இலக்கணம் கட்டுரை

இலக்கணச்சுருக்கம் – தொடர்மொழியதிகாரம்

மூன்றாவது

தொடர்மொழியதிகாரம்

(1) தொகை நிலைத் தொடரியல்

346. தொடர் மொழியாவது, ஒன்றோடொன்று பொருள் படத் தொடர்ந்து நிற்கும் இரண்டு முதலிய சொற்களினது கூட்டமாம்.

347. சொல்லோடு சொற்றொடருந் தொடர்ச்சி, தொகைநிலைத் தொடர், தொகா நிலைத் தொடர் என இரு வகைப்படும்.

348. தொகைநிலைத் தொடராவது, வெற்றுமையுருபு முதலிய உருபுகள் நடுவே கெட்டு நிற்ப, இரண்டு முதலிய சொற்கள் ஒரு சொற்றன்மைப்பாட்டுத் தொடர்வதாம்.

ஒரு சொற்றன்மைப்பட்டுதலாவது பிளவு படாது நிற்றல்.

தேர்வு வினாக்கள் – 346. தொடர் மொழியாவது யாது? 347. சொல்லோடு சொற்றொடருந் தொடர்ச்சி எத்தனை வகைப்படும்? 348. தொகைநிலைத் தொடராவது யாது?

தொகைநிலைத் தொடர்ப்பாகுபாடு

349. அத்தொகைநிலைத் தொடர் வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என, அறு வகைப்படும்.

தேர்வு வினா – 349. தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

வேற்றுமைத் தொகை

350. வேற்றுமைத் தொகையாவது, ஐ, முதலிய ஆறு வேற்றுமையுருபும் இடையிலே கெட்டு நிற்கப், பெயரோடு பெயரும் பெயரோடு பெயரும் பெயரோடு வினை வினைக்குறிப்புப் பெயர்களுந் தொடர்வதாம்.

உதாரணம். நிலங்கடந்தவன் – இரண்டாம் வேற்றுமைத்தொகை தலைவணங்கினவன் – மூன்றாம்; வேற்றுமைத்தொகை சாத்தன்மகன் – நான்காம் வேற்றுமைத்தொகை ஊர்நீங்கினவன் – ஐந்தாம் வேற்றுமைத்தொகை சாத்தன்கை – ஆறாம் வேற்றுமைத்தொகை குன்றக்கூகை – ஏழாம் வேற்றுமைத்தொகை

கையையுடைய களிறு என்பது கைக்களிறு எனவும், பொன்னாற் செய்தகுடம் என்பது பொற்குடம் எனவும், வருவன, உருபும் பொருளும் ஒருங்கு கெட்ட வேற்றுமைத் தொகை எனக் கொள்க.

351. ஐயுருபுங் கண்ணுருபும், தொடர் மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்டு நிற்கும்.

உதாரணம். கடந்தானிலம் – ஐயுருபு தொக்கது இருந்தான்மாடத்து – கண்ணுருபு தொக்கது

இவ்வாறு வருவனவெல்லாம், உருபு கெட்டு நிற்கினும் ஒரு சொற்றொன்மைப் படாது பிளவுபட்டு நிற்றலினாலே, தொகாநிலைத் தொடரெனவே கொள்ளப்படும்.

352. வேற்றுமையுருபுகள், விரிந்து நிற்குமிடத்து எப்பொருள் படுமோ அப்பொருள் படுமிடத்தே, தொக்கு நிற்கப் பெறும்; அப்பொருள் படாவிடத்தே தொக்கு நிற்கப் பெறவாம்.

உதாரணம். சாத்தனை யடித்தான் என ஐயுருபு விரிந்து நிற்குமிடத்துச் செயப்படு பொருள் படுதல் போலச் சாத்தானடித்தான் என ஐயுருபு தொக்கு நிற்குமிடத்து அப்பொருள் படாமையால், இங்கே ஐ யுருபு தொக்கு நிற்கப்பெறா தென்றறிக.

சாத்தனொடு வந்தான் என ஒடுவுருபு விரிந்து நிற்குமிடத்து உடனிகழ்ச்சிப் பொருள் படுதல்போலச் சாத்தன் வந்தான் எனத் தொக்கு நிற்குமிடத்து அப்பொருள் படாமையால், இங்கே ஒடுவுருபு தொக்கு நிற்கப் பெறாதென்றறிக.

தேர்வவு வினாக்கள் – 350. வேற்றுமைத் தொகையாவது யாது? 351. தொடர்மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்டு நிற்கும் உருபுகள் உளவோ? 352. வேற்றுமையுருபுகள் எவ்விடத்துந் தொகாப்பெறுமோ?

வினைத் தொகை

353. வினைத் தொகையாவது, பெயரெச்சத்தின் விகுதியுங் காலங்காட்டும் இடைநிலையுங் கெட்டு நிற்க, அதன் முதனிலையோடு பெயர்ச் சொற் றொடர்வதாம்.

உதாரணம்.

நேற்றுக் கொல் களிறு முன் விடு கணை இறந்தகால வினைத்தொகை இன்று கொல் களிறு இப்பொழுது விடு கணை நிகழ்கால வினைத்தொகை நாளைக் கொல் களிறு பின் விடு கணை எதிர்கால வினைத்தொகை

இவை, விரியுமிடத்துக் கொன்ற, கொல்கின்ற, கொல்லும், எ-ம். விட்ட, விடுகின்ற, விடும். எ-ம். விரியும் எனக் கொள்க.

கொள்களிறு, விடுகணை என்றாற் போல் வன, முக்காலமும் பற்றி வரின், முக்காலவினைத் தொகை எனப்படும்.

வருபுனல், தருகடர், நடந்திடு குதிரை என வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத் தொகை வரும்.

தேர்வு வினாக்கள் – 353. வினைத் தொகையாவது யாது? கொல்களிறு முதலியன, முக்காலமும் பற்றி வரின், எவ்வாறு பெயர் பெறும்? வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத் தொகை வருமோ?

பண்புத் தொகை

354. பண்புத் தொகையாவது, ஆகிய என்னும் உருபு கெட்டு நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப்பெயர் தொடர்வதாம்.

பண்பு, வண்ணம் ,வடிவு, அளவு, சுவை, முதலியனவாம்.

ஆகிய என்பது, பண்புக்கும், பண்பிக்கும், உளதாகிய ஒற்றுமையை விளக்குவதோரிடைச் சொல்.

(உதாரணம்)

செந்தாமரை கருங்குதிரை வண்ணப் பண்புத்தொகை வட்டக்கல் சதுரப்பலகை வடிவுப் பண்புத்தொகை ஒருபொருள் முக்குணம் அளவுப் பண்புத்தொகை துவர்க்காய் இன்சொல் சுவைப் பண்புத்தொகை

இவை, விரியுமிடத்துச் செம்மையாகிய தாமரை, வட்டமாகிய கல், ஒன்றாகிய பொருள், துவர்ப்பாகிய காய் என விரியும்.

இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாவது, ஆகிய என்னும் பண்புருபு கெட்டு நிற்கப், பொதுப்பெயரோடு பொதுப் பெயராயினும் ஒரு பொருண்மேல் வந்து தொடர்வதாம்.

உதாரணம்.

ஆயன் சாத்தன் – பொதுப்பெயரோடு சிறப்புப் பெயர் சாரைப்பாம்பு – சிறப்புப் பெயரோடு பொதுப்பெயர்

இவை விரியுமிடத்து, ஆயனாகிய சாத்தன், சாரையாகிய பாம்பு என விரியும். ஆயன் சாரை என்பன பண்பல்லவாயினும் பண்பு தொக்க தொகைபோல விசேடிப்பதும் விசேடிக்கப்படுவது மாகிய இயைபுபற்றி , இவை போல்வனவும் பண்புத்தொகை எனப்பட்டன.

தேர்வு வினாக்கள் – 354. பண்புத் தொகையாவது யாது? பண்பென்பன எவை? ஆகிய என்பது என்ன சொல்? இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாவது யாது?

உவமைத் தொகை

355. உவமைத் தொகையாவது, போல முதலிய உவமவுருபு கெட்டு நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொற்றொடர்வதாம்.

இவ்வுவமை, வினை, பயன், மெய், உரு, என்பன பற்றி வரும்.

(உதாரணம்)

புலிக்கொற்றன் – வினையுவமைத் தொகை மழைக்கை – பயகுவமைத் தொகை துடியிடை – மெய்யுவமைத் தொகை பவளவாய் – உருபுவமைத் தொகை

இவை விரியுமிடத்துப், புலிபோலுங் கொற்றன், மழை போலுங் கை, துடி போலு மிடை, பவளம் போலும்வாய் என விரியும்.

தேர்வு வினாக்கள் – 355. உவமைத்தொகையாவது யாது? இவ்வுவமை எவை பற்றி வரும்?

உம்மைத் தொகை

356. உம்மைத் தொகையாவது, எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகையளவைகளாற் பொருள்களை அளக்குமிடத்து, எண்ணும்மை இடையிலும் இறுதியிலுங் கெட்டு நிற்கப், பெயரோடு பெயர் தொடர்வதாம்.

உதாரணம்.

இராப்பகல் ஒன்றேகால் எண்ணலளவையும்மைத் தொகை கழஞ்சேகால் தொடியேகஃசு எடுத்தலளவையும்மைத் தொகை கலனேதுணி நாழியாழாக்கு முகத்தலளவையும்மைத் தொகை சாணரை சாணங்குலம் நீட்டலளவையும்மைத் தொகை

இவை விரியுமிடத்து, இராவும் பகலும், ஒன்றுங் காலும், கழஞ்சுங் காலும், காலனுந் தூணியும், சாணுமரையும் என விரியும்.

