பாடநூல் பாடங்கள் கட்டுரை

நாட்டார் பாடல்கள்

கலைகள் மக்களின் மனச்சோர்வையும் உடற்களைப்பையும் போக்க வல்லன. கற்றோர், கல்லாதோர் எல்லோரும் கலைகளை விரும்பி நுகர்வர். ஊர்தோறும் மக்கள் சிறந்த கலைகளைப் போற்றி வந்துள்ளனர். இக்கலைகளை நாட்டுப்புறக் கலைகள் எனவும் அழைப்பர். இவர்கள் போற்றிய கலைகளுள் நாட்டுப்புறப் பாடல்கள் முதன்மையானவை. இவை வாய்மொழியாகவே பாடப்பட்டு வருகின்றன. நாட்டுப்புறப் பாடல்களிலிருந்தே ஏட்டு இலக்கியங்கள் தோன்றின என்பர். தாலாட்டுப்பாடல், காதற்பாடல், தொழிற்பாடல் எனப் பலவகை நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.