைம்பாண் மூவிடங்கட்கும் பொதுவாகிய ஏவல்.
ககரவிகுதி – வாழ்க இயவிகுதி – வாழிய அகரவிகுதி – வர அல்விகுதி – ஒம்பல் உண்க உண்ணிய உண்ணியர் உண்ண எனல் யான்,யாம் நீ, நீர் அவன், அவள், அவர், அது, அவை
வாழிய என்பது, ஆ, வாழி, அந்தணர் வாழி எனப் பெரும்பாலும் ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.
வா ஸ்ரீ வருக, உன்னை ஸ்ரீ உன்க ஒம்பல் ஸ்ரீ ஒம்புக, எனல் ஸ்ரீ என்க
சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே நடக்கக்கடவுன், நடக்கக்கடவுள், எ-ம். நடப்பானாக நடப்பாளாக நடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற் குரியாவாய் வருமெனவுங் கொள்க.
எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள், மறவற்க, உண்ணற்க அல் இடைநிலை பெற்று வரும்.
அன்றியும், ‘மகனெல்’ என்னுமிடத்து மகனென்று சொல்லற்க எனவும், ‘மாPஇயதொரால்’ என்னுமிடத்து மாPயதொருவற்க. எ-ம். பொருள்பட நிற்றலால், அல், ஆல் இரண்டும் எதிர்மறை வியங்கோள் விகுதிகளாய் வருமெனவும் அறிக.
மேற்கூறிய ஏவல் விகுதிகளும் இவ்வியங்கோள் விகுதிகளும் இடைநிலையின்றித் தாமே எதிர்காலங் காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.
தேர்வு வினாக்கள் – 257. வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை? வியங்கோளாவது என்ன? எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை? வியங்கோளாவது என்ன? எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை?
செய்யுமென் முற்று
258. செய்யுமென்னும் வாய்ப்பாட்டுத் தெரிநலை வினைமுற்றுச் சொற்கள், படர்க்கையிடத்தனவாகிய ஐம்பால்களுக்குள்ளே பலர்பாலொழிந்த நான்கு பால்களுக்கும் பொதுவாக வரும்.
உதாரணம். அவண்ணும் அவளுண்ணும் அதுவுண்ணும் அவையுண்ணும்
இம்முற்று வினைச் சொல்லில் உம் விகுதி நிகழ்காலமும் எதிர்காலமுங’ காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
தேர்வு வினா – 258. செய்யுமென்னும் வாய்ப்பாட்டுத் தெரிநிலை முற்றுக்கள் எவ்வாறு பொதுப்பட வரும்?
பொதுவினைக் குறிப்பு
259. வேறு, இல்லை, உண்டு, என்னும் இம்மூன்று வினைக்குறிப்பு முற்றுச்சொற்களும், யார் என்னும் வினா வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும், இருதிணையம்பான் மூவிடங்கட்கும் பொதுவாகி வரும்.
உதாரணம்.
அவன் அது யாம் அவள் அவை நீ அவர் யான் நீர் வேறு, இல்லை, உண்டு, யார்
இல்லையென்பது ‘எஞ்ஞான்னுமில்’ எனக் கடைக் குறைந்து வருதலுமுண்டு.
அஃறிணையொருமைக்குரிய டுவ்விகுதி பெற்று நிற்கும் உண்டு என்னம் வினைக்குறிப்பு முற்றும் வேறே: விகுதியின்றிப் பொதுச் சொல்லாயே நிற்கும் இவ்வுண்டென்னும் வினைக்குறிப்பு முற்றும் வேறே: முன்னையது இன்று என்பதற்கு மறுதலை: பின்னையது இல் என்பதற்கு மறுதலை: பின்னையது இல் என்பதற்கு மறுதலை.
யார் என வகரங்கெட்டு நிற்கும் பலாபாற் படர்க்கை வினைப் பெயரும் வேறே: யார் என்னும் இவ் வினா வினைக்குறிப்பும் வேறே: யார் என்னும் இவ் வினா வினைக்குறிப்பும் வேறே.
யாரென்பது ஆரென விகாரப்பட்டும் வரும்.
260. எவன் என்னும் வினைவினைக் குறிப்பு மற்றுச் சொல் அஃறிணையிருபாற்கும் பொதுவாகி வரும்.
உ-ம் அஃதெவன் அவையெவன்.
எவன் என்னும் உயர்திணையாண்பாற் படர்க்கை வினாப்பெயரும் வேறே: எவன் என்னும் இவ்வினா வினைக்குறிப்பும் வேறே.
எவன் என்பது என், என்ன, என்னை, என விகாரப்பட்டும் வரும்.
தேர்வு வினாக்கள் – 259. வேறு, இல்லை, உண்டு என்னும் இம்மூன்று வினைக்குறிப்பு முற்றுச் சொற்களும், யார், என்னம் வினாவினைக் குறிப்புமுற்றுச் சொல்லும், எவ்வாறு பொதுப்பட வரும்? 260. எவன் என்னும் வினா வினைக் குறிப்பு முற்றுச் சொல் எவ்வாறு பொதுப்பட வரும்?
பெயரெச்சம்
261. பெயரெச்சமாவது, பாhல் காட்டும். முற்று விகுதி பெறாத குறைச்சொல்லாய்ப் பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.
இப்பெயரெச்சங் கொள்ளும் பெயர்களாவன், வினை, முதற்பெயர், கருவிப் பெயர், இடப்பெயர், தொழிற்பெயர், காலப்பெயர், செயற்பாட்டுப் பொருட்பெயர் என்னும் அறவகை பெயருமாம்
உதாரணம்.
உண்டசாத்தன் – வினைமுதற்பெயர் உண்ட கலம் – கருவிப்பெயர் உண்ட வீடு – இடப்பெயர் உண்ட ஊண் – தொழிற்பெயர் உண்ட நாள் – காலப்பெயர் உண்ட சோறு – செயப்படு பொருட்பெயர்
262. தெரிநிலைவினைப் பெயரெச்சம், செய்த வென்னும் வாய்ப்பாட்டிறந்தபாலப்பெயரெச்சம் எனவும் செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சம் எனவும் செய்யும் என்னும் வாய்ப்பட்டெதிர்காலப் பெயரெச்சம் எனவும் மூவகைப்படும்.
263. செய்தவென்னும் வாய்ப்பாட்டிறந்த காம், பெயரெச்சங்கள் இறந்த காலவிடைநிiயோடு வகாரப்பட்டிறந்தகாலங் காட்டும் தகுதியோடும் அகர விகுதி பெற்று வருவனவாம்.
உதாரணம். வந்த குதிரை போய குதிரை உண்ட குதிரை புக்க குதிரை தின்ற குதிரை விட்ட குதிரை வருந்தின குதிரை உற்ற குதிரை
264. செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்கால பெயரெச்சங்கள், நிகழ்கால, விடைநிலையோடு அகரவிகுதி பெற்று வருவனவாம்.
உதாரணம். உண்ணாநின்ற குதிரை உண்கின்ற குதிரை உண்கிற குதிரை
266. எதிர்மறைத் தெரிநிலை வினைப்பெயரெச்சங்கள், எதிர்மறை ஆகாரவிடைநிலையுந் தகரவெழுத்துப் போற்றோடு கூடிய அகரவிகுதியும் பெற்று வருவனவாம்.
செய்யாத என்பது செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் மூன்றற்கும் எதிர்மறையாம். இவ்வெதிர்மறை பெயரெச்சம் செய்கலாத, செய்கிலாத, என அல், இல் என்னும் இடைநிலைகளை ஆகாரச் சாரியையோடு பெற்று வரும்.
உதாரணம். உண்ணாத குதிரை நடவாத குதிரை
உண்ணாக் குதிரை, வடவாக் குதிரை என ஈற்றுயிர் மெய்கெட்டும் வரும்.
267. குறிப்பு வினைப்பெயரெச்சங்கள் அகரவிகுதி பெற்று வருவனவாம்.
உதாரணம். கரிய குதிரை, பெரிய களிறு, நெடியவில் செய்ய மலர், தீய சொல், புதிய நட்கு உள்ளபொருள் முகத்த யானை படத்த பாம்பு
268. எதிர்மறைத் குறிப்பு வினைப்பெயரெச்சங்கள் அல், இல. என்னம் பன்படியாகத் தோன்றி ஆகாரசச் சாரியையுந் தகரவெழுத்து பெற்றேடு கூடிய அகர விபுதியும் பெற்று வருவனவாம்.
உதாரணம். அல்லாத குதிரை இல்லாத பொருள்
அல்லாக்குதிரை இல்லாப் பொருள் என ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.
269. பெயரெச்சங்கள் இருதணையைம்பான் மூவிடங் கடகும் பொதுவாகவரும்.
உதாரணம். உண்ட யான், யாம் நீ நீர் அவன், அவள், அவர், அது, அவை
தேர்வு வினாக்கள் – 261. பெயரெச்சமாவது யாது? பெயரெச்சம் கொள்ளும் பெயர்கள் எவை? 262. தெரிநிலை வினைப்பெயரெச்சம், எத்தனை வகைப்படும் எவை? 263. செய்தவென்னும் வாய்ப்பாட்டிறந்தகாலப் பெயரெச்சங்கள் எவை? 264. செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சங்கள் எவை? 265. செய்யுமென்னும் வாய்ப்பாட்டெதிர்காலப் பெயரெச்சங்கள் எவை? 266. எதிர்மறைத் தெரிநிலை வினைப் பெயரெச்சங்கள் எவை? செய்யாத வென்பது எவற்றிற்கு எதிர்மறை? இவ்வெதிர்மறைப் பெயரெச்சம் இன்னும் இங்ஙனம் வரும்? 267. குறிப்பு வினை பெயரெச்சங்கள் எவை? 268. எதிர்மறைக் குறிப்பு வினைப் பெயரெச்சங்கள் எவை? 269. பெயரெச்சங்கள் எவ்வாறு பொதுப்பட வரும்?
வினையெச்சம்
270. வினையெச்சமாவது பால் காட்டும் முற்றுவிகுதி பெறாத குறைசெ சொல்லாய் வினைச்சொல்லைக் கொண்டு முடியும் வினையாம்.
இவ்வினையெச்சங் கொள்ளும் வினைச்சொற்களாவன உடன்பாடும் எதிர்மறையும் பற்றிவரும் தெரிநிலையுங் குறிப்புமாகிய வினைமுற்றும் பெயரெச்சமும், வினையெச்சமும், வினையாலணையும், பெயரும், தொழிற்பெயரும் ஆகிய ஐ வகை வினைச்சொற்களுமாம்.
உதாரணம். 1. தெரிநிலைவினையெச்சந் தெரிநிலை வினை விகற்பங்கள் கொள்ளுதற்கு
உதாரணம்.
உண்டு வந்தான்; உண்டுவாரான் – தெரிநிலை வினைமுற்று உண்டுவந்த் உண்டுவராத – தெரிநிலைப்பெயரெச்சம் உண்டுவந்து; உண்டுவராது – தெரிநிலை வினையெச்சம் உண்டுவந்தவன்; உண்டு வாராதவன் – தெரிநிலை வினையாலணையும் பெயர் உண்டுவருதல்; உண்டுவராதவன் – தெரிநிலைத் தொழிற் பெயர்
2. தெரிநிலை வினையெச்சங் குறிப்புவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-
கற்றுல்லவன் – குறிப்புவினைமுற்று கற்றுவல்ல – குறிப்பு வினைப்பெயரெச்சம் கற்றுவல்லவன் – குறிப்புவினையாலனையும் பெயர் கற்று வன்மை – குறிப்புத் தொழிற்பெயர்
3. குறிப்பு வினையெச்சந் தெரிநிலைவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-
அறமன்றிச் செய்தான்; அறமன்றிச் செய்யான் – தெரிவினைமுற்று
அறமன்றிச் செய்த் அறமன்றிச் செய்யாத – தெரிபெயரெச்சம்
அறமன்றிச் செய்து; அறமன்றிச் செய்யாமை – தெரிதொழிற் பெயர்
4. குறிப்பு வினையெச்சங் குறிப்பு வினையெச்சங் குறிப்பு வினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-
அறமன்றியிலன் – குறிப்பு வினைமுற்று அறமன்றியில்லாது – குறிப்பு வினைப்பெயரெச்சம் அறமன்றியில்லாது – குறிப்பு வினையெச்சம் அறமன்யில்லாதவன் – குறிப்பு வினையாலணையும் பெயர் அறமன்யின்மை – குறிப்புத் தொழிற்பெயர்
271. பதவியலிற் கூறப்பட்ட வினையெச்ச விகுதிகளும் உகர விகுதி இறந்தகால விடைநிலையோடு கூடிவரும் என விகுதி, இறந்தகாலவிடைநிலையோடும் விகாரப்பட்டிருந்த காலங்காட்டும் பகுதியோடும் கூடிவரும். மற்றை விகுதிதி யெல்லாம் இடைநிலையின்றித் தாமே காலங்காட்டும்.
272. தெரிநிலை வினையெச்சங்கள் செய்து என்னும் வாய்ப்பாட்டிறந்த கால வினையெச்சம் எனவும், செயவென்னும் வாய்ப்பாட்டு முகலத்திற்குமுரிய வினையெச்சம் எனவும் செயின் என்னும் வாய்பாட்டெதிர்கால வினையெச்சம் எனவும் மூவகைப்படும்.
273. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள், உ, இ, ய் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்று தன் கருத்தாவின் வினையையே கொண்டு முடிவனவாம்.
இங்கே இறந்தகாலம் என்பது முடிக்கும் சொல்லால் உயரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும். தொழில்முன்னிகழ்தலை.
(உதாரணம்)
உகரவிகுதி நடந்து உண்டு சென்று தேர்ந்து கேட்டு கற்று வந்தான் இகரவிகுதி யகரவிகுதி ஆடி ஆய் எண்ணி போய் வந்தான்
இங்கே வினையெச்சத்தால்உயரப்படுந் தொழிலை நிகழ்த்தினா வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினைமுதலாகக் காண்க.
விகுதி விகரப்பட்டு, விகுதிபெறாது சில பகுதியே விகாரப்படும் இச்செய்தெனடவாய்ப்பட்டிறந்த கால வினையெச்சங்களாய் வரும்.
தழுவிக்கொண்டான் மருவிவந்தான் தழீஇக்கொண்டான் மாPஇவந்தான் விகுதி விகாரப் பட்டு வந்தன புகு விடு பெறு புக்கு வந்தான் விட்டு வந்தான் பெற்று வந்தான் விகுதி பெறாது சில பகுதியே விகாரப்பட்டு வந்தன
இச்செய்னெச்சம், ஒரோவிடத்து காரப் பொருட்டாயும் வரும்.
உதாரணம். கற்றறிந்தான் அறம் செய்த புகழ்பெற்றான்
செய்யுளிலே இச்செய்தென்வாய்பபாட் டிறந்தகால வினையெச்சங்கள், பு, ஆ. ஊ, என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும்.
உதாரணம்.
புகரவிகுதி ஆவிகுதி ஊவிகுதி உண்குபு உண்ணா உண்ணுh தேடுபு தேடா தேடு வந்தான்
274. செய என்னும் வாயடப்பாட்டு முக்காலத்திற்கும் உரிய வினை யெச்சம் அகரவிகுதியை இறுதியிற் பெற்றுத் தான் கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு முடிவதாம்.
(3) செய வெண் வாய்ப்பாட்டு வினையெச்சம் இறந்த காலத்திலே காரணப் பொருளில் வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.
காரணப் பொருளில் வருதலாவது முடிக்குந் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில் காரணம் என்பது பட வருதல்.
உதாரணம். மழை பெய்ய புகழ்பெற்றது – தன்கருத்தாவின் பெயர் மழை பெய்ய நெல் விளைந்நது – பிறகருத்தாவின் வினை மழை பெய்ய புகழ்பெற்றது என்றவிடத்து வினையெச்சந்தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினைமுதலாதல் காண்க.
மழைபெய்ய நெல்லு விளைந்தது எனற விடத்து வினையெச்சத் தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலும் வேறே: முடிக்குஞ் சொல்லால் உணலப்படும் தொழிலை நிஷைகழ்த்தின வினைமுதலும் வேறேயாதல் காண்க.
செய்யுளிலே இச் செயன்வென்வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் என என்னும் விகுதியை பெற்றும் வரும்.
உதாரணம். மழை பெயடதெனப் புகழபெற்றது – தன்கருத்தாவின் பெயர் மழை பெய்தென நெல் விளைந்நது – பிறகருத்தாவின் வினை
(4) செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம் எதிர்காலத்திலே கரியப் பொருளில வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.
காரியப் பொருளில் வருதலாவது முடிக்குஞ் சொல்லால் உணலப்படுந் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும் தொழில். காரியம் என்பது பட வருதல்.
உதாரணம்.
தானுண்ணவந்தான் – தன்கருத்தாவின் பெயர் யானுண்ணத்தந்தான் – பிறகருத்தாவின் வினை
இச்செயவென்வாய்ப்பாட் டெதிர்கால வினையெச்சம் கு என்னும் விகுதியைப் பெற்றும் வரும்.
உதாரணம்.
தானுணற்கு வந்தான் – தன்கருத்தாவின் பெயர் யானுணற்குத் தந்தான் – பிறகருத்தாவின் வினை
உணணும்படி, உண்ணும் பொருட்டு, உண்ணும் வண்ணம், உண்ணும் வகை என்பன உணற்கென்னும் பொருள்பட வரும்.
செய்யுளிலே, இச்செயவென்வாய்ப்பாட் டெதிர்கால வினையெச்சம், இய, இயர், வான், பான், பாக்கு என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும். இவற்றுள் முன்னைய இரண்டு விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின்வினையையுங் கொண்டு முடியும்; பின்னைய மூன்று விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.
உதாரணம்.
