| ன | பொருள் | ண | பொருள் |
|---|---|---|---|
| அனல் | நெருப்பு | அணல் | தாடி, கழுத்து |
| அனி | நெற்பொறி, பெரிய பெட்டி | அணி | அழகு, வரிசை |
| அனு | தாடை, அற்பம் | அணு | நுண்மை |
| அனுக்கம் | வருத்தம், அச்சம் | அணுக்கம் | அண்டை, அண்மை |
| அனை | அன்னை, ஒருவகை மீன் | அணை | படுக்கை, கட்டி அணைத்தல், நீர்த்தேக்கம் |
| அனைய | அத்தகைய | அணைய | சேர, அடைய |
| அன்மை | தீமை, அல்ல | அண்மை | அருகில் |
| அங்கன் | மகன் | அங்கண் | அவ்விடம் |
| அன்னம் | சோறு, அன்னப்பறவை | அண்ணம் | மேல்வாய் |
| அன்னன் | அத்தகையவன் | அண்ணன் | தமையன் |
| அவன் | சேய்மைச் சுட்டு, ஆண்மகன் | அவண் | அவ்வாறு |
| ஆனகம் | துந்துபி | ஆணகம் | சுரைக்கொடி |
| ஆனம் | தெப்பம், கள் | ஆணம் | பற்றுக்கோடு |
| ஆனி | தமிழ் மாதங்களுள் ஒன்று | ஆணி | எழுத்தாணி, இரும்பாணி |
| ஆனேறு | காளை, எருது | ஆணேறு | ஆண்மகன் |
| ஆன் | பசு | ஆண் | ஆடவன் |
| ஆனை | யானை | ஆணை | கட்டளை, ஆட்சி |
| இனை | இன்ன, வருத்தம் | இணை | துணை, இரட்டை |
| இனைத்து | இத்தன்மையது | இணைத்து | சேர்த்து |
| இவன் | ஆடவன், அண்மைச் சுட்டு | இவண் | இவ்வாறு |
| ஈனவள் | இழிந்தவள் | ஈணவள் | ஈன்றவள் |
| உன் | உன்னுடைய | உண் | உண்பாயாக |
| உன்னல் | நினைத்தல் | உண்ணல் | உண்ணுதல் |
| உன்னி | நினைத்து, குதிரை | உண்ணி | உண்பவன், ஒருவகைப் பூச்சி |
| ஊன் | மாமிசம் | ஊண் | உணவு |
| என்ன | போல, வினாச்சொல் | எண்ண | நினைக்க |
| என்னல் | என்று சொல்லுதல் | எண்ணல் | எண்ணுதல் |
| என்கு | என்று சொல்லுதல் | எண்கு | கரடி |
| ஏன் | வலிமை, ஒரு வினைச்சொல் | ஏண் | வலிமை |
| ஏனை | மற்றது | ஏணை | தொட்டில் |
| ஐவனம் | மலை நெல் | ஐவணம் | ஐந்து வண்ணம் |
| ஓனம் | எழுத்துச்சாரியை | ஓணம் | ஒரு பண்டிகை |
| கனகம் | பொன் | கணகம் | ஒரு படைப்பிரிவு |
| கனப்பு | பாரம், அழுத்தம் | கணப்பு | குளிர்காயும் தீ |
| கனி | பழம், சுரங்கம், சாரம் | கணி | கணித்தல் |
| கனம் | பாரம் | கணம் | கூட்டம் |
| கன்னன் | கர்ணன் | கண்ணன் | கிருஷ்ணன் |
| கன்னி | குமரிப்பெண், உமை, ஒரு ராசி | கண்ணி | மாலை, கயிறு, தாம்பு |
| கனை | ஒலி, கனைத்தல் | கணை | அம்பு |
| கன் | கல், செம்பு, உறுதி | கண் | ஓர் உறுப்பு |
| கன்று | அற்பம், இளமரம், குட்டி, கைவளை | கண்று | அம்பு |
| கன்னல் | கரும்பு, கற்கண்டு | கண்ணல் | கருதல் |
| கான் | காடு, வனம் | காண் | பார் |
| கானம் | இசை, காடு, வனம், தேர் | காணம் | பொன், கொள் |
| கானல் | பாலை | காணல் | பார்த்தல் |
| கினி | பீடை | கிணி | கைத்தாளம் |
| கின்னம் | கிளை, துன்பம் | கிண்ணம் | வட்டில், கிண்ணி |
| குனி | குனிதல், வளை | குணி | வில், ஊமை |
| குனித்தல் | வளைதல் | குணித்தல் | மதித்தல், எண்ணுதல் |
| குனிப்பு | வளைப்பு, ஆடல் | குணிப்பு | அளவு, ஆராய்ச்சி |
| கேனம் | பைத்தியம், பித்து | கேணம் | செழிப்பு, மிகுதி |
| கேனி | பித்துப் பிடித்தவர் | கேணி | கிணறு |
| கோன் | அரசன் | கோண் | கோணல், மாறுபாடு |
| சானம் | அம்மி, பெருங்காயம் | சாணம் | சாணைக்கல், சாணி |
| சுனை | நீரூற்று | சுணை | கூர்மை, கரணை |
| சுன்னம் | சுண்ணாம்பு, பூஜ்ஜியம் | சுண்ணம் | வாசனைப் பொடி |
| சேனம் | பருந்து | சேணம் | மெத்தை |
| சேனை | படை | சேணை | அறிவு |
| சோனம் | மேகம் | சோணம் | பொன், சிவப்பு, தீ, சோணகிரி |
| சோனை | மழைச்சாரல், மேகம் | சோணை | ஒரு நதி, சேரன் மனைவி |
| தன் | தன்னுடைய | தண் | குளிர்ச்சி |
| தனி | தனிமை | தணி | தணித்தல் |
| தானி | இருப்பிடம், பண்டசாலை | தாணி | தான்றிமரம் |
| தானு | காற்று | தாணு | சிவன், தூண், நிலைப்பேறு |
| தினை | தானியம், ஒருவகைப் புன்செய்ப் பயிர் | திணை | ஒழுக்கம், குலம் |
| தின்மை | தீமை | திண்மை | உறுதி |
| தின் | உண் | திண் | வலிமை |
| துனி | அச்சம், ஊடல் நீட்டித்தல் | துணி | துணிதல், கந்தை |
