பேச்சுத்தமிழ் (Spoken Tamil)- பொதுவாகப் பொதுமக்கள் உரையாடும் தமிழ் பேச்சுத் தமிழாகும். பேசும் தமிழும், எழுதும் தமிழும், மாறுபட்டு இருக்கும், பேசும் தமிழ் இலக்கண இல்லாமல், கொச்சையாக இருக்கும். இதனைக் கொச்சைத்தமிழ், வழக்குத்தமிழ், வட்டாரத்தமிழ் என்றும் அழைப்பர்.
பொதுவாக எழுத்து தமிழில் ற்ற என்று வரும் சொற்கள், பேச்சு தமிழில் த்த என்று வரும். காற்று காத்து, நாற்றம் நாத்தம், பெற்ற பெத்த, வற்றல் வத்தல், தெற்கு தெக்கு
| அங்கிட்டு | அந்தப்பக்கம் |
| அங்கே | அங்க |
| அசஞ்சு | அசைந்து |
| அஞ்சு | ஐந்து |
| அண்டு | அன்று |
| அத்து | அற்று |
| அப்புறமா | அப்பறமா |
| அமருங்கள் | ஒக்காறு |
| அம்மா | யம்மா |
| அரைஞான்கயிறு | அண்ணாக்கயிறு |
| அவுக | அவர் |
| அவுரு | அவிழ் |
| ஆத்தி | ஆற்றி |
| ஆத்து | ஆற்று |
| ஆத்துல | ஆற்றில் |
| ஆப்புடல | அகப்படவில்லை |
| இங்கே | இங்க / இஞ்ச |
| இடம் | எடம் |
| இடை | இடுப்பு |
| இண்டைக்கு | இன்றைக்கு |
| இத்து | இற்று |
| இழவு | எழவு |
| இன்றைக்கு | இன்னைக்கு |
| உக்காரு | உட்கார் |
| உசுர் | உயிர் |
| உண்டு | இருக்கு |
| உதடு | ஒதடு |
| உத்து | உற்று |
| உயர்த்தி | ஒசத்தி |
| உயிர் | உசுறு |
| உறவு | ஒறவு |
| ஊத்து | ஊற்று |
| ஊரு | ஊர் |
| எங்க | எங்கு |
| எத்து | எற்று |
| எரிஞ்ச | எரிந்த |
| எல | இலை |
| எவுக | எவர் |
| எழுந்திடு | எந்திரி |
| எறிகிறது | எறியுது |
| ஏந்துரு | எழந்திரு |
| ஏரி “வத்தி” விட்டது | ஏரி “வற்றி” விட்டது |
| ஐத்தை | அத்தை |
| ஒங்க | உங்கள் |
| ஒசத்தி | உயர்த்தி |
| ஒடம்பு | உடம்பு |
| ஒண்டு | ஒன்று |
| ஒத்த | ஒற்றை |
| ஒத்து | ஒற்று |
| ஒம்போது | ஒன்பது |
| ஒலகம் | உலகம் |
| ஒலவு மல | உழவு மழை |
| ஒனக்கென்ன | உனக்கென்ன |
| ஒன்பது | ஒம்பது |
| ஒன்று | ஒன்னு |
| ஒன்னா | ஒன்றாக |
| ஓட்டு / போடு / அமுக்கு / அழுத்து | இயக்கவும் |
| ஓயாம | ஓயாமல் |
| கச்சிக்காரர் | கட்சிக்காரர் |
| கடந்து | தாண்டி |
| கடித்து | கடிச்சி |
| கண் | கண்ணு |
| கண்டிப்போச்சு | கன்றிப்போனது |
| கண்டு | கன்று |
| கண்மாய் | கம்மாய் |
| கதவண்டையில் (கதவு பக்கத்தில்) | கதவாண்ட |
| கத்து | கற்று |
| கத்துகிட்டது | கற்றது |
| கத்துக்குட்டி | கற்றுக்குட்டி |
| கத்துக்கோ | கற்றுக்கொள் |
| கயறு | கயிறு / கவுறு |
| கயிறு | கைறு |
| கரபொரண்டு | கரை புரண்டு |
| கழனி | கயினி |
| கன்றுக்குட்டி | கண்டுக்குட்டி |
