முழுவெழுத்து சொற்றொடர் என்பது அனைத்து தமிழ் எழுத்துக்களாலும் எழுதப்பட்ட ஒரு சொற்றொடரைக் குறிக்கும் சொல்லாகும்.
உதாரணமாக ஆங்கிலத்தில் இதனை Pangram என்பார்கள். எடுத்துக்காட்டு “The quick brown fox jumps over the lazy dog”.
முழு தமிழ் எழுத்துக்களையும் அடக்கிய சொற்றொடர் இல்லை என்றாலும் பெரும்பாலும் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை கீழ் வருமாறு
தூய தமிழ் முழுவெழுத்து சொற்றொடர்
ஈவது விலக்கேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயமிட்டு உண், ஊக்கமது கைவிடேல், மூதுரை ஒளவை கூறிய ஆத்திசூடி நூலின் தீஞ்சுவை மொழி, அஃதே எங்கள் பூவுலக நெறி
தமிழ் கிரந்த முழுவெழுத்து சொற்றொடர்
தமிழ் ஔவை, ஈழ பழுவூர் ஸ்ரீமயூரபுருஷன் வீட்டில், லீவு நாளான மூன்றாம் தேதி ஞாயிறு ஏழு மணி விருந்துக்கு, டிஃபன் ஸ்பெஷல் பக்ஷணங்களாக, சூடான இட்லி பூரி ஊத்தப்பம் ஆமவடை கூட்டு ஹல்வா நுங்குஜூஸ் ஐஸ்டீ சாப்பிட்டாள்.