| தென் | தெற்கு, அழகு | தெண் | தெளிவு |
| நன்பகல் | நல்லபகல் | நண்பகல் | நடுப்பகல் |
| நனி | மிகுதி | நணி | அணி (அழகு) |
| நான் | தன்மைப் பெயர் | நாண் | வெட்கம், கயிறு |
| நானம் | புனுகு, கவரிமான் | நாணம் | வெட்கம் |
| பனி | துன்பம், குளிர், சொல், நோய் | பணி | வேலை, கட்டளையிடு |
| பனை | ஒருவகை மரம் | பணை | முரசு, உயரம், பரந்த |
| பன் | அரிவாள், பல | பண் | இசை |
| பன்னை | கீரைச்செடி | பண்ணை | தோட்டம் |
| பன்னுதல் | நெருங்குதல் | பண்ணுதல் | செய்தல் |
| பன்னி | சீப்பு, பனிநீர், மனை, சணல் | பண்ணி | செய்து |
| பன்மை | பல | பண்மை | தகுதி |
| பனித்தல் | துளித்தல், தூறல், விரிந்த | பணித்தல் | கட்டளையிடுதல் |
| பட்டினம் | கடற்கரை நகர் | பட்டணம் | நகரம் |
| பானம் | அம்பு | பாணம் | நீருணவு |
| புனை | இட்டுக்கட்டுதல், கற்பனை | புணை | தெப்பம் |
| புன் | கீழான | புண் | காயம் |
| பேனம் | நுரை | பேணம் | பேணுதல் |
| பேன் | ஓர் உயிரி | பேண் | போற்று, உபசரி |
| மனம் | உள்ளம், இந்துப்பு | மணம் | வாசனை, திருமணம் |
| மனை | இடம், வீடு | மணை | மரப்பலகை, மணவறை |
| மன் | மன்னன், பெருமை | மண் | தரை, மண்வகை |
| மன்னை | தொண்டை, கோபம் | மண்ணை | இளமை, கொடி வகை |
| மானி | மானம் உடையவர் | மாணி | அழகு, பிரம்மசாரி |
| மான் | ஒரு விலங்கு | மாண் | மாட்சிமை |
| முனை | முன்பகுதி, துணிவு, முதன்மை | முணை | வெறுப்பு, மிகுதி |
| வனம் | காடு, துளசி | வணம் | ஓசை |
| வன்மை | உறுதி, வலிமை | வண்மை | வளப்பம், கொடை |
| வன்னம் | எழுத்து, நிறம் | வண்ணம் | நிறம், குணம், அழகு |
| வானகம் | மேலுலகம் | வாணகம் | அக்கினி, பசுமடி |
| வானம் | ஆகாயம், மழை | வாணம் | அம்பு, தீ, மத்தாப்பு |
| வானி | துகிற்கொடி | வாணி | "கலைமகள், சரஸ்வதி" |
| ர | பொருள் | ற | பொருள் |
|---|---|---|---|
| அர | பாம்பு | அற | தெளிய, முற்றுமாக |
| அரவு | பாம்பு | அறவு | அறுதல், தொலைதல் |
| அரம் | ஒரு கருவி | அறம் | தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம் |
| அரி | திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன், சிங்கம் | அறி | அறிந்துகொள் |
| அரிய | கிடைத்தற்கு அரிதான, கஷ்டமான | அறிய | அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள |
| அரன் | சிவன் | அறன் | தர்மம், அறக்கடவுள் |
| அரிவை | பெண்; ஏழு பருவங்களுள் ஒன்று, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண் | அறிவை | அறிவாய் |
| அருகு | அருகம்புல், அண்மை | அறுகு | குறைந்து போதல் |
| அக்கரை | அந்தக் கரை | அக்கறை | ஈடுபாடு |
| அரை | பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம் | அறை | வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை |
| அரைதல் | தேய்தல் | அறைதல் | அடித்தல், சொல்லுதல் |
| அப்புரம் | அந்தப் பக்கம் | அப்புறம் | பிறகு |
| அர்ப்பணம் | உரித்தாக்குதல் | அற்பணம் | காணிக்கை செலுத்துதல் |
| அரு | உருவமற்றது | அறு | துண்டித்துவிடு, அறுத்துவிடு |
| அருமை | சிறப்பு, அன்பு, இன்மை, எளிதில் கிடைக்காதது | அறுமை | நிலையின்மை, ஆறு |
| ஆரு | குடம், நண்டு | ஆறு | ஓர் எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை |
| ஆர | நிறைய, அனுபவிக்க | ஆற | சூடு குறைய |
| ஆரல் | ஒருவகை மீன் | ஆறல் | சூடு குறைதல் |
| இரத்தல் | யாசித்தல் | இறத்தல் | இறந்துபோதல், சாதல் |
| இரகு | சூரியன் | இறகு | சிறகு |
| இரக்கம் | கருணை | இறக்கம் | சரிவு, மரணம் |
| இரங்கு | கருணை காட்டு | இறங்கு | கீழிறங்கி வா |
| இரவம் | இரவு | இறவம் | இறால் மீன் |
| இரவி | சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில் | இறவி | இறத்தல் |
| இரவு | இரவு நேரம், யாசித்தல் | இறவு | மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம் |