357. உயர்திணை யொருமைப்பாலில் வரும் உம்மைத் தொகைகள், ரகரமெய்யுங் கள்விகுதியுமாகிய பலர்பால் விகுதியுடையனவாய் வரும்.

உதாரணம். சேரசோழ பாண்டியர் தேவன்றேவிகள்

அஃறிணையொருமைப் பாலிலும் பொதுத் திணை விகுதி பெறாதும், பெற்றம் வரும்.

உதாரணம். நன்மை தீமை நன்மை தீமைகள் தந்தை தாய் தந்தை தாய்கள்

தேர்வு வினாக்கள் – 356. உம்மைத் தொகையாவது யாது? 357. உயர்திணையொருமையில் வரும் உம்மைத் தொகைகள், ஒருமை விகுதியோடு நிற்குமோ பரர்பால் விகுதி பெறுமோ? அஃறிணை யொருமைப் பாலிலும் பொதுத்திணையொருமைப் பாலிலும் வரும் உம்மைத்தொகைகள் பன்மைவிகுதி பெற்ற வரவோ?

அன்மொழித் தொகை

358. அன்மொழித் தொiயாவது, வேற்றுமைத் தொகை முதலிய ஐந்து தொகைநிலைத் தொடருந் தத்தம் பொருள்படுமலவிற் றொகாது தத்தமக்குப் புறத்தே தாமல்லாத பிற மொழிப் பொருள் படத், தொகுவதாம்.

உதாரணம்.

1 பூங்குழல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலை கலத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பூவையுடைய குழலினையுடையாள் என விரியும் போற்கொடி என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை நிலைக்கலத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னாலாகிய தொடியினையுடையாள் என விரியும் கவியிலக்கணம் என்பது நான்காம் வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கவிக்கிலக்கணஞ் சொல்லப்பட்ட நூல் என விரியும். பொற்றாலி என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னாகிய தாலியினையுவடயாள் என விரியும். கிள்ளிக்குடி என்பது ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கிள்ளியினது குடியிருக்குமூர் என விரியும். கீழ்வயிற்றுக்கழலை என்பது ஏழாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கீழ் வயிற்றின்கண் எழுந்த கழலைபோல்வான் என விரியும். 2 தாழ்குழல் என்பது வினைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தாழ்ந்த குழலினையுடையாள் என விரியும். 3 கருங்குழல் என்பது பண்புத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கருமையாகிய குழலினை யுடையாள் என விரியும். 4 தேன்மொழி என்பது உவமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தேன் போலு மொழியினை யுடையாள் என விரியும். 5 உயிர்மெய் என்பது உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது உயிருமெய்யுங் கூடிப்பிறந்த எழுத்து என விரியும்.

தேர்வு வினா – 358. அன்மொழித் தொiயாவது யாது?

தொகைநிலைத் தொடர் மொழிகள் பலபொருள் படுதல்

359. தொகைநிலைத் தொடர் மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, ஒரு பொருளைத் தருவன வன்றி, இரண்டு முதல் ஏழெல்லையாகிய பல பொருள்களைத் தருவனவும் உளவாம்.

உதாரணம். (1) தெய்வ வணக்கம் – இரண்டு பொருள் 1. தெய்வத்தை வணங்கும் வணக்கம், 2. தெய்வத்திற்கு வணங்கும் வணக்கம்.

(2) தற்சேர்ந்தார் – மூன்று பொருள் 1. தன்னைச் சேர்ந்தார், 2. தன்னோடு சேர்ந்தார், 3. தன்கட் சேர்ந்தார்.

(3) சொல்லிணக்கம் – நான்கு பொருள் 1. சொல்லினதிலக்கணம், 2. சொற்கிலக்கிணம், 3. சொல்லின் கணிலக்கணம் 4. சொல்லினதிலக்கணஞ் சொன்ன நூல்.

(4) பொன்மணி – ஐந்து பொருள் 1. பொன்னாலாகிய மணி, 2. பொன்னாகிய மணி, 3. பொன்னின் கண் மணி, 4. பொன்னோடு சேர்ந்த மணி, 5. பொன்னு மணியும்.

(5) மர வேலி – ஆறு பொருள் 1. மரத்தைக் காக்கும் வேலி, 2. மரத்திற்கு வேலி, 3. மரத்தினது வேலி, 4. மரத்தின புறத்து வேலி, 5. மரத்தாலாகிய வேலி, 6. மரமாகிய வேலி.

(6) சொற்பொருள் – ஏழு பொருள் 1. சொல்லாலறியப்படும் பொருள், 2. வொல்லினது பொருள், 3. சொற்குப் பொருள், 4. சொல்லின் கட் பொருள், 5. சொல்லும் பொருளும், 6. வொல்லாகிய பொருள், 7. சொல்லானது பொருள்.

தேர்வு வினாக்கள் – 359. தொகை நிலைத் தொடர்மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, அவைகளுள், ஒரு பொருளைத் தருவனவன்றிப் பல பொருள்களைத் தருவனவும் உளவோ?

தொகைநிலைத் தொடர்மொழிகளிற் பொருள் சிறக்கும் இடங்கள்

360. தொகைநிலைத் தொடர்மொழிகளுள்ளே, வேற்றுமைத் தொகையிலும், பண்புத்தொகையிலும், முன் மொழியிலாயினும், பின் மொழியிலாயினும் பொருள் சிறந்து நிற்கும்; வினைத் தொiயிலும், உவமைத் தொகையிலும், முன் மொழியிற் பொருள் சிறந்து நிற்கும்; உம்மைத் தொகையில் அனைத்து மொழியிலும் பொருள் சிறந்து நிற்கும்; அன்மொழித் தொகையில் இரு மொழியுமல்லாத புற மொழியிற் பொருள் சிறந்து நிற்கும்.

(உதாரணம்)

வேங்கைப்பூ, வெண்டாமரை என வரும் வேற்றுமைத் தொகை பண்புத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால், அம் முன் மொழிகளிற் பொருள் சிறந்தன.

கண்ணிமை, செஞ்ஞாயிறு என வரும் வேற்றுமைத் தொகை பண்புத் தொகைகளிலே, முன் மொழிகள் இனம் விலகுதலின்றி நிற்றலால், பின் மொழிகளிற் பொருள் சிறந்தன.

ஆடு பாம்பு, வேற்கண் என வரும் வினைத் தொகை எவமைத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால், அம்முன் மொழிகளிற் பொருள் சிறந்தன.

இராப்பகல், சேரசோழ பாண்டியர் என வரும் உம்மைத் தொகைகளிலே, அனைத்து மொழிகளும் இனம் விலக்கலும் விலாக்காமையுமின்றி நிற்றலால், அவ்வனைத்து மொழிகளிலும் பொருள் சிறந்தன.

பொற்றொடி, உயிர்மெய் என வரும் அன்மொழித் தொகைகளிலே, வொல்லுவொனுடைய கருத்து இவ்விரு மொழிப் பொருண் மேலதகாது, இவ்விரு மொழியுமல்லாத உடையாண் முதலிய புறமொழிப் பொருண்மேலேதாதலால், அப்புற மொழிகளிற் பொருள் சிறந்தன.

தேர்வு வினா – 368. தொகைநிலைத் தொடர்மொழிகளுள், எந்தெந்தத் தொடரில் எந்தெந்த மொழியிற் பொருள் சிறந்து விளங்கும்?

தொகைநிலைத் தொடரியல் முற்றிற்று.

2. தொகாநிலைத் தொடரியல்

361. தொகநிலைத் தொடராவது, இடையே வேற்றுமையுருபு முதலிய உருபுகள் கெடாமலும்., ஒரு சொற்றன்மைப்படாமலும், சொற்கள் பிளவு படத் தொடர்வதாம்.

தேர்வு வினா – தொகாநிலைத் அதாடராவது யாது?

தொகா நிலைத் தொடர்ப்பாகுபாடு

362. அத்தெபாக நிலைத்தொடர், எழுவாய்த் தொடர், விளித் தொடர், வேற்றுமைத் தொகாநிலைத் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற் றொடர், அடக்குத் தொடர் என ஒன்பது வகைப்படும்.

உதாரணம்.

1 சாத்தன் வந்தான் எழுவாய்த் தொடர் 2 சாத்தா வா விளித்தொடர் 3 குடத்தை வனைந்தான் வாளால் வெட்டினான் இரப்போர்க்கீந்தான் மலையினிழிந்தான் சாத்தனது கை மணியின்க ணொளி வேற்றுமைத் தொகா நிலைத் தொடர் 4 உண்டான் சாத்தன் குழையன் கொற்றன் வினைமுற்றுத் தொடர் 5 உண்ட சாத்தன் காரிய சாத்தன் பெயரெச்சத் தொடர் 6 உண்டு வந்தான் இன்றி வந்தான் வினையெச்சத் தொடர் 7 மற்றொன்று இடைச் சொற் தொடர் 8 கடிக்கமலம் உரிச்சொற் தொடர் 9 பாம்பு பாம்பு அடுக்குத் தொடர்

363. வேற்றுமைத் தொi, விரிந்த விடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடராம். வினைத் தொகை, விரிந்த விடத்து பெயரெச்சத் தொகாநிலைத் தொடராம். பண்புத்தொகையும், உண்மைத் தொகையும் விரிந்த விடத்து முன்னது இடைச்சொற்றொடரும், பின்னது இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினையெச்சச் தொடருமாம். அன்மொழித் தொகை விரிந்தாவிடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் முதலேற்பனவாம்.

