வரிப்பாடல் விழியம் வினாவிடை

சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு
முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி
சுற்றி வர ஆசை

மல்லிகைப் பூவாய்
மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு
மாலையிட ஆசை
மேகங்களை எல்லாம்
தொட்டுவிட ஆசை
சோகங்களை எல்லாம்
விட்டுவிட ஆசை
காா் குழலில் உலகை
கட்டிவிட ஆசை

சேற்று வயல் ஆடி
நாற்று நட ஆசை
மீன்பிடித்து மீண்டும்
ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம்
உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும்
படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே
சேலை கட்ட ஆசை

கேள்வி

மதிப்பெண்