நான்காம் நிலை கட்டுரை

மே 1 – தொழிலாளர் தினம்

உலகம் முழுவதும், தொழிலாளர்களை, 12 முதல் 16 மணி நேரம் வரை, மிகக் குறைந்த ஊதியத்திற்கு, கசக்கி பிழிந்தனர். அதனை எதிர்த்து, 16ஆம் நூற்றாண்டில் சிபைன் நாட்டில், தொடங்கப்பட்ட, 8 மணி நேர வேலை இயக்கம், உலகம் முழுவதும், பற்றிப் படர்ந்தது. 1886ஆம் ஆண்டு, அமெரிக்காவில், 3000 பேர் ஈடுபட்ட போராட்டத்தில், காவலர்கள், 4 போராட்டக்காரர்களைச் சுட்டு கொன்றனர். அதனை எதிர்த்த போராட்டத்தில், ஒரு காவலர் கொல்லப்பட்டதனால், 7 போராட்ட தலைவர்கள் தூக்கில் இடப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இந்தியா உட்பட பல உலக நாடுகளில் புரட்சி வெடித்தது. 1919ஆம் ஆண்டிற்கு பிறகு, உலக அரசுகள், 8 மணி நேர வேலையை, படி படியாக ஏற்றது. சுகந்திர இந்தியாவில், அம்பேத்கர் இதனைச் சட்டம் ஆக்கினார். நீங்கள் இன்று அனுபவித்து வரும், 8 மணி நேர வேலை கிடைக்க, நடந்த போராட்டங்களையும், செய்த ஈகங்களையும், உயிர் நீத்த ஈகிகளையும். தொழிலாளர் நாள் அன்று, நன்றியோடு நினைவு கூறுவோம்.