சிறப்புப் புணர்ச்சி
நிலைமொழி இறுதியில் ண், ன், ள், ல் வரும்போது
வரும் மொழி முதலில் த, ந அல்லது க, ச, ஞ, ப, ம வந்தால்
கீழ்கண்டவாறு திரிந்து நிற்கும்
| க | ச | த | ப | ஞ | ந | ம | |
| ல் | ற்க | ற்ச | ற ற்ற ஃற |
ற்ப | ன்ஞ | ன ன்ன |
ன்ம |
| ள் | ட்க | ட்ச | ட ட்ட ஃட |
ட்ப | ண்ஞ | ண ண்ண |
ண்ம |
| ன் | ற்க | ற்ச | ன்ற ற்ற |
ற்ப | x | ன ன்ன |
x |
| ண் | ட்க | ட்ச | ண்ட ட்ட |
ட்ப | x | ண ண்ண |
x |
| 1 | திண் | + | தோள் | = | திண்டோள் |
|---|---|---|---|---|---|
| 2 | எண் | + | திசை | = | எண்டிசை |
| 3 | சாண் | + | துணி | = | சாண்டுணி |
| 4 | முரண் | + | தொடை | = | முரண்டொடை |
| 5 | இன் | + | தமிழ் | = | இன்றமிழ் |
| 6 | தென் | + | திசை | = | தென்றிசை |
| 7 | மென் | + | துகில் | = | மென்றுகில் |
| 8 | தேன் | + | தமிழ் | = | தேன்றமிழ் |
| 9 | மண் | + | தரை | = | மட்டரை |
| 10 | கண் | + | திரை | = | கட்டிரை |
| 11 | பொன் | + | தகடு | = | பொற்றகடு |
| 12 | பொன் | + | துகள் | = | பொற்றுகள் |
| 13 | பண் | + | நயம் | = | பண்ணயம் |
| 14 | கண் | + | நீர் | = | கண்ணீர் |
| 15 | கண் | + | நோய் | = | கண்ணோய் |
| 16 | தண் | + | நீர் | = | தண்ணீர் |
| 17 | மண் | + | நன்று | = | மண்ணன்று |
| 18 | பொன் | + | நகை | = | பொன்னகை |
| 19 | நன் | + | நாள் | = | நன்னாள் |
| 20 | முன் | + | நிலை | = | முன்னிலை |
| 21 | பன் | + | நீர் | = | பன்னீர் |
| 22 | பன் | + | நலம் | = | பன்னலம் |
| 23 | தென் | + | நாடு | = | தென்னாடு |
| 24 | ஊண் | + | நலம் | = | ஊணலம் |
| 25 | முரண் | + | நிலை | = | முரணிலை |
| 26 | தூண் | + | நிறம் | = | தூணிறம் |
| 27 | அரண் | + | நன்று | = | அரணன்று |
| 28 | வான் | + | நிலா | = | வானிலா |
| 29 | தேன் | + | நிலவு | = | தேனிலவு |
| 30 | மான் | + | நோக்கு | = | மானோக்கு |
| 31 | மீன் | + | நன்று | = | மீனன்று |
| 32 | உள் | + | துறை | = | உட்டுறை |
| 33 | எள் | + | துணை | = | எட்டுணை |
| 34 | முள் | + | தீது | = | முட்டீது |
| 35 | புல் | + | தரை | = | புற்றரை |
| 36 | சொல் | + | தொடர் | = | சொற்றொடர் |
| 37 | நல் | + | திணை | = | நற்றிணை |
| 38 | முள் | + | தீது | = | முஃடீது |
| 39 | கள் | + | தீது | = | கஃடீது |
| 40 | அல் | + | திணை | = | அஃறிணை |
| 41 | பல் | + | தொடை | = | பஃறொடை |
| 42 | வாள் | + | தடம் | = | வாட்டடம் |
| 43 | தோள் | + | தினவு | = | தோட்டினவு |
| 44 | பொருள் | + | தடை | = | பொருட்டடை |
| 45 | கால் | + | தடம் | = | காற்றடம் |
| 46 | பால் | + | திரட்டு | = | பாற்றிரட்டு |
| 47 | நூல் | + | தொகை | = | நூற்றொகை |
| 48 | நாள் | + | தோறும் | = | நாடோறும் |
| 49 | அருள் | + | தந்தை | = | அருடந்தை |
| 50 | வேல் | + | தாங்கி | = | வேறாங்கி |
| 51 | கால் | + | தூக்கி | = | காறூக்கி |
| 52 | முள் | + | நாறி | = | முண்ணாறி |
| 53 | கள் | + | நாறும் | = | கண்ணாறும் |
| 54 | உள் | + | நுழைவு | = | உண்ணுழைவு |
| 55 | சொல் | + | நயம் | = | சொன்னயம் |
| 56 | கல் | + | நெஞ்சம் | = | கன்னெஞ்சம் |
| 57 | புல் | + | நுனி | = | புன்னுனி |
| 58 | கோள் | + | நிலை | = | கோணிலை |
| 59 | கோள் | + | நன்று | = | கோணன்று |
| 60 | பால் | + | நிலா | = | பானிலா |
| 61 | பால் | + | நன்று | = | பானன்று |
| 62 | கள் | + | ஞேயம் | = | கண்ஞேயம் |
| 63 | கேள் | + | ஞேயம் | = | கேண்ஞேயம் |
| 64 | எள் | + | முனை | = | எண்முனை |
| 65 | நாள் | + | மலர் | = | நாண்மலர் |
| 66 | சொல் | + | ஞயம் | = | சொன்ஞயம் |
| 67 | நூல் | + | ஞயம் | = | நூன்ஞயம் |
| 68 | சொல் | + | மழை | = | சொன்மழை |
| 69 | கால் | + | முளை | = | கான்முளை |
| 70 | மண் | + | குடம் | = | மட்குடம் |
| 71 | கண் | + | கட்டி | = | கட்கட்டி |
| 72 | பொன் | + | கோவில் | = | பொற்கோவில் |
| 73 | பொன் | + | சிலை | = | பொற்சிலை |
| 74 | கள் | + | குடம் | = | கட்குடம் |
| 75 | தோள் | + | புறம் | = | தோட்புறம் |
| 76 | கல் | + | சிலை | = | கற்சிலை |
| 77 | கால் | + | பந்து | = | காற்பந்து |