அன்னை பூபதி பாடல்
வாழிய பூபதி தமிழ்க் கலைக்கூடம்
வையகம் போற்றிட வளர்மதி எனவே
வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
ஈழத்தின் வெளியே இலங்கிடும் கலையகம்
இளையவர் நாமும் ஏற்றிடும் அறிவகம்
அன்பும் அறனும் பண்பும் பயில்வோம் – நாளும்
நாம் தமிழரென மார்தட்டிச் சொல்வோம்
வாழிய பூபதி தமிழ்க் கலைக்கூடம்
வையகம் போற்றிட வளர்மதி எனவே
வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
புல்நுனி மீது வெண்பனி போர்த்தும்
நடுநிசிச் சூரியன் நாணிச் சிவக்கும்
நேரிய நோர்வே நன்நிலந்தன்னில் – எம்
முத்தமிழ் கலைக்கூடம் முகிழ்த்தது வாழி
வாழிய பூபதி தமிழ்க் கலைக்கூடம்
வையகம் போற்றிட வளர்மதி எனவே
வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
பாலகர் வதனம் பரவசம் காட்டும்
பாருக்குள் எம்இனம் பார் என்றழைக்கும்
தாய்மொழி தமிழ்மொழி தழைக்கும் – இங்கு
தளிர்விட்ட கலைகள் சாதனை செய்யும்
வாழிய பூபதி தமிழ்க் கலைக்கூடம்
வையகம் போற்றிட வளர்மதி எனவே
வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
அன்னை பூபதி பாடல் கலவை
அன்னை பூபதி பாடல் இசை
அன்னை பூபதி பாடல் சுருக்கம்