எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி
வருமொழியில் எண்ணல் அளவைப் பெயர் (எண்ணுப்பெயர்) நிறுத்தல் அளவைப் பெயர், முகத்தல் அளவைப் பெயர், நீட்டல் அளவைப் பெயர் ஆகிய பெயர்களும், பிற பெயர்களும் வந்தால், நிலைமொழியில் உள்ள ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களில் சில விகாரங்கள் ஏற்படும்.
தமிழில் எழுதப்படும் எண்ணுபெயர் சொற்கள் மற்றொரு சொற்களுடன் இணைவது எண்ணுப்பெயர் புணர்ச்சியாகும்.
அவை எண்ணுபெயர் + எண்ணுபெயர்,
எண்ணுபெயர் + பிற சொற்கள்
என்னும் அடிப்படையில் அமையலாம்
ஒன்று + ஊர் = ஓரூர்
இரண்டு + ஆயிரம் = ஈராயிரம்
மூன்று + மருந்து = மும்மருந்து
நான்கு + படை = நாற்படை
ஐந்து + வகை = ஐவகை
ஆறு + பத்து = அறுபது
ஏழு + கடல் = ஏழ்கடல்
எட்டு + வகை = எண்வகை
| 1 | ஒன்று | + | ஆடு | = | ஓராடு |
|---|---|---|---|---|---|
| 2 | ஒன்று | + | ஊர் | = | ஓரூர் |
| 3 | ஒன்று | + | பத்து | = | ஒருபது |
| 4 | ஓர் | + | ஆயிரம் | = | ஓராயிரம் |
| 5 | ஒன்று | + | ஒன்று | = | ஒவ்வொன்று |
| 6 | இரண்டு | + | ஆண்டு | = | ஈராண்டு |
| 7 | இரண்டு | + | ஆயிரம் | = | ஈராயிரம் |
| 8 | இரண்டு | + | பத்து | = | இருபது |
| 9 | ஈர் | + | ஆயிரம் | = | ஈராயிரம் |
| 10 | இரண்டு | + | இரண்டு | = | இவ்விரண்டு |
| 11 | மூன்று | + | தமிழ் | = | முத்தமிழ் |
| 12 | மூன்று | + | பத்து | = | முப்பது |
| 13 | மூன்று | + | மருந்து | = | மும்மருந்து |
| 14 | மூன்று | + | ஆயிரம் | = | மூவாயிரம் |
| 15 | மூன்று | + | உலகு | = | மூவுலகு |
| 16 | மூன்று | + | சந்தி | = | முச்சந்தி |
| 17 | மூன்று | + | தமிழ் | = | முத்தமிழ் |
| 18 | மூன்று | + | மூன்று | = | மும்மூன்று |
| 19 | நான்கு | + | படை | = | நாற்படை |
| 20 | நான்கு | + | பத்து | = | நாற்பது |
| 21 | நான்கு | + | புறம் | = | நாற்புறம் |
| 22 | நான்கு | + | மணி | = | நான்மணி |
| 23 | நான்கு | + | நான்கு | = | நன்நான்கு |
| 24 | நான்கு | + | நான்கு | = | நன்நான்கு |
| 25 | ஐந்து | + | பத்து | = | ஐம்பது |
| 26 | ஐந்து | + | பொறி | = | ஐம்பொறி |
| 27 | ஐந்து | + | வகை | = | ஐவகை |
| 28 | ஐந்து | + | ஆயிரம் | = | ஐயாயிரம் |
| 29 | ஐந்து | + | ஐந்து | = | ஐயைந்து |
| 30 | ஆறு | + | படைவீடு | = | அறுபடைவீடு |
| 31 | ஆறு | + | பத்து | = | அறுபது |
| 32 | ஆறு | + | ஆறு | = | அவ்வாறு |
| 33 | ஏழு | + | கடல் | = | ஏழ்கடல் |
| 34 | ஏழு | + | பத்து | = | எழுபது |
| 35 | ஏழு | + | பிறப்பு | = | எழுபிறப்பு |
| 36 | ஏழு | + | ஏழு | = | எவ்வேழு |
| 37 | எட்டு | + | குணம் | = | எண்குணம் |
| 38 | எட்டு | + | பத்து | = | எண்பது |
| 39 | எட்டு | + | வகை | = | எண்வகை |
| 40 | எட்டு | + | ஆயிரம் | = | எண்ணாயிரம் |
| 41 | எட்டு | + | எட்டு | = | எவ்வெட்டு |
| 42 | பத்து | + | ஒன்று | = | பதினொன்று |
| 43 | பத்து | + | மூன்று | = | பதின்மூன்று |
| 44 | பத்து | + | பத்து | = | பதிற்றுப்பத்து |
| 45 | பத்து | + | மடங்கு | = | பதின்மடங்கு |
| 46 | பத்து | + | பத்து | = | பப்பத்து |
| 47 | பத்து | + | பத்து | = | பப்பத்து |