உன்னால் கொடுக்கமுடிந்த பொருளை மறைத்து வைக்காமல் வறியவர்க்கு கொடு.
ஈவது விலக்கேல்
தருமத்தின் பொருட்டு ஒருவர் மற்றோருவருக்கு கொடுப்பதை தடுக்காதே
உடையது விளம்பேல்
உன்னுடைய பொருளையோ அல்லது இரகசியங்களையோ பிறர் அறியுமாறு சொல்லாதே.
ஊக்கமது கைவிடேல்
முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது.
எண் எழுத்து இகழேல்
கணித நூல்களையும் அற நூல்களையும் இலக்கண நூலையும் இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
ஏற்பது இகழ்ச்சி
யாரிடமும் எதையும் யாசிக்க கூடாது அது இகழ்ச்சி ஆகும்.
ஐயம் இட்டு உண்
யாசிப்பவருக்கு(ஊனமுற்றோர்) கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
ஒப்புரவு ஒழுகு
உலக நடைமுறையை அறிந்துகொண்டு, அதனுடன் வாழ கற்றுக்கொள்.
ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.
அஃகம் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக தானியங்களின் எடையை, குறைத்து விற்காதே.
கண்டொன்று சொல்லேல்
பொய் சாட்சி சொல்லாதே.
ஙப் போல் வளை
ங என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க ‘ஙா’ வரிசை எழுத்துக்களை தழுவுகிறதோ! அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
இடம்பட வீடு எடேல்
தேவைக்கேற்ப வீட்டை கட்டிக்கொள்.
ஞயம்பட உரை
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.
சனி நீராடு
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு.
இணக்கம் அறிந்து இணங்கு
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்பு அவர் நல்ல குணங்கள் உள்ளவரா எனத்தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்.
தந்தை தாய்ப் பேண்
உன் தந்தையையும் தாயையும் இறுதிக்காலம் வரை அன்புடன் இருந்து காப்பாற்று.
நன்றி மறவேல்
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறந்து விடாதே.
பருவத்தே பயிர் செய்
ஒரு செயலை செய்யும்பொழுது அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
மண் பறித்து உண்ணேல்
பிறர் நிலத்தை ஏமாற்றி கவர்ந்து அதன் மூலம் வாழாதே.
மண் பறித்து உண்ணேல்
பிறர் நிலத்தை ஏமாற்றி கவர்ந்து அதன் மூலம் வாழாதே.
இயல்பு அலாதன செய்யேல்
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
அரவம் ஆட்டேல்
பாம்புகளை பிடித்து விளையாடாதே.
இலவம் பஞ்சில் துயில்
இலவம் பஞ்சு எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு