இலக்கணம் வினாவிடை

111) “செத்தான்” என்பதின் வேர்ச்சொல் எது?
சா
112) கீழ்க்கண்டவற்றில் எது வேர்ச்சொல் அன்று?
நல்கி
113) ‘காலை’ என்பது எந்த வகைப் பெயர்?
காலப்பெயர்
114) மூதூர் எத்திணைக்குரிய ஊர்?
மருதம்
115) “விலகுதல்” என்பதின் வேர்ச்சொல் எது?
விலகு
116) ‘படி’ என்ற சொல்லில் இருந்து வினையாலணையும் பெயர் எது?
படித்தவர்
117) ‘ஓடுதல்’ என்பது எந்த வகைப் பெயர்?
தொழிற்பெயர்
118) சிறுகுடி எத்திணைக்குரிய ஊர்?
குறிஞ்சி
119) “ஓடுவார்” என்பதின் வேர்ச்சொல் எது?
ஓடு
120) ‘மலர்’ என்பது எந்த வகைப் பெயர்?
சினைப்பெயர்
121) ‘வெற்றிலை நட்டான்’ என்பது எந்த ஆகுபெயர்?
சினையாகு பெயர்