அளவைகள் (Measurements)
அளவைகள் (measures)
அளவைகள் பலவகை. மனிதர் முதன்முதலில் தம் உடலுறுப்புகளைத் தான் எண்ணவும் அளக்கவும் பயன்படுத்தினர்; இது இயல்பு.
எண்ணலளவை
எண்ணுவதற்குக் கைவிரல்கள் வசதியாய் இருந்தன: பத்து விரல் இருப்பதால் முதல் பத்தெண்களுக்கு ஒன்று இரண்டு எனப் பெயர் இட்டனர்; அதற்கு மேல் புதுப் பேர்கள் படைக்கவில்லை; பத்தை அடிப்படையாய்க் கொண்டே பதினொன்று (பத்து + ஒன்று), பதினாறு (10+6), பத்தொன்பது (10+9) எனவும் இருபது (இரு பத்து), முப்பது (மூன்று பத்து) எனவும் சொற்களை உருவாக்கினர்.
நீட்டலளவை:
ஒரு விரற்கிடை (விரல்க்கு இடை) என்பது ஓர் அளவை; ஒரு விரலின் தடிமன், ஒரு விரற்கிடை. நான்கு விரல்களைச் சேர்த்து நீட்டினால் சுட்டுவிரலுக்கு இப்புறமிருந்து சுண்டுவிரலுக்கு அப்புறம் வரை உள்ள தொலைவு, நான்கு விரற்கிடை.
ஐந்து விரல்களையும் அகல விரிப்போம்: கட்டை விரலின் நுனியிலிருந்து சுட்டுவிரலின் முனைவரை உள்ள தூரம் ஓர் ஒட்டை. கட்டை விரல் முனைக்கும் சுண்டுவிரல் முனைக்கும் இடையே உள்ள தொலைவு ஒரு சாண். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மனித வுடலின் அளவு எட்டு சாண், அவரவர் கையால். “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்பது பழமொழி; “எறும்புந் தன் கையால் எண் சாண்” என்றார் ஒரு புலவர்.
முழம்: யாவரும் அறிவர்; இரு கைகளையும் விரித்தால், அதாவது முடிந்தவரை அகற்றினால், இடக்கையின் நடுவிரல் நுனியிலிருந்து வலக்கை நடுவிரலின் முனைவரை உள்ள தூரம், ஒரு பாகம். காலைத் தரையில் ஊன்றினால் விரல்களுக்கும் குதிகாலுக்கும் இடையில் இருக்கிற தொலைவு ஓர் அடி. ஆங்கிலத்திலும் foot ஒரு நீட்டலளவை.
கையும் அளவையே. நாட்டு மருத்துவர்கள் தங்கள் செந்தூரம் முதலான தூள் மருந்துகளை ஒரு சிட்டிகை, அல்லது இரு சிட்டிகை (நோய்க்குத் தக்கவாறு) எடுத்துத் தேனில் குழைத்து நக்கச் சொல்வார்கள்; கட்டை விரல் நுனி, சுட்டுவிரல் நுனி இரண்டையும் இணைத்து அள்ளினால் கிடைக்கிற அளவு ஒரு சிட்டிகை மருந்து. நெல் முதலியவற்றைக் கையால் அள்ளினால் வருவது ஒரு கைப்பிடி; இதைத் திருக்குறள், ‘பிடித்து’ என்கிறது.
“பிடித் தெருவும்” (1037)
பிடித்து + எருவும்: ஒரு பிடியில் அடங்கிய உரமும்.
“கற்றது கைம்மண் அளவு” – நாலடியார்
உடலில் பாதி பாகம் இடுப்பு: ஆதலால் அதற்கு அரை என்ற பெயர் கிடைத்தது. அரைஞாண்: இடுப்பில் ஆண்கள் கட்டிக் கொள்கிற கயிறு; பேச்சு வழக்கில் அரணா (அரணாக் கொடி); இடுப்பிலிருந்து முழங்கால் வரை உடலில் கால் பாகம், எனவே கால் என்பது உறுப்பின் பெயராயிற்று.
இவ்வாறு பல அளவைகளாய் உடல் பயன்பட்டுள்ளது; இனித் தமிழரின் வேறு வகை அளவைகளைக் காண்போம்;
தொலைவை அளக்கும் அளவையின் அலகு, காதம். அது சுமார் 10 மைல். “நாகைக்கும் காரைக்கும் காதம், காரைக்கும் கடையூருக்கும் காதம், கடையூருக்கும் காழிக்குங் காதம்” என்று தஞ்சாவூர் மாவட்டத்தார் சொல்வது வழக்கம்.
