இலக்கணம் வினாவிடை

254) முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
ஊழ்வினை உருத்துவந்‌ துட்டு மென்பதூஉம்‌
255) பிரித்தெழுது: செந்தமிழ்‌
செம்மை + தமிழ்‌
256) சுடு என்னும்‌ வேர்ச்சொல்லின்‌ தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
சுடுதல்‌
257) திறன்‌ என்பதன்‌ இலக்கணக்‌ குறிப்பு தேர்க.
ஈற்றுப்போலி
258) கல்‌ என்னும்‌ வேர்ச்சொல்லை வினையாலணையும்‌ பெயராக்கி எழுதுக:
கற்றவன்‌
259) போவாள்‌ இச்சொல்லின்‌ வேர்ச்சொல்லைக்‌ காண்க.
போ
260) இ என்னும்‌ ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்‌ யாது?
அண்மைச்‌ சுட்டு
261) “கோ?” என்னும்‌ ஒரெழுத்து ஒரு மொழியின்‌ பொருளைக்‌ கண்டறிக:
அரசன்‌
262) பிரித்து எழுதுக: தொல்லுலகம்‌
தொன்மை + உலகம்‌
263) அசைவிலா என்பதன்‌ இலக்கணக்‌ குறிப்பு தேர்க.
ஈறுகெட்ட எதிர்மறைப்‌ பெயரெச்சம்‌
264) பிரித்து எழுதுக நான்மறை
நான்கு + மறை