கலத்தல்
ண், ம், ய், ர், ல், ழ், ள், ன்
என்ற மெய் எழுத்துகளில் மட்டும் தான் ஒரு சொல் முடியும். மற்ற எழுத்தில் முடியாது.
அதன் அடிப்படையில் நிலைமொழியின் முடிவில் மெய் எழுத்து வந்து,
வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால்,
இரண்டும் கலந்து, உயிர்மெய் எழுத்தாகி, இரு சொல் ஒரு சொல்லாகும்.
மெய் + எழுத்து = மெய்யெழுத்து
1 | மெய் | + | எழுத்து | = | மெய்யெழுத்து |
---|---|---|---|---|---|
2 | உயிர் | + | எழுத்து | = | உயிரெழுத்து |
3 | அமுதம் | + | ஏந்தல் | = | அமுதமேந்தல் |
4 | அலம் | + | அலத்தல் | = | அலமலத்தல் |
5 | ஆண் | + | எழுத்து | = | ஆணெழுத்து |
6 | இடம் | + | இடுதல் | = | இடமிடுதல் |
7 | இறக்கம் | + | இன்மை | = | இறக்கமின்மை |
8 | ஈரம் | + | உறிஞ்சல் | = | ஈரமுறிஞ்சல் |
9 | உரம் | + | அடித்தல் | = | உரமடித்தல் |
10 | உலகம் | + | ஈன்றாள் | = | உலகமீன்றாள் |
11 | ஓதம் | + | ஏறுதல் | = | ஓதமேறுதல் |
12 | காயம் | + | உருக்கி | = | காயமுருக்கி |
13 | குடம் | + | ஆடல் | = | குடமாடல் |
14 | குட்டம் | + | இடுதல் | = | குட்டமிடுதல் |
15 | சமம் | + | ஆகுதல் | = | சமமாகுதல் |
16 | செம் | + | அரிசி | = | செம்மரிசி |
17 | தாகம் | + | இன்மை | = | தாகமின்மை |
18 | தாகம் | + | எடுத்தல் | = | தாகமெடுத்தல் |
19 | தாயம் | + | ஆடுதல் | = | தாயமாடுதல் |
20 | தூக்கம் | + | ஊட்டி | = | தூக்கமூட்டி |
21 | நகம் | + | உண்ணி | = | நகமுண்ணி |
22 | நுண் | + | அறிவு | = | நுண்ணறிவு |
23 | பருவம் | + | ஏழு | = | பருவமேழு |
24 | பழம் | + | எடுத்தல் | = | பழமெடுத்தல் |
25 | பாசம் | + | ஈதல் | = | பாசமீதல் |
26 | பூதம் | + | ஐந்து | = | பூதமைந்து |
27 | பெண் | + | இனம் | = | பெண்ணினம் |
28 | மந்திரம் | + | ஐந்து | = | மந்திரமைந்து |
29 | மனம் | + | ஊக்கம் | = | மனவூக்கம் |
30 | வட்டம் | + | இடு | = | வட்டமிடு |
31 | விண் | + | உலகம் | = | விண்ணுலகம் |
32 | நெய் | + | அணி | = | நெய்யணி |
33 | கடுவாய் | + | அன் | = | கடுவாயன் |
34 | காய் | + | அவியல் | = | காயவியல் |
35 | குழாய் | + | ஒடு | = | குழாயோடு |
36 | செய் | + | ஒளி | = | செய்யொளி |
37 | நோய் | + | அணுகல் | = | நோயணுகல் |
38 | பேய் | + | ஒட்டி | = | பேயோட்டி |
39 | மெய் | + | ஈறு | = | மெய்யீறு |
40 | வாய் | + | அமுதம் | = | வாயமுதம் |
41 | ஆய் | + | எறும்பு | = | ஆயெறும்பு |
42 | நாய் | + | ஒட்டம் | = | நாயோட்டம் |
43 | நாவாய் | + | இகம் | = | நாவாயிகம் |
44 | நோய் | + | உறுதல் | = | நோயுறுதல் |
45 | பொய் | + | அடிமை | = | பொய்யடிமை |
46 | பொய் | + | ஆடல் | = | பொய்யாடல் |
47 | மிளகாய் | + | இலை | = | மிளகாயிலை |
48 | வாய் | + | அடைப்பு | = | வாயடைப்பு |
49 | அமர் | + | உலகம் | = | அமருலகம் |
50 | ஆர் | + | அணங்கு | = | ஆரணங்கு |
51 | இடக்கர் | + | இசை | = | இடக்கரிசை |
52 | இடர் | + | எட்டு | = | இடரெட்டு |
53 | ஈர் | + | ஆட்டி | = | ஈராட்டி |
54 | உம்பர் | + | அர் | = | உம்பரர் |
55 | உயிர் | + | அவர் | = | உயிரவர் |
56 | உவர் | + | உப்பு | = | உவருப்பு |
57 | ஓர் | + | ஆயிரம் | = | ஓராயிரம் |
58 | கதிர் | + | அடித்தல் | = | கதிரடித்தல் |
59 | கந்தர் | + | அந்தாதி | = | கந்தரந்தாதி |
60 | கார் | + | அகத்தி | = | காரகத்தி |
61 | சீர் | + | ஆட்டு | = | சீராட்டு |
62 | சுரர் | + | இடம் | = | சுரரிடம் |
63 | சுறீர் | + | எனல் | = | சுறீரெனல் |
64 | சூர் | + | அடித்தல் | = | சூரடித்தல் |
65 | செல்வர் | + | ஆட்சி | = | செல்வராட்சி |
66 | திமிர் | + | அன் | = | திமிரன் |
67 | திமிர் | + | ஆளி | = | திமிராளி |
68 | தேர் | + | ஓட்டி | = | தேரோட்டி |
69 | தேர் | + | ஓட்டம் | = | தேரோட்டம் |
70 | தேவர் | + | ஆட்டி | = | தேவராட்டி |
71 | நகர் | + | ஆட்சி | = | நகராட்சி |
72 | நார் | + | அத்தம் | = | நாரத்தம் |
73 | நீர் | + | உடை | = | நீருடை |
74 | நீர் | + | ஊற்று | = | நீரூற்று |
75 | நீர் | + | ஒட்டம் | = | நீரோட்டம் |
76 | பெயர் | + | ஆளி | = | பெயராளி |
77 | மயிர் | + | இழவு | = | மயிரிழவு |
78 | வேர் | + | ஊன்றல் | = | வேரூன்றல் |
79 | அஞ்சல் | + | அகம் | = | அஞ்சலகம் |
80 | அருள் | + | அறம் | = | அருளறம் |
81 | ஆள் | + | உடையான் | = | ஆளுடையான் |
82 | ஆள் | + | ஒதுங்கி | = | ஆளொதுங்கி |
83 | ஆள் | + | அறிஞர் | = | ஆளறிஞர் |
84 | ஆன் | + | ஐந்து | = | ஆனைந்து |
85 | இருள் | + | உலகம் | = | இருளுலகம் |
86 | உருள் | + | ஆயம் | = | உருளாயம் |
87 | உருள் | + | உருட்டி | = | உருட்டி |
88 | ஊழ் | + | உறுதல் | = | ஊழுறுதல் |
89 | ஏன் | + | என்றால் | = | ஏனென்றால் |
90 | கக்கன் | + | ஊர் | = | கக்கனூர் |
91 | கடங்கன் | + | ஏரி | = | கடங்கனேரி |
92 | கந்தன் | + | ஏரி | = | கந்தனேரி |
93 | கப்பல் | + | ஏறு | = | கப்பலேறு |
94 | கனியன் | + | ஊர் | = | கணியனுர் |
95 | கன்னாள் | + | இறை | = | கன்னாளிறை |
96 | கீழ் | + | ஆண்டு | = | கீழாண்டு |
97 | குரல் | + | இன்மை | = | குரலின்மை |
98 | கேள் | + | ஆன் | = | கேளான் |
99 | சிதள் | + | அண்டி | = | சிதளண்டி |
100 | சிவன் | + | ஆடல் | = | சிவனாடல் |
101 | சிவன் | + | இரவு | = | சிவனிரவு |
102 | செயல் | + | ஆளர் | = | செயலாளர் |
103 | சென்னல் | + | ஏரி | = | சென்னலேரி |
104 | தவழ் | + | உயிரி | = | தவழுயிரி |
105 | தன் | + | ஊட்டி | = | தன்னூட்டி |
106 | தன் | + | அறிவு | = | தன்னறிவு |
107 | தாழ் | + | இடுதல் | = | தாழிடுதல் |
108 | தாழ் | + | ஆமை | = | தாழாமை |
109 | தாள் | + | ஆண்மை | = | தாளாண்மை |
110 | தான் | + | இயங்கி | = | தானியங்கி |
111 | தேன் | + | அருவி | = | தேனருவி |
112 | நரியன் | + | ஏரி | = | நரியனேரி |
113 | நாயன் | + | ஏந்தல் | = | நாயனேந்தல் |
114 | நீரில் | + | ஒடி | = | நீரிலோடி |
115 | நீருள் | + | ஆரை | = | நீருளாரை |
116 | நெகிழ் | + | இசை | = | நெகிழிசை |
117 | புலன் | + | ஆய்வு | = | புலனாய்வு |
118 | பொருள் | + | இயல் | = | பொருளியல் |
119 | பொருள் | + | உரை | = | பொருளுரை |
120 | மயில் | + | ஊர்தி | = | மயிலூர்தி |
121 | மன் | + | உயிர் | = | மன்னுயிர் |
122 | மின் | + | உந்து | = | மின்னுந்து |
123 | மின் | + | இயல் | = | மின்னியல் |
124 | முதல் | + | உதவி | = | முதலுதவி |
125 | முன் | + | இட்டு | = | முன்னிட்டு |
126 | மேல் | + | ஊர் | = | மேலூர் |
127 | வான் | + | உலகம் | = | வானுலகம் |