| காகம் | காக்கா |
| காத்து | காற்று |
| கால் | காலு |
| கிடை | கெட |
| கிரகம் | கெரகம் |
| கீத்து | கீற்று |
| குடுத்து | கொடுத்து |
| கும்புடு | கும்பிடு |
| கேக்கல | கேட்கல |
| கையி | கை |
| கொண்னுடுவேன் | கொன்றுவிடுவேன் |
| கொர | குறை |
| கொழந்தை / கொழந்த | குழந்தை |
| கொழாய் | குழாய் |
| கொழுக்கட்டை | கொலக்கட்டை |
| கொளம் | குளம் |
| கொறஞ்சு | குறைந்து |
| கோவம் | கோபம் |
| சக்கர / சீணி | சர்க்கறை |
| சந்த | சந்தை |
| சமைச்சு | சமைத்து |
| சளைக்காம | சளைக்காமல் |
| சாத்து | சாற்று |
| சாப்டியா | சாப்பிட்டாயா |
| சாப்புடு | சாப்பிடு |
| சாயந்தரம் | சாயங்காலம் |
| சீமைத்தண்ணீர் | சீமத்தண்ணி |
| சுகம் | சொகம் |
| சுத்தி | சுற்றி |
| சுவர் | செவுறு |
| செஞ்ச | செய்த |
| செஞ்சேன் | செய்தேன் |
| செத்த நேரம் | சற்று நேரம் |
| செம்மை | செம |
| செய்து | செஞ்சி |
| செய்யவில்லை | செய்யல |
| செரச்சு | சிரைத்து |
| செரி | சரி |
| செரை | சிரை |
| செவப்பு | சிகப்பு |
| செவர் | சுவர் |
| செவுத்தில | சுவற்றில் |
| சென்றது | போனது |
| சேத்தில் | சேற்றில் |
| சேத்து | சேற்று |
| சேர்த்தான் | சேந்தான் |
| சொல்லவில்லை | சொல்லல |
| சொளகு | முறம் / புடைப்பான் |
| சோத்த | சோறு |
| சோத்தில் | சோற்றில் |
| சோத்து | சோற்று |
| சோத்துப் பானை | சோற்றுப் பாணை |
| சௌதி | சவுதி |
| தச்சது | தைத்தது |
| தண்ணீர் | தண்ணி |
| தலையணை | தலவாணி, தலகாணி |
| தலையனை | தலவானி |
| தாக்கவும் | அடிங்க |
| தாழ்பால் | தாப்பா / நாதாங்கி / கொண்டி |
| திண்ட | தின்ற |
| திறக்கவும் | தொற |
| துடைப்பம் | தொடப்பம் |
| தூத்தல் | போடுது |
| தூறல் | போடுகிறது |
| தெகட்டுது | திகட்டுகிறது |
| தெக்கு | தெற்கு |
| தெத்திப்பல் | தெற்றிப்பல் |
| தெற்கு | தெக்கு |
| தென்ன | தென்னை |
| தேத்து | தேற்று |
| தேயம் | தேசம் |
| தொத்து | தொற்று |
| தோத்து | தோற்று |
| தோத்து போ | தோற்று போ |
| தோத்துப்போனான் | தோற்றுப்போனான் |
| நஞ்ச | நைந்த / நஞ்சை |
| நடு | மையம் |
| நல்லா/ருக்கியா | நன்றாக/ இருக்கின்றாயா |
| நாத்து | நாற்று |
| நாலு | நான்கு |
| நாவற்பழம் | நாவல் பழம் |
| நாளக்கி | நாளைக்கு |
| நாற்றம் | நாத்தம் |
| நிக்கனும் | நிற்கனும் |
| நிண்ட | நின்ற |
| நிலா | நெலா |
| நினைவு | நெனப்பு |
| நின்னு | நின்று |
| நுகர்ந்து | மோந்து |
| நுங்கு | நொங்கு |
| நூத்தியொண்ணு | நூற்றியொன்று |