| இரை | ஒலி, உணவு | இறை | கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை |
| இரு | இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள் | இறு | ஒடி, கெடு, சொல்லு |
| இரும்பு | கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம் | இறும்பு | வண்டு, சிறுமலை |
| இருப்பு | கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல் | இறுப்பு | வடிப்பு |
| இருத்தல் | அமர்ந்திருத்தல், காத்திருத்தல் | இறுத்தல் | வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில் கூறல், முடித்தல், முறித்தல் |
| இருக்கு | மந்திரம், ரிக் வேதம் | இறுக்கு | அழுத்து, இறுக்கிக் கட்டு |
| இரைத்தல் | ஒலித்தல், மூச்சுவாங்குதல் | இறைத்தல் | சிதறுதல், மிகு செலவு |
| உரவு | அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம் | உறவு | நட்பு, சுற்றம், எறும்பு |
| உரவோர் | அறிஞர், முனிவர் | உறவோர் | சுற்றத்தார், அடைந்தோர் |
| உரி | தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல், கொத்துமல்லி | உறி | உறிவெண்ணெய், தூக்கு |
| உரு | வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை | உறு | மிகுதி |
| உருக்குதல் | இளக்குதல், மெலியச் செய்தல் | உறுக்குதல் | சினத்தல், அதட்டுதல் |
| உரை | புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல் | உறை | இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை |
| உரைப்பு | தங்குதல், தோய்தல் | உறைப்பு | காரம், கொடுமை |
| உரையல் | சொல்லல் | உறையல் | மாறுபாடு, பிணக்கு |
| உரிய | உரிமையான | உறிய | உறிஞ்ச |
| ஊரல் | ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை | ஊறல் | தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு |
| ஊரு | அச்சம், தொடை | ஊறு | இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை |
| எரி | தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை, கந்தகம் | எறி | விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல் |
| ஏர | ஓர் உவம உருபு | ஏற | மிகுதி, உயர |
| ஏரி | நீர்நிலை, குளம் | ஏறி | உயர்ந்த, மேலே ஏறி |
| ஒரு | ஒன்று, ஒப்பற்ற, ஆடு | ஒறு | தண்டி, அழி, இகழ் |
| ஒருத்தல் | ஆண் விலங்குகளின் பொதுப்பெயர் | ஒறுத்தல் | தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல் |
| ஒருவு | நீங்கு | ஒறுவு | வருத்தம், துன்பம் |
| கரடு | மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது | கறடு | தரமற்ற முத்து |
| கரம் | கிரணம், விஷம், செயல், கை, கழுதை | கறம் | கொடுமை, வன்செய்கை |
| கரவு | பொய், வஞ்சனை, மறைவு | கறவு | கப்பம் |
| கரவை | கம்மாளர் கருவி | கறவை | பாற்பசு |
| கரி | அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை | கறி | இறைச்சி, மிளகு |
| கரத்தல் | மறைத்தல் | கறத்தல் | கவர்தல், பால் கறத்தல் |
| கருத்து | எண்ணம் | கறுத்து | கருநிறங்கொண்டு |
| கரு | சினை, பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு, அடிப்படை | கறு | சினம், வைராக்கியம், கோபம், அகங்காரம் |
| கருப்பு | பஞ்சம் | கறுப்பு | கருநிறம், பேய், கோபம், குற்றம், கறை |
| கரை | எல்லை, தடுப்பு, ஓரம் | கறை | அழுக்கு, குற்றம், ரத்தம் |
| கரையான் | மீனவன் | கறையான் | செல் என்னும் உயிரி |
| கர்ப்பம் | கருவுறுதல், உள், சினை | கற்பம் | கஞ்சா, அற்பம், ஊழிக்காலம், தேவலோகம், திருநீறு, ஆயுள், மந்திர சாஸ்திரம், 432 கோடி, மூப்பு நீக்கும் மருந்து |
| கர்ப்பூரம் | சூடம், பொன், மருந்து, கூடம் | கற்பூரம் | பொன்னாங்கண்ணி |
| காரி | கரிக்குருவி, காக்கை, வயிரவன், ஐயனார், ஒரு நதி, சனி, விஷம், ஒரு வள்ளல், வாசுதேவன் | காறி | காறி உமிழும் கழிவு |
| காரு | வண்ணான், தேவதச்சன் | காறு | காறுதல், அளவு |
