வகுப்பு 10 வினாவிடை

1) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
கால்டுவெல்
2) மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது யாது?
ஐம்பெரும்காப்பியங்களும் அணிகலன்களும்
3) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
துரை மாணிக்கம்
4) பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?
இளங்குமரனார்
5) கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கொழுந்தாடை
6) நெல், புல் முதலான தானியங்களுக்கு வழங்கப்படும் சொல் என்ன?
தாள்
7) இரட்டுற மொழிதலின் வேறு பெயர் யாது?
சிலேடை
8) சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
பத்து
9) தென்னன் மகளே - இத்தொடரில் தென்னன் என்ற சொல் குறிக்கும் மன்னன் யார்?
பாண்டியன்
10) செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயரைத் தருக.
இசைநிறை அளபெடை