தேர்வு வினாக்கள் – 362. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? 363. வேற்றுமைத் தொகை விரிந்த விடத்து என்ன நிலைத் தொடராம்? வினைத் தொகை விரிந்த, விரிந்த விடத்து என்ன தொகாநிலைத் தொடராம்? பண்புத் தொகையும், உம்மைத் தொகையும் விரிந்த விடத்து என்ன தொடராம்? உவமைத் தொகை, விரிந்த விடத்து என்ன தொடராம்? அன்மொழித் தொகை, விரிந்த விடத்து என்ன தொடராம்?

எழுவாய்த் தொடர்க்கும் வினைமுற்றுத் தொடர்க்கும் வேற்றுமை

364. எழுவாய்க்கு வினைமுற்றைப் வினைமுற்றைப் பயிலையாகக் கொள்ளுமிடத்து, வினைமுதல் விசேடணமாக வினைமுக்கிய பொருளாம்.

உதாரணம். சாத்தன் வந்தான்: இங்கே சாத்தன் இது அசய்தான் என வினைமுதல் விசேடணமாக வினை முக்கியப் பொருளாயிற்று.

வந்தான் சாத்தன்: இங்கே சாத்தன் இது அசய்தான் என வினைமுதல் விசேடணமாக வினை முக்கியப் பொருளாயிற்று.

தேர்வு வினா – 364. சாத்தான் வந்தான் என்னம் எழுவாய்த் தொடர்க்கும், வந்தான் சாத்தன் என்னும் வினைமுற்றுத் தொடர்க்கும் வேற்றுமை என்ன?

இடைப்பிற வரல்

365. வேற்றுமையுருபுகளும், வினைமுற்றுக்களும், பெயரெச்சங்களும், வினையெச்சங்களுங் கொண்டு முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே, வருமொழியோடு இயைத்தக்க பிற செற்கள் வரவும் பெறும்.

உதாரணம். 1 சாத்தன் (வயிரார) உண்டான் அறத்தை (அழகுஅபறச்) செய்தான் வாளான் (மாய) வெட்டினான் தேவர்க்கு (செல்வம் வேண்டிச்) சிறப்பெடுத்தான். மலையினின்று (உருண்டு) வீழ்ந்தான் சாத்தனது (இத்தடக்கை) யானை ஊர்க்கண் (உயர்ந்த வொளி) மாடம் சாத்தா (விரைந்து) ஒடி வா வேற்றுமையுருபு 2 வந்தான் (அவ்வூர்க்குப்போன) சாத்தன் வினைமுற்று 3 வந்த (வடகாசி) மன்னன் பெயரெச்சம் 4 வந்து (சாத்தனின்றவனூர்க்குப்) போயினான் வினையெச்சம்

உண்டு விருந்தோடு வந்தான் என்னுமிடத்து, இடையில் வந்த விருந்தென்னும் சொல் வருமொழியோடு இயைதலன்றி, விருந்தோடுண்டு வந்தான் என நிலைமொழியோடும் இயைதலால், இது போல்வன இடையில் வரப்பெறாவென்றறிக.

தேர்வு வினாக்கள் – 365. வேற்றுமையுருபுகளும், வினைமுற்றுக்களும், பெயரெச்சங்களும், வினையெச்சங்களுங் கொண்டு முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே, பிற சொற்கள் வருதல் உண்டோ?

முடிக்குஞ் சொன்னிற்கு மிடம்.

366. ஆறனுபொழிந்த வேற்றுமையுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்கவருங் சொற்கள், அவைகளுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டு.

உதாரணம்.

1 வுந்தான் சாத்தன் வெட்டினான் மரத்தை வெட்டினான் வாளால் கொடுத்தானந்தணர்க்கு நிங்கினானூரின் சென்றான் சாத்தன் கண் வா சாத்தா வேற்றுமையுருபு 2 சாத்தன் போயினான் வினைமுற்று 3 போயினான் வந்து வினையெச்சம்

தேர்வு வினா – 366. வேற்றுமையுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்கவருங் சொற்கள், அவைகளுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டோ?

தொகாநிலைத் தொடரியல் முற்றிற்று.

3. ஒழியியல்

தொடர்மொழிப் பாகுபாடு

367. தொடர் மொழி,முற்றுத் தொடர் மொழியும் எச்சத்தொடர் மொழியும் என இருவகைப்படும்.

368. முற்றுத் தொடர் மொழியாவது, எழுவாயுஞ் செயப்படுபொருண் முதலிவைகளோடு கூடாதாயினுங் கூடியாயினும் முடிபு பெற்று நிற்குந் தொடர் மொழியாம். வடநூலார் இம்முற்றுத் தொடர் மொழியை வாக்கிய மென்பார்.

உ-ம் சர்தன் வந்தான் சாத்தன் சோற்றையுண்டான்

369. எச்சத் தொடர்மொழியாவது, முடிவு பெறாது அம்முற்றுத் தொடர் மொழிக்கு உறுப்பாக வருந் தொடர் மொழியாம்.

உதாரணம். யானைக் கோடு யானையாவது கோடு

தேர்வு வினாக்கள் – 367. தொடர்மொழி எத்தனை வகைப்படும்? 368. முற்றுத் தொடர் மொழியாவது யாது? 369. எச்சத் தொடர்மொழியாவது யாது?

வாக்கியப் பொருளுணர்வுக்குக் காரணம்

370. வாக்கியத்தின் பொருளை உணர்த்தற்குக் காரணம், அவாய்நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி என்னு நான்குமாம.

371. அவாய் நிலையாவது, ஒரு சொற் றனக்கு எச்சொல் இல்லாவிடின் வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாதோ அச்சொல்லை அவாவி நிற்றலாம்.

உதாரணம். ஆவைக்கொணா என்னுமிடத்து, ஆவை என்பது மாத்திரஞ் சொல்லிக் கொணாவெண்பது சொல்லாவிடினும், கொணாவெண்பதுமாத்திரஞ் சொல்லி ஆவை என்பது சொல்லாவிடினும், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாதல அறிக.

372. தகுதியாவது, பொருட்குத் தடையுணர்ச்சி இல்லாமையாம்.

உதாரணம். நெருப்பானனை என்னுமிடத்து நனைலின் நெருப்புக் கருவியன்று என்கிற உணர்ச்சி தடையுணர்ச்சி. அவ்வுணர்ச்சி இருத்தலால், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாது.

நீலானனை என்னுமிடத்து நனைலின் நீர் கருவியாதலாற் றடையுணர்ச்சி யில்லை: ஆகவே தகுதி காரணமக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

373. அண்மையாது, காலம் இடையின்றியும் வாக்கயப் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத சொல் இடையீடின்றியுஞ் சொல்லப்படுதலாம்.

உதாரணம். ஆவைக்கொணா என்பது யாமத்துக்கு ஒவ்வொரு சொல்லாக சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. ஒரு தொடராக விரையச் சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

மலையுண்டானெருப்புடையது தேவதத்தன் என்னுமிடத்து, மலை நெருப்புடையது என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத உண்டாக் என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக நின்றது: உண்டான் றேவதத்தன் என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத நெருப்புடையது என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக நின்றது. இப்படி இடையிட்டுச் சொல்லாது, மலை நெருப்புடையது: உண்டான் றேவதத்தன் எனச் சொல்லின, அண்மை காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

374. கருத்துணர்ச்சியாவது, ஒரு சொல் எப்பொருளைத் தரல் வேண்டும் என்னுங் கருத்தாற் சொல்லப்பட்டதோ அக்கருத்தைச் சமயவிசேடத்தால் அறிதலாம்.

உதாரணம். மாவைக் கொண்டுவா என்னுமிடத்து மாவெண்பது பல பொருளொரு சொல்லாததால் வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. இது பசித்தோனாற் சொல்லப்படிற் றின்னுமாவெனவும், கவசம் பூண்டு நிற்பானாற் சொல்லப்படிற் குதிரை யெனவும், சொல்லுவான் கருத்துச் சமயவிசேடத்தால் அறியப்படும். அப்போது அக்கருத்துணர்ச்சி காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

தேர்வு வினாக்கள் – 370. வாக்கியத்தின் பொருளை உணர்த்தற் காரணம் என்ன? 371. அவாய்நிலையாவது யாது? 372. தகுதியாவது யாது? 373. அண்மையாவது யாது? 374. கருத்துணர்ச்சியாவது யாது?

உருபும் வினையும் அடுக்கி முடிதல்

375. வேற்றுமையுருபுகள் விரிந்தாயினும் மறைந்தாயினும் ஒன் பல வடுக்கி வரினும், கலந்து பல வடுக்கி வரினும், வினைமுற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பரவுந் தம்மை முடித்தற் குறிய ஒரு சொல்லைக் கொண்டு முடியும்.

உதாரணம்.

சாத்தனையுங் கொற்றனையும் வாழ்த்தினான். சாத்தனுக்குங் கொற்றனுக்குந் தந்தை. அருளற முடையன். உருபுகள் விரிந்தும் மறைந்தும் ஒன்று பல வடுக்கல் அரசன் பகைவனை வாளால் வெட்டினான். அரசன் வாள் கைக் கொண்டான். உருபுகள் விரிந்தும் மறைந்தும் கலந்து பல வடுக்கல் ஆடினான் பாடினான் சாத்தன் இளையண் வினைமுற்று ஒன்று பல வடுக்கல் கற்ற கேட்ட பெரியோர் நெடிய கரிய மனிதன் பெயரெச்சம் ஒன்று பல வடுக்கல் கற்றுக் கேட்டறிந்தார் விருப்பின்றி வெறுப்பின்றியிருந்தார். வினையெச்சம் ஒன்று பல வடுக்கல்

376. வேற்றுமையுருபு, ஒன்று பல வடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றைப் பெயர்களெல்லா வற்றினுந் தொக்கு வருதலு முண்டு.

உதாரணம். பொருளின் பங்களைப் பெற்றான் சேசோழபாண்டியர்க்கு நண்பன் தந்தை hகயி னீங்கினான்

377. ஒரு தொடரினுள் ஒரு பொருளுக்கே பல பெயர் வருதலும், அப்பெயர் தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவாம். வரினும், பொருலொன்றே யாதலால் எண்ணும்மை பெறுதலில்லை.

உதாரணம். சங்கரனை யென்குணனைச் சம்புவைநால் வேதனொரு கங்கரனை நெஞ்சே கருது.

தேர்வு வினாக்கள் – 375. வேற்றுமையுருபுகள் ஒன்று பல வடுக்கி வரினும், கலந்து பலவடுக்கி வரினும், வினைமுற்றம் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பலவும் எப்படி முடியும்? 376. வேற்றுமையுருபு, ஒன்று பலவடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றப் பெயர்களௌ;லாவற்றிலுந் தொக்க வருதலும் உண்டோ? 377. ஒரு தொடரினுள்ளே ஒரு பொருளுக்கே பல பெயர் வருதலும், அப் பெயர்தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவோ?

திணைபாலிட முடிபு

378. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது, திணைபால் இடங்களின் மாறு படாது இயைந்து நிற்றல் வேண்டும். இயைந்து நில்லாதாயின் வழுவாம்.

உதாரணம்.

நம்பி வந்தான் நங்கை வந்தான் அந்தனர் வந்தார் நான்வந்தேன் நீ வந்தாய் வழாநிழை நம்பி வந்தது நங்கை வந்தான் அவன்வந்தான் தியைவழு பால்வழு இடவழு

379. இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கை எழுவாய் அடுக்கி வரின், பலர்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும். இரணடு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், பலர்பாலின்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும்.

உதாரணம். நம்பியு நங்கையும் வந்தார் யானையுங் குதிரையும் வந்தன

380. முன்னிலையெழுவாயோடு படர்க்கை எழுவாய் அடுக்கிவரின், முன்னிலைப் பன்மைப்பயனிலை கொண்டு முடியும். அது உளப்பாட்டு முன்னிலைப்பன்மை எனப்படும்.

உதாரணம். நீயு மவனும் போயினீர்.

381. தன்மையெழுவாயோடு முன்னிலையெழுவாயேனும் படர்க்கை யெழுவாயுமேனும் இவ்விரண்டெழுவாயு மேனும் அடுக்கி வரின், தன்மைப்பன்மைப் பயனிலை கொண்டு முடியும். இது உளப்பாட்டுத் தன்மைப்பன்மை எனப்படும்.

உதாரணம். யானு நீயும் போயினோம் யானு மவனும் போயினோம் யானு நீயு மவனும் போயினோம்.

382. திணையைந் தோன்றிய விடத்து உருபு வடிவு என்னும் பொதுச் சொற்களாலும், உயர்திணைப் பாலையந் தோன்றியவிடத்து அத்திணைப் பண்மைச் சொல்லாலும், அஃறிணைப்பாலையந் தோன்றியவிடத்துப் பால்பகாவஃறிணைச் சொல்லாலுங் கூறல் வேண்டும்.

உதாரணம்.

1 குற்றியோ மனுடனோ அங்கு தோன்றுகிற உரு? …. திணையையம் 2 ஆண்மகனோ பெண்மகளோ அங்கே தோன்றுகிறவர்? … உயர்திணைப்பாலையம் 3 ஒன்றோ பலவோ அங்கு வந்த குதிரை? … அஃறிணைப்பாலையம்

383. இரு திணையில் உருதிணை துணிந்தவிடத்தும், இருபாலில் ஒரு பால் துணிந்தவிடத்தும், மற்றொன்றல்லாத தன்மையைத் துணிந்த பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும். இது சுரங்கள் சொல்லல் என்னும் அழகைப் பயப்பித்தலாற் சிறப்புடையதாம்.

உதாரணம்.

1 (குற்றியெனின்) (மனுடனெனின்) மனுடனன்று குற்றியல்லன் எ-ம். எ-ம். 2 (ஆண்மகனெனின்) (பெண்மகனெனின்) பெண்மகளல்லன் ஆண்மகனல்லன் எ-ம். எ-ம். 3 (ஒற்றெனின்) (பலவெனின்) பலவன்று ஒன்றல்ல எ-ம். எ-ம். கூறுக.

தேர்வு வினாக்கள் – 378. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது எப்படி இயைந்து நிற்றல் வேண்டும்? 379. இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்? இரண்டு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கிவரின், எப்பயனிலை கொண்டு முடியும்? 380. முன்னிலையெழுவாயோடு படர்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்? 381. தன்மையெழுவாயோடு, முன்னிலையெழுவாயேனும், படர்க்கையெழுவாயேனும் இவ்விரண்டெழுவாயேனும் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்? 382. திணையையத்தையும் பாலையத்தையும் எந்தெந்த சொல்லாற் கூறல் வேண்டும்? 383. இருதிணையில் ஒரு திணை துணிந்த விடத்தும், மற்றொன்றல்லாத தன்மையை எப்பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும்?

திணைபாலிடப் பொதுமை நீங்குநெறி

384. திணை பாலிடங்கட்குப் பொதுவாகிய பெயர் வினைகட்கு முன்னும் பின்னும் வருஞ் சிறப்புப் பெயருஞ் சிறப்பு விணையும், அவற்றின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை யுணர்த்தும்.

உதாரணம். சாத்தனிநன்: சாத்தனிது,. எ-ம். சாத்தன் வந்தான்: சாத்தன் வந்தது, எ-ம். பெயர்திணைப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி உரு திணையை யுணர்த்தின.

ஒருவரென்னையர்: ஒருவரென்றாயர். எ-ம். மரம் வளர்ந்தது: மரம் வளர்ந்தன,எ-ம். பெயர்ப்பாற் பொதுமைப் பின் வந்த சிறப்புப் பெயரும் வினையும் நீக்கி ஒரு பாலையுணர்த்தின.

யாமெல்லாம் வருவோம்: நீயிரெல்லாம் போமின்: அவரெல்லாமிருந்தார் எனப் பெயரிடப் பொதுமையை முன்வந்த சிறப்புப் பெயரும் பின் வந்த சிறப்பு வினையும் நீக்கி ஒவ்வோரிடத்தை யுணர்த்தின.

வாழ்க அவன், அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ, நீர் என வினைத்திணை பாலிடப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி ஒரு திணையையும் பாலையும் இடத்தையும் உணர்த்தின.

385. பெயர் வினையிரண்டும் உயர்திணை யாண் பெணிரண்டற்கும் பொதுவாகவேணும், அஃறிணை யாண்பெணிரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒருபாற்கே யுரிய தொழின் முதலிய குறிப்பினால், அப்பாலானது துணியப்படும்.

உதாரணம். ஆயிரமக்கள் போர் செய்யப் போயினார் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் போயினரென்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், போர் செயலென்னுந் nhழிற்குறிப்பினால் ஆண்பால் துணியப்பட்டது.

பெருந்தேவி மகவீன்ற கட்டிலினருகே நால்வர் மக்களுளர் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் உளர் என்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், ஈனுதலென்னுந் தொழிற்குறிப்பினாற் பெண்பால் துணியப்பட்டது.

இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், உழவென்னுந் தொழிற்குறிப்பினால் எருது துணியப்பட்டது.

இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், கறத்தலென்னுந் தொழிற்குறிப்பினால் பெண்பசு துணியப்பட்டது.

தேர்வு வினாக்கள் – 384. திணை பால் இடங்கட்குப் பொதுவாகிய பெயர் விணைகளின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை உணர்த்துவன யாவை? 385. பெயர் வினை இரண்டும் உயர்திணை யாண், பெண் இரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒன்று எதனாலே துணியப்படும்?

உயர்திணை தொடர்ந்த அஃறிணை

386. உயர்திணையெழுவாயோடு கிழமைப்பொருள் படத் தொடர்ந்து எழுவாயாக நிற்கும் அஃறினைப் பொருளாதியாறும், உயர்திணை விணையான் முடியும்.

உ-ம் நம்பி பொன்பெரியன் நம்பி நாடு பெரியன் நம்பி வாழ்நாள் பெரியன் நம்பி மூக்குக் கூரியன் நம்பி குடிமை நல்லன் நம்பி நடை கடியன் இங்கேஉயர்திணையெழுவாயின் பயனிலையோடு அஃறிணை யெழுவாயும் முடிந்தறிக

மாடு கோடு கூரிது என்னுமிடத்தும், மாடு என்னும் அஃறிணையெழுவாயின் பயனிலையாகிய கூரிது என்னும் வினையோடு அதன்கிழமைப் பொருள்பட எழுவாயாக நின்ற கோடு என்பது முடிதறிக.

தேர்வு வினா – 386. உயர்திணை யெழுவாயோடு கிழமைப் பொருள் படத் தொடர்ந்து, எழுவாயாக நிற்கும் அஃறிணைப் பொருளாதியாறும் எத்திணை வினையான் முடியும்?

