இலக்கணம் வினாவிடை

56) பழம் என்பது ஒரு பொருளைக் குறிப்பதால் அதனை என்ன என்று சொல்லலாம்?
சொல்
57) வினைச்சொல்லின் தன்மை பன்மை எவ்வாறு முடியும்?
ஓம்
58) மரம் + வேர் = மரவேர் என்பது எவ்வகை விகாரப் புணர்ச்சி?
கெடுதல்
59) ஒருமை, பன்மை என்பன எதன் வகைகள்?
எண்
60) வினைச்சொல்லில் முன்னிலை ஒருமை எவ்வாறு முடியும்?
ஆய்
61) பனை + மரம் என்பது எவ்வகைப் புணர்ச்சி?
இயல்பு
62) உயர்திணை, அஃறிணை என்பன எதன் வகைகள்?
திணை
63) வினைச்சொல்லில் முன்னிலைப் பன்மை எவ்வாறு முடியும்?
ஈர்
64) புணர்ச்சியின் வகைகள் எத்தனை?
இரண்டு
65) ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியன எதில் அடங்கும்?
உயர்திணையில்
66) வினைச்சொல்லில் படர்க்கை அஃறிணை ஒருமை எவ்வாறு முடியும்?
து