மையீற்று பண்புப் புணர்ச்சி
பண்புப் பகுபதங்கள். பிற பகுபதங்களில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன.
கரியன் என்னும் பண்புப் பெயர்ப் பகுபதத்தைப் பிரித்தால், அது, கருமை+அன் என்று அமையும். இதில் ‘கருமை‘ என்பது பகுதி ‘அன்’ என்பது விகுதி.
பண்புப் பெயர்கள்
செம்மை, வெண்மை, கருமை, பொன்மை, பசுமை, சிறுமை, பெருமை, சேய்மை, அண்மை, தீமை, நன்மை, வெம்மை, தண்மை, புதுமை, பழமை, மென்மை, வன்மை, மேன்மை, கீழ்மை, திண்மை, நொய்மை, உண்மை, இன்மை, நுண்மை, பருமை
(1) ஈறுபோதல்
சிறுவன் – சிறுமை + அன், நல்லன் – நன்மை+அன் இவற்றில் ஈற்றில் உள்ள ‘மை‘ விகுதி கெட்டது
(2) இடை ‘உ‘கரம் ‘இ‘ ஆதல்
பெரியன் – பெருமை + அன்
(இவற்றில் ‘மை‘ கெட்டது மட்டுமன்றிப் பெருமை, கருமை என்பதில் இடையில் உள்ள உகரம், இகரமாக ஆகியுள்ளது.
கரியன் – கருமை + அன்
(3) ஆதிநீடல் (முதல் எழுத்து நீண்டு வருதல்)
பசுமை + இலை = பாசிலை. பசுமை + இலை. பசுமை என்பதில் உள்ள முதல் எழுத்தான பகரம் நீண்டு ‘பா‘ ஆகியுள்ளது. ‘சு‘ என்பதில் உள்ள உகரம் ‘சி‘ என இகரமாயிற்று. ‘மை‘ விகுதிகெட்டது. எனவே பாசிலை என்றாயிற்று.
(4) அடி அகரம் ‘ஐ‘ ஆதல்
பைங்கண் என்பது பசுமை + கண் – பைங்கண். பசுமை என்பதில் உள்ள அடி (முதல்) எழுத்தான ப(ப்+அ) இல் உள்ள அகரம் பை (ப்+ஐ) என ஆகியுள்ளது. ‘மை‘ கெட்டுள்ளது. ‘சு‘ என்பதும் கெட்டுள்ளது.
(5) தன் ஒற்று இரட்டல்
வெற்றிலை = வெறுமை + இலை என்பது வெற்றிலை என்றாகிறது. இதில் று (ற்+உ) இல் உள்ள ஒற்றான ‘ற்‘ இரட்டித்துள்ளது. ‘மை‘ கெட்டுள்ளது.
(6) முன்நின்ற மெய்திரிதல்
செம்மை + ஆம்பல் – சேதாம்பல் என்றாயிற்று. இதில் ‘மை‘ விகுதி கெட்டது. ஆதி செ – சே என நீண்டது. ‘செம்‘ முன்னின்ற ‘ம்‘ ‘த்‘ என்னும் மெய்யாகத் திரிந்துள்ளது.
(7) இனம் மிகல்
பசுமை + தழை என்பது பசுந்தழை என்றாகும். இதில் ஈற்றில் உள்ள ‘மை‘ கெட்டது. ‘தலை‘ என்னும் சொல்லில் உள்ள ‘த்‘ என்னும் மெய்க்கு இனமான ‘ந்‘ என்னும் நகரமெய் மிகுந்துள்ளது (தோன்றியுள்ளது).
| 1 | கருமை | + | அன் | = | கரியன் |
|---|---|---|---|---|---|
| 2 | சிறுமை | + | ஊர் | = | சிற்றூர் |
| 3 | சிறுமை | + | அன் | = | சிறுவன் |
| 4 | சிறுமை | + | அன் | = | சிறியன் |
| 5 | செம்மை | + | ஆம்பல் | = | சேதாம்பல் |
| 6 | செம்மை | + | தமிழ் | = | செந்தமிழ் |
| 7 | செம்மை | + | மலர் | = | செம்மலர் |
| 8 | செம்மை | + | கோல் | = | செங்கோல் |
| 9 | நன்மை | + | அன் | = | நல்லன் |
| 10 | பசுமை | + | தழை | = | பசுந்தழை |
| 11 | பசுமை | + | பொழில் | = | பைம்பொழில் |
| 12 | பசுமை | + | இலை | = | பாசிலை |
| 13 | பசுமை | + | இ | = | பாசி |
| 14 | பசுமை | + | கொடி | = | பைங்கொடி |
| 15 | பசுமை | + | தார் | = | பைந்தார் |
| 16 | பசுமை | + | கண் | = | பைங்கண் |
| 17 | பெருமை | + | அன் | = | பெரியன் |
| 18 | பெருமை | + | ஊர் | = | பேரூர் |
| 19 | முதுமை | + | ஊர் | = | மூதூர் |
| 20 | வெண்மை | + | குடை | = | வெண்குடை |
| 21 | வெண்மை | + | பட்டு | = | வெண்பட்டு |
| 22 | வெம்மை | + | நீர் | = | வெந்நீர் |
| 23 | வெம்மை | + | வேல் | = | வெவ்வேல் |
| 24 | வெறுமை | + | இலை | = | வெற்றிலை |
| 25 | வெறுமை | + | இலை | = | வெற்றிலை |
| 26 | கருமை | + | விழி | = | கருவிழி |
| 27 | பெருமை | + | அன் | = | பெருமையன் |
| 28 | பசுமை | + | கூழ் | = | பைங்கூழ் |
| 29 | சிறுமை | + | ஓடை | = | சிற்றோடை |
| 30 | கருமை | + | குயில் | = | கருங்குயில் |