இலக்கணம் வினாவிடை

155) ‘தோள்’ என்பது எந்த வகைப் பெயர்?
சினைப்பெயர்
156) “கவர்ந்தான்” என்பதின் வேர்ச்சொல் எது?
கவர்
157) ‘தொழு’ என்ற வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக
தொழுது
158) ‘வறுவல் தின்றான்’ என்பது எந்த ஆகுபெயர்?
தொழிலாகு பெயர்
159) “தொடுத்தல்” என்பதின் வேர்ச்சொல் எது?
தொடு
160) ‘வில்’ என்ற சொல்லின் தொழிற்பெயர் எது?
விற்றல்
161) ‘செம்மை’ என்பது எந்த வகைப் பெயர்?
குணப்பெயர்
162) “கற்போம்” என்பதின் வேர்ச்சொல் எது?
கல்
163) ‘வை’ என்ற வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்குக
வைத்தல்
164) ‘கிளை முறிந்தது’ என்பது எந்த வகைப் பெயர்?
சினைப்பெயர்
165) அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
ஏழு