பொருள் வினாவிடை

1) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத்‌ தேர்க : பரி பறி
குதிரை பிடுங்குதல்‌
2) ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத்‌ தேர்க : அலை அளை
கடல்‌ பாம்புப்புற்று
3) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்‌ தேர்க : பெறுக்கல்‌ பெருக்கல்‌
பொறுக்கல்‌ அதிகப்படுத்துதல்‌
4) \"வேன்மிகு தானை வேந்தர்க்கு கடனே\" தானை என்ற சொல்லின் பொருள் யாது?
படை
5) அகம் - பொருத்தமான பொருளை தருக
மனம்
6) அழல் - பொருத்தமான பொருளை தருக
நெருப்பு
7) ஆகடியம் - பொருத்தமான பொருளை தருக
ஏளனம்
8) இடுக்கண் - பொருத்தமான பொருளை தருக
துன்பம்
9) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத்‌ தேர்க : உலவு உளவு
நடமாடு வேவு
10) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்‌ தேர்க : மலை மழை
குன்று மாரி