இயல்புப் புணர்ச்சி என்பது சொற்களோ அல்லது சொல்லின் உறுப்புகளோ எவ்வித மாற்றமும் இல்லாமல் இயல்பாக வரும் சொற் புணர்ச்சி வகை ஆகும்.
மண் + வெட்டி = மண்வெட்டி
எமது + நாடு = எமதுநாடு
கண் + கூடு = கண்கூடு
விண் + கலம் = விண்கலம்
பூண் + கலன் = பூண்கலன்
சாண் + கயிறு = சாண்கயிறு
| 1 | எமது | + | நாடு | = | எமதுநாடு |
|---|---|---|---|---|---|
| 2 | கண் | + | கூடு | = | கண்கூடு |
| 3 | கண் | + | சிமிட்டு | = | கண்சிமிட்டு |
| 4 | கூன் | + | பிறை | = | கூன்பிறை |
| 5 | சாண் | + | கயிறு | = | சாண்கயிறு |
| 6 | தென் | + | கடல் | = | தென்கடல் |
| 7 | தென் | + | புலம் | = | தென்புலம் |
| 8 | தேன் | + | கூடு | = | தேன்கூடு |
| 9 | பூண் | + | கலன் | = | பூண்கலன் |
| 10 | மண் | + | சரிவு | = | மண்சரிவு |
| 11 | மண் | + | புழு | = | மண்புழு |
| 12 | மண் | + | வெட்டி | = | மண்வெட்டி |
| 13 | மாண் | + | புகழ் | = | மாண்புகழ் |
| 14 | மான் | + | சாயல் | = | மான்சாயல் |
| 15 | மின் | + | குமிழ் | = | மின்குமிழ் |
| 16 | மின் | + | சுடர் | = | மின்சுடர் |
| 17 | மீன் | + | சினை | = | மீன்சினை |
| 18 | முன் | + | பனி | = | முன்பனி |
| 19 | வன் | + | சிறை | = | வன்சிறை |
| 20 | வான் | + | கலம் | = | வான்கலம் |
| 21 | வான் | + | புகழ் | = | வான்புகழ் |
| 22 | விண் | + | கலம் | = | விண்கலம் |
| 23 | வீண் | + | சண்டை | = | வீண்சண்டை |
| 24 | வீண் | + | பழி | = | வீண்பழி |
| 25 | வெண் | + | சிறகு | = | வெண்சிறகு |
| 26 | வெண் | + | பனி | = | வெண்பனி |
| 27 | நாள் | + | கடந்து | = | நாள்கடந்து |
| 28 | மீள் | + | பார்வை | = | மீள்பார்வை |
| 29 | நூல் | + | படித்து | = | நூல்படித்து |
| 30 | கால் | + | பிடித்து | = | கால்பிடித்து |
| 31 | பண் | + | ஞயம் | = | பண்ஞயம் |
| 32 | பொன் | + | ஞாண் | = | பொன்ஞாண் |
| 33 | கண் | + | மை | = | கண்மை |
| 34 | தேன் | + | மழை | = | தேன்மழை |
| 35 | மண் | + | யாக்கை | = | மண்யாக்கை |
| 36 | கான் | + | யாறு | = | கான்யாறு |
| 37 | விண் | + | வலம் | = | விண்வலம் |
| 38 | பொன் | + | வளை | = | பொன்வளை |