கலந்த திணை பால்களுக்கு ஒரு முடிபு

387. இரு திணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்து, ஆண், பெண், என்னும் இருபாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வலுமிடத்தும், சிறப்பினாலும், ஒரு முடிபைப் பெறும்.

உதாரணம். ’’திங்களுஞ் சான்றோரு மொப்பர்’’ என் இருதிணைப் பொருள்கள் கலந்துசிறப்பினால் உயர்திணைமுடிபைப் பெற்றன. சான்நோர் திங்கள் போல மறுத் தாங்கமாட்டாமை இங்கே சிறப்பு.

’’பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தோர் குழவியெனு மிவர்கள்’’ என இரு திணைப் பொருள்கள் கலந்து மிகுதியால் உயர்திணை முடிபைப் பெற்றன. அஃறிணைப் பொருள் ஒன்றேயாகா உயர்திணைப் பொருள் ஐந்தால் இங்கே மிகுதி.

’’மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா’’ என இருதிணைப்பொருள்கள் கலந்து இழிவினால் அஃறிணை முடிபைப் பெற்றன. மூர்க்க குணமுடை இங்கே இழிவு.

தேவதத்தன் மனைவியுந் தானும் வந்தான் எனப்பாற் பொருள்கள் கலந்து சிறப்பினால் ஆண்பான் முடிவிபைப் பெற்றன. பெண்ணினும் ஆண் உயர்ந்தமை இங்கே சிறப்பு.

தேர்வு வினா- 387. இருதிணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும், ஆண் பெண் என்னும் இரு பாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும் அவை பலவும் எப்படி முடியும்?

திணை பால் வழுவமைதி

388. மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு என்னும் இவைகளுள் ஒரு காரணத்தினால், ஒரு திணைப்பொருள் வேறுதிணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் றேறுபாற் சொல்லாகவுஞ் சொல்லப்படும்.

உதாரணம்.

ஒராவினை என்னமை வந்தாள் என்றவிடத்து, உவப்பினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.

பசுங்கிளியார் தூது சென்றார் என்ற விடத்து, உயர்வினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.

’’தம்பொருளெம்ப தம்மக்கள்’’ என்ற விடத்துச் சிறப்பினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

பயனில்லாத சொற்களைச் சொல்லும் ஒருவனை இந்நாய் குரைக்கின்றது என்றவிடத்து, கோபத்தினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

நாங்களுடமை என்றவிடத்து இழிவினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

தன்புதல்வனை என்னம்மை வந்தாள் என்றவிடத்து, மகிழ்ச்சியினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

ஒருவனை அவர் வந்தார் என்ற விடத்து, உயர்வினால் ஒருமைப்பால் பன்மைப்பாலாகச் சொல்லப்பட்டது.

தேவன் மூவுலகிற்குந் தாய் என்றவிடத்துச் சிறப்பினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

‘எனைத்துணைய ராயினு மென்னாந் திணைத்துணையுந் தேரான் பிறனில் புகல்’ என்றவிடத்துக் போடத்தினாற் பன்மைப்பால் ஒரமைப்பாலாக சொல்லப்பட்டது.

பெண்வழிச் செல்வானை இவன் பெண் என்ற விடத்து இழிவினால் ஆண்பால் பெண்பாலகச் சொல்லப்பட்டது.

தேர்வு வினா – 388. ஒரு திணைப்பொருள் வேறு திணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் வெறுபாற் பொருளாகவுஞ் சொல்லப்படுமோ?

ஒருமை பன்மை மயக்கம்

389. ஒருமைப்பாலிற் பன்மைச்சொல்லையும், பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையும் ஒரோவிடத்துச் தழுவிச் சொல்லுதலும் உண்டு.

உதாரணம். வெயிலெல்லா மறைத்தது மேகம். என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைப்பாலில் எலலாமென்னும் பன்மைச் சொற்சேர்த்து சொல்லப்பட்டது.

இரண்டு கண்ணும் சிவந்நது என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைச் சொற்சேர்த்து ச் சொல்லப்பட்டது.

தேர்வு வினா – 389. ஒருமைப்பாலிற் பன்மைச் சொல்லையும் பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையுஞ் சொல்லதல் உண்டோ?

இடவழுவமைதி

390. ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் செல்லுதலும் உண்டு.

உதாரணம்.

சாத்தன்றா யிவை செய்வேனோ என்னுமடத்து, யானெனச் சொல்லல் வேண்டுந் தன்மையிலே சாத்தன்றாயெனப் படர்க்கைச் சொற் சேர்த்து சொல்லப்பட்டது. சாத்தன்றாயாகிய யான் என்பது பொருள்.

’’எம்பியை யீங்கப் பெற்றே னென்னெனக் கரிய தென்றான்.’’ என்னுமிடத்து, நின்னையெனச் சொல்லல்வேண்டு முன்னிலையிலே எம்பியையெனப் படர்க்கைச் சொற் சோர்த்துச் சொல்லப்பட்டது. எம்பியாகிய உன்னை என்பது பொருள்.

யானோ வவனோ யாரிது செய்தார்; நீயோ வவனோ யாரிது செய்தார்; நீயோ யானோ யாரிது செய்தார்; நீயோ வவனோ யானோ யாரிது செய்தார்;

என ஒரிடத்திற் பிறவிடம் விரவி வருதலும் உண்டெனக் கொள்க.

தேர்வு வினா – 390. ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் செல்லுதலும் உண்டோ?

காலவழுவமைதி

391. முக்காலத்தினுந் தந்தொழில் இடையறாமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொருள்களின் வினையை நிகழ்காலத்தாற் சொல்லத் தகும்.

உதாரணம். மலை நிற்கின்றது தெய்வமிருக்கின்றது கடவு ளளிக்கின்றார்

மலைக்கு நிற்றலும், தெய்வத்திற்கு இருத்தலும், கடவுட்கு அளித்தலும் முக்காலத்திலும் உள்ளனவாதல் காண்க.

392. விரைவு, மிகுதி, தெளிவு, என்னும் இம்மூன்று காரணங்களாலும், இக்காரணங்கள் இல்லாமலும், ஒருகாலம் வேறொருகாலமாகச் சொல்லவும் படும்.

உதாரணம். உண்பதற்கிருப்பவனும் உண்கின்றவனும் விரைவிலே தம்மை உடன்கொண்டு போக அழைப்பவனுக்கு, உண்டேன்

உண்டேன்; வந்தேன் வந்தேன் என்ற விடத்து, விரைவு பற்றி எதிர்காலமும் நஜகழ்காலமும், இறந்தகாலமாகச் சொல்லப்பட்டன.

களவு செய்ய நினைப்போன் கையறுப்புண்டான் என்ற விடத்துக், களவு செய்யிற் கையறுப்புண்ணல் மிகுதியாதலால், எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. கையறுப்புண்ணல் தவறிறுந் தவறுமாதலால் மிகுதிணெனப்பட்டது.

எறும்பு முட்டைகொண்டு திட்டையேறின் மழைபெய்தது என்ற விடத்து, எறும்பு முட்டையெடுத்து மேட்டிலேறினால் மழைபெய்தல் தெளிவாதலால், nதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.

யாம் பண்டு விளையாடுவ திச்சோலை; யாம் பண்டு விளையாடுகிறதிச் சோலை இவைகளில், அக்காரணங்கள் இல்லாமலே, இறந்தகாலம், எதிர்காலம் நிகழ்காலம், சொல்லப்பட்டன.

தேர்வு வினாக்கள் – 391. முக்காலத்தினுந் தந்தொழில் இடையறமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொரள்களின் வினையை எக்காலத்தாற் சொல்லத் தகும்? 392. ஒரு காலம் வேறொரு காலமாகச் சொல்லப்படுமோ?

வினைமுதலல்லனவற்றை வினைமுதல் போலச் சொல்லல்

393. செயப்படுபொருளையும், கருவியையும், இடத்தையும், செயலையும், காலத்தையும், வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டு.

உதாரணம். இம்மாடியான் கொண்டது – செயப்படுபொருள் இவ்வெழுத்தாணியானெழுதியது – கருவி இவ்வீடியானிருநடதது – இடம் இத்தொழில் யான் செய்தது – செயல் இந்நாள் யான் பிறந்தது – காலம்

தேர்வு வினா – 393. செயப்படுபொருளையுங் கருவியையும் இடத்தையும் செயலையுங் காலத்தையும் வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டோ?

அடைமொழி

394. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறும், இனமுள்ள பொருள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும், அடைமொழிகளாய் வரும்.

அடையினால் அடுக்கப்பட்டது அடைகொளி எனப்படும். அடையெனினும் விசேடணமெனினும் பொருந்தும். அடைகொளியெனினும் விசேடியமெனினும் பொருந்தும்.

(உதாரணம்)

இனமுள்ளன நெய்க்குடம் குளநெல் கார்த்திகை விளக்கு பூமரம் செந்தாமரை ஆடுபாம்பு இனமில்லா உப்பளம் ஊர்மன்று நாளரும்பு இலைமரம் செம்போத்து தோய்தயிர் பொருள் இடம் காலம் சினை குணம் தொழில்

தேர்வு வினா – 394. பொருளாதியாறும், இனமுள்ள பொரள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும் அடைமொழிகளாய் வருமோ?