| நெத்தி | நெற்றி |
| நெனச்சு | நினைச்சு |
| நேத்து | நேற்று |
| நேற்றைக்கு | நேத்தக்கி |
| நொடுஞ்சு | நொடிந்து |
| நோக்கவும் | பாக்கவும் |
| பச்ச | பச்சை |
| படிக்கவில்லை | படிக்கல |
| படித்து | படிச்சி |
| பண்டி | பன்றி |
| பதட்டம் | பதற்றம் |
| பத்தி | பற்றி / பக்தி |
| பத்து | பற்று |
| பனமரம் | பனைமரம் |
| பன்றி | பன்னி |
| பாக்காத | பார்க்காத |
| பாத்தியா | பார்தாயா |
| பாத்து | பார்த்து |
| பார்த்து | பாத்து |
| பால் | பாலு |
| பிழைப்பு | பொழப்பு |
| பிள்ளை | புள்ளை |
| பிறகு | பொறவு |
| புத்து | புற்று |
| புள்ள | பிள்ளை |
| பூன | பூனை |
| பெண் பிள்ளை | பொம்பளை |
| பெத்து | பெற்று |
| பெத்துக்கோ | பெற்றுக்கொள் |
| பெயரன் | பேரன் |
| பெற்ற | பெத்த |
| பெற்ற குழந்தை | பெத்த கொழந்தை |
| பேசுங்க / சொல்லுங்க | கூறவும் |
| பேச்சு | ஏச்சு |
| பேத்தி | பெயர்த்தி |
| பேத்து எடு | பேற்று எடு |
| பையன்கள் | பயலுக |
| பொக / பொகை | புகை |
| பொணம் | பிணம் |
| போகிறேன் | போறேன் / போறன் |
| போவும் | போகும் |
| மசிர் | மயிற் |
| மட்டை | மட்ட |
| மந்த | மந்தை |
| மயிர் | மசுறு / மசிரு |
| மருத / மதுர | மதுரை |
| மற்றவன் | மத்தவன் |
| மற்றவை | மத்தது |
| மாங்காய் | மாங்கா |
| மாசம் | மாதம் |
| மாத்து | மாற்று |
| மாப்ள | மாப்பிள்ளை |
| மாரி | மாதிரி |
| முகம் | மூஞ்சி / முகற |
| முகர்ந்து | மோந்து |
| முடித்து | முடிச்சி |
| முடித்துவிடலாம் | முடிச்சிவுட்டுடலாம் |
| முடை | மொட |
| முத்தியது | முற்றியது |
| முந்தாநாத்து | முந்திய நாள் |
| முயல் | முசல் / மொசல் |
| முழங்கால் | மொழங்கால் |
| முறை | பொறை |
| முறைத்து | மொறச்சு |
| முற்றம் | முத்தம் |
| மூங்கி | மூங்கில் |
| மூடவும் | மூடு |
| மூண்டு | மூன்று |
| மூன்று | மூனு |
| மென்னு | மென்று |
| மைத்துனன் | மச்சினன் |
| மைத்துனி | மதினி, மைனி |
| மொற மாப்ள | முறை மாப்பிள்ளை |
| மொறைக்காத | முறைக்காதே |
| யப்பா | அப்பா |
| ரெண்டு | இரண்டு |
| வச்சது | வைத்தது |
| வட | வடை |
| வத்தி | வற்றி |
| வத்து | வற்று |
| வயறு / வைறு / வவுறு | வயிறு |
| வர்றேன் | வருகிறேன் |
| வற்றல் | வத்தல் |
| வாசி | படி |
| வாத்து | வார்த்து |
| வாச்சிருக்கு | வாய்த்திருக்கு |
| வெத | விதை |
| விசாலன் | வியாழன் |
| வெவரம் | விவரம் |
| வெளக்கு | விளக்கு |
| வித்தது | விற்றது |
| வூடு | வீடு |
