இலக்கணம் வினாவிடை

188) படுகை பெயர்ச்‌ சொல்லின்‌ வகை அறிக.
இடப்பெயர்‌
189) எதிர்ச்சொல்‌ தேர்க: “அண்மை””
சேய்மை
190) உவமையால்‌ விளக்கபெறும்‌ பொருத்தமான பொருளைத்‌ தேர்க “கடன்‌ பட்டார்‌ நெஞ்சம்‌ போல்‌”
வேதனை
191) கொழு கொம்பற்ற கோடி போல உவமையால்‌ விளக்கப்‌ பெறும்‌ பொருத்தமான பொருளைத்‌ தேர்ந்தெடுக்க.
ஆதரவின்மை
192) அகர வரிசைப்படி சொற்களை சீர்‌ செய்க :
மாதம்‌, முன்பனி, மைத்துனி, மேலாளர்‌
193) எதிர்ச்சொல்‌ தேர்க: “அருகு”
தொலைவு
194) எதிர்ச்சொல்‌ தருக நகை
அழுகை
195) மா என்னும்‌ ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்‌ யாது?
பெரிய
196) அகழ்வாரைத்‌ தாங்கும்‌ நிலம்‌ போல உவமையால்‌ விளக்கப்படும்‌ பொருள்‌ :
பொறுமை
197) “மொழியாமை” இலக்கணக்குறிப்பு அறிக:
எதிர்மறை தொழிற்பெயர்‌
198) பெயர்ச்‌ சொல்லின்‌ வகை அறிக நகம்‌
சினைப்பெயர்‌