சங்ககாலம் கட்டுரை

12. நடுகல் 🟥

நடுகல்

இறந்தவர்களுக்கு நினைவுக்கல் எழுப்பும் மரபு உலகில் மிகத் தொன்மையானது. இம்மரபு தமிழர்களிடையே இருந்தமைக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன. பண்டைத்தமிழர் போர்களில் வீரச்சாவடைந்தோருக்கு நடுகல் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இந்த நடுகற்கள் தமிழரின் வீரத்துக்குச் சான்றாகின்றன. இம்மரபு இன்றும் தொடர்கிறது. சிறிது காலத்துக்கு முன்னர் எமது தாயகத்திலும் போர்கள் நடைபெற்றன. வீரர் பலர் வீரச்சாவு அடைந்தனர். அவர்கள் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன. தமிழர் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மாவீரர் நினைவைப் போற்றி நடுகல் வழிபாடு செய்து வருகின்றனர். நடுகல் வழிபாடு வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது. அடுத்த தலைமுறைகளுக்குப் புத்தூக்கம் தருகின்றது.

சொற்கள் அறிவோம்

சான்றுத் தலைமுறை நடுகல் நினைவுப் பண்பாடு வரலாறு வழிபாடு வீரக்கல் வீரர் 50 படிப்போம்:

இணைந்து செயற்படுவோம்

தாயக வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் ஆகியோரின் ஈகங்கள் தொடர்பாக ஆசிரியர் மாணவருடன் கலந்துரையாடுவார்.

பண்பாடு அறிவோம்

நாட்டின் வீரர்கள் மக்களைக் காப்பவர்கள். மக்களுக்காகவே உயிர்க்கொடை செய்பவர்கள். அத்தகைய வீரர்களுக்கு மக்கள் நடுகல் நடுவர். இது தமிழர் பண்பாடுகளில் ஒன்று.