| வெடுக்குனு | வெடுக்கென்று |
| வெக்கம் | வெட்கம் |
| வெள்ள | வெண்மை |
| வெத்தலை / வெத்திலை / வெத்தல | வெற்றிலை |
| வெத்து | வெற்று |
| வேஷ்டி | வேட்டி |
| வேத்து | வேற்று |
| வேல | வேலை |
| ஜடை | சடை |
| வடக்கால | வடக்கே |
| கெழக்கால | கிழக்கே |
| மேக்கால | மேற்கே |
| தெக்கால | தெற்கே |
| பக்கத்தால | பக்கத்தில் |
| எவுருனால | எவரால் |
| அவர்னால | அவரால் |
| யாருனால | யாரால் |
| கோழிகூப்பட | அதிகாலை, வைகறை |
| காத்தால / விடியால | காலை |
| மத்தியானம் | நண்பகல் |
| வெய்ய தாள | எற்பாடு |
| பொழுதோடா | மாலை |
| அந்தி | இரவு |
| சாமம் | யாமம் |
| அவனாட்ட | அவனை போல |
| அவனோட | அவனுடன் |
| தாட்டுமா | போதுமா |
| இக்கட்ட / இந்தாண்ட | இங்கே |
| ஆகாட்டி | ஆகாவிட்டால் |
| வரலீன | வரவில்லை என்றால் |
| ஒருக்கா | ஒருமுறை |
| மருக்கா | மீண்டும் ஒருமுறை |
| என்னனு | என்ன என்று |
| அக்கட்ட வீசு | தூக்கி எறி / வெளிய எறி |
| இத்தாச்சோடு | மிகப்பெரிய |
| எத்தாச்சோடு | எவ்வளவு பெரியது |
| எந்நேரமும் | எல்லா நேரமும் |
| அன்னாடும் | எல்லா நேரமும் |
| எத்தனீ / எத்தீனி | எத்தனை |
| வராட்டி | வரவில்லை என்றால்/வரலீன |
| இல்லாட்டி | இல்லனா |
| டீ வெக்கறேன் | டீ போடுறேன் |
| எந்நேர வருவீங்க | எந்த நேரத்தில் வருவீர்கள் |
| கிளிப் குத்து | கிளிப் மாட்டு |
| மாவு ஆட்டுவது | மாவு அரைப்பது |
| காபி கொட்டிருச்சு | காபி சிந்தீரிச்சு |
| இந்த நட நீயே போ | இந்த முறை/தடவை நீயே போ |
| பல் தேயு | பல் துலக்கு |
| விளக்கு போடு | விளக்கு ஏற்று |
| சாப்பாடு ஆக்கு | சாப்பாடு செய் |
| இங்க கீது வந்துராத | இங்கு எப்போதும் வராதே |
| அவத்தால | அங்கு |
| அப்பாலிகா, அப்பாலே | அப்புறம் |
| அந்தாண்ட | அங்கே |
| இந்தாண்ட | இங்கே |
| கீது | இருக்கிறது |
| கீறே | இருக்கிறாய் |
| இஸ்துகினு | இழுத்துக்கொண்டு |
| குந்து | உட்காருங்கள் |
| ஜோப்டா | எதற்கும் லாயக்கு இல்லாதவன் |
| டங்காமாரி | நிலையான சிந்தனையின்றி மாற்றிப் பேசுபவன் |
| பொற்டயா | ஒழுக்கமற்றவன் |
| சிக்கோன் | சிக்கல் |
| கீசீடுவேன் | கிழித்துவிடுவேன் |
| இட்டுகினு | கூட்டிக்கொண்டு |
| காண்டு | கோபம் |
| அட்டு | மோசமான |
| மெர்சு | பயம் |
| மெர்சல் | மிரட்சி |
| ஸீன் | வேறு பகுதிக்குப் போய் வம்பு செய்வது |
| மிட்டா | மிகவும்சி றப்பானது |
| மொக்க, சப்பை | நன்றாக இல்லை |
| கப்பு | துர்நாற்றம் |
| தபா | தடவ |
| டபாய்க்கிறது | ஏமாற்றுகிறது |
