இலக்கணம் வினாவிடை

199) பதினெட்டு உறுப்புக்கள்‌ கலந்து வரப்‌ பாடப்படும்‌ நூல்‌:
கலம்பகம்‌
200) அகர வரிசைப்படி சொற்களை சீர்‌ செய்க.
நரை, நொறுங்கு, பண்ணை, பனி
201) காண்‌ என்னும்‌ வேர்ச்சொல்லின்‌ வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
கண்டாள்‌
202) நா என்னும்‌ ஒரெழுத்து ஒரு மொழியின்‌ பொருளைக்‌ கண்டறிக:
நாக்கு
203) எதிர்ச்சொல்‌ தருக : அகலாது
அணுகாது
204) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
சேவல்‌ கூவ பொழுது புலர கதிர்‌ எழுந்தது
205) பிரித்து எழுதுக : தொல்லுலகம்‌
தொன்மை + உலகம்‌
206) இலவு காத்த கிளிபோல - உவமையால்‌ விளக்கப்பெறும்‌ பொருத்தமானப்‌ பொருளைத்‌ தேர்ந்தெடுக்க.
ஏமாற்றம்‌
207) முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
ஓடும்‌ செம்பொன்னும்‌ ஒக்கவே நோக்குவார்‌
208) படி என்னும்‌ வேர்ச்சொல்லின்‌ வினையெச்சத்தை தேந்தெடுக்க.
படித்து
209) மராமத்து இலாக்கா சரியான தமிழ்சொல்‌ தருக.
பொதுப்பணித்துறை