நான் தமிழன்/தமிழச்சி. எனது தாய்மொழி தமிழ். உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று. இன்றும் வாழும் மிகப் பழமையான மொழிகளில் எனது தாய் மொழிகளில் தமிழும் ஒன்று.
நாங்கள் இனத்தால் தமிழர்கள். உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை. இருந்தாலும் இந்திய தமிழ்நாட்டில், தமிழ்நாட்டை சுற்றியுள்ள மாநில எல்லையோர பகுதிகளிலும், இலங்கை ஈழத்திலும் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள்.
அது மட்டும் அல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், ரியூனியன், ஆப்பிரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மியான்மார், நார்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் பெருமளவில் வாழ்கின்றார்கள்.
உலகில் கிட்டத்தட்ட 12 கோடி தமிழர்கள் வாழ்கின்றோம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பஞ்சத்தின் காரணமாக ஆப்பிரிக்க போன்ற பல நாடுகளில் குடியேறிய தமிழர்கள் பலரின் மக்கள் தொகை இதுவரை கணக்கிடப்படவில்லை.
தமிழர்களுக்கென்று தனித்த வழிபாட்டு வழிமுறைகள் இருக்கின்றன. பெரும் தெய்வ வழிபாடுகளைவிட குலதெய்வ வழிபாடுகள் தமிழர்களிடம் முக்கியமானது.
தமிழர் வாழும் நிலப் பகுதியில் பல்வேறு அகழ்வாராய்ச்சி தளங்கள் பல இருக்கின்றன. அவைகள் மேகாலித் காலகட்டம் முதல், இரும்பு காலம், உலோக காலம், நவீன வரலாற்று காலம் வரை பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றது.
இந்தியாவின் தொல்பொருள் கல்வெட்டு இலக்கியம் போன்றவற்றில் 60% தமிழ்மொழிக்கு சொந்தமானது தமிழில் சங்க காலம் முதல் நவீன காலம் வரை பல்வேறு இலக்கியங்கள் கிடைக்கின்றது.
இந்தியாவின் மூத்த இனமாக தமிழினம் இருக்கின்றன.
தமிழ் மொழியில் இருந்து பல்வேறு மொழிகள் பிறந்து இருக்கின்றன. அதற்கு சான்றாக இன்றும் அந்த மொழிகளில் தமிழ் சொற்கள் புதைந்து இருக்கின்றன.
தமிழர்கள் தங்களுக்கென்று அரசு, போர்க்கலை, இசை, நடனம், கட்டிடக்கலை, நாடகம், திரைப்படம் என்று தனித்து வைத்து இருக்கின்றார்கள்.
மைக்ரோசாப்ட் கூகுள் போன்ற பல்வேறு பெரு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.