இலக்கணம் வினாவிடை

221) மீமிசை ஞாயிறு என்பது
ஒருபொருட்பன்மொழி
222) பிரித்து எழுதுக: பெருங்குணம்‌
பெருமை + குணம்‌
223) பிரித்து எழுதுக: ஈராயிரம்‌
இரண்டு + ஆயிரம்‌
224) எதிர்ச்சொல்‌ தருக : நல்வினை
தீவினை
225) புறா - இதன்‌ ஒலிமரபு
குனுகும்‌
226) ஏ என்னும்‌ ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்‌ யாது?
அம்பு
227) எதிர்சொல்‌ தருக: சான்றோர்‌
புல்லர்‌
228) பசுமை பெயர்ச்‌ சொல்லின்‌ வகை அறிக.
பண்புப்பெயர்‌
229) பிரித்து எழுதுக நன்னாள்‌
நன்மை + நாள்‌
230) ஈக என்பதன்‌ இலக்கணக்‌ குறிப்பு தேர்க.
வியங்கோள்‌ வினைமுற்று
231) தமிழ்‌ மூவேந்தர்களால்‌ வளர்க்கப்பட்டது எவ்வகை வாக்கியம்‌ எனச்‌ சுட்டுக.
செயப்பாட்டு வினை வாக்கியம்‌