தமிழர் உணவு பெரும்பாலும் அரிசியைச் சார்ந்ததாகும். இப்பகுதியானது பல பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகளைக் கொண்டுள்ளது. தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்கள் உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. உணவின் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவை மசாலாப் பொருட்களின் கலவையால் அடையப்படுகிறது. பாரம்பரிய முறைப்படி, தரையில் அமர்ந்து, வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவை வலது கையினால் உண்ணுவதே வழக்கமாக இருந்தது. மத்திய உணவு சாம்பார், ரசம் மற்றும் பொரியல் ஆகியவற்றுடன் பரிமாறப்படுகின்றது. உண்ட பிறகு எளிதில் மக்கக்கூடிய வாழை இலைகள் கால்நடைகளுக்குத் தீவனமாக மாறும். வாழை இலையில் உண்பது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வழக்கமாகும், இது உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது, மேலும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. இட்லி, தோசை, ஊத்தப்பம், பொங்கல், மற்றும் பணியாரம் ஆகியவை தமிழ்நாட்டில் பிரபலமான காலை உணவுகளாகும். பழனி பஞ்சாமிர்தம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, ஊட்டி வரிக்கி, சேலம் ஜவ்வரிசி ஆகிவை புவிசார் குறியீடு பெற்ற உணவுகளாகும்.
உணவு என்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் தினமும் சாப்பிடும் உணவு நமக்குச் சக்தியை வழங்குகிறது, நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, மேலும் நல்ல ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
உணவின் வகைகள்
உணவின் முக்கியத்துவம்
நல்ல உணவுப் பழக்கம்
உணவு நமக்குத் தேவையான சக்தியை வழங்குகிறது, எனவே அதை வீணடிக்கக் கூடாது. உலகில் பலர் உணவுக்காகப் பாடுபடுகிறார்கள், அதனால் நம் உணவை மதிக்க வேண்டும். நமக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே எடுத்துக்கொண்டு, உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும்.