பாடல் கட்டுரை

அகவணக்கம் – வீரவணக்கம் – உறுதிமொழி

அகவணக்கம் – வீரவணக்கம் – உறுதிமொழி

அகவணக்கம்

தாயக விடுதலைக்காக,
உயிர்நீத்த தாய்த்தமிழ் உறவுகளுக்கும்
இனப்பற்றாளர்களுக்கும் அகவணக்கம்.

வீரவணக்கம்

நம் மொழி காக்க,
நம் இனம் காக்க
நம் மண் காக்க,
நம் மானம் காக்க
இன்னுயிர் ஈந்த
மாவீரர் அனைவருக்கும்
வீரவணக்கம்! வீரவணக்கம்!

உறுதிமொழி

மொழியாகி எங்கள் மூச்சாகி,
முடிசூடும் எம் தமிழ் மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும்
தமிழர் வரலாற்றின் மீதும் உறுதி!

விழிமூடித் துயில்கின்ற
வீரவேங்கைகள் மீதும் உறுதி

இனிமேலும் ஓயோம் இழிவாக வாழோம்!
உறுதி! உறுதி!

வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை!
கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை!

வென்றாக வேண்டும் தமிழ்!
ஒன்றாக வேண்டும் தமிழர்!

தமிழால் இணைந்து
நாம் தமிழராய் நிமிர்வோம்!

நாம் தமிழர்!
நாம் தமிழர்!
நாம் தமிழர்!