இலக்கணம் வினாவிடை

210) தண்டமிழ்‌ ஆசான்‌ என்னும்‌ புகழ்மொழிக்கு உரியவர்‌
சத்தலைச்‌ சாத்தனார்‌
211) பசுத்தோல்‌ போர்த்திய புலி போல இவ்வுவமையால்‌ விளக்கப்‌ பெரும்‌ பொருத்தமான பொருலளைத் தேர்ந்தெடுக்க
நயவஞ்சகம்‌
212) ஆடுகொடி -இலக்கண குறிப்‌பு வரைக:
வினைத்‌ தொகை
213) தே என்னும்‌ ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்‌ யாது?
இறைவன்‌
214) எப்பொருள்‌ யார்‌ யார்‌ வாய்‌ கேட்வினும்‌ அப்பொருள்‌ இதில்‌ அமைந்துள்ள எதுகைச்‌ சொற்களைக்‌ கண்டறிக
எப்பொருள்‌ அப்பொருள்‌
215) பதினெட்டு உறுப்புக்கள்‌ கலந்து வரப்‌ பாடப்படும்‌ நூல்‌:
கலம்பகம்‌
216) அகர வரிசைப்படி சொற்களை சீர்‌ செய்க.
நரை, நொறுங்கு, பண்ணை, பனி
217) காண்‌ என்னும்‌ வேர்ச்சொல்லின்‌ வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
கண்டாள்‌
218) நா என்னும்‌ ஒரெழுத்து ஒரு மொழியின்‌ பொருளைக்‌ கண்டறிக:
நாக்கு
219) எதிர்ச்சொல்‌ தருக : அகலாது
அணுகாது
220) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
சேவல்‌ கூவ பொழுது புலர கதிர்‌ எழுந்தது