பாடல் கட்டுரை

நன்னாள் உறுதிமொழி

நன்னாள் உறுதிமொழி
 
 
 
நான் தமிழன்
தமிழ் தெரிந்த தமிழரிடம்
இனி தமிழில் தான் பேசுவேன்
ஆங்கிலம் போன்ற பிறமொழி
கலப்பின்றி தமிழை பேசுவேன்
பிறர் கேலி செய்தாலும் ஒதுக்கினாலும்
நான் தமிழில் தான் பேசுவேன்
ஆயிரமாயிரம் தலைமுறை வழிவந்த தமிழை
எனது தலைமுறையில் அழிய விடமாட்டேன்
எம்தமிழை அடுத்த தலைமுறைக்கு
செம்மையாகக் கடத்துவேன்
தமிழே எனது முதல் முகவரி
இதுவே எனது உறுதிமொழி