இலக்கணம் வினாவிடை

45) மலர் + அடி என்பது எம்முறைப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
மெய் எழுத்து முன் உயிர் எழுத்து
46) ஆய்தம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
1/2
47) ஓடுதல் என்பது என்ன பெயர்?
தொழிற்பெயர்
48) மா + காய் = மாங்காய் என்பது எவ்வகை விகாரப் புணர்ச்சி?
தோன்றல்
49) கா என்ற எழுத்தின் மாத்திரை அளவு என்ன?
2
50) வினைச்சொல்லின் தன்மை ஒருமை எவ்வாறு முடியும்?
ஏன்
51) பல் + பொடி = பற்பொடி என்பது எவ்வகை விகாரப் புணர்ச்சி?
திரிதல்
52) பழம் என்பது ஒரு பொருளைக் குறிப்பதால் அதனை என்ன என்று சொல்லலாம்?
சொல்
53) வினைச்சொல்லின் தன்மை பன்மை எவ்வாறு முடியும்?
ஓம்
54) மரம் + வேர் = மரவேர் என்பது எவ்வகை விகாரப் புணர்ச்சி?
கெடுதல்
55) ஒருமை, பன்மை என்பன எதன் வகைகள்?
எண்