இலக்கணம் வினாவிடை

34) உயிர்க் குறில் எழுத்து (அ, இ, உ, எ, ஒ) எத்தனை மாத்திரை அளவு உடையது?
1
35) ‘நான்’ எவ்விடத்தைக் குறிக்கும்?
தன்மை
36) இலக்கணத்தில் இடம் எத்தனை வகை பெறும்?
மூன்று
37) உவமை அணியின் பகுதிகள் எத்தனை?
நான்கு
38) உயிர் நெடில் எழுத்து (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒள) எத்தனை மாத்திரை அளவு உடையது?
2
39) சொல் என்பது எதனைக் கொண்டது?
எழுத்துகள்
40) எதிர்கால இடைநிலைகள் யாவை?
ப், வ்
41) யாப்பின் பா வகைகள் யாவை?
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா
42) உயிர்மெய்க் குறில் (க, சி, கு, கெ, கொ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
1
43) பதம் என்பதன் பொருள் என்ன?
சொல்
44) புணர்ச்சி என்றால் என்ன பொருள்?
சேர்தல்