இயவிகுதி நீரிவைகாணியவம்மின் – தன் கருத்தாவின் வினை அவர் காணிய வம்மின் – பிற கருத்தாவின் வினை இயர்விகுதி நாமுண்ணியர்வந்தேம் – தன் கருத்தாவின் வினை நீருண்ணியர் வழங்குவேம் – பிற கருத்தாவின் வினை வான்விகுதி – தான் கொல்வான் சென்றான் பான்விகுதி – தானலைப்பான் புகுந்தான் பாக்குவிகுதி – தான்றருபாக்கு வருவான் தன் கருத்தாவின் வினை
(5) செயவென்வாய்ப்பாட்டு வினையெச்சம், தனக்கென நியமமாக உரிய நிகழ்காலத்திலே, இது நிகழா நிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருள்பட வந்து, பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.
இங்கே நிகழ்காலமென்றது, முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிலோடு வினையெச்சத்தால் உயரப்படுந் தொழில் முற்பிற் பாடின்றி உடனிகழ்தலை.
உதாரணம். சூரியனுதிக்க வந்தான் – பிறகருத்தாவின் வினை
275.செயின் என்னும் வாய்ப்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள், இன், ஆல், கால், கடை, வழி, இடத்து, உம் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்றுக் காரணப்பொருளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு முடிவனவாம்.
இவ்வினையெச்சம், எதிர்காலச் சொல்லையே முடிக்குஞ் சொல்லாகக் கொள்ளும். இவ்வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில், ஒருதலையாகவே சொல்லுவான். சொற்குப் பின்னிகழ்வதாயும், முடிக்குஞ்சொல்லால் உணரப்படுந் தொழிற்குக் காரணமாகமுன்னிகழ்வதாயும் உள்ளது; ஆதலால், இவ்வினையெச்சம் எதிhடகாலம் பற்றிக் காரணப்பொருளில் வருவதாயிற்று. ஒருதலை – துணிவு.
(உதாரணம்)
இன் யாணுண்ணி னுவப்பேன் உண்ணிற் பசிதீரும் தன்கரு பிறகரு ஆல் நீ வந்தால் வாழ்வாய் நீ வந்தான் யான் வாழ்வேன் தன்கரு பிறகரு கால் நீ கற்றக்காலுவப்பாய் உண்டக்காற் பசிதீரும் தன்கரு பிறகரு கடை நல்வினை தானுற்றக் கடையுதவும் நல்வினை தானுற்றக்கடைத் தீவினை வராது தன்கரு பிறகரு வழி நல்வினை தானுற்ற வழியுதவும் நல்வினை தானுற்றவழித் தீவினை வராது தன்கரு பிறகரு இடத்து நல்வினை தானுற்றவிடத்துதவும் நல்வினை தானுற்றவிடத்துத் தீவினைவராது தன்கரு பிறகரு உம் உண்டலு முவப்பாய் உண்டலும் பசி தீரும் தன்கரு பிறகரு
வந்தால் என்பது துச்சாரியை பெற்றது. உண்டக்கால் என்பது துச்சாரியையும் அகரச்சாரியையும் பெற்றது. உற்றக்கால், உற்றக்கடை, உற்றவழி, உற்றவிடத்து என்பன அகரச்சாரியை பெற்றன. உண்டலும் என்பது துச்சாரியையும் அல்லுச் சாரியையும் பெற்றது.
உண்பானேல் உண்பானெனின், உண்பானாயின், உண்பானேனும் என, முற்று வினைகள், ஏல், எனின், ஆயின், ஏனும், என்னும் நான்கனோடும் இயைந்து, ஒரு சொன்னீர் மைப்பட்டுச் செயின் என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாய் வருமெனவும் அறிக.
276. எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சங்கள் எதிர்மறை ஆகாரவிடைநிலையோடு உ, மல், மே, மை, மைக்கு, கால், கடை, வழி, இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.
செய்யாது என்பது செய்து, செய்பு, செய்யா, செய்யூ என்பவற்றிற்கு, எதிர்மறையாம். செய்யாது என்பதிலே தகரம் எழுத்துப்பேறு. செய்யாது என்பது, செய்கலாது, செய்கிலாது என, அல் இல், என்னும் இடைநிலைகளை ஆகாரச்சாரியையோடு பெற்றும் வரும்.
செய்யாமல் என்hது, செய என்பதற்கு எதிர்மறையாம்.
செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னும் நான்கும், செயற்கு, செய்யிய, செய்யியர் என்பவற்றிற்கும், செயற்கு என்பது படவருஞ் செயவேனெச்சத்திற்கும் எதிர்மறையாம்.
செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்து என்னும் நான்கும், செயின் என்பதற்கும், அப்பொருள்பட வருவனவாகிய செய்தால், செய்தக்கால், செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து என்பனவற்றிற்கும் எதிர்மறையாம்.
(உதாரணம்)
விதிவினை யெச்சம் மறைவினையெச்சம் உண்டு வந்தான் உண்ணாது வந்தான் மழை பெய்யப் பயிர் தழைத்தது மழை பெய்யாமற் பயிர் வாடிற்று இங்கே பெய்யாமல் என்பதற்கு பெய்யாமையால் என்பது பொருள் அவன் காணவந்தேன் அவன் காணாமல் வந்தேன். இங்கே காணாமல் என்பதற்குக் காணாதிருக்க என்பது பொருள். நீ வீடெய்தற்கு வணங்கு நீ நரகெய்தாமல் வணங்கு நீ நரகெய்தாமே வணங்கு நீ நரகெய்தாமை வணங்கு நீ நரகெய்தாமைக்கு வணங்கு இஙகே எய்தாமல் என்பது முதலிய நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு என்பது பொருள் யானுணற்கு விதித்தான் யானுண்ணாமல் விதித்தான் யானுண்ணாமே விதித்தான் யானுண்ணாமை விதித்தான் யானுண்ணாமைக்கு விதித்தான் இங்கே உண்ணாமல் என்பது முதலிய நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு என்பது பொருள் யானுண்ணின் மகிழ்வென் யானும்ணாக்கான் மகிழேன் யானும்ணாக்கடை மகிழேன் யானும்ணாவழி மகிழேன் யானும்ணாவிடத்து மகிழேன் இங்கே உண்ணாக்கால் என்பது முதலிய நாந்கிற்கும் உண்ணாதொழியின் என்பது பொருள் உண்ணிற் பசிதீரும் உண்ணாக்காற் பசி தீராது உண்ணாக்கடை பசி தீராது உண்ணாவழிப் பசி தீராது உண்ணாவிடத்து பசி தீராது
277. உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சங்கள், பண்படியாகத் தோன்றி அகரவிகுதியைப் பெற்று வருவனவாம்.
உதாரணம். மெல்லப் பேசினான் சாலப்பல பைய நடந்தான் உறக்கரிது வலியப் புகுந்தான் மாணப் பெரிது
மெல்ல என்பது, ல, ளவொற்றுமைபற்றி, மௌ;ளவெனவும் வழங்கும்.
278. எதிர்மறை குறிப்புவினையெச்சங்கள், அல், இல் என்னும் எதிர்மைபண்படியாகத் தோன்றி, றி டு மல் மே மை ஆல் கால் கடை வழி இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.
உதாரணம்.
றி து
மல் மே மை ஆல் கால் கடை வழி இடத்து அறமன்றிச்செய்யான் அறமல்லாதில்லை அறமல்லதில்லை அறமல்லாமலில்லை அறமல்லாமேயில்லை அறமல்லாமையில்லை நீயல்லாலில்லை அவனல்லாக்கானீயார் அவனலடலாக்கடைநீயார் அவனல்லாவழிநீயார் அவனல்லாவிடத்து நீயார் அருளின்றிச் செய்தான் அருளில்லாது செய்தான் — யானில்லாமல் வந்தான் யானில்லாமே வந்தான் யானில்லாமை வந்தான் — யானில்லாக்கால் வருவான் யானில்லாக்கடைவருவான் யானில்லாவழி வருவான் யானில்லாவிடத்து வருவான்
இவ்வினையெச்சக் குறிப்புக்களில் வரும் ஆகாரமும் அகரமுஞ் சாரியை.
279. வினையெச்சங்கள், இருதிணையைம்பான் மூவிடங்கட்கும் பொதுவாக வரும்.
உதாரணம். நடந்து வந்தான், வந்தேம் வந்தாய், வந்தீர் வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன
280. தன் கருத்தாவின் வினையே கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் சினை வினையாயின், அவை அச்சினைவினையைக் கொண்டு முடிதலுமன்றி, ஒற்றுமைபற்றி முதல் வினையையும் கொண்டு முடியும்.
உதாரணம். சாத்தன் காலொடிந்து வீழ்ந்தான். இங்கே ஒடிதல் சினைவினை; வீழ்தல் முதல் வினை ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தான் என்னும் முதல் வினைகொண்டு முடிந்தது.
காலொடிந்து வீழ்ந்தது. இங்கே ஒடிதலுஞ் சினை வினை; வீழ்தலுஞ் சினைவினை. ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தது என்னும் சினைவினை கொண்டு முடிந்தது.