| காரை | ஒருவகைச் செடி, ஒருவகை மீன், சிமெண்ட் மணல் சேர்ந்த கலவை | காறை | ஒரு கழுத்தணி |
| கீரி | ஓர் உயிரினம் | கீறி | பிளந்து, அரிந்து |
| குரங்கு | ஒரு விலங்கு | குறங்கு | தொடை, கொக்கி |
| குரவர் | கடவுள், குரு, பெரியோர், அரசர் | குறவர் | ஒரு சமூகத்தினர் |
| குரவை | கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி | குறவை | ஒருவகை மீன் |
| குரத்தி | தலைவி, குருவின் மனைவி | குறத்தி | குறவர் சமூகப் பெண் |
| குருகு | பறவை, குட்டி, கொக்கு, உலைத்துருத்தி, உலைமூக்கு, குருக்கத்தி, நாரை, கோழி, கைவளை | குறுகு | அண்மைப்படுத்து |
| குருகினம் | பறவை இனம் | குறுகினம் | நெருங்கினோம் |
| குரை | சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை | குறை | குற்றம், காரியம், கடன், வேண்டுகோள், வறுமை |
| குரு | ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை, இரசம் | குறு | குறுகு |
| கூரல் | ஒரு மீன், பறவை இறகு | கூறல் | சொல்லுதல், விற்றல் |
| கூரை | சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில் | கூறை | புது ஆடை, சீலை |
| கூரிய | கூர்மையான | கூறிய | சொன்ன |
| கூர | குளிர்ச்சி மிக | கூற | சொல்ல, வேண்டல் |
| கோரல் | கூறுதல் | கோறல் | கொல்லல் |
| கோரை | புல்வகை | கோறை | குவளை, பொந்து |
| கோரல் | சேர்தல், குளிர் காற்று, மலைப்பக்கம் | கோறல் | குளிர் காற்று, மழை |
| சிரை | சிரைத்தல், முடிநீக்கல் | சிறை | சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை |
| சீரிய | சினந்த, சிறந்த, சீராய் | சீறிய | சினந்த |
| சுரா | கள் | சுறா | சுறா மீன் |
| சூரல் | மூங்கில், பிரம்பு | சூறல் | தோண்டல் |
| சுருக்கு | வலை, சுருக்கம், கட்டு, பூமாலை, வகை, குறைவு, நெய்த்துடுப்பு | சுறுக்கு | விரைவு |
| செரு | போர், ஊடல் | செறு | வயல், பாத்தி, குளம் |
| செருநர் | பகைவர், படைவீரர் | செறுநர் | பகைவர் |
| சொரி | தினவு, அரிப்பு, பொழி | சொறி | சிரங்கு, சொறிதல் |
| தரித்தல் | அணிதல், பொறுத்தல், தங்கல், தாமதித்தல், தாங்குதல் | தறித்தல் | வெட்டுதல் |
| தரி | அணி, அணிந்துகொள் | தறி | தூண், ஆப்பு, நெசவு இயந்திரம், முளைக்கோல் |
| தருதல் | கொடுத்தல் | தறுதல் | இறுகக் கட்டுதல் |
| தாரு | மரம், தேவதாரு, பித்தளை | தாறு | குலை, அங்குசம், முள், இரும்பு, முள்கோல் |
| திரம் | மலை, உறுதி, நிலை, பூமி | திறம் | உறுதி, நரம்புள்ள வீணை, கூறுபாடு, சுற்றம், குலம், பக்கம், வல்லமை, ஒழுக்கம், மேன்மை, வரலாறு, காரணம் |
| திரை | அலை, கடல், திரைச்சீலை | திறை | கப்பம் |
| துரவு | கிணறு | துறவு | துறத்தல், துறவறம் |
| துரை | பெரியோன், தலைவன் | துறை | நீர்த்துறை, வழி, இடம், நூல், கடற்கரை, உபாயம், பாவினம் |
| துரு | களிம்பு | துறு | கூட்டம், நெருக்கம் |
| தூரல் | தூருதல், வருத்தம் | தூறல் | மழைத்துளி, பழி சொல்லுதல் |
| தூரன் | குலத்தின் பெயர் | தூறன் | மூர்க்கன் |
| துரு | வீதி | துதறு | அழி |
| தேரார் | கல்லாதவர், கீழ்மக்கள், பகைவர் | தேறார் | அறிவிலார், பகைவர் |
| தேரி | மணல் திட்டை, மணல் குன்று | தேறி | தேர்ச்சி பெற்று, தெளிந்து |
| நரை | நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை | நறை | தேன், சாதிக்காய், கள், வாசனை, நறும்புகை, பச்சிலைக்கொடி, குற்றம் |
| நாரி | பெண், பார்வதி, வாசனை, கள், சேனை, பன்னாடை, தேன் | நாறி | கற்றாழை |
| நிருத்தம் | கூத்து, நடனம், பதம் பிரித்துப் பொருள் கூறும் நூல், பற்றின்மை | நிறுத்தம் | நிறுத்தும் இடம் |
| நிரை | பசு, ஒழுங்கு, வரிசை | நிறை | கற்பு, அளவு, அழிவின்மை, நீதி, வரையறை, திண்மை, நிரப்பு |
| நூரல் | அவிதல், பதங்கெடுதல் | நூறல் | அவித்தல் |
| நேரி | அமுக்கு, நசுக்கு, அழுத்து | நேறி | வழி, கோயில், கற்பு |
| பரட்டை | பரட்டைத்தலை | பறட்டை | செழிப்பற்றது |
