இலக்கணம் வினாவிடை

232) கண்டார்‌ - இச்சொல்லின்‌ வேர்ச்சொல்லைக்‌ காண்க.
காண்‌
233) எதிர்ச்சொல்‌ தருக : இன்சொல்‌
வன்சொல்‌
234) அழி என்னும்‌ வேர்ச்சொல்லின்‌ வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
அழிந்து
235) பிரித்து எழுதுக நன்னாள்‌
நன்மை + நாள்‌
236) ஈக என்பதன்‌ இலக்கணக்‌ குறிப்பு தேர்க.
வியங்கோள்‌ வினைமுற்று
237) தமிழ்‌ மூவேந்தர்களால்‌ வளர்க்கப்பட்டது எவ்வகை வாக்கியம்‌ எனச்‌ சுட்டுக.
செயப்பாட்டு வினை வாக்கியம்‌
238) பொருந்தா சொல்லைக்‌ கண்டறிக
சந்திரன்‌
239) பிரித்தெழுது: “தெங்கம்‌ பழம்‌”
தெங்கு+ அம்‌+பழம்‌
240) வெரூஉம்‌ என்பதன்‌ இலக்கணக்‌ குறிப்பு தேர்க.
அளபெடை
241) சொற்பதம்‌ என்பதன்‌ இலக்கண குறிப்பு தேர்வு செய்க
ஒரு பொருட்‌ பன்மொழி
242) “அவரவர்‌” இலக்கணக்குறிப்பு அறிக:
அடுக்குத்தொடர்‌