வினைச்சொல் – ஒரு பொருளின் செயலைக் குறிக்கும் சொல்லுக்கு வினைச்சொல் என்று பெயர்.
(எ.கா.) அம்மா அழைக்கிறாள், பாப்பா வருகிறாள், நிலம் அதிர்ந்தது, நீர் ஓடுகிறது, அலை வருகிறது
தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது.
பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.
|
தன்வினை |
பிறவினை |
|
வருந்துவான் |
வருந்துவான் |
|
திருந்தினான் |
திருத்தினான் |
|
அடங்கினான் |
அடக்கினான் |
|
ஆடினான் |
ஆட்டினான் |
|
மாறுவான் |
மாற்றுவான் |
செய்வினை – செயப்பாட்டுவினை
| செய்வினை | செயப்பாட்டுவினை |
| ஆசிரியர் புத்தகத்தை எழுதினார் | புத்தகம் ஆசிரியரால் எழுதப்பட்டது |
| ஆசிரியர் மாணவர்களுக்குக் கற்பித்தார் | மாணவர்கள் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டனர் |
| உழவன் நிலத்தை உழுதான் | நிலம் உழவனால் உழப்பட்டது |
| கன்று பால் குடித்தது | பால் கன்றால் குடிக்கப்பட்டது |
| தம்பி பேனையை எடுத்தான் | பேனை தம்பியால் எடுக்கப்பட்டது |
| நான் மாம்பழத்தை உண்டேன் | மாம்பழம் என்னால் உண்ணப்பட்டது |
| பசுப் புல் மேய்ந்தது | புல் பசுவால் மேயப்பட்டது |
உடன்பாட்டுவினை – எதிர்மறைவினை
| உடன்பாடு +ம் |
எதிர்மறை +ஆது |
| ஆடும் | ஆடாது |
| ஓடும் | ஓடாது |
| பாடும் | பாடாது |
| சுடும் | சுடாது |
| குளிரும் | குளிராது |
முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். (எ.கா.) வந்தான்,
முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும். (எ.கா.) வந்த பையன், உண்ட குதிரை, ஓடி வந்தது
வந்தான் – வினைமுற்று
வந்த மாணவன் – பெயரெச்சம்
வந்து விழுந்தான் – வினையெச்சம்