சுட்டு எழுத்துகள்
ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதற்குப் பயன்படும் எழுத்தே சுட்டு எழுத்துகள் என்பர். அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.
அங்கு, இங்கு, அவள், இவள், அவன், இவன், அந்த, இந்த
அ = அந்தப்பையன், அவ்வீடு, அம்மரம், அது
இ = இந்தப்பக்கம், இவ்வுலகம், இம்மலை, இது
உ என்னும் சுட்டு எழுத்து தற்கால வழக்கில் பயன்படுத்துவதில்லை.
| அ | இ | உ |
| அங்கே | இங்கே | உங்கே |
| அது | இது | உது |
| அதோ | இதோ | உதோ |
| அந்தா | இந்தா | உந்தா |
| அவர் | இவர் | உவர் |
| அவர்கள் | இவர்கள் | உவர்கள் |
| அவள் | இவள் | உவள் |
| அவங்க | இவங்க | உவங்க |
| அவன் | இவன் | உவன் |
| அவை | இவை | உவை |
| அவ்விடம் | இவ்விடம் | உவ்விடம் |
.
| என் | உன் |
| எம் | உம் |
| எமது | உமது |
| தமது | நுமது |
| தன் | நின் |
.
| யான் | யாம் | நாம் |
| எங்கள் | தாங்கள் | உங்கள் |
| தான் | தாம் | தாங்கள் |
.
| நம் | நும் | நீம் |
| நாங்கள் | நீங்கள் | நீர்கள் |
| நான் | நீ | நுன் |
| நீயிர் | நீவிர் | நீவிர்கள் |
| நீர் | நமது | நீயிர்கள் |