சிறப்புப் பெயர் இயற்பெயர்

395. ஒரு காரணம் பற்றிவருஞ் சிறப்புப்பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற் பெயரினாலும், ஒரு பொருளைச் சொல்லமிடத்துச், சிறப்புப் பெயரை முன்வைத்து இயற்பெயரைப் பின் வைத்தல் சிறப்பாம்.

உதாரணம். சோழியன் கொற்றன் பாண்டியன் குழசேகரன் தமிழ்ப்புலவன் கம்பன்

இனிக் கொற்றன் சோழியன் என இயற்பெயர் முன்னும் வருதல் காண்க. இன்னும் இயற்பெயர் முன் வருமிடத்து, வைத்தியநாத நாவலன் கச்சியப்பப்புலவன் என இறுதி விகாரமாக வருதலுங் காண்க.

தேர்வு வினாக்கள் – 395. ஒரு காரணம் பற்றிவருஞ் சிறப்புப் பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற்பெணரினாலும் ஒரு பொருளைச் சொல்லமிடத்துச், எதை முன்வைத்து எதைப் பின் வைத்தல் சிறப்பாம்? இயற்பெயர் சிறப்புப் பெயருக்கு முன் வருதல் இல்லையோ? இயற்பெயர் முன் வருமிடத்து, அதனிறுதி விகாரமாக வருதலும் உண்டோ?

வினாவிடை

396. வினாவாவது, அறியக்கருதியதை வெளிப்படுத்துவதாம். விடையாவது, வினாவாகிய பொருளை அறிவிப்பதாம்.

வினா, உசா, சுடா, என்பன ஒரு பொருட்சொற்கள். விடை, செப்பு, உத்தரம், இறை என்பன ஒரு பொருட்சொற்கள்.

397. வினாவையும் விடையையும் வழுவாமற் காத்தல் வேண்டும்.

உதாரணம். உயிரெத்தன்மைத்து வினாவழாநிலை உயிருணர்தற்றன்மைத்து விடைவழாநிலை கறக்கின்ற வெருமை nhலோ சினையோ? வினாவழு தில்லைக்கு வழியாது? எனின் சிவப்புக்காளை முப்பது பணம் என்பது விடைவழு

398. வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல், என அறுவகைப்படும்.

உதாரணம்.

1 ஆசிரியரே இப்பாட்டிற்கு பொருள் யாது? அறியாமை வினா 2 குற்றியோ மகனோ? ஐயவினா 3 மாணாக்கனே, இப்பாட்டிற்குப் பொருள் யாது? அறிவினா 4 பயறுண்டோ செட்டியாரே? கொளல்வினா 5 தம்பிக்காடையில்லையா? கொடைவினா 6 தம்பீ யுண்டாயா? ஏவல்வினா

399. விடை, சுட்டு, எதிர்மறை உடன்பாடு, ஏவல், வினாவெதிர்வினாதல், உற்றுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டு வகைப்படும். இவற்றுள் முன்னைய மூன்றுஞ் செவ்வனிறை: பின்னைய ஐந்தும் பயப்பன.

(உதாரணம்)

வினா விடை

1 தில்லைக்கு வழி யாது? இது சுட்டு 2 இது செய்யவா? செய்யேன் எதிர்மறை 3 இது செய்யவா? செய்வேன் உடன்பாடு 4 இது செய்யவா? நீ செய் ஏவல் 5 இது செய்யவா? செய்யேனோ வினாவெதிர் வினாதல் 6 இது செய்யவா? உடம்பு நொந்தது உற்றுரைத்தல் 7 இது செய்யவா? உடம்பு நோம் உறுவது கூறல் 8 இது செய்யவா? மற்றையது செய்வேன் இனமொழி

தேர்வு வினாக்கள் – 396. வினாவாவது யாது? விடையாவது யாது? 397. வினாவையும் விடையையும் எவ்வாறு காத்தல் வேண்டும்? 398. வினா எத்தனை வகைப்படும்? 399. விடை எத்தனை வகைப்படும்?

சுட்டு

400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அப்படர்க்கைப் பெயர் முடிக்குஞ் சொற் கொள்ளுமிடத்து அதற்குப்பின் வரும்: முடிக்குஞ் சொற் கொள்ளாவிடத்து அதற்றுப் பின்னு முன்னும் வரும்.

உதாரணம். (1) நம்பி சந்தான்; அவனுக்குச் சோறிடுக எருது வந்த் அதற்குப் புல்லிடுக (2) நம்பியவன்; அவனம்பி

தேர்வு வினா – 400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அச் சுட்டுப்பெயர் அப்படர்க்கைப் பெயர்க்கு எவ்விடத்து வரும்?

மரபு

401. மரபாவது, உலக வலக்கிலுஞ் செய்யுள் வழக்கிலுஞ் எப்பொருட்கு எப்பெயர் வழங்கி வருமோ, அப்பொருளை அச் கொல்லாற் கூறுதலாம்.

உதாரணம். ஆணைமேய்ப்பான் பாகன் குதிரைக்குட்டி ஆடுமேய்ப்பான் இடையன் பசுக்கன்று ஆனையிலண்டம் கீரிப்பிள்ளை ஆட்டுப்புழுக்கை கோழிக்குஞ்சு யானைக்குட்டி தென்னம்பிள்ளை யானைக்கன்று மாங்கன்று

தேர்வு வினா – 401. மரபாவது யாது?

முற்றும்மை

402. இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, முற்றும்மைபெற்று வரும்.

உதாரணம்.

(1) தமழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் (2) ஒளிமுன்னிருள் எங்குமில்லை

தேர்வு வினா – 402. இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, எவ்வாறு வரும்?

ஒரு பொருட் பன்மொழி

403. சொல்லின்பந் தோன்றுதற் பொருட்டு ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டு.

உதாரணம். நாகிளங்கமுகு மீமிசைஞாயிறு புனிற்றிளங்கன்று உயர்ந்தோங்கு பெரு வரை

தேர்வு வினா – 403. ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டோ?

அடுக்குச் சொல்

404.ஒரு சொல், விரைவு, வெகுளி, உவகை, அச்சம், துன்பம் முதலிய காரணம்பற்றி இரண்டு முதல் மூன்றளவு அடுக்கிக் கூறப்படும்.

உதாரணம்.

1 உண்டேனுண்டேன்; போ போ போ விரைவு 2 எய்யெய்; எறி எறி எறி கோபம் 3 வருக வருக் பொலிக பொலிக பொலிக உவகை 4 பாம்பு பகம்பு; தீத் தீத் தீ அச்சம் 5 உய்யேனுய்யேன்; வாழேன் வாழேன் வாழேன் துன்பம்

அசைநிலைக்கு இரண்டளவும், இசைறிறைக்கு இரண்டு முதல் நான்களவும் அடுக்கிக் கூறப்படும்.

உதாரணம்.

1 அன்றேயன்றே அசைநிலை 2 ஏயெயம்பன் மொழிந்தனன் யாயே நல்குமே நல்குமே நல்குமே நாமகள் பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ இசைநிலை

சலசல, கலகல, என்பவை முதலியன பிரியாது இரட்டைச் சொல்லாகவே நின்று பொருள் படுதலால், அடுக்கிய சொல்லல்ல.

தேர்வு வினாக்கள் – 404. அடுக்குத் தொடருள், ஒரு சொல்லே அடுக்கிக் கூறப்படும் போது, எவ்வௌ; விடத்தில் எத்தனை எத்தனை அடுக்கிக் கூறப்படும்? இக்காரணங்களின்றி ஒரு சொல் இங்ஙனம் அடுக்கிக் கூறப்படுதல் இல்லையோ? சலசல, கலகல என்பவை முதலியன அடுக்கிய சொல்லல்லவோ?

சொல்லெச்சம்

405. சொல்லெச்சமாவது, வாக்கியத்தில் ஒரு சொல் எஞ்சி நின்று வருவித் துரைக்கப்படுவதாம்.

உதாரணம். பிறவிப் பொருங்கட னீந்நுவர் நீத்தா ரிறைவ னடிசேரா தார்

இதிலே சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் எனச் சேர்ந்தார் என்னும் ஒரு சொல் வருவித்துரைக்கப்படுதலாற் சொல்லெச்சம்.

தேர்வு வினா – 405. சொல்லெச்சமாவது யாது?

இசையெச்சம்

406. இசையெச்சமாவது, வாக்கியத்தில் அவ்வவ் இடத்திற்கேற்ப் இரண்டு முதலிய பல சொற்கள் எஞ்சி என்று வருவித்துரைக்கப்படுவதாம்.

உதாரணம். ’’அந்தாமரையன்னமே நின்னையானகன்றாற்றுவனோ’’

இதிலே என்னுயிரினுஞ் சிறந்த நின்னை எனப் பல சொற்கள் வருவித்துரைக்கப்படுதலால் இசையெச்சம்.

தேர்வு வினா – 406. இசையெச்சமாவது யாது?

ஒழியியல் முற்றிற்று

தொடர்மொழியதிகாரம் முற்றுப் பெற்றது.

பகுபத முடிபு

பெயர்ப்பகுபதங்கள்

அவன் என்னுஞ் சுட்டுப்பொருட் பெயர்ப்பகுபதம். ஆ என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, இடையில் வகர மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

தமன் என்னுங் கிளைப்பொருட் பெயர்ப் பகுபதம், தாம் என்னம் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதி குறுகி, இறுகி மகர மெய்யின் ஆமல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

பொன்னன் என்னும் பொருட்பெயர்ப் பகுபதம் பொன் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று பகுதியீற்று னகரமெய் இரட்டித்து இரட்டித்த னகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

நிலத்தன் என்னும் இடப்பெயர்ப் பகுபதம், நிலம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே அத்துச்சாரியையும் பெற்று பகுதியீற்று மகரமெய்யுஞ் சாரியையின் முதல் அகரமும் ஈற்று உகரமுங் கெட்டு, உகரங்கெட நின்ற மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேஙி முடிந்தது.

