பாடல் கட்டுரை

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்துப்பாடல்
 
நீண்ட நீண்ட காலம்
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
 
அன்பு வேண்டும்
அறிவு வேண்டும்
பண்பு வேண்டும்
பணிவுவேண்டும்
 
எட்டு திக்கும்
புகழ வேண்டும்
எடுத்துக்காட்டு
ஆக வேண்டும்
 
உலகம் பார்க்க
உனது பெயரை
நிலவுத்தாளில்
எழுத வேண்டும்
 
சர்க்கரை தமிழள்ளி
தாலாட்டு நாள்சொல்லி
வாழ்த்துகிறோம்
 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்