இலக்கணம் கட்டுரை

ஒலியன்கள்

ஒலியன்கள் என்பது, எழுத்துக்களைச் சரியாக அடையாளம் காணுவதற்காக, உலகம் முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும், சொற்களாகும் உதாரணமாக ஆங்கிலத்தில் A-Alfa, B-Bravo, C-Charlie, D-Delta, E-Echo என்று கூறுவர் அதே போலத் தமிழில் அகரவரிசை, ககரவரிசை என்று உயிர் எழுத்து வழி வரிசைகளும், மெய்யெழுத்து வழி வரிசைகளும் பயன்படுத்துவர்.

தமிழில் ஒற்றை ஓசை சொற்களை மயங்கொலி சொற்கள் என்பார்கள்
ண→ன→ந, ல→ழ→ள, ர→ற

இவை அல்லாமல் வேறுசில சொற்களும் ஓசை வடிவில் ஒன்றைப் போலத் தோன்றும்
இ→யி, ஈ→யீ, உ→வு, ஊ→வூ, எ→யெ, ஏ→யே

இதனை எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவது என்பதை இந்தப் பாடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் எழுத்துக்களை அதன் வரிசையை வைத்து அடையாளம் கூறுவர். உதாரணமாகக் ககர வரிசை என்றால் க் முதல் க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ வரை என்று பொருள்.

    அகரம் ↓ ஆகாரம் ↓ இகரம் ↓ ஈகாரம் ↓ உகரம் ↓ ஊகாரம் ↓ எகரம் ↓ ஏகாரம் ↓ ஐகாரம் ↓ ஒகரம் ↓ ஓகாரம் ↓ ஒளகாரம் ↓
 
ககரம் → க் கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ஙகரம் → ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
சகரம் → ச் சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞகரம் → ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
டகரம் → ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ணகரம் → ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
தகரம் → த் தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
நகரம் → ந் நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பகரம் → ப் பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
மகரம் → ம் மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யகரம் → ய் யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ரகரம் → ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
லகரம் → ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வகரம் → வ் வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழகரம் → ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ளகரம் → ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
றகரம் → ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
னகரம் → ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

மயங்கொலி எழுத்துக்களை, கீழ்கண்ட சிறப்பு பெயர்களால் எளிதில் அடையாளம் காணலாம்

சின்ன ல லகரம்
பெரிய ள ளகரம்
சிறப்பு ழ ழகரம்
சின்ன ர ரகரம்
பெரிய ற றகரம்
இரண்டு சுழி ன றன்னகரம்
மூன்று சுழி ண டண்ணகரம்
தந்நகரம் மொழிமுதல் நகரம்
உயிர் குறில் இ  
யி யகர குறில் யி  
உயிர் நெடில் ஈ  
யீ யகர நெடில்  
உயிர் குறில் உ  
வு வகர குறில் வு  
உயிர் நெடில் ஊ  
வூ வகர நெடில் வூ  
உயிர் குறில் எ  
யெ யகர குறில் யெ  
உயிர் நெடில் ஏ  
யே யகர நெடில் யே