வாழ்வியல் கட்டுரை

மதிக்கை (மரியாதை) மரபுகள் (Respect Traditions)

தமிழ் மொழியில் மரியாதையை வெளிப்படுத்தச் சொற்கள் முக்கியம்.

வயதில் குறைந்தவர்களிடம் பேசும்போது நட்பான மற்றும் எளிமையான சொற்களில் பேசலாம்.

ஆனால், வயதில் மூத்தவர்களோடு அல்லது அதிகார நிலையில் உள்ளவர்களோடு பேசும்போது,

மரியாதை மிகுந்த சொற்களில் மட்டுமே பேச வேண்டும்.

சரியான சொற்களைச் சரியான சூழலில் பயன்படுத்துவது,

மொழியின் இனிமையும் மரபுகளும் பாதுகாக்க உதவும்.

.  

பெரியவங்கள நீ, வா, போ என்று மரியாதை இல்லாமல் பேசக் கூடாது என்று கூறுவார்கள்.

அப்படி என்றால், எப்படி கூற வேண்டும்  என்பதன் பட்டியல் கீழே.

மதிப்பற்றவை மதிப்புமிக்கவை – ங்க
நீ நீங்கள்
வா வாங்க
போ போங்க
அவள் அவங்கள்
அவன் அவங்கள்
இவள் இவங்கள்
இவன் இவங்கள்
உட்காரு உட்காருங்கள்
உனக்கு உங்களுக்கு
உன் உங்கள்
உன்னால் உங்களால்
உன்னிடம் உங்களிடம்
உன்னை உங்களை
உன்னோட உங்களோட
குடி குடிங்க
கேளு கேளுங்க
சரி சரிங்க
சாப்பிடு சாப்பிடுங்க
செய் செய்யுங்கள்
சொல்லு சொல்லுங்க
சொல்றியா சொல்றீங்களா