மாடு காலொடிந்து வீழ்ந்தது. இங்கே வீழ்தல் மாட்டின் வினையாதலிற் சினைவினையெச்சம் முதல் வினைகொண்டு முடிந்தது.
281. பிற கருத்தாவின் வினையைக் கொள்ளும் வினையெச்சங்கள்; தன்கருத்தாவின் வினையைக்கொள்ளும் வினையெச்சங்களாக திரிந்தும் வரும். திரிபினும், அவற்றின் பொருள்கள் வேறுபடாவாம்.
உதாரணம். ஞாயிறு பட்டு வந்தான். இங்கே பட வென்னுஞ் செயவென் வாய்ப்பாட்டுவினையெச்சம் பட்டு என திரிந்து நின்றது.
மழைபெய்து நெல் விளைந்தது. இங்கே பெய்ய என்னுங் காரணப் பொருட்டாகிய செயவென் வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் பெய்து என திரிந்து நின்றது.
தேர்வு வினாக்கள் – 270. வினையெச்சமாவது யாது? வினையெச்சங் கொள்ளும் வினைச் சொற்களாவன எவை? 271. வினையெச்ச விகுதிகளுள், எவ்விகுதிகள் காலங்காட்டும் இடைநிலையோடு கூடிவரும்? எவ்விகுதிகள் இடைநிலையின்றி தாமே காலங்காட்டும்? 272. தெரிநிலை வினையெச்சங்கள் எத்தனை வகைப்படும்? 273. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால விiயெச்சங்கள் எவை? இங்கே இறந்தகாலம் என்பது எவை? இச் செய்தென் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள் வேறு விகுதிகளைப் பெற்று வருமோ? 274. செயவென்னும் வாய்ப்பாட்டு முக்காலத்திற்குமுரிய வினையெச்சம் யாது? செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம், இறந்தகாலத்திலே எப்பொருளில் வந்து, எவ்வினையைக் கொண்டு முடியும்? காரணப்பொருளில் வருதலாவது என்னை? இச் செயவென் வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் வேறு விகுதியைப் பெற்று வருமோ? செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம், எதிர்காலத்திலே எப்பொருளில் வந்து, எவ் விகையைக் கொண்டு முடியும்? காரியப் பொருளில் வருதலாவது என்னை? இச்செயவென் வாய்ப்பாட்டெதிர்கால வினையெச்சம் – வேறு விகுதியைப் பெற்றும் வருமோ? வேறெவைகள் உணற்கென்னும் வரும்? செய்யுளிலே செயவென் வாய்ப்பாட்டெதிர் கால வினையெச்சம் வேறு விகுதிகளைப் பெற்றும் வருமோ? இவற்றுள், எவ்வௌ; விகுதி பெற்றவை எவ்வௌ; வினையைக் கொண்டு முடியும்? இங்கே நிகழ்காலம் என்றது எதை? 275. செயினென்னும் வாய்ப்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள் எவை? இவ் வினையெச்சம் எக்காலச் சொல்லை முடிக்கும் சொல்லாகக் கொள்ளும்? செயினென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாய் வருவன பிறவும் உளவோ? 276. எதிர்மறை தெரிநிலை வினையெச்சங்கள் எவை? செய்யாது என்பது எவைகளுக்கு எதிர்மை? செய்யாது என்பது இன்னும் எப்படி வரும்? செய்யாது என்பது எதற்கு எதிர்மறை? செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னும் நான்கும் எவைகளுக்கு எதிர்மறை? செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்து என்னும் நன்கும் எவைகளுக் எதிர்மறை? 277. உடன்பாட்டு குறிப்பு வினையெச்சங்கள் எவை? 278. எதிhமறைக் குறிப்பு வினையெச்சங்கள் எவை? 279. விiயெச்சங்கள் எவ்வாறு பொதுப்பட வரும்? 280. தன் கருத்தாவின் வினையையே கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடிதல் இல்லையோ? 281. பிறகருத்தாவின் வினையைக் கொள்ளும் வினை யெச்சங்கள் தன் கருத்தாவின் வினையெச்சங்களாக திரிந்து வருதல் இல்லையோ?
முற்றுவினை எச்சப்பொருளைத் தருதல்
282. தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுங் குறிப்பு வினைமுற்றும், தமக்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பணனிலை கொள்ளுமிடத்துப் பெயரெச்சப் பொருளையுந் தரும்.
உதாரணம். கண்டனன் வணங்கினன்; இங்கே கண்டனன், என்னுந் தெரிநிலை வினைமுற்று, கண்டு என வினையெச்சப் பொருளைத் தந்நது.
உண்டான்சாத்தனூர்க்குப் போயினான்; இங்கே உண்டான் என்னுந் தெரிநிலை வினைமுற்று உண்டடெனப் பெயரெச்ச பொருளைத் தந்தது. உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து இங்கே கையினார் என்னுங் குறிப்பு வினைமுற்று, கையையுடையனவராகி என வினையெச்சப் பொருளைத் தந்தது.
வெந்திறலினான் விரல் வழுதியோடு; இங்கே திரலினால் என்னும் குறிப்பு வினைமுற்று திறலினனாகிய எனப்பெயரெச்சப் பொருளைத் தந்தது.
தேர்வு வினா – 282. வினைமுற்றுக்கள் எச்சப் பொருளை தருதல் இல்லையோ?
இருவகைவினைக் குறிப்பு
283. வினாக்குறிப்புச் சொற்கள், ஆக்கவினைக் குறிப்பும் இயற்கை வினைக்குறிப்பும் என இரு வகைப்படும்.
அவற்றுள், ஆக்கவினைக் குறிப்பாவது காரணம்பற்றி வரும் வினைக்குறிப்பாம் அதற்கு ஆக்கச்சொல் விருந்தாயினும் தொக்காயினும் வரும்.
உதாரணம். கல்வியாற் பெரியனாயினான் கல்வியாற் பெரியன் கற்றுவல்லராயினார் கற்றுவல்லர்
இயற்கை வினைக்குறிப்பாவது காரணப்பற்றாது இயற்கையை உணர்த்தி வரும் வினைக்குறிப்பாம், அது ஆக்கச்சொல் வேண்டாதே வரும்.
உதாரணம். நீர் தண்ணிது தீ வெய்து
தேர்வு வினாக்கள் – 283. வினைக்குறிப்புச் சொற்கள் இன்னும் எத்தனை வகைப்படும்? ஆக்கவினைக்குறிப்பாவது யாது? இயற்கை வினைக்குறிப்பாவது யாது?
தெரிநிலை வினைப்பகுப்பு
284. தெரிநிலை வினைச் சொற்கள், செயப்பாடு பொருள் குன்றிய வினை, செயப்பாடு பொருள், குன்றாத வினை, எ-ம். தன்வினை, பிறவினை, எ-ம். செய்வினை, செயப்பாட்டு வினை, எ-ம். வௌ;வேறே வகையிற் பிரிவுபட்டு வழங்கும்.
285. செயப்படுபொருள் குன்றிய வினையாவது, செயப்பாடு பொருளை வேண்டாது. வரும்முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.
உதாரணம். நடந்தான், வந்தான், இருந்தான், உறங்கினான்.
இவை, இதை நடந்தான், இதை வந்தான் எனச் செயப்படு பொருளேற்று வாராமை காண்க.
286. செயப்படு பொருள் குன்றாத வினையாவது செயப்படுபொருளை வேண்டி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.
உதாரணம். உண்டான், கொடுத்தான், கண்டான், படித்தான், இவை, சோற்றையுண்டான், பொருளைக் கொடுத்தான் எனச் செயப்படும் பொருளேற்று, வருதல் காண்க.
287. தன்வினையாவது தன்னெழுவாய் கருத்தாவின் றொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம் இத்தன்வினை இயற்றுதற் கருத்தாவின் வினையெனப்படும்.
செயப்பாடு பொருள் கன்றிய முதனிலை செயப்பாடு பொருள் குன்றாத முதனிலை என்னும் இரு வகை முதலினையும் தன்வினைக்கு முதனிலையாக வரும்.
உதாரணம். சாத்தனடைந்தான், தச்சன் கோயிலைக் கட்டினான்.
இவைகளிலே, நடக்கையுங் காட்டலுமாகிய முதனிலைத் தொழில்கள் எழுவாய்க் கருத்தாவின் றொழிலாதல் காண்க.
288. பிறவினையாவது தன்னெழுவாய் இக்கருத்தா வல்லாத பிறகருத்தாவின் தொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலையடியாக தோன்றிய வினையாம். இப்பிறவினை ஏவுதற் கருத்தாவின் வினை எனப்படும்.
செயப்படு பொருள் குன்றிய முதனிலை, செயப்படுபொருள் குன்றாத முதனிலை என்னும் இரு வகை முதனிலைகளும் பிறவினை விகுதி பெற்றேனும் தாம் விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதிபெற்றேனும், பிற வினைப் பகுதிகளாய், வருதல் பதவியலிற் கட்டுவித்தான்.
இவைகளிலே நடக்கையுங் கட்டலுமாகிய முதனிலை தொழில்கள், எழுவாய் கருத்தாவின் தொழிலாகாது பிறகரத்தாவின் தொழிலாதல் காண்க.