| பரதி | கூத்தாடுபவன் | பறதி | அவசரம், பறத்தல் |
| பரத்தல் | அலமறுதல், மிகுதல் | பறத்தல் | பறந்துசெல்லல் |
| பரம்பு | வயலைச் சமப்படுத்தும் பலகை | பறம்பு | பாரியின் மலை |
| பரல் | விதை, பருக்கைக்கல் | பறல் | பறவை |
| பரவை | கடல், ஆடல், பரப்பு | பறவை | பறப்பவை, ஒரு நோய் |
| பரி | குதிரை, பெருமை, விரைவு, செலவு, சுமை, மிகுதி | பறி | பறித்தல், கொள்ளை, பொன், வலை, உடம்பு, ஓலைப்பாய் |
| பரித்தல் | காத்தல், ஓடுதல், தாங்குதல், சுமத்தல், சூழ்தல், தரித்தல் | பறித்தல் | பிடுங்குதல் |
| பரிவு | அன்பு, துன்பம், இரக்கம் | பறிவு | கழிவு, அதிர்தல் |
| பருகு | குடி, அருந்து | பறுகு | பறட்டை, அன்பு, பக்குவம் |
| பரை | சிவசக்தி | பறை | இசைக்கருவி, இறகு, வாத்தியம், பறவை, சொல் |
| பாரை | கடப்பாரை | பாறை | கற்பாறை |
| பிரை | உறைமோர், பயன் | பிறை | பிறைச்சந்திரன் |
| பீரு | புருவம், அச்சமுள்ளோன் | பீறு | கிழிவு |
| புரம் | மாடம், கோயில், இராஜதானி, ஊர், முன், மேல்மாடம், ஒரு நகரம் | புறம் | இடம், வரியில்லா நிலம், பக்கம், வெளி, பின்புறம், முதுகு |
| புரவு | கொடை, நிலம், செழுமை, காத்தல், அரசர், கப்பம், ஆற்றுநீர் பாயும் நிலம் | புறவு | காடு, புறா |
| பெருக்கல் | நிறைத்தல், மிகுத்தல், நிரப்புதல், அதிகப்படுத்தல், மிகுவித்தல் | பெறுக்கல் | அரிசி, மிகுத்தல் |
| பொரி | நெற்பொரி, பொரிதல் | பொறி | தீப்பொறி, அறிவு, எழுந்து, வரிவண்டு |
| பொரித்தல் | வறுத்தல், குஞ்சு பொரித்தல் | பொறித்தல் | எழுதுதல், தீட்டுதல், பதித்தல், அடையாளமாக வைத்தல் |
| பொருப்பு | மலை, பக்கமலை | பொறுப்பு | பாரம், பொறுமை |
| பொரு | போர் | பொறு | பொறுத்திரு |
| மரத்தல் | விறைத்தல் | மறத்தல் | மறதி, நினைவின்மை |
| மரம் | தாவர வகை, மூலிகை, மரக்கலம், பறைவகை | மறம் | வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம் |
| மரி | விலங்குகளின் குட்டி | மறி | தடை செய் |
| மரித்தல் | இறத்தல், சாதல் | மறித்தல் | தடுத்தல், திரும்புதல், அழித்தல் |
| மரை | மான் | மறை | வேதம் |
| மரு | மலை, பாலைநிலம், மணவிருந்து, நீரில்லா இடம், மருக்கொழுந்து | மறு | குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம் |
| மருப்பு | கொம்பு, யானைத் தந்தம், யாழ்த்தண்டு | மறுப்பு | எதிர்ப்பு |
| மருகு | வாசனைத் தாவரம் | மறுகு | சிறிய தெரு |
| மாரன் | மன்மதன், காமன் | மாறன் | பாண்டியன், சடகோபாழ்வார் |
| முரி | பாலைநிலம், நொய், சிதைவு | முறி | ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு |
| முருக்குதல் | அழித்தல், உருக்குதல் | முறுக்குதல் | சுழற்றுதல், திரித்தல் |
| வரம் | இறைவன் கொடுப்பது, வேண்டும் பொருள், தெய்வ ஈகை, மேன்மை, விருப்பம் | வறம் | வற்றுதல், வறட்சி, பஞ்சம், நீரின்மை, வறுமை, வெம்மை |
| வரவு | வருமானம், வழி | வறவு | கஞ்சி |
| வரப்பு | எல்லை, வரம்பு | வறப்பு | வறட்சி, வறுமை, வற்றுதல் |
| விரகு | விவேகம், உபாயம், உற்சாகம், புத்தி, கபடம் | விறகு | எரிகட்டை |
| விரலி | மஞ்சள் | விறலி | மெய்ப்பாடு தோன்ற ஆடிப்பாடும் பெண், 16 வயதினள் |
| விரல் | மனித உடலிலுள்ள உறுப்பு | விறல் | பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி |
| விராய் | விறகு | விறாய் | செருக்கு, இறுமாப்பு |
| வெரு | அச்சம் | வெறு | வெறுத்துவிடு |
| வெரல் | மூங்கில் | வெறல் | வெல்லுதல், வெற்றி கொள்ளல் |
| விரை | விரைந்து செல் | விறை | மரத்துப்போதல் |
| ல | பொருள் | ள | பொருள் | ழ | பொருள் |
|---|---|---|---|---|---|
| அலகு | பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை | அளகு | சேவல், பெண்கூகை | அழகு | வனப்பு |
| அலகம் | திப்பிலி | அளகம் | வெள்ளெருக்கு, நீர் | ||
| அலகை | கற்றாழை, பேய் | அளகை | அளகாபுரி, பெண் | ||
