இலக்கணம் கட்டுரை

பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை

பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை

பழமொழி (Proverb)

பழமொழிகள் ஒரு சமுதாயத்தின் பழமையான சிந்தனையும், அறிவுச் சொத்தும், நீண்ட காலமாகப் புழக்கத்திலிருந்து வரும் அனுபவக் குறிப்புகளும் ஆகும்.

விடுகதை (Riddle)

ஓர் இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்துத் தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும்.

உவமை (Comparison)

உவமை (Parable) என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விடயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கு உதவுகிறது. ஒரு சிறப்பிக்கப்படும் பொருளை விளக்குவதற்காகவோ அழகுபடுத்துவதற்காகவோ பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக மலர் போன்ற முகம் என்பதில் “மலர்” என்பது சிறப்புப் பொருள் – உவமானம். “முகம்” என்பது உவமானத்தால் சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம்.

மரபுத்தொடர் (Idiom)

ஒரு சொல் அல்லது சொற்றொடர், அதன் நேர்பொருளை உணர்த்தாமல் தொடரும் பயன்பாட்டில் வழி வழியாக வேறு குறிப்புப் பொருளினைத் தந்து நிற்கும்போது அவற்றை மரபுத்தொடர் அல்லது மொழி மரபு அல்லது மொழி வழக்கு அல்லது இலக்கணைத் தொடர் அல்லது சொலவடை என்பர்.

சொலவடை (Adage)

கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை வாய்மொழி இலக்கியங்கள் சொலவடை எனப்படும்.
ஆடத் தெரியாதவனுக்கு மேட கோணளாம்

 

பழமொழிகள் ஒரு சமுதாயத்தின் பழமையான சிந்தனையும், அறிவும், வாய்மொழி குறிப்புகளும் ஆகும். பழமொழிகள் அச்சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அகல உழுகிறதை விட ஆழ உழு.
அக்கரைக்கு இக்கரை பச்சை.
ஆடத் தெரியாதவளுக்குக் கூடம் போதாதாம்.
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்.
ஆழமறியாமல் காலை இடாதே.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளங்கன்று பயமறியாது.
இனம் இனத்தைச் சேரும்.
ஊரோடு ஒத்து வாழ்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கனிந்த பழம் தானே விழும்.
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
கிட்டவந்தால் முட்டப் பகை.
குரைக்கிற நாய் கடிக்காது.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
கையிலே காசு வாயிலே தோசை.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
சாண் ஏற முழம் சறுக்கிறது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
பதறாத காரியம் சிதறாது.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பாம்பின் கால் பாம்பறியும்.
பேராசை பெருநட்டம்.
பொறுமை கடலினும் பெரிது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.