இலக்கியம் கட்டுரை

கம்பராமாயணம்

கம்பராமாயணம் – தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கம்பன் எழுதிய கம்பராமாயணம், இந்திய காவிய இலக்கியத்தின் ஆணி முடியாக விளங்கும் வால்மீகி ராமாயணத்தின் தமிழாக்கமாகும். கம்பன், வால்மீகியின் கதையைத் தழுவி, தமிழ் இலக்கிய மரபிலும், கலாச்சாரத்தில் பொருத்தமான வகையில் உருவாக்கினார்.

கம்பராமாயணம் கதை சுருக்கம்

திருமால், இராவணனை அழிக்க மனித அவதாரம் எடுக்கிறார். தசரதன்-கோசலையால் ராமன் பிறக்கிறார். தசரதனின் மற்ற மனைவிகளான கைகேயி, சுமித்திரைக்கு பரதன், இலக்குவன், சத்ருக்னன் ஆகியோர் பிறக்கின்றனர். விசுவாமித்திரர் இராமன், இலக்குவனை யாகத்தைப் பாதுகாக்க அழைத்துச் செல்கிறார். தாடகை மற்றும் மற்ற அரக்கர்களை இராமன் அழிக்கிறார்.

மிதிலையில் சீதையின் சுயம்வரத்தில், ராமன் சிவதனுசை உடைத்து சீதையை மணக்கிறார். தசரதன், இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்யத் திட்டமிட, கைகேயி, மந்தரையின் சூழ்ச்சியால், இராமனை வனவாசம் அனுப்பி, பரதனை அரசியாக்கச் செய்கிறாள்.

ராமன், சீதையுடன் இலக்குவனை அழைத்துக்கொண்டு காட்டிற்கு செல்கிறார். அங்குச் சூர்ப்பணகை, ராமனை காதலிக்கிறாள். அவளது மூக்கை இலக்குவன் அறுத்ததால், ராவணன் சீதையை கடத்திச் சென்று இலங்கையில் சிறையில் அடைக்கிறான்.

அனுமன், சீதையை கண்டுபிடித்து, இராமனின் செய்தியைக் கொடுக்கிறார். பிறகு, இராமன், வானரப் படையுடன் இலங்கைக்குச் சென்று, ராவணனை வீழ்த்தி, சீதையை மீட்கிறார். வீபீஷணனுக்கு இலங்கையை வழங்கி, ராமன் சீதையுடன் திரும்பி, பட்டாபிஷேகம் செய்கிறார்.

கம்பராமாயணம் தமிழில் அறத்தை, நயமான மொழிநடையையும், பாவனைகளையும் கொண்டு வந்த ஒரு மகத்தான காவியமாகும். கம்பன், ஒரு மாபெரும் தமிழ் கவிஞராகக் கருதப்பட்டு, இந்தக் காவியத்தின் மூலம் மனிதர்கள் எவ்வாறு தர்மவழியில் நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்துள்ளார்.