“விகடராமன் குதிரை மாதம் போம் காத வழி” என்று கிண்டலடித்துள்ளார் காளமேகப் புலவர்.
அறிவு முதிர்ந்த பின்பு ஒன்றுக்குக் கீழும் எண்ணினர் (பின்னம்). அதற்குக் கீழ்வாய் இலக்கம் என்று பெயர். தொல்காப்பியருக்கு முந்தியே தமிழர்களுக்குப் பின்னங்கள் தெரியும்.
சில பின்னங்களுக்குப் பெயர் சூட்டிய பெருமை நம் முன்னோர்க்குண்டு:
1/80 = காணி
1/16 = வீசம் அல்லது மாகாணி
1/8 = அரைக்கால் (காலில் பாதி)
3/8 = காலே அரைக்கால் (காலும் அரைக்காலும்)
3/16 = மூன்று வீசம்
5/8 = அரையே அரைக்கால்
3/4 = முக்கால்
இவை சில எடுத்துக்காட்டு.
என் சிறு வயதில் இந்த வாய்பாடுகளை மனனம் செய்தல் வேண்டும்.
ஒரு மாகாணி மாகாணி
பத்து மாகாணி அரையே அரைக்கால்
நூற்று மாகாணி ஆறே கால்
இரு மாகாணி அரைக்கால்
என்று வாய்விட்டுச் சொல்லிக் கற்க வேண்டும்.
வகுத்தலையும் பெருக்கல் வாய்பாடு கொண்டே செய்தனர்.
Length = நீளம்
மேசையின் நீளம் 5 அடியாகும்.
Width = அகலம்
கதவின் அகலம் 3 அடியாகும்.
Height = உயரம்
கட்டிடத்தின் உயரம் 50 மீட்டர்.
Depth = ஆழம்
ஏரியின் ஆழம் 20 அடி.
Distance = தூரம்
இரு நகரங்களுக்குமிடையிலான தூரம் 100 கிலோமீட்டர்.
Thickness = தடிமன்
கண்ணாடியின் தடிமன் 5 மில்லிமீட்டர்.
Range = வரம்பு
வயர்லெஸ் சிக்னலின் வரம்பு 50 மீட்டர்.
Area = பரப்புபளவு
வயலின் பரப்புபளவு 2 ஏக்கர்.
Surface = மேற்பரப்பு
நீரின் மேற்பரப்பு அமைதியாக இருக்கிறது.
Volume = கொள்ளளவு
கன்செய்னரின் கொள்ளளவு 10 லிட்டர்.
Size = அளவு
சட்டையின் அளவு நடுத்தரமாகும்.
Bulk = மொத்தமாக
அவர் பொருட்களை மொத்தமாக வாங்கினார்.
Quantity = அளவு
தேவைப்படும் சர்க்கரையின் அளவு 2 கிலோ.
Amount = தொகை
செலவிட்ட தொகை $50.
Weight = எடை
பெட்டியின் எடை 10 கிலோ.
Duration = கால அளவு
கூட்டத்தின் கால அளவு 2 மணி நேரம்.
Period = காலம்
திட்டத்தின் காலம் 6 மாதங்கள்.
Interval = இடைவெளி
இரண்டு அமர்வுகளுக்கு இடையே 15 நிமிட இடைவெளி உள்ளது.
Speed = வேகம்
கார் செல்படைகின்ற வேகம் 80 கிலோமீட்டர் प्रति மணி.
Temperature = வெப்பநிலை
இன்று வெப்பநிலை 30°C ஆகும்.
Heat = வெப்பம்
சூரியனின் வெப்பம் மிகுந்தது.
Cool = குளிர்ச்சி
குளிர்ந்த தென்றல் புத்துணர்ச்சியளிக்கிறது.
Rotation = சுழற்சி
பூமியின் சுழற்சிக்கு 24 மணி நேரம் ஆகிறது.
Turn = திருப்பு
அடுத்த சிக்னலில் இடது திருப்பு எடுக்கவும்.
Proportion = விகிதம்
உப்பு மற்றும் நீரின் விகிதம் சரியாக இருக்க வேண்டும்.
Level = நிலை
தொட்டியில் உள்ள நீரின் நிலை குறைவாக உள்ளது.