| அலம் | கலப்பை | அளம் | உப்பு எடுக்கும் நெய்தல் நிலம் | அழம் | பிணம் |
| அலத்தல் | அலட்டல், அலைதல் | அளத்தல் | அளவிடுதல், மதித்தல் | ||
| அலவன் | ஆண்நண்டு | அளவன் | அளப்பவன், உப்பு எடுப்போன் | ||
| அலி | பேடி, காகம், விருச்சிகராசி | அளி | கருணை, கள், வண்டு | அழி | அழித்துவிடு |
| அல்லல் | துன்பம் | அள்ளல் | வாரி எடுத்தல் | ||
| அலை | கடல், நீரலை, அலைதல் | அளை | தயிர், நண்டு, புற்று, | அழை | கூப்பிடு |
| அவல் | பள்ளம், உணவுப் பொருள் | அவள் | பெண், சேய்மைச் சுட்டு | ||
| அல் | இரவு | அள் | அள்ளி எடு, நெருக்கம் | ||
| உலவு | நட | உளவு | ஒற்று | உழவு | கலப்பையால் உழுதல் |
| உளி | தச்சுக் கருவிகளுள் ஒன்று | உழி | இடம், பொழுது | ||
| உலு | தானியப் பதர், அசைத்தல் | உளு | உளுத்துப் போதல் | உழு | நிலத்தை உழு |
| உலை | கொல்லன் உலை, நீருலை | உளை | பிடரி மயிர், சேறு, தலை | உழை | பாடுபடு, பக்கம், கலைமான் |
| உளுவை | மீன்வகை | உழுவை | புலி | ||
| எல் | கல், மாலை, சூரியன் | எள் | எண்ணெய் வித்து, நிந்தை | ||
| எலு | கரடி | எழு | எழுந்திரு, தூண் | ||
| ஒலி | சப்தம், நாதம், காற்று | ஒளி | வெளிச்சம், மறைத்து வை | ஒழி | அழி, தவிர், கொல், துற |
| ஒல் | ஒலிக்குறிப்பு | ஒள் | அழகு, உண்மை, அறிவு, ஒளி | ||
| கலகம் | போர், அமளி, இரைச்சல் | கழகம் | சங்கம், கூட்டமைப்பு | ||
| களங்கம் | குற்றம், அழுக்கு | கழங்கம் | கழங்கு, விளையாட்டுக் கருவி | ||
| கலி | கலியுகம், பாவகை, சனி | களி | மகிழ்வு, இன்பம் | கழி | கோல், மிகுதி, உப்பளம் |
| கலை | ஆண்மான், சந்திரன், கல்வி | களை | அழகு, புல் பூண்டு, அயர்வு | கழை | மூங்கில், கரும்பு, புனர்பூசம் |
| கல் | மலை, பாறை, சிறுகல் | கள் | மது, தேன் | ||
| கலம் | கப்பல், பாத்திரம் | களம் | இடம், போர்க்களம், இருள் | ||
| காலி | ஒன்றுமில்லாதது, வெற்றிடம் | காளி | துர்க்கை, மாயை | காழி | சீர்காழி என்னும் ஊர் |
| காலை | பொழுது, விடியற்பொழுது | காளை | காளைமாடு, இளைஞன் | ||
| காலம் | பொழுது, நேரம் | காளம் | எட்டிமரம், சூலம் | ||
| கிலி | அச்சம், பயம் | கிளி | பறவை, வெட்டுக்கிளி | கிழி | கிழித்துவிடு, பொன் முடிப்பு |
| கிளவி | சொல், மொழி | கிழவி | முதியவள், மூதாட்டி | ||
| குலி | மனைவி | குளி | நீராடு | குழி | பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு |
| குலம் | சாதியின் உட்பிரிவு, இனம், குடி | குளம் | நீர்நிலை, கண்மாய், ஏரி | ||
| குலை | கொத்து, மனம் தடுமாறுதல் | குழை | குண்டலம், குழைந்துபோதல் | ||
| குலவி | மகிழ்ந்திருத்தல் | குளவி | ஒரு வண்டு, காட்டுமல்லி | குழவி | குழந்தை, இளமை, யானைக் கன்று, அம்மிக்கல் |
| குலிகம் | சிவப்பு, இலுப்பை | குளிகம் | மருந்து, மாத்திரை | ||
| குவலை | துளசி, கஞ்சா | குவளை | குவளை மலர், சொம்பு, ஒரு பேரெண் | ||
| கூலம் | தானியம், கடைத்தெரு | கூளம் | குப்பை | ||
| கூலி | ஊதியம் | கூளி / கூளியார் | பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர் | ||
| கொலு | அரசசபை, திருவோலக்கம், உல்லாசமாக வீற்றிருத்தல் | கொளு | புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய் | கொழு | மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழுத்திருத்தல் |
| கொலை | கொல்லுதல் | கொளை | கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம் | ||
| கொல்லாமை | கொலை செய்யாமை | கொள்ளாமை | ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை | ||
| கொல்லி | உயிர்க்கொல்லி, ஒரு மலை | கொள்ளி | கொள்ளிக்கட்டை | ||
| கொல்லை | புழக்கடை, தரிசுநிலம் | கொள்ளை | திருடுதல், மிகுதி | ||
| கோலம் | அழகு, அலங்காரம் | கோளம் | உருண்டை, வட்டம் | ||
| கோலை | மிளகு | கோளை | குவளை, எலி | கோழை | வீரமற்றவன், கபம் |
