பொருள் வினாவிடை

1) சரியான தமிழ்ச் சொற்றொடர் எது?
துன்மார்க்கனை விலக்கி வைக்க வேண்டும்
2) சனம் - பொருத்தமான பொருளை தருக
மக்கள்
3) பல்லவம் - பொருத்தமான பொருளை தருக
தளிர்
4) வேட்கை - பொருத்தமான பொருளை தருக
விருப்பம்
5) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (தேன்மொழி, கயல்விழி, மதிமுகம், வளர்தமிழ்)
வளர்தமிழ்
6) ஒலி வேறுபாடு (கலி – களி – கழி) சரியான பொருள் எது?
வறுமை – மகிழ்ச்சி – நீக்குதல்
7) சித்தம் - பொருத்தமான பொருளை தருக
அறிவு
8) பூதரம் - பொருத்தமான பொருளை தருக
மலை
9) வேய் - பொருத்தமான பொருளை தருக
மூங்கில்
10) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (புவனம், ஞாலம், மாருதம், இகம்)
மாருதம்