நிலை 5 கட்டுரை

தமிழ் கோவில்கள் ⭐

 

தமிழ் கோவில்கள்

.

தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகச் சிறப்பான சான்றுகளாக நம் கோவில்கள் இன்றும் நிலைத்திருக்கின்றன. இன்றைய காலத்தில் கோவில்கள் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும், பண்டைய காலங்களில் இது மக்கள் கூடும் இடம், மருத்துவ சிகிச்சை மையம், பேரிடர்கள் வரும்போது பாதுகாப்பான அடைக்கலமாகவும், கலை நிகழ்வுகள் நடக்கும் தளமாகவும் இருந்தது.

தமிழ் கோவில்களின் கட்டமைப்பில் பெரிய மதில் சுவர்கள் சுற்றி இருக்கும், மேலும் மையத்தில் மிக உயர்ந்த கோபுரம் (ராஜகோபுரம்) இருக்கும். அந்தக் கோபுரத்தின் உச்சியிலிருந்து நேர் கீழே காணக்கூடியது கருவறை, இது கோவிலின் மையக் கட்டுமானம் ஆகும். கருவறையில் உள்ள தெய்வச் சிலை கோவிலின் பிரதான இறைவனாகக் கருதப்படுகிறார்.

கோவிலில் பல்வேறு கடவுள்களின் சிலைகள் இருந்தாலும், கருவறையில் உள்ள தெய்வம் கோவிலின் பிரதான கடவுளாக மதிக்கப்படுவார். இறைவனுக்குப் பூசை செய்யும் பொறுப்பைப் பூசாரிகள் ஏற்கின்றனர், அவர்கள் மக்களின் பெயர், ராசி, நட்சத்திரங்களைக் கேட்டு இறைவனிடம் அர்ச்சனை செய்து மக்களுக்கு ஆசீர்வாதம் கேட்பர்.

கோவிலின் சுற்றுப்புற சுவரில் நான்கு பக்கமும் கதவுகள் (வாசல்கள்) இருக்கும். அவற்றை வடக்கு வாசல், கிழக்கு வாசல், தெற்கு வாசல், மேற்கு வாசல் என்று அழைப்பர். மதில் சுவர் மற்றும் கோவில் இடையே நடந்து செல்லும் பாதை இருக்கும், பொதுவாக மக்கள் இந்தப் பாதையில் கோவிலை மூன்று முறை சுற்றிவருவது வழக்கமாகும்.

கோவில்களில் குளம் அல்லது கிணறு போன்ற நீர்நிலைகளும் இருக்கும், மேலும் ஒவ்வொரு கோவிலுக்கும் தங்கள் குறிப்பிட்ட தலமரம் இருக்கும். கோவில் வாசலில் பலிபீடம், கொடிமரம், மண்டபம், மற்றும் நந்தி சிலை போன்றவை இருக்கின்றன.

மக்கள் தங்கள் காணிக்கையை இறைவனுக்கும் கோவிலுக்கும் கொடுக்க உண்டியல் இருக்கும். மேலும், பெரும் கோவில்களுக்குத் தனி தேர் இருக்கும். கோவில் திருவிழா காலங்களில், அந்தத் தேரில் மையக் கடவுளின் சிலையை ஏற்றி ஊருக்கு உலா வருவார்கள்.

தமிழ் கோவில்கள் கட்டுமானத்தில் மட்டுமல்ல, நம் பண்பாட்டின் தத்துவம், கலை, கலாசாரம் ஆகியவற்றின் பூரண சிந்தனையையும் பிரதிபலிக்கின்றன.

 

தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மாபெரும் சான்றாக இன்றும் நிலைத்து நிற்பவை கோவில்களே.

கோவில்கள் இன்றைய நாளில் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும், பண்டைய காலத்தில் இது மக்கள் கூடும் இடமாக, மருத்துவ கூடமாக, பேரிடர்கள் வரும்போது அடைக்கல இடமாக, கலை நிகழ்வுகளின் தளமாக எனப் பல்வேறு பயன்பாட்டிற்கும் இருந்துள்ளது.

கோவில்களின் கட்டமைப்பு பெரும் மதில் சுவர்களால் சூழப்பட்டிருக்கும், மையப்பகுதியில் வானுயிர கோபுரம் இருக்கும். அந்தக் கோபுரத்தின் உச்சிக்கு நேர் கீழாகக் கடவுளின் சிற்பமுள்ள கருவறை இருக்கும்.

கோவிலில் பல்வேறு கடவுள்கள் இருந்தாலும், கருவறையில் இருக்கும் கடவுளே, கோவிலின் மையக் கடவுளாக கருதப்படுவார்.

கோவிலில் இறைவனுக்கு பூசை செய்ய பூசாரிகள் இருப்பார்கள். மக்களின் பெயர் ராசி, நட்சத்திரங்களை கேட்டு இறைவனிடம் மக்களுக்காக அர்ச்சனை செய்வார்கள்.

கோவிலின் சுற்றுப்புற சுவரில் நான்கு பக்கமும் கதவுகள் இருக்கும். அதனை வடக்கு வாசல் கிழக்கு வாசல் தெற்கு வாசல் மேற்கு வாசல் என்று அழைப்பர்.

மதில் சுவருக்கும், கோவிலுக்கும் இடையே நடந்து செல்லும் பாதை இருக்கும். மக்கள் பொதுவாகக் கோவிலை மூன்று முறை இந்தப் பாதையில் சுற்றி வருவார்கள்.

கோவிலில் குளம் கிணறு போன்ற நீர்நிலைகளும் இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்கும் பெரும் தலை மரம் இருக்கும்.

பலிபீடம், கொடிமரம், மண்டபம், நந்தி சிலை போன்றவை கோவிலில் வாசல் வழியில் இருக்கும்.

மக்கள் தங்கள் காணிக்கையை இறைவனுக்கும் கோயிலுக்கும் கொடுக்க எல்லா கோவிலிலும் உண்டியல் இருக்கும்.

கோவிலுக்கு என்ற பெரிய தேர் இருக்கும் கோவில் திருவிழா காலங்களில் கருவறையில் இருக்கும் கடவுள் சிலையைத் தேரில் வைத்து ஊரைச் சுற்றி உலா வருவார்கள்.

கோவில்களில் பூசைக் காலங்களில் அடிக்கப் பெரிய ஆலயமணி நிறுவப்பட்டிருக்கும். இந்த மணியின் நாக்கோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு நீண்டக் கயிற்றை விட்டுவிட்டு இழுத்து, பூசைக் காலங்களில், மங்களகரமான ஒலியை எழுப்புவர்.