பிரபவன் என்னங் காலப்பெயர்ப்பகுபதம், பிரபவம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால், விகுதியும் பெற்று, பகுதியீந்நு அம் குறைந்து வகர மெய்யீராக நின்று, அவ்வகர மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

திணிதொளன் என்னுஞ் சினைப்பெயர்ப் பகுபதம்,திணிதோன் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று ளகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

நல்லன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், நன்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மைவிகுதி கெட்ட நல்ல என நின்று, லகர மெய் இரட்டித்து, இரட்டித்த லகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

கரியன் என்னுங் குணப்பெயர் பகுபதம், கருமை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண் பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மை விகுதி கெட்டு, இடை உகரம் இகரமாகத் திரிந்து, யகரவுடம்படுமெய் தோன்றி, அம் மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

செய்யன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், செம்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மை விகுதி கெட்டு, இடை நின்ற மகர மெய் யகரமெய்யாய் திரிந்து, அது இரட்டித்து, இரட்டித்த மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

ஓதுவான் என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், ஓது என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே வகரவிடைநிலையும் பெற்று, இடைநிலை மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது. ஓதுலுடையவன் என்பது பொருள்.

w ஓதுவான் என்பது எதிர்காலத் தெரிநிலைமுற்றுப் பகுபதமாயின்: ஓது பகுதி: ஆன் விகுதி: வகரமெய் எதிர்காலவிடைநிலை. எதிர்காலவினையெச்சப்பகுபதமாயின், ஓது பகுதி: வான் எதிர்கால வினையெச்ச விகுதி.

நன்மை என்னும் பண்புப் பெயர் பகுபதம், நல் என்னும் பண்புப் பெயர் விகுதியும் பெற்று, பகுதியீற்று லகரமெய் னகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது.

வருதல் என்னுந் தொழிற்பெயர் பகுபதம், வா என்னும் பகுதியும், தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் பெற்று, பகுதி முதல் குறுகி ரகரவுகரம் விரிந்து முடிந்தது.

உடுக்கை என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், உடு என்னும் பகுதியும், கை என்னும் தொழிற்பெயர் விகுதியும் பெற்று, விகுதிக் ககரமிகுந்து, முடிந்தது.

உடுக்கை என்னுஞ் செயற்படு பொருட் பெயர்ப்பகுபதம், உடு என்னும் பகுதியும், ஐ என்னுஞ் செயற்படு பொருள் விகுதியும், அவைகளுக்கிடையே குச்சாரியையும் பெற்று, சாரியைக் ககரம் மிகுந்து. சாரியையீற்றுகரங்கெட்டு, உகரங்கெட நின்ற ககரவொற்றின் மேல் விகுதி ஐகாரவுயிரேறி, முடிந்தது.

எழுத்து என்னுஞ் செயற்படு பொருட் பெயர்ப்பகுபதம், எழுது என்னும் பகுதியோடு ஐ என்னுஞ் செயற்படுபொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டுக், கெட்டவிடத்துத் தகரமிரட்டித்து முடிந்தது.

ஊண் என்னுஞ் செயற்படு பொருட் பெயர்ப்பகுபதம், உண் என்னும் பகுதியோடு ஐ என்னுஞ் செயற்படு பொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு, பகுதி முதல் நீண்டு, முடிந்தது.

காய் என்னும் வினைமுதற்பொருட் பெயர்ப்பகுபதம், காய் என்னும் பகுதியோடு இ என்னும் வினை முதற்பொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு முடிந்தது.

வினைமுற்றுப் பகுபதங்கள்

உண்டான் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் டகரவிடை நிலையும் பெற்று, இடைநிலை டகரமெய்யின் மேல் விகுதி, ஆகாரவுயிரேறி முடிந்தது.

உண்கின்றான் என்னும் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும் பெற்று, இடைநிலையீற்று உகலங்கெட்டு, உகரங்கெட நின்ற றகரமெய்யின் மேல் விகுதி, ஆகாரவுயிரேறி முடிந்தது.

உண்ணுவான் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும்வகரவிடைநிலையும், பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே உகரச்சாரியையும் பெற்று, பகுதியீற்று ணகரமெய் இரட்டித்து, இரட்டித்த ணகரமெய்யின் மேற் சாரியைஉகரமேறி, இடைநிலை வகரமெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி, முடிந்தது.

நடந்தனன் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டுந் தகரவிடை நிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரமிகுந்து, மிகுந்த தகரவல்லொற்று

• உண்ணுவான் என்பது எதிர்கால வினையெச்சப் பகுபதமாயின், உண் பகுதி: உ சாரியை: வான் எதிர்கால வினையெச்ச விகுதி.

மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர மெய்யின்மேற் சாரியை அகரவுயிரேறிச், சாரியை யீற்று னகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

வருகின்றனன் என்னும் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றப் பகுபதம், வா என்னும் பகுதியும் அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கிடையே கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன் சாரியையும் பெற்று, பகுதி முதல் குறுகி, ரகரவுகரம் விரிந்து, இடைநிலையீற்று உகரங்கெட்டு, உகரங்கெட நின்ற றகரவொற்றின் மேற் சாரியை அகரவுயிரேறிச், சாரியையீற்று னகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

நடப்பான் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னம் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும் பகர விடைநிலையும் பெற்று, இடைநிலைப் பகரம் மிகுந்து, இடைநிலைப் பகரமெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

நடந்தது என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், து என்னும் ஒன்றன் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங்காட்டுந் தகர விடைநிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அகரச்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர வல்லொற்றின் மேற் சாரியை அகரவுயிரேறி முடிந்தது.

நடப்பித்தான் என்னும் பிறவினைப் பகுபதம், நட என்னும் பகுதியும், பி என்னும் பிறவினைப் விகுதியும் பெற்று விகுதி பகரமிகுந்து, அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், பகுதிக்கும் விகுதிக்கும் இடையே இறந்த காலங் காட்டுந் தகர விடைநிலையும் பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, இடைநிலைத் தகர மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

அடிக்கப்பட்டான் என்னுஞ் செயற்பாட்டு வினைமுற்றுப் பகுபதம் அடி என்னும் பகுதியும், படு என்னுஞ் செயப்பாட்டு வினை விகுதியும், அவைகளுக்கு அடிக்கப்பட்டான் என்னுஞ் செயற்பாட்டு வினைமுற்றுப் பகுபதம் அடி என்னும் பகுதியும், படு என்னுஞ் செயப்பாட்டு வினை விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும், அகரச்சாரியையும். பெற்று, சாரியைச் சகரம் மிகுந்து, பகரமிகுந்து, சாரியையீற்று உகலங்கெட்டு உகரங்கெட நின்ற ககரமெய்யின் மேலே சாரியை அகரவுயிரேறி, விகுதி பகர மிகுந்து, அடிக்கப்படு என அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, படு என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய்யின் மேல் விகுதி ஆகாரருயிரேறி முடிந்தது.

நடவான் என்னும் எதிர்மறைத் தெரிநிலை வினை முற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், ஆன் என்னும் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிhமறை ஆகார விடைநிலையும் பெற்று, அவ்விடைநிலை கெட்டு, வகரவுடம்படு மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

நடக்கின்றிலன் என்னும் எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் விகுதியும், கின்று என்னும் நிகழ்கால விடை நிலையும், இல் என்னும் எதிர்மறையிடை நிலையும் பெற்று, கின்றிடை நிலையின் ககரம் மிகுந்து, ஈற்றுகரங் கெட்டு, உகரங்கெட நின்ற றகர மெய்யின் மேல் எதிர்மறையிடை நிலை இகரமேறி, அவ்விடை நிலையீற்று லகர மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

எழுந்திட்டான் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், ஏழு என்னும் பகுதியும், இடு என்னும் பகுதிப்பொருள் விகுதியும், அவைகளுகடகு இடையே துச்சாரியையும் பெற்று, சாரியைத் தகர மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டுச் சாரியையீற்றுகரங் கெட்டு, உகரங் கெட நின்ற தகர மெய்யின் மேல் விகுதி இகரவுயிரேறி, எழுந்திடு என அனைத்தும், ஒரு பகுதியாக நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, இடு என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய் இரட்டி உகரவுயிர் கெட்டு, உகரங்கெட நின்ற டகர மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

கழிந்தின்று என்னும் எதிர்மறை இறந்தகாலத் தெரிநலைமுற்றுப் பகுபதம், கழி என்னும் பகுதியும் று என்னும் ஒன்றன் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங் காட்டுந் தகரவிடைநிலையும், அவ்விடைநிலைக்கும், விகுதிக்கும் இடையே இல் என்னும் எதிர்மறையிடை நிலையும் பெற்று, காலவிடை நிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகரவல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகரமெய்யின் மேல் எதிர்மறையிடைநிலை இகரவுயிரேறி, இடைநிலையீற்று லகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது. கழிந்திலது என்பது பொருள்.

கோடும் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமற்றுப் பகுபதம், கொள் என்னும் பகுதியும், தும் எந்நுந் தன்மைப்பன்மை எதிர்கால விகுதியும் பெற்று, பகுதி முதல் நீண்டு, பகுதஜயீற்று ளகரங் கெட்டு, விகுதித் தகரம் டகரமாகத் திரிந்து முடிந்தது.

