நான்காம் நிலை கட்டுரை

இந்தியத் தமிழர்கள்

பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றிலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். எனினும் கருநாடக மாநிலத்தின் மாண்டியா, எப்பார் பகுதிகளிலும் , கேரள மாநிலத்தின் பாலக்காட்டிலும் மற்றும் மகாராட்டிரா மாநிலம் புனே, மும்பையின் தாராவி பகுதிகளிலும் இடைக்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர்.