| கோல் | மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு | கோள் | கிரகம் | ||
| கோலி | இலந்தை, விளையாடும் குண்டு | கோளி | பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம் | கோழி | உறையூர், விட்டில், பறவை |
| சலம் | நீர், சிறுநீர், குளிர் | சளம் | பொய், துன்பம், வஞ்சனை | ||
| சாலை | பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம் | சாளை | கடல்மீன் | சாழை | குடிசை, குச்சு |
| சுளித்தல் | முறித்தல், சினத்தல் | சுழித்தல் | சுழலுதல், நீர்ச்சுழல் | ||
| சூலை | வயிற்றுநோய் | சூளை | செங்கல் சூளை | ||
| சூல் | கர்ப்பம் | சூள் | சபதம் | சூழ் | சூழ்ந்துகொள், சுற்று |
| சேல் | மீன் | சேள் | மேலிடம் | ||
| சோலி | ரவிக்கை, காரியம் | சோளி | கூடைவகை | சோழி | பலகரை |
| தவலை | பாத்திரம் | தவளை | ஓர் உயிரி | ||
| தலம் | இடம், பூமி | தளம் | மேடை, மாடி வீட்டின் அடுக்கு | தழம் | தைலம் |
| தலை | மண்டை | தளை | விலங்கு | தழை | தாவர உறுப்பு |
| தாலம் | உலகம், தேன் | தாளம் | இசைக்கருவி, ஜதி | ||
| தாலி | மங்கலநாண் | தாளி | தாளித்தல், பனைதால், நாக்கு, தாலாட்டு | தாழி | கடல், குடம், பரணி, பெரிய பாண்டம் |
| தாள் | முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம் | தாழ் | தாழ்தல், குனிதல் | ||
| துலக்கம் | ஒளி, தெளிவு | துளக்கம் | அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி | ||
| துலம் | கோரை, கனம் | துளம் | மாதுளை, மயிலிறகு | ||
| துலி | பெண் ஆமை | துளி | மழைத்துளி, திவலை, சிறிய அளவு | துழி | பள்ளம் |
| துலை | ஒப்பு, கனம் | துளை | துவாரம், வாயில் | ||
| தூலி | எழுதுகோல், எழுத்தாணி | தூளி | புழுதி, குதிரை | ||
| தெளித்தல் | விதைத்தல், சபதம், கூறல் | தெழித்தல் | கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல் | ||
| தெல் | அஞ்சுதல் | தெள் | தெளிவான | ||
| தோலன் | அற்பன் | தோழன் | நண்பன் | ||
| தோலி | பிசின், ஒருவகை மீன் | தோளி | அவுரி, அரக்கு | தோழி | பாங்கி, நட்பால் நெருக்கமானவள் |
| தோல் | சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி | தோள் | புயம், வீரம் | ||
| நலன் | நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம் | நளன் | தமயந்தியின் கணவன், ஓர் அரசன் | ||
| நலி | நோய் | நளி | குளிர்ச்சி, பெருமை | ||
| நலிதல் | நலிந்துபோதல், தோற்றல் | நளிதல் | செறிதல், பரத்தல், ஒத்தல் | ||
| நல் | நல்ல | நள் | இரவு, நடு, நள்ளிரவு | ||
| நாலம் | பூவின் காம்பு | நாளம் | பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம் | நாழம் | இழிவுரை, வசவு |
| நாலி | முத்து, கந்தை ஆடை | நாளி | கல், நாய் | நாழி | உள்துளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி |
| நாலிகை | மூங்கில், அடுப்புச்சந்து | நாழிகை | வட்டம், கடிகாரம் | ||
| நால் | நான்கு | நாள் | காலம், திதி | நாழ் | குற்றம், செருக்கு |
| நீலம் | ஒரு நிறம், கருங்குவளை, இருள் | நீளம் | நெடுமை, தாமதம் | ||
| நீல் | நீலம், காற்று | நீள் | நீளம், ஒளி | ||
| பலம் | கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை | பழம் | கனி, முதுமை | ||
| பல்லி | சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு | பள்ளி | இடைச்சேரி, புத்தர் கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம் | ||
| பலி | பலியிடுதல், பலியுயிர் | பழி | குற்றம் | ||
| பால் | திரவ உணவு, பகுப்பு, இயல்பு | பாழ் | வீண், வெறுமை | ||
| பீளை | கண் அழுக்கு | பீழை | துன்பம் | ||
| புலி | காட்டு விலங்கு | புளி | புளியமரம், புளியங்காய் | ||
| புலை | புலால், ஊன், கீழ்மை | புழை | துளை, வாயில், நரகம் | ||
| புகல் | அடைக்கலம் | புகழ் | பெருமை | ||
| புல் | அற்பம், கலவி, புல்பூண்டு | புள் | பறவை | ||
