வாழ்வியல் கட்டுரை

ஓகம் (Yoga)

தமிழரின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் அறிவியல் மேன்மைக்கும் கலங்கரை விளக்கமாக நிற்பது ஓகக்கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையான இந்த “ஓகக்கலை”
தமிழர்களிடமிருந்து களவாடப்பட்ட அறிவுசார் கலைகளின் முதன்மைப் பட்டியலில் அடங்கும்.
ஒன்றித்தல், ஒன்றுதல், ஒருக்குதல் என்ற சொற்களின் அடியாகப் பிறந்ததே ஓகம் எனும் சொல்லாகும்.

ஓகம் என்றால், ஒன்று மற்றொன்றுடன் இணைதல்; கலத்தல்; ஒன்றுதல்.

இரண்டாகப் பிரிந்து கிடப்பவை ஒன்றாக இணைவது ‘ஓகம்’ என்று பொதுவில் வரையறுக்கப்படும். இரண்டாகப் பிரிந்து கிடக்கும் நமது உள்ளத்தையும் உடலையும் ஒன்றிணைக்க சித்தர்கள் கையாண்ட வழியே ஓகக்கலை.

பொறி புலன்கள், மனம் முதலிய கரணங்கள் போன்றவற்றால் அமைந்த மெய்க்கூறுகளின்வழி வெளிமுகமாக உயிர்ப்பையும் ஆற்றலையும் வீணடிக்காமல் உள்முகமாகத் திருப்பி ஒருக்குவது ஓகம். அலை பாயும் மனதை அலையாமல் ஒருமுகமாக நேர்வழிப்படுத்தும் செயலே ஓகம்

‘ஓகம்’ என்ற தமிழ்ச் சொல்லே திரிக்கப்பட்டு யோகா ஆனது.

ஓகம் > யோகம் > யோகா.

உகு > ஒகு > ஒக்கு
ஒக்கு + தல் > ஒக்குதல் = ஒத்தல், ஒத்திருத்தல், ஒன்றாதல், ஒருமித்தல்.
உகு > ஒகு > ஓகு > ஓகம் .

ஓகம் – ஒன்றிணைந்து கிடத்தல் (to unite or to fuse together as in a sexual intercourse).

ஓக்க / ஓக்குதல் என்ற அழகு தமிழ்ச்சொல்லை (கெட்ட வார்த்தையாக) இடக்கான சொல்லாகப் பதிவில் ஏறிவிட்ட காரணத்தால் இச்சொல்லின் கவனம் விலகி புழக்கத்திலிருந்தே ஒதுக்கப்பட்டுவிட்டது.

ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம். தவம் செய்வதின் முதன்மை நோக்கம் மனதை ஒருநிலைகொள்ளச் செய்வதே !

துக்கடா : அகரம் யகரமாதல் ,
ஆனை > யானை ஆகத் திரிவது தமிழின் வழமையே!

ஓகம் யோகம் என மாறி வடமொழியில் “யோகா\’ ஆனது.

இதே வகையில் வடமொழியில் திரிக்கப்பட்ட பிற தமிழ்ச் சொற்கள்.

ஆகம் > யாகம் > யாக்னா
ஆத்திரை > யாத்திரை > யாத்ரா.
ஆதவன் > யாதவ்
உகம் > யுகம் > யுக்
உவன் > யுவன்.
உவதி > யுவதி.
உத்தி > யுத்தி > யுக்தி.
ஊகம் > யூகம்
ஓசனை > யோசனை.