தமிழ் மொழிக்குடும்பம்
தமிழ் மொழிக்குடும்பம் (Tamil Language Family)
தமிழ் மொழிகள் பெரும்பாலும் தென்னாசியாவில் பேசப்படும் 86 மொழிகளை உள்ளடக்கிய ஒரு மொழிக் குடும்பமாகும். இம்மொழிகளை 215 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசுகின்றனர். இவை தெற்கு, தென்-மத்தி, மத்தி, வடக்கு என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நான்கு மொழிகளும் முறையே தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் அலுவல் மொழிகளாகத் திகழ்கின்றன.
தென்னிந்திய மொழிகள்பற்றி ஆராய்ந்து, \’தமிழ் அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஓர் ஒப்பிலக்கணம்\’ என்ற நூலை 1856-இல் எழுதிய இராபர்ட்டு கால்டுவெல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த வேறு சில மொழிகளையும் சேர்த்து, அவற்றைச் சுட்டுவதற்காக \’தமிழ் மொழிக்குடும்பம்\’ என்ற சொல்லை உருவாக்கினார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், தமிழ் மொழிகளைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகித்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கி வருவதை எடுத்துக்காட்டினர்.
வரலாறு
பொ.ஊ.மு. 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் தமிழ் மொழிகளே வழங்கி வந்தன என்பது பல ஆய்வாளர்களது கருத்து. தமிழ் மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரசுவதி – சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் தமிழ் நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அரப்பா, மொகஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய தமிழ் மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால், பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
தமிழ் மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
தென் தமிழ்
தென்-நடுத் தமிழ்
நடுத் தமிழ்
வட தமிழ்
வகைப்படுத்தப்படாதவை
என்பனவாகும்.
இவற்றுள் தென் தமிழ் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் தமிழ் பிரிவில் 21 மொழிகளும், நடுத் தமிழ் பிரிவில் 5 மொழிகளும், வட தமிழ் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் தமிழ் பெருமொழிகளாகும். தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினர்.