இலக்கணம் வினாவிடை

78) ‘சிலை சிற்பியால் செதுக்கப்பட்டது’ – எவ்வகை வாக்கியம்?
செயப்பாட்டுவினை
79) மெய் எழுத்து மாத்திரை?
அரை மாத்திரை
80) “வரையா மரபு” – இலக்கணக் குறிப்பு எது?
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
81) ‘இராவணன் இராமனால் கொல்லப்பட்டான்’ – எவ்வகை வாக்கியம்?
செயப்பாட்டுவினை
82) மகரக் குறுக்கு மாத்திரை?
கால் மாத்திரை
83) தொழிற்பெயர் அல்லாதது எது?
கெடும்
84) ‘பேசாதே’ – எவ்வகை வாக்கியம்?
கட்டளை
85) குற்றியலிகரம் / குற்றியலுகரம் மாத்திரை?
கால் மாத்திரை
86) வினைத்தொகைக்கு பொருந்தாத சொல் எது?
பசிப்பிணி
87) ‘மாற்று உடை தருவாயா?’ – எவ்வகை வாக்கியம்?
கொளல் வினா
88) ஆய்த எழுத்து மாத்திரை?
கால் மாத்திரை