.
தமிழர்கள் பழங்காலம் தொற்றே, கடல் வழி, கால் வழி என்று உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார்கள்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறியோர், பிற இனத்தவருடன் கலந்துவிட்டனர்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு கணியன் பூங்குன்றன் எழுதிய “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” பாடல், அனைவரும் நம்முடைய உறவினர்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.
சங்ககாலத்தில், தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கு நாடுகளுக்கு மெய்யியல் சித்தாந்தம் பரப்பத் தமிழர்கள் பயணித்துள்ளார்கள். கடலில், கப்பல் வழி வணிகம் செய்யத் தமிழர்கள் உலகெங்கும் பயணித்துள்ளார்கள்.
வெள்ளைக்காரர்களின் ஆட்சியில், செயற்கை பஞ்சத்தின் காரணமாக ஆப்பிரிக்கா, ரியூனியன் போன்ற நாடுகளுக்கு வேலைகளுக்காக இடம் பெயர வைக்கப்பட்டார்கள்.
பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வணிகம் மற்றும் வேலைக்காக 200 வருடங்களுக்கு முன்பாகவே இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளாக நடந்த ஈழப் போராட்டத்தின் காரணமாகப் பெரும்பாலான தமிழர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இறுதியாக, உலகமயமாக்களின் காரணத்தினால் நன்கு கல்வி கற்ற, அறிவில் சிறந்த தலைமுறைகள் பலர், உலகின் பெரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகப் புலம் பெயர்ந்து உள்ளார்கள்.
தமிழர் மக்கள் தொகை மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மத்திய கிழக்கு, ரியூனியன், தென்னாபிரிக்கா, மொரிசியஸ், சீசெல்சு, பிஜி, கயானா, மியான்மர், டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரான்சிய மேற்கிந்தியத் தீவுகள், ஐரோப்பா, அவுத்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர்.
இந்தியாவில் பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். தமிழகத்தின் எல்லைகள் அமைக்கப்பட்டபோது, சில பகுதிகள் பக்கத்து மாநிலங்களுக்கு இணைக்கப்பட்டதால், எல்லை பகுதிகளில் தமிழர்கள் சிறுபான்மையாக உள்ளனர். அதற்கும் மேலாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நாம் உலகத் தமிழர்கள் என்று பெருமை கொள்வோம்.