வரும் மொழி முதலில் க, ச, ட, த, ப, ற என்கிற வல்லின எழுத்து வந்தால். (ட, ற சொல் முதல் வராது)
நிலைமொழி இறுதியில் அந்தந்த ஒற்று (க், ச், த், ப்) பிறந்து புணரும்.
பார்த்து + ப் + படி = பார்த்துப்படி
| 1 | முன்னர் | + | கண்ட | = | முன்னர்க்கண்ட |
|---|---|---|---|---|---|
| 2 | எங்கு | + | கண்டாய் | = | எங்குக்கண்டாய் |
| 3 | அந்த | + | கரண்டி | = | அந்தக்கரண்டி |
| 4 | மற்றை | + | கனவு | = | மற்றைக்கனவு |
| 5 | மற்ற | + | குதிரைகள் | = | மற்றக்குதிரைகள் |
| 6 | பின்னர் | + | கேட்ட | = | பின்னர்க்கேட்ட |
| 7 | இனி | + | கேள் | = | இனிக்கேள் |
| 8 | இந்த | + | சிற்பம் | = | இந்தச்சிற்பம் |
| 9 | அங்கு | + | சென்றான் | = | அங்குச்சென்றான் |
| 10 | இங்கு | + | தங்கினான் | = | இங்குத்தங்கினான் |
| 11 | தனி | + | தமிழ் | = | தனித்தமிழ் |
| 12 | எவ்வகை | + | தோற்றம் | = | எவ்வகைத்தோற்றம் |
| 13 | எந்த | + | பட்டம் | = | எந்தப்பட்டம் |
| 14 | இவ்வகை | + | பண்பு | = | இவ்வகைப்பண்பு |
| 15 | மற்று | + | பாடலாம் | = | மற்றுப்பாடலாம் |
| 16 | இப்படி | + | பார்த்தான் | = | இப்படிப்பார்த்தேன் |
| 17 | எல்லா | + | பெண்கள் | = | எல்லாப்பெண்கள் |
| 18 | அரை | + | கால் | = | அரைக்கால் |
| 19 | அணை | + | கட்டு | = | அணைக்கட்டு |
| 20 | அடை | + | கோழி | = | அடைக்கோழி |
| 21 | அடி | + | தளம் | = | அடித்தளம் |
| 22 | அம்பு | + | தலை | = | அம்புத்தலை |
| 23 | அம்மி | + | கல் | = | அம்மிக்கல் |
| 24 | அடி | + | சால் | = | அடிச்சால் |
| 25 | உழவு | + | தடி | = | உழவுத்தடி |
| 26 | உயிர் | + | படை | = | உயிர்ப்படை |
| 27 | இரை | + | பற்று | = | இரைப்பற்று |
| 28 | இடை | + | சொல் | = | இடைச்சொல் |
| 29 | ஓலை | + | சுவடி | = | ஓலைச்சுவடி |
| 30 | எரி | + | புறம் | = | எரிப்புறம் |
| 31 | கதை | + | பாடல் | = | கதைப்பாடல் |
| 32 | கலை | + | துறை | = | கலைத்துறை |
| 33 | இசை | + | தமிழ் | = | இசைத்தமிழ் |
| 34 | இசை | + | பாணர் | = | இசைப்பாணர் |
| 35 | ஆடு | + | கல் | = | ஆட்டுக்கல் |
| 36 | இசை | + | கருவி | = | இசைக்கருவி |
| 37 | களி | + | புறம் | = | களிப்புறம் |
| 38 | கை | + | சேட்டை | = | கைச்சேட்டை |
| 39 | கை | + | பக்கம் | = | கைப்பக்கம் |
| 40 | கோழி | + | பறவை | = | கோழிப்பறவை |
| 41 | சங்கு | + | பூ | = | சங்குப்பூ |
| 42 | சீலை | + | துணி | = | சீலைத்துணி |
| 43 | தசை | + | பிடி | = | தசைப்பிடி |
| 44 | தனி | + | பாடல் | = | தனிப்பாடல் |
| 45 | தீ | + | சுடர் | = | தீச்சுடர் |
| 46 | பழி | + | சொல் | = | பழிச்சொல் |
| 47 | பூ | + | செண்டு | = | பூச்செண்டு |
| 48 | யானை | + | தூண் | = | யானைத்தூண் |
| 49 | யானை | + | தொழு | = | யானைத்தொழு |
| 50 | வினை | + | தொகை | = | வினைத்தொகை |