| கலாய்க்கிறது | கிண்டல் செய்வது |
| கம்மு | அமைதி |
| குஜ்ஜால்லு | மகிழ்ச்சி |
| நிஜாரு | கால் சட்டை |
| அபீடு | விரைவில் விட்டு |
| லோல்பட்டேன் | கஷ்டப்பட்டேன் |
| அக்கப்போர் | அகப்போர், உள்நாட்டுப் போர் |
| குண்டக்க மண்டக்க | குன்றுக்கும் மண்ணுக்குமான வேறுபாடு |
| குத்துமதிப்பு | அளவிடு பொருளை துலாக்கோல் இட்டு எடை போடாமல் குத்துயரத்தால் மதிப்பிடல் |
| வெஞ்சனம் | தொட்டுக்கொள்ள, வியஞ்சனம், துணை உணவு, Side Dish (ஆங்கில மொழியில்) |
| நூனாயம் பேசுறான் | நூல்நயம் பேசுகிறான் |
| அகராதி | எல்லாம் தெரிந்தவன் |
| கோளாறு தெரிஞ்சவன் | நுட்பம் அறிந்தவன் |
| லந்து | கிண்டல்(லொள்ளு) |
| வெஞ்சாமரம் | விளக்குமாறு |
| சீமைஎண்ணெய் | மண் எண்ணெய் |
| பலபட்டறை | தனித்தன்மை அற்றவன் |
| தொம்பறை | தொய்வான ஆடை |
| நொடியான சாலை | மேடு பள்ளம் உள்ள சாலை |
| நொக்கிப்பிட்டான் | நையப்புடைத்தான் |
| கூறு கெட்டவன் | பகுத்தறிவு கெட்டவன் |
| பட்டறைய போடுராங்ய | கூட்டமாக பேசுதல் |
| சீர் செனத்தி | பட்டியலிட்ட சீர்ப் பொருள் |
| கொண்டேபுடுவேன் | கொன்று விடுவேன் |
| பைய | மெதுவாக |
| செத்த நேரம் | கொஞ்ச நேரம்,சிறிது நேரம் |
| சீனி | சர்க்கரை |
| மண்டை | தலை |
| வெள்ளனே | சீக்கிரம், காலைலயே |
| கருக்கல் | சாயங்காலம் (6- 7 மணி) |
| உசுப்பு | எழுப்பு |
| வைய்யிரது | திட்டுவது |
| ஆணம் | குழம்பு |
| சாயா | டீ |
| ஒசக்க | மேலே |
| உறக்கம் | தூக்கம் |
| காண கதவடைக்க | பார்க்கும் பொழுது கதவை சாத்துவது |
| சாத்தி வை | ஓரமாக வைப்பது |
| வைவது | திட்டுவது |
| வசவு | திட்டுவது |
| தாயேன் | கேட்பது |
| ஊரணி | குளம்(ஊருணி) |
| அங்குட்டு | அங்கே |
| இங்குட்டு | இங்கே |
| எங்குட்டு | எங்கே |
| சோறு தின்டாச்சா | சாப்புட்டாச்சா |
| அப்படிதேஇருக்கு | நல்லா இருக்கு |
| அங்குட்டு நாடி | அந்தபக்கம் |
| கொல்லை | வீட்டின் பின் பக்கம் |
| கொலக்காடு | காலைக்கடமை முடிக்கும் இடம் |
| நல்லா ராகத்தா இருக்கு | நல்லா விசித்திரமா இருக்கு |
| குறுக்கு | இடுப்பு |
| தடுமம் பிடிச்சிருக்கு | சளி (ஜலதோஷம்) |
| சோகை | கரும்பில் தோகை |
| பகுமானம் | பெருமை பேசும்போது |
| வவுத்த வலிக்குது | வயிறு வலிக்குது |
| களவானிப்பைய | திருடன் |
| களவானி | திருடன் |
| களவாண்ட்டாங்கே | திருடிவிட்டார்கள் |
| களவு | திருட்டு |
| மச்சி வீடு | அறை உள்ள வீடு |
| எங்கணக்குள்ள? | எங்கே? |
| அலப்பறை | அலட்டல் |