செயப்படு பொருள் குன்றிய முதனிலை அடியாகத் தோன்றிய பிற வினைகள், அம் முதனிலைக் கருத்தாவைக் தமக்குச் செயப்படு பொருளாக கொண்டு வரும்.
உதாரணம். கொற்றான் சாத்தனைக் கடைப்படித்தான் அரசன் றச்சனாற் கோயிலைக் கட்டுவித்தான்
289. தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாக நிற்கும் முதனிலைகளுக்குஞ் சிலவுளவாம்.
உதாரணம்.
முதனிலை தன்வினை பிறவினை அழி நீ யழி காட்டை யழி கெடு நீ கெடு அவன் குடியைக் கெடு வெளு நீ யுடம்படுவெளு துணியை வெளு கரை நீ கரை புளியைக் கரை தேய் நீ தேய் கட்டையைத் தேய்
இம்முன்னிலைகளால் வினைச்சொற் பிறத்தல் வருமாறு.
முதனிலை தன்வினை பிறவினை அழி அழித்தான் அழிக்கின்றான் அழிவான் அழித்தான் அழிக்கின்றான் அழிப்பான் கெடு கெட்டான் கெடுகின்றான் கெடுவான் கெட்டான் கெடுகின்றான் கெடுப்பான் வெளு வெளுத்தான் வெளுக்கின்றான் வெளுப்பான் வெளுத்தான் வெளுக்கின்றான் வெளுப்பான் கரை கரைந்தான் கரைக்கின்றான் கரைவான் கரைந்தான் கரைக்கின்றான் கரைப்பான் தேய் தேய்ந்தான் தேய்கின்றான் தேய்வான் தேய்ந்தான் தேய்கின்றான் தேய்ப்பான்
290. பிறவினைகள், ஒரோவிடத்துப் பிறவினைவிகுதி தொக்கும் வரும்.
உதாரணம். அரசன் செய்த தேர்: இதிலே செய்வித்த என்னும் பிறவினை செய்த என விவ்விகுதி தொக்கு நின்றது.
கோழி கூலிப் பொழுது புலர்ந்தது: இதிலே கூவிலித்து என்னும் பிறவினை கூவி என விவ்விகுதி தொக்கு நின்றது.
291. செய்வினையாவது, படு விகுதி புணராத முதனிலை அடியாகத் தோன்றி, எழுவாய்க் கருத்தாவைக் கொண்டு வரும் வினையாம்.
உதாரணம். சாத்தனடந்தான் நடப்பித்தான் சாத்தன் கட்டினான் கட்டுவித்தான்
292. செயப்பாட்டு வினையாவது, படு விகுதி புணர்ந்த முதனிலை அடியாகத் தோன்றி, வினைமுதல் மூன்றாம் வேற்றுமையிலும், செயப்படு பொருள் எழுவாயிலும் வரப்பெறும் வினையாம்.
பிறவினை முதனிலைகளும், செயப்படு பொருள் குன்றாத தனவினை முதனிலைகளும், படு விகுதியோடும், இடையே அகரச்சாரியையேனும், குச்சாரியையும் அகரச்சாரியையுமேனும் பெற்று, செயப்பாட்டு வினை முதனிலைகளாக வரும்.
உதாரணம். சாத்தனா லிம்மாடு நடப்பிக்கப்பட்டது கொற்றான லிச்சோ றுண்ணப்பட்டது.
293. செயப்பாட்டுவினை, ஒரோவிடத்துப் படு விகுதி தொக்கும் வரும்.
உதாரணம். “இல்வாழ்வானென்பான்“, இங்கே எனப்படுவான் என்னுஞ் செயப்பாட்டு வினை என்பான் எனப் படுவிகுதி தொக்கு நின்றது.
உண்டசோறு: இங்கே உண்ணப்பட்ட என்னுஞ் செயப்பாட்டு வினை உண்ட எனப் படு விகுதி தொக்கு நின்றது.
தேர்வு வினாக்கள் – 284. தெரிநிலை வினைச் சொற்கள் இன்னும் எவ்வௌ; வகையிற் பிரிவு பட்டு வழங்கும்? 285. செயப்படு பொருள் குன்றிய வினையாவது யாது? 286. செயப்படு பொருள் குன்றாத வினையாவது யாது? 287. தன்வினையாவது யாது? தன் வினைக்கு முதனிலையாக வருவன எவை? 288. பிற வினையாவது யாது? பிற வினைக்கு மதனிலையாக வருவன எவை? செயப்படு பொருள் குன்றிய முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள் எதனைத் தமக்குச் செயப்படுபொருளாக கொண்டு வரும்? செயப்படு பொருள் குன்றாத முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள் அம் முதனிலைக் கருத்தாவை யாதாகக் கொண்டு வரும்? 289. தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய் நிற்கும் முதனிலைகள் உளவோ? 290. பிறவினைகள் ஒரோவிடத்து பிறவினை விகுதி தொக்கும் வருமோ? 291. செய்வினையாவது யாது? 292. செயப்பாட்டு வினையாவது யாது? எவ்வௌ; முதனிலைகள் எவ்வௌ;வாறு செயப்பாட்டு வினைக்கு முதனிலைகளாக வரும்? 293. செயப்பாட்டு வினை ஒரோவிடத்துப் படு விகுதி தொக்கும் வருமோ?
வினையாலணையும் பெயர் விகாரப்படுதல்
294. வினையாலணையும் பெயர்கள், சிறுபான்மை இயல்பாகியும், பெரும்பாலும் விகாரப்பட்டும் வரும்.
உதாரணம். நடந்தானை, குழையானை, குழையினனை, எ-ம். நடந்தோன், குழையோன், நடந்தவன், குழையவன், எ-ம். நடந்தன, குழையன, எ-ம். நடந்தவை, குழையவை. எ-ம். வரும்.
தேர்வு வினா – 294. விணையாலணையும் பெயர்கள் எங்ஙனம் வரும்.
வினையியல் முற்றிற்று
3. இடையியல்
295. இடைச்சொல்லாவது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாததாய், அப்பெயரையும் வினையையுஞ் சார்ந்து வருஞ் சொல்லாம்.
தேர்வு வினா – 295. இடைச் வொல்லாவது யாது?
இடைச்சொற்களின் வகை
296. இடைச் சொல்: 1. வேற்றுமையுருபுகள், 2. விகுதியுருபுகள், 3. இடைநிலையுருபுகளும், 4. சாரியையுருபுகளும், 5. உவமவுருபுகளும், 6. பிறவாறு தத்தமக்கரிய பொருள்களை உணர்த்தி வருபவைகளும், 7. ஒலி, அச்சம், விரைவு இவற்றைக் குறிப்பால் உணர்த்தி வருபவைகளும், 8. இசை நிறையே பொருளாக நிற்பவைகளும் என, ஒன்பது வகைப்படும்.
இவைகளுள், வேற்றுமையுருபுகள் பெயரியலிலும், விகுதியுருபுகளும் இடைநிலையுருபுகளுஞ் சாரியையுருபுகளும் பதவியலிலுஞ் சொல்லப்பட்டன.
இசைநிறை என்பது, வேறுபொருள் உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து நிற்பது.
அசை நிலை என்பது, வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும் வினைச்வொல்லோடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்பது. அசைத்தல் – சார்த்துதல்.
தேர்வு வினாக்கள் – 296. இடைச் சொல் எத்தனை வகைப்படும்? இசை நிறையென்பது யாது? அசைநிலையென்பது யாது?
உவமைவுருபிடைச் சொற்கள்
297. உவமைவுருபிடைச் சொற்களாவன, போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏயப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய முதலியனவாம். இவைகளுள்ளே, போல எனபது முதலிய பதினொன்றும், இடைச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள. அவைகளிலே, போல், புரை, ஒ, உறழ, மான், கடு, இயை, ஏய், நேர், நிகர், பொரு என்னு முதனிலைகளே இடைச் வொற்கள்.
அன்ன, அனைய என்பவைகள், இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினைக் குறிப்புக்கள் அவைகளிலே, அ என்னு முதனிலையே இடைச்சொல் அன்ன என்பதில் னகரமெய் சாரியை: அனைய என்பதில் னகரமெய்யும் ஐகாரமும் சாரியை.
தேர்வு வினாக்கள் – 297. உவமவுருபிடைச் சொற்களாவன எவை? இவைகளுள்ளே, இடைச் சொல் அடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள் எவை? அவைகளிலே இடைச் சொற்கள் எவை? இடைச் சொல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினைக்குறிப்பக்கள் எவை? அவைகளிலே எது இடைச் சொல்?
தத்தம் பொருளை உணர்த்தும் இடைச்சொற்கள்
298. பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச்சொற்கள், ஏ, ஒ, உம் முதலியவைகளாம்.
299. ஏகாரவிடைச் சொல், தேற்றமும், வினாவும், எண்ணும் பிரிநிலையும், எதிர்மறையும் இசைநிறையும், ஈற்றசையுமாகிய ஏழுபொருளையுந் தரும்.
தேற்றம் உண்டேகடவுள், இங்கே உண்டென்பதற்கு ஐயமில்லை என்னுந் தெளிவுப்பொருளைத் தருதலாற் றேற்றம். வினா நீயே கொண்டாய். இங்கே நீயா கொண்டாய் என்னும் பொருளைத் தருமிடத்து வினா எண் நிலமே நீரே தீயே வளியே. இங்கே நிலமும் நீருந் தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றல் எண். பிரிநிலை அவருளிவனே கள்வன், இங்கே ஒரு கூட்டத்தி னின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற் பிரிநிலை. எதிர்மறை நானே கொண்டேன். இங்கே நான் கொள்கிலேன் என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை. இசைநிறை ’’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’ இங்கே வேறு பொருளின்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசை நிறை. ஈற்றசை ’’ என்றுமேத்தித் தொழுவோ மியாமே.’’ இங்கே வேறு பொருளின்றி இறுதியிலே சார்த்தப்பட்டு நிற்றலால் ஈற்றசை.
300. ஒகாரவிடைச் சொல், ஒழியிசையும், வினாவும், சிறப்பும், எதிhடமறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும், அசைநிலையுமாகிய எட்டுப் பொருளையந் தரும்.
சிறப்பு உயர்வுசிறப்பும் இழிவுசிறப்பும் என இரு வகைப்படும். உயர்வுசிறப்ப ஒரு பொருளினது இழிவைச் சிறப்பித்தல. இங்கே சிறப்பித்தல் என்றது, உயர்வேயாயினும் இழிவேயாயினும் இழிவேயாயினும் அதனது மிகுதியை விளக்குதல்.
(உதாரணம்)
ஒழியிசை படிக்கவோ வந்தாய். இங்கே படித்தற்கன்று விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத் தருவதால் ஒழியிசை வினா குற்றியோ மகனோ. இங்கே குற்றியா மகனா என வினாப் பொருளைத் தருதலால் வினா. உயர்வு சிறப்பு ஒஓ பெரியன். இங்கே ஒருவனது பெருமையாகிய உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுசிறப்பு இழிவு சிறப்பு ஒஓ கொடியன். இங்கே ஒருவனது கொடுமையாகிய இழிவின் மிகுதியை விளக்குதலால் இழிவு சிறப்பு எதிர்மறை அவனோ கொண்டான். இங்கே கொண்டிலன் என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை தெரிநிலை ஆணோ அதுவுமன்று. பெண்ணோ அதுவுமன்று இங்கே அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்றலாத் தெரிநிலை. கழிவு உறுதியுணராது கெட்டாரை ஒஓ தமக்கோருறுதி யுணராரோ எனன்னுமிடத்துக் கழிவிரக்கப்பொருளைத் தருதலாற் கழிவு. கழிவிரக்கம் – கழிந்ததற்கிரங்குதல் பிரிநிலை இவனோ கொண்டான். இங்கே பலருணின்றும் ஒருவணைப்பிரித்து நிற்குமிடத்துப் பிரிநிலை அசை நிலை காணிய வம்மினோ இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை.
301. உம் என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்.
எச்சம், இறந்தது தழீஇய எச்சமும், எதிரது தழீஇய எச்சமும் என இரு வகைப்படும்.
உதாரணம்.
எதிர்மறை களவு செய்யினும் பொய்கூறலை யொழிக. இங்கே களவு செய்யலாகாது என்னும் பொருளைத் தருதலால் எதிர்மறை உணர்வு சிறப்பு குறவருமருளுங்குன்றம். இங்கே குன்றியுனுயர்வைச் சிறப்பித்தலால் உயர்வுச் சிறப்பு. இழிவு சிறப்பு புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை. இங்கே உடம்பினிழிவைச் சிறப்பித்தலால் ஐயம். ஐயம் அவன் வெல்லினும் வெல்லும். இங்கே துணியாமையை உணர்தலால் ஐயம். எச்சம் சாத்தனும் வந்தான். இங்கே கொற்றன் வந்ததன்றி என்னும் பொருளைத்தந்தால் இறந்தது தழீஇயவெச்சம். இனிக் கொற்றனும் வருவான் என்னும் பொருளைத்தந்தால் எதிரது தழீஇயவெச்சம். முற்று எல்லாரும் வந்தார். இங்கே எஞ்சாப்பொருளைத் தருதலால் முற்று. எண் இராவும் பகலும். இங்கே எண்ணுதற்கண் வருதலால் எண்;. தெரிநிலை ஆணுமன்று, பெண்ணுமன்று. இங்கே இன்னதெனத் தெரிவித்து நிற்றலால் றெரிநிலை ஆக்கம் பாலுமாயிற்று. இங்கெ அதுவே மருதுமாயிற்று என்னும் பொருளைத்தருவதால் ஆக்கம்.
302.எதிர்மறை வினை அடுத்து வருமிடத்து முற்றும்மை எச்சவும்மையுமாம்.
உதாரணம். எல்லாரும் வந்திலர். அவர் பத்துங் கொடார்.
இங்கே, சிலர் வந்தார், சில கொடுப்பார் எனவும் பொருள் படதலால், எச்சவும்மையுமாயிற்று.
303. எச்சவும்மையாற் றழுவப்படம் பொரட் சொல்லில் உம்மையில்லையாயின், அச் சொல் எச்ச வும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படும்.
உதாரணம். சாத்தன் வந்தான்; கொற்றனும் வந்தான். இங்கே சாத்தன் எச்சவும்மையாற் றழுவப்படு பொருள்
304. என, என்று என்னும் இரண்டிடைச் சொற்களும் வினையும், பெயரும், எண்ணும், பண்பும், குறிப்பும், இசையும், உவமையும் ஆகிய ஏழபொருளிலும் வரும்.
உதாரணம். வினை மைந்தன் பிறந்தானெனத் தந்தையுவந்தான் இங்கே வினையோடியைந்தத. பெயர் அழுக்கா றெனவொரு பாவி. இங்கே பெயரோடியைந்நது. எண் நிலமென நீரெனத் தீயென வளியென வானெனப் பூதங்களைந்து, இங்கே என்ணோ டியைந்தது. பண்பு வெள்ளென விளர்த்தது. இங்கே பண்போ டியைந்தது. குறிப்பு பொள்ளென வாங்கே புறம் வேரார். இங்கே குறிப்போ டியைந்தது. இசை பொம்மென வண்டலம்பும் புரிகுழலை. இங்கே இசையோ டியைந்தது. உவமை புலி பாய்தெனப் பாய்ந்தான். இங்கே உவமையோ டியைந்தது.
என்று என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக்கொள்க
305. மேற்கூறிய ஏ, உம், என என்று என்னு நான்கிடைச் சொற்களன்றியும், என்றா, எனா, ஒடு, என்னும் இம்மூன்றிடைச் சொற்களும் என்னுப் பொருளில் வரும்.
உதாரணம். நிலலென்ற நீரென்றா தீயென்றா நிலலென்னா நீரெனாத் தீயெனா நிலனொடு நீரொடு தீயொடு
306. பெயர்ச் செவ்வெண்ணும், எண்ணிடைச் சொற்கள் ஏழனுள்ளும் ஏ, என்றா, எனா, என்னு மூன்றும், தொகைச் சொற் பெற்று வரும். உம், என்று, என, ஒடு, என்னு நான்கும், தொகைச் சொற் பெற்றும் பெறாதும் வரும்.
பெயர்ச் சொவ்வெண்ணாவது, பெயர்களினிடத்தே எண்ணிடைச் சொற்றொக்கு நிற்ப வருவது.
(உதாரணம்)
செவ்வெண் சாத்தன் கொற்ற னிருவரும் வந்தார். ஏகாரவெண் சாத்தனே கொற்றனே யிருவரும் வந்தார். என்றாவெண் சாத்தனென்றா கொற்றனென்றா விருவரும் வந்தார். எனாவெண் சாத்தனெனாக் கொற்றனெனா விருவரும் வந்தார். உம்மையென் சாத்தனுங் கொற்றனு மிருவரும் வந்தார். என்றெண் சாத்தனென்று கொற்றனெனன் றிருவருளர். எனவென் சாத்தனெனக் கொற்றனெனன விருவருளர். ஒடுவெண் சாத்தனொடு கொற்றனொ டிருவருளர். உம்மையெண் சாத்தனுங் கொற்றனும்; வந்தார். என்றெண் நிலனென்று நீரென்று தீயென்று காற்றென்றளவறு காயமென் றாகிய வுலகம். எனவெண் நிலவென நீரெனத் தீயெனக் காற்றென வளவறு காயமென் வாகிய உலகம். ஒடுவெண் நிலனொடு நீரொடு தீயொடு காற்றொ டவளறு காயமொடாகிய வுலகம்.
307. என்று, என, ஒடு என்னும் இம் மூன்றிடைச் சொற்களும், எண்ணப்படும் பொருட்டோறு நிற்றலேயன்றி ஒரிடத்து நிற்கவும் பெறும்; அப்படி நிற்பினும், பிரிந்து மற்றைப் பொருடோறும் பொருந்தும்.
உதாரணம்.
என்றெண் வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும். இங்கே என்றென்பது வினையென்று பகை யென்று என நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது. எனவெண் பகைபாவ மச்சம் பழியென நான்கு – மிகவாவா மில்லிறப்பான் கண். இங்கே என என்பது, பகையெனப் பாவமென அச்சமெனப் பழியென என்று நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது.. ஒடுவெண் பொருள் கருவி காலம் வினையிடனொ டைந்து – மிருடீர வெண்ணிச் செயல். இங்கே ஒடுவென்பது பொருளோடு கருவி யோடு காலத்தோடு வினையோடு இடனொடு என நின்றவிடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது.
308.வினையெச்சங்கள், எண்ணப்படுமிடத்து ஏற்பன வாகிய எண்ணிடைச் சொல் விரியப் பெறும், தொகாப்பெற்றும், ஒரிடத்து நின்று பிரிந்து கூடப் பெற்றும் வரும். அவை தொகைபெறுதலில்லை.
உதாரணம்.
உம்மையெண் – கற்றுங் கேட்டுங் கற்பனை கடந்தான் என்றென் – உண்ணவென் றுடுக்கவென்று வந்தான் எனவெண் – உண்ணவென வுடுக்கவென வந்தான் செவ்வென் – கற்றுக் கேட்டுக் கற்பனை கடந்தான் பிரிந்து கூடு மென் – உண்ண வுடுக்கவென்று வநதான்
309. அ, இ, உ, என்னு மூன்றிடைச் சொற்களும் சுட்டுப்பொருளையும், எ, ஆ, யா, என்னு மூன்றிடைச் சொற்களும் வினாப்பொருளையும் தரும்.
உதாரணம். அக்கொற்றான், இக் கொற்றான், உக்கொற்றான் எக்கொற்றன், கொற்றனா, யாவன்
310.கொல் என்னும் இடைச்சொல், ஐயமும் அசை நிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.
உதாரணம்.
ஐயம் இவ்வுருக் குற்றிகொன் மகன்கொல். இற்கே குற்றியோ மகனோ என்னும் பொருளைத் தருதலால் ஐயம். அசைநிலை கற்றதனா லாய பயனென்கொல். இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை
311. மற்று என்னும் இடைச்சொல், வினைமாற்றும், பிறிதும், அசைநிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.
இங்கே வினைமாற்றென்றது கருதியதற்கு இனமாகிய மறுதலை வினை; பிறிதென்றது கருதியதற்கு இனமாகிய பிறிது.
(உ-ம்)
வினைமுற்று மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது. இஙங்கே கருதிய வினையாவது நல்வினையை வினைந்தறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலை வினையாவது நல்வினையை விரையாதறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலைவினையாவது நல்வினையை விரையாதறிவாம் என்பது. மற்றென்றது, இங்கே விரையாதறிவாம் என்னும் மறுதலைவினையைத் தருதலால், வினைமாற்றுப் பொருளில் வந்தது. பிறிது ஊளிற் பெருவலியாவுள மற்றொன்று, இங்கே கருதியதாவது ஊழொன்றென்பது. அதற்கினமாகிய பிநிதாவது ஊழல்லதொன்றென்பது மற்றென்றது இங்கே ஊழல்லதொன்றென்னும் பொருளைத் தருதலால் பிறிதென்னும் பொருளில் வந்தது. அசை நிலை மற்றென்னையாள்க. இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தபப்பட்டு நிற்றலால் அசை நிலை
312. மன் என்னும் இடைச்சொல், ஒழியிசையும், ஆக்கமும், கழிவும், மிகுதியும், அசை நிலையுமாகிய ஐந்து பொருளையும் தலுஷரும்.
உதாரணம்.
ஒழியிசை கூரியதோர் வாண்மன் இங்கே இரும்பை அறத்துணித்தது என்னும் ஒழிந்த சொற்களைத் தருதலால் ஒழியிசை ஆக்கம் பண்டு காடுமன் இங்கே இன்று வயலாயிற்று என்னும் ஆக்கர் பொருளைத் தருதலால் ஆக்கம் கழிவு சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே. இங்கே இப்பொழுது அவன் இறந்ததனால் எமக்குக் கொடுத்தல் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் கழிவு. மிகுதி எந்தை யெமக்கருளுமன இங்கே மிகுதியும் அருளுவன் என்னும் பொருலைத் தருதலால் மிகுதி அசைநிலை அதுமற் கொண்கன்றேரே. இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு நிற்றலால் அசைநிலை.
313. கொன் என்னும் இடைச்சொல், அச்சமும், பயனிலையும், காலமும், பெர்மையும் ஆகிய நான்கு பொருளையுந் தரும்.
உதாரணம்.
அச்சம் கொன்வாளி இங்கே அஞ்சும் வாளி என்னும் பொருளைத் தருதலால் அச்சம். பயனின்மை கொன்னே கழிந்தன் றிளமை இங்கே பயனின்றிக் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் பயனின்மை. காலம் கொன்வரல் வடை இங்கே காதலர் நீங்கிய காலம் அறிந்து வருதலையுடைய வாடை என்னும் பொருளைத் தருதலாற் காலம் பெருமை கொன்னுர் துஞ்சினும் இங்கே பெரிய வூருறங்கினும் என்னும் பொருனைத் தருதலாற் பெருமை
314. அந்தில் என்னும் இடைச்சொல், ஆங்கென்னும் இடமும், அசைநிலையுமாகிய இரண்டு பொருளைத்தரும்.
உதாரணம்.
ஆங்கு வருமே – சேயிழை யந்திற் கொழுநற் காணிய இங்கே அவ்விடத்து வரும் என்னும் பொருளைத் தருதலால் ஆங்கு. அசை நிலை அந்திற் கழலினன் கச்சினன் இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு நிற்றலால் அசைநிலை.
315. மன்ற என்னும் இடைச் சொல், தெளிவுப்பொருளைத் தரும்.
உதாரணம்.
தெளிவு இரத.தலி னின்னாது மன்ற இங்கே தலையாக என்னும் பொருளைத் தருதலாற் றெளிவு.
316. அம்ம என்னும் இடைச் சொல், ஒன்று சொல்வேன் கௌ; என்னும் பொருளிலும், எரையசைப் பொருளிலும் வரும்.
உரையசை – கட்டுரைக்கண் வரும் அசை நிலை ஒன்று சொல்வேன் கேள் – அம்ம வாழி ’’தோழி“ உரையசை – ’’ அது மற்றம்ம’’
317. ஆங்க என்நும் இடைச் சொல், உரையசைப் பொருளில் வரும்.
உதாரணம். உரையசை – ’’ஆங்கத்திறனல்ல யாங்கழற’’
318. ஆர் என்னும் இடைச் சொல், உயர்தற் பொருளிலும், அசைநிலைப் பொருளிலும் வரும்.
உயர்த்தற்பொருட்டு வரும் போது ஒரமைச் சொல்லீற்றில் வரும். அசை நிலையாகும் போது உம்மை முன்னும், உம்மீற்று வினைமுன்னும் வரும்.
(உதாரணம்)
உயர்தற் பொருள் தொல்காப்பபியனார் வந்தார். தந்நையார் வந்தார். அசை நிலை பெயரினாகிய தொகையுமா ருளவே. இங்கே ஆர் அசை நிலையாக உம்மை முன் வந்தது. எல்லா வுயிரோடுஞ் செல்லுமார் முதலே. இங்கே ஆர் அசைநிலையாக உம்ம{ற்று வினைமுன் வந்தது.
319. தொறும், தோறும், என்னும் இவ்விரண்டிடைச் சொற்களும், இடப்பன்மைப் பொருளையுந் தொழிற் பயில்வுப் பொருளையுந் தரும்.
உதாரணம்.
இடப்பன்மை – சோழநாட்டி லூர்தொறுஞ் சிவாலயம் தொழிற்பயில்வு – படிக்குந் தொறு மறிவு வளறும்
தோறும் என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க.
320. இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.
உதாரணம்.
காலவெல்லை – இனி வருவேன் இடவெல்லை – இனியெம்மூர்
321. முன், பின் என்னும் இடைச் சொற்கள், காலப் பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வரும்.
உதாரணம்.
காலம் – முன் பிறந்தான். பின் பிறந்தான் இடம் – முன்னிருந்தான், பின்னிருந்தான்
முன். பின் என்பவைகள், முன்பு, பின்பு, எ-ம். முன்னை, பின்னை, எ-ம். முன்னர், பின்னர், எ-ம். விகாரப்பட்டும் வழங்கும்.
322. வளா, சும்மா என்னும் இடைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத் தரும்.
உதாரணம். வளா விருந்தான், சும்மா வந்தான்
323. ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னம் இடைச் சொற்கள் விகற்பப் பொருளைத் தரும்.
விகப்பமாவது, அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.
உதாரணம்.
ஆவது – தேவாரமாவது திருவாசகமாவது கொண்டு வா ஆதல் – சோறாதல் கூழாதல் கொடு ஆயினும் – வீட்டிலாயினுங் கோயிலிலாயினும் இருப்பேன் தான் – பொன்னைத்தான் வெள்ளியைத்தான் கொடுத்தானா
324. அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஒஓ, என்றாற் போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
325. சீ, சீசீ, சிச்சீ, சை என்றாற்போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
326. கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல வருவன, அச்சப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
327.ஆஅ, ஆகா, ஓஒ, ஓகோ, அம்மா அம்மம்மா, அச்சோ என்றாற் போல வருவன, அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
தேர்வு வினாக்கள் – 298. பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச் வொற்கள் எவை? 299. ஏகாரவிடைச் சொல் எப்பொருளைத் தரும்? 300. ஒகார விடைச்சொல் எப்பொருளைத் தரும்? சிறப்பு எத்தனை வகைப்படும்? உயர்வு சிறப்பாவது யாது? இழிவு சிறப்பாவது யாது? இங்கே சிறப்பித்தலென்றது என்னை? 301. உம் என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளைத் hரும்? எச்சம் எத்தனை வகைப்படும்? 302. ஒரு பொருளில் வரும் உம்மை மற்நொரு பொருளையுந் தருமோ? 303. எச்சவும்மையாற் றழுவப்படும் பொருட் சொல்லில் உம்மையில்லையாயின் அச்சொல் எச்சவும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படுமோ ஈற்றிலே சொல்லப்படுமோ? 304. என, என்று என்னும் இரண்டிடைச்சொற்களும் எவ்வௌ; பொருளைத் தரும்? 305. எண்ணுப் பொருளில் வரும் இடைச் சொற்கள் எவை? 306. எவ்வௌ; எண்கள் தொகைச் சொற் பெற்று வரும்? எவ்வௌ; வெண்கள் தொகைச் சொற் பெற்றும் பெறாதும் வரும்? பெயர்ச் செவ்வெண்ணாவது யாது? 307. எண்ணிடைச் சொற்கள் எணப்படும் பொருடோரும் நிற்கவே பெறுமோ? 308. வினை, எணப்படுமிடத்து, எண்ணிடைச் சொற் பெறாதோ? 309. அ, இ, உ, எ-ம். ஆ, யா, எ-ம். வரும் இடைச் சொற்கள் எவ்வௌ; பொருனைத் தரும்? 310. கொல் னெ;னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? 311. மற்று என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? இங்கே வினை மாற்றென்றது என்ன? பிறிதென்றது என்ன? 312. மன் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? 313. கொன் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? 314. அந்தில் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருளைத் தரும்? 315. மன்ற என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளைத் தரும்? 316. அம்ம என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளில் வரும்? 317. ஆங்க என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளில் வரும்? 318. இது உயர்தற் பொருட்டு வரும் போது எவ்விடத்து வரும்? அசைநிலையாகும் போது எவ்விடத்து வரும்? 319. தொறும், தோறும், என்னும் இரண்டிடைச் சொற்களும் எவ்வௌ; பொருளைத் தரும்? முன், பின், என்னம் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? 320. இனி என்னும் இடைச் சொல் எப்பொருளைத் தரும்? 322. வாளா, சும்மா என்னும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? 323. ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? விகற்பமாவது என்ன? 324. இரக்கப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? 325. இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 326. அச்சுப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 327. அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை?
குறிப்பின் வரும் இடைச்சொற்கள்
328. அம்மென், இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென, எ-ம். கடகடென, களகளென, திடுதிடென, நெறுநெறென, படபடென, எ-ம். வருவன, ஒலிக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்களாம்.
329. துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென, என்றாற் போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச்சொற்களாம்.
330. பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற் போல்வன, விரைவுக் குறிப்புப் பொருளைத்தரும்.
தேர்வு வினாக்கள் – 328. ஒலிக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 329. அச்சக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை? 330. விரைவுக் குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை?
இசைநிறை
331. ஒடு, தெய்ய என்பன, இசை நிறையிடைச் சொற்களாம்.
தேர்வு வினா – இசைநிறைச் சொற்கள் எவை?
அசைநிலை
332. மா என்பது, வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொல்லாம்.
333. மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் பத்தும், முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசையிடைச் சொற்களாம்.
334. யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், போலும், அன்று, ஆம், தாம், தான், இசின், ஐ, ஆல், என், என்ப என்னும் இருபத்தொன்றும், மூவிடத்துக்கும் வரும் அசைநிலையிடைச் சொற்களாம்.
தேர்வு வினாக்கள் – 332. வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொல் எது? 333. முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைநிலையிடைச் சொற்கள் எவை? 334. மூவிடத்துக்கும் வரும் அசையிடைச் சொற்கள் எவை?
இடையியல் முற்றிற்று
4. உரியியல்
335. உரிச்சொல்லாவது, பொருட்கு உரிமை பூண்டு நிற்கும் பண்பை உணர்த்துஞ் சொல்லாம்.
336. உலகத்துப் பொருள், உயிர்ப் பொருளும், உயிரல் பொருளும் என, இரு வகைப்படும்.
337. இப்பொருள்களுக்குரிய பண்பு, குணப்பண்புந் தொழிற்பண்பும் என இரு வகைப்படும்.
338. உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகளாவன: அறிவு, அச்சம், மானம், பொறுமை, மயக்கம், வருப்பு, வெறுப்பு, இரக்கம், நன்மை, தீமை முதலியனவாம்.
339. உயிர்ப்பொருள்களின் றொழில் பண்புகளாவன: உண்ணல், உடுத்தல், உறங்கள், அணிதல், தொழுதல், நடத்தல், ஆக்கல், காத்தல், அழித்தல் முதலியனவாம்.
340. உயிரல் பொருள்களின் குணப்பண்புகளாவன: பல்வகை வடிவங்களும், இரு வகைநாற்றங்களும், ஐவகை நிறங்களும், அறு வகைசுவைகளும், எண்வகைப் பரிசங்களுமாம்.
பல்வகை வடிவங்களாவன: வட்டம், இருகொணம், முக்கோணம், சதுர முதலியன.
இருவகை நாற்றங்களாவன: நறு நாற்றம், தீநாற்றம் என்பவைகளாம்.
ஐவகை நிறங்களாவன: வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என்பவைகளாம்.
அறு வகைசுவைகளாவன: கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு என்பவைகளாம்.
எண்வகைப் பரிசங்களாவன: வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, இழு மெனல், சருச்சரை என்பவைகளாம்.
341. உயிர்ப்பொருள், உயிரல் பொருள் என்னும் இரு வகைப் பொருள்களுக்கும் உரிய தொழிற்பண்புகளாவன: தோன்றல், மறைதல், வளர்தல், சுரங்கள், நீங்கள், அடைதல், நடுங்கள், ஒலித்தல் முதலியவைகளாம்.
342. மேற்கூறிய குணப்பண்பும், உண், உறங்கு முதலிய முதனிலையளவிற் பெறப்படுந் தொழிற்பண்பும், ஆகிய பொருட் பண்பை உணர்த்துஞ் சொற்கள் வினைச் சொற்கள் எனப்படும்.
343. இவ்வுரிச் சொற்கள், ஒரு குணத்தையும் பல குணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும்.
344. சால், உறு, தவ, நனி, கூர், கழி, என்பன, மிகுதி என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாம்.
உதாரணம். சால் – தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் உறு – உறுயுனறந் துலகூட்டி தவ – ஈயாது வீயு முயிர் தவப் பலவே நனி – வந்து நனி வருந்தினை வாழிய நெஞ்சே கூர் – துணிகூ ரெவ்வமொடு கழி – கழிகண் ணோட்டம்
345. செழுமை என்பது வளனுங் கொழுப்பும் என்னும் இரு குணத்தை உணர்த்தும் உரிச்சொல்லாம்.
உதாரணம். வளம் – செழும் பல் குன்றம் கொழுப்பு – செழுந் தடிதின்ற செந்நாய்
இவ்வாறே ஒரு குணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும் உரிச்சொற்களெல்லாவற்றையும் நிகண்டு வாயிலாக அறிந்து கொள்க.
தேர்வு வினாக்கள் – 335. உரிச் வொல்லாவது யாது? 336. உலகத்துப் பொருள் எத்தனை வகைப்படும்? 337. இப்பொருள்களுக்குரிய பண்பு எத்தனை வகைப்படும்? 338. உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகள் எவை? 339. உயிர்ப் பொருள்களின் றொலிற்பண்புகள் எவை? 340. உயிரல் பொருள்களின் குணப்பண்புகள் எவை? 341. உயிர்ப்பொருள், உயிரல் பொருள் என்னம் இரு வகைப் பொருள்களுக்குமுரிய தொழிற்பண்புகள் எவை? 342. தொழிற் சொல்லை மேலே வினைச் சொல்லென்றும் இங்கே உரிச்சொல்லென்றுஞ் சொல்லியது என்னை? 343. இவ்வுரிச் சொற்கள் பொருட் குணங்களை எவ்வாறு உணர்த்தி வரும்? 345. பல குணங்களை உணர்த்தும் உரிச் சொல் எது?
உரியியல் முற்றிற்று.
சொல்லதிகாரம் முற்றுப் பெற்றது.