| பூலம் | புற்கட்டு | பூளம் | பூவரசு | ||
| பூளை | பூளைச்செடி, இலவம் பஞ்சு | பூழை | துவாரம், கோபுரவாயில் | ||
| பாலி | தானியக் குவியல், தூற்றாத தானியம் | பாளி | வரப்பு, எல்லை | பாழி | கொடுத்தல், ஈதல் |
| பாலிவு | அழகு, நிறைவு | பாழிவு | பொழிதல், மேன்மை | ||
| போலி | பொய், வஞ்சகம், ஒப்பு | போளி | இனிப்புப் பண்டம் | ||
| பொலிதல் | செழித்தல், மங்கலமாதல் | பொழிதல் | ஈதல், கொடுத்தல், சொரிதல், பெய்தல், நிறைதல் | ||
| மலம் | அழுக்கு, பாவம் | மழம் | இளமை, குழந்தை | ||
| மலை | குன்று, பொருப்பு, வெற்பு, சிகரம் | மழை | மழைநீர், குளிர்ச்சி, மேகம் | ||
| மலைத்தல் | வியத்தல், தடுமாறுதல் | மழைத்தல் | மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல் | ||
| மல்லிகை | மாலை, கழுத்தணி, வரிசை | மாளிகை | அரண்மனை, கோயில் | ||
| மாலை | அந்திப்பொழுது, பூமாலை | மாளை | புளியம்பட்டை | மாழை | மயக்கம், இளமை, அழகு |
| மால் | திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம் | மாள் | இறத்தல், சாதல் | ||
| முலை | உடலிலுள்ள ஓர் உறுப்பு | முளை | முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில் | முழை | குகை |
| முளி | மரக்கணு, விரல்முளி, வாட்டம் | முழி | விழி, விழித்தல் | ||
| மூலி | மூலிகை, மரம், வேருள்ளது | மூழி | அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம் | ||
| மூலை | இரு கோடுகள் சந்திக்கும் இடம் | மூளை | மண்டைக்குள் இருக்கும் முதன்மை உறுப்பு | ||
| மெல்ல | மென்று தின்னல், மென்மையாக | மெள்ள | மெதுவாக | ||
| மாலி | மொளலி கிரீடம் | மாளி | துணிமூட்டை | மாழி | மேழி, கலப்பை |
| வலம் | சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி | வளம் | வளமை, அழகு | ||
| வலவன் | திருமால் | வளவன் | சோழன், வேளாளன் | ||
| வலன் | ஓர் அரசன், வெற்றி, வல்லவன் | வளன் | செழுமை, வளப்பன் | ||
| வளப்பம் | வளமை, செழிப்பு | வழப்பம் | வழக்கம், இயல்பு | ||
| வலி | நோய், வலிமை, துன்பம் | வளி | காற்று | வழி | நெறி, பாதை, தடம், உபாயம் |
| வலை | மீன் முதலியவற்றைப் பிடிக்கும் கருவி | வளை | கை வளையல், எலி வளை | வழை | சுரபுன்னை, புதுமை, இளமை |
| வல் | வலிமை, விரைவு, திறமை | வள் | ஒலிக்குறிப்புச் சொல் | ||
| வல்லம் | வாழை, ஓர் ஊர் | வள்ளம் | மரக்கலம், படகு, அளவு, தொன்னை | ||
| வல்லி | பூமி, பெண், பிரிதல், படர்கொடி | வள்ளி | வள்ளியம்மை, ஆபரணம், சந்திரன் | ||
| வலு | வலிமை, பலம், பற்று | வளு | இளமை, இளைய | வழு | குற்றம், தவறு, பழிப்புரை, கேடு |
| வாலி | கிஷ்கிந்தை அரசன் | வாளி | அன்பு, வட்டவாள், வீரன், ஒரு காதணி | வாழி | வாழ்க என வாழ்த்துதல் |
| வாலை | இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி | வாளை | வாளை மீன் | வாழை | வாழைமரம் |
| வால் | விலங்குகளின் ஓர் உறுப்பு | வாள் | போர்வாள், நீண்ட கத்தி | வாழ் | வாழ்வாயாக என வாழ்த்துதல் |
| விலா | விலா எலும்பு | விளா | இளமை, வெண்மை, நிணம் | விழா | திருவிழா, கொண்டாட்டம் |
| விளி | கூப்பிடு, அழை, ஏழிசையில் ஒன்று | விழி | கண், கருவிழி | ||
| விலை | மதிப்பு, விலைக்கு விற்றல் | விளை | ஒரு மீன்வகை, விளைவி, விளைச்சல் | விழை | விரும்பு, ஆசைப்படு |
| விலக்கு | விலக்கிவிடு, தவிர் | விளக்கு | விளக்கமாகச் சொல், தீபம் | ||
| விலங்கு | பூட்டு, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம் | விளங்கு | திகழ், சிற்றரத்தை என்னும் மூலிகை | ||
| வெல்லம் | சர்க்கரைக்கட்டி, கருப்பட்டி | வெள்ளம் | மிதமிஞ்சிய நீர்ப்பெருக்கு | ||
| வேலம் | வேலமரம், தோட்டம் | வேழம் | யானை, கரும்பு, மூங்கில் | ||
| வேல் | வேலாயுதம் | வேள் | வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை | ||
| வேலை | பணி, கடல் | வேளை | பொழுது, நேரம், ஒருவகைக் கீரை |