| சூதானம் | ஜாக்கிரதை |
| நேக்கு | நுட்பம் |
| ரவைக்கு | இரவுக்கு |
| கோக்கு மாக்கான | விவகாரமான |
| நான் சொல்லுதேன் | நான் சொல்லுகிறேன் |
| அவன் நிக்கான் | அவன் நிற்கிறான் |
| நீங்க வருதியளோ? | நீங்கள் வருகிறீர்களோ? |
| நீ எப்ப வருத? | நீ எப்பொழுது வருகிறாய்? |
| முடுக்குது | நெருக்குகிறது |
| சொல்லுதான் | சொல்கிறான் |
| செய்தான் | செய்கிறான் |
| அண்ணாச்சி | பெரியோர்களை மரியாதையாக அழைப்பது |
| ஆச்சி | வயதான பெண்மணி |
| ஏல | நண்பனை அழைப்பது |
| மக்கா | நண்பா |
| கொண்டி | தாழ்ப்பாள் |
| சாரம் | லுங்கி |
| கோட்டி | மனநிலை சரியில்லாதவர் |
| வளவு | முடுக்கு, சந்து |
| சிரை | தொந்தரவு |
| சேக்காளி | நண்பன் |
| தொரவா | சாவி |
| மச்சி | மாடி |
| கொடை | திருவிழா |
| கசம் | ஆழமான பகுதி |
| ஆக்கங்கெட்டது | கெட்ட நேரம், சரியில்லாத ஆள் not constructive (a bad omen) |
| துஷ்டி | எழவு, சாவு, இறப்பு (funeral) |
| சவுட்டு | குறைந்த |
| கிடா | பெரிய ஆடு |
| செத்த நேரம் | கொஞ்ச நேரம் |
| குறுக்க சாய்த்தல் | படுத்தல் |
| பூடம் | பலி பீடம் |
| அந்தானிக்கு | அப்பொழுது |
| வாரியல் | துடைப்பம் |
| கூவை | ஆந்தை |
| இடும்பு | திமிறு |
| சீக்கு | நோய் |
| நொம்பலம் | தள்ளவும், தள்ளலாம் |
| கொட்டாரம் | அரண்மனை |
| திட்டு | மேடு |
| சிரிப்பாணி | சிரிப்பு |
| பாட்டம் | குத்தகை |
| பொறத்தால | பின்னாலே |
| மாப்பு | மன்னிப்பு |
| ராத்தல் | ஊர் சுத்துதல் |
| சோலி | வேலை |
| சங்கு | கழுத்து |
| செவி | காது |
| செவிடு | கன்னம் |
| சாவி | மணியில்லாத நெல், பதர் |
| மூடு | மரத்து அடி |
| குறுக்கு | முதுகு |
| வெக்க | சூடு, அனல் காற்று |
| வேக்காடு | வியர்வை |
| முகரை | முகம் |
| இங்கன | இங்கு |
| புரவாட்டி | அப்புறம் |
| பிளசர் | கார் |
| களவானி | திருட்டுப்பயல் |
| சட்டுவம் | கரண்டி |
| தொறவா | சாவி |
| கோதி வை | மொண்டு வை |
| அண்டிப் பருப்பு | முந்திரிப் பருப்பு |
| டுபாக்கூர் | ஏமாற்றுக்காரர் |
| நைனா | அப்பா |
| பேமானி | நாணயமற்றவர் |
| விசுகோத்து | ஈரட்டி |
| குச்சு, குந்து | இரு |
| துட்டு, டப்பு | பணம் |
| கலீஜு | அருவருப்பான |
| கஸ்மாலம் | அழுக்கு |
| யெகிரி | பாய் |
| பேஜாறு | பிரச்சனை |
| பிகர் | அழகான பெண் |
| கரெக்ட் | மடக்கிட்டான் |
| ஓ.ஸி | இலவசச் செலவு |
| ஜவாப்தாரி | பொறுப்பு |
| ரீஜென்ட் | நாகரீகமாக |
| நாஸ்தா | காலை உணவு |
| ஜல்தி | விரைவாக |