அற்று என்னுங் குறிப்பு விணைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன் பால் விகுதியும் பெற்று, விகுதி றகரவல்லொற்று மிகுந்து முடிந்தது.

அன்னையர் எனனுங் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும் அர் என்னும் பலர்பால் விகுதியும், இவைகளுக்கு இடையே னகரச்சாரியையும் ஐகாரச்சாரியையும் பெற்று, சாரியை னகரமெய்யின்மேற் சாரியை ஐகாரவுயிரேறி, யகரவுடம்படு மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி அகரவுயிரெறி முடிந்தது.

இன்று என்னுங் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், இல் என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று லகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது.

உயர்த்துகிற்பன் என்னும் எதரிகாலத் தெரிநிலைமுற்றுப் பகுபதம், உணர்ந்து என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடைNயு எதிர்காலங் காட்டும் பகரவிடைநிலையும், பகுதிக்குங் காலவிடைநிலைக்கும் இடையே கில் என்னும் ஆற்றல் இடைநிலையும் பெற்று, ஆற்றலிடைநிலையீற்று லகர மெய், றகரமெய்யாகத் திரிந்து, இடைநிலைப் பகரத்தின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

செய் என்னும் முன்னிலை யேலொருமை வினைமுற்றுப் பகுபதம், செய் என்னும் பகுதியோடு ஆய் என்னும்

• அற்று என்பது இறந்தகால வினையெச்சப் பகுபதமாயின், அறு பகுதி; உகரமூர்த்த றகரமெய் இரட்டித்து முடிந்தது எனக்கொள்க.

முன்னிலையேவல் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு முடிந்தது

பெயரெச்சப் பகுபதங்கள்

அடித்த என்னும் இறந்தகாலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னம் பகுதியும், அ என்னும் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் தகரவிடைநிலையும் பெற்று, இடைநிலைத்தகரம் மிகுந்து, இடைநிலைத் தகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

அடிக்கின்ற என்னும் நிகழ்காலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னும் பகுதியும், என்னும் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கிடையே கின்று என்னம் நிகழ்காலவிடைநிலையும் பெற்று, இடைநிலைக் ககரம் மிகுந்து, இடைநிலைறீற்றுகரங் கெட்டு, உகரங்கெட, நின்ற றகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறிமுடிந்தது.

வினையெச்சப் பகுபதங்கள்

நின்று என்னும் இறந்தகால வினையெச்சப் பகுபதம், நில் என்னும் பகுதியும், உ என்னும் வினையெச்ச விகுதியும், அவைகளுக்கிடையே இறந்தகாலங்காட்டும் றகரவிடைநிலையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் இடைநிலை றகர மெய்க்கு இனமாகிய னகரமெய்யாகத் திரிந்து, இடை நிலை றகரமெய்யின் மேல் விகுதி உகரவுயிரேறி முடிந்தது.

நிற்க என்னும் முக்காலத்திற்கும் உரிய வினையெச்சப் பகுபதம், நில் என்னும் பகுதியும், இன் என்னும் எதிர்கால வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் றகர மெய்யாகத் திரிந்து, சாரியையீற்று உகரங்கெட்டு, உகரங் கெட நின்ற அகரமெய்யின் மேல் இகரவுயிரேறி முடிந்தது.

தோன்றியக்கால் என்னும் எதிர்கால வினையெச்சப் பகுபதம், தோன்று என்னும் பகுதியும், கால் என்னும் எதிhகால வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே இன் சாரியையும் அகரச்சாரியையும் பெற்று, பகுதியீற்று உகரங் கெட்டு, உகலங் கெட நின்ற றகர மெய்யின்மேற் சாரியை இகரவுயிரெறி, சாரியையீற்று னகரமெய் குறைந்து, யகரவுடம்படுமெய் தோன்றி, அம்மெய்யின் மேற் சாரியை அகரவுயிரேறி, விகுதிக் ககரமிகுந்து முடிந்தது.

• நிற்க என்பது வியங்கோள் வினைமுற்றுப் பகுபதமாயின், நில் பகுதி, கூ வியங்கோள் விகுதி.

பின்வரும் பொதுப் பகுபதங்களை முடிக்க:-

சாவான்: 1) 2) 3) உடன்பாட்டு தெரிநிலை வினைமுற்று எதிர்மறை தெரிநிலை வினைமுற்று எதிர்கால வினையெச்சம் செய்யாய்: 1) 2) முன்னிலையேவற் பன்மைவினைமுற்று முன்னிலையொருமை யெதிர்மறை வினைமுற்று செய்யீர் 1) 2) முன்னிலையேவற் பன்மை வினைமுற்று முன்னிலைப் பன்மையெதிர்மறை வினைமுற்று தழைப்ப: 1) 2) 3) பலர்பாற் படர்க்கை வினைமுற்று பலவின்பாற் படர்க்கை வினைமுற்று செயவெனெச்சம் அன்ன: 1) 2) குறிப்பு வினைமுற்று குறிப்புவினைப்பெயரெச்சம் செவ்விய: 1) 2) குறிப்பு வினைமுற்று குறிப்புவினைப்பெயரெச்சம் வேட்கும்: 1) 2) எதிhகால வினைமுற்று எதிhகாலப் பெயரெச்சம் வந்து: 1) 2) தன்மையொருமை வினைமுற்று இறந்தகால வினையெச்சம் உண்டு: 1) 2) 3) தன்மையொருமை வினைமுற்று இறந்தகால வினையெச்சம் அஃறிணையொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று தேடிய: 1) 2) 3) 4) இறந்தகால வினைமுற்று வியங்கோள் வினைமுற்று இறந்தகால பெயரெச்சம் எதிhகால வினையெச்சம்

சொல்லினங் கூறுதல்

அவன் வந்தான்

அவன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைச் சுட்டுப் பெயர்; திரிபின்மையாகிய எழுவாய்யுரு பேற்றது; அது வந்தான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.

வந்தான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை யயிறந்தகால எடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; அது அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.

கொலை செய்தவன் நரகத்தில் வீழ்ந்து வருந்துவான்

கொலை, எ-து. தொழிற்பெயர்; ஆக்கப்படு பொருளில் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது செய்தவன் என்னும் வினை கொண்டது.

செய்தவன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கையிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை விணையாலணையும் பெயர்; திரிபின்மையாகிய எழுவாயுருபேற்றது; அது வருந்துவான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.

நரகம், எ-து. பால்பகாவஃறிணைப் படர்க்கைப் பெயர்; பிறிதின்கிழமைப் பொருட்கு இடமிடமாக நிற்கும் இடப்பொருளில் வந்த அல் என்னும் ஏழனுருபேற்றது; அது வீழ்ந்து என்னும் வினை கொண்டது.

அத்து, எ-து. சாரியையுருபிடைச் சொல். வீழ்ந்து, எ-து. செய்தென்வாய்ப்பாட்டிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலைவிணை வினையெச்சம்; வருந்துவான் என்னும் வினை கொண்டது.

வருந்துவான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை யெதிர்கால உடன்பாட்டுத் தெரிநிலை வினைமுற்று; செய்தவன் என்னும் எழுவாய்குப் பயனிலையாய் நின்றது.

கொற்றனானவன் தன்னை யெதிர்த்த பகைவரை வாளான்மாய வெட்டினான்.

கொற்றன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர், ஆனவன் என்னும் எழுவாய்ச் சொல்லுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.

தான், எ-து. ஒருமைப் படர்க்கைப் பொதுப் பெயர்; அடையப்படுபொருளில் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது எதிர்த்த என்னும் வினை கொண்டது.

எதிர்த்த, எ-து. செய்தவென்வாய்ப்பாட்டிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலைவினைப் பெயரெச்சம்; பகைவர் என்னும் வினைமுதற் பெயர் கொண்டது.

பகைவர், எ-து. உயர்திணைப் பலர் பாற் படர்க்கைப் பெயர்; அழிக்கப்படுபொருள் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினை கொண்டது.

வாள், எ-து. பால்பகாவஃறிணைப் படர்க்கைப் பெயர்; கருவிப் பொருளில வந்த ஆல் என்னும் மூன்றனுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினை கொண்டது.

மாய, எ-து. செயவென்வாய்ப்பாட்டு முக்காலத்திற்கு முரிய தெரிநிலைவினை வினையெச்சம்; இங்கே காரியப் பொருளில் வந்தமையால் எதிர்காலத்து; வெட்டினான் என்னும் வினை கொண்டது.

வெட்டினான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கையிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; கொற்றன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.

சொற்றொடரிலக்கணங் கூறுதல்

அவன் வந்தான் – அல் வழிச்சந்தியில் எழுவாய்த் தொடர்.

கொலை செய்தவன் – வேற்றுமைச் சந்தியில் இரண்டாம் வேற்றுமைத் தொகை

செய்தவன் நரகத்தில் – அல்வழிச் சந்தியில் தழாத் தொடராகிய எழுவாய்த்தொடர்.

நரகத்தில் வீழ்ந்து – வேற்றுமைச் சந்தியில் ஏழாம் வேற்றுமை விரி.

வீழ்ந்து வருந்துவான் – அல் வழிச் சந்தியில் வினையெச்சத் தொடர்.

தாழாத்தொடராவது சிலைமொழியானது வருமொழியைப் பொருட்பொருத்தமுறத் தழுவாத தொடர் பொருட்பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவு தொடர